வெள்ளி, 5 ஜூன், 2020

ஆட்சென்ஸ் தகுதி பெற்ற பெண் எழுத்தாளர்களின் வலைப்பதிவுடிசம்பர் 15, 2015 அன்று கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக இந்த வலைப்பதிவு  தொடங்கப்பட்டது. கணித்தமிழ்ப் பேரவையின் நிதிநைல்கையுடன் கணினித் தமிழ்த் தட்டச்சு முதல் கணினித் தமிழ் நுட்பங்கள் வரை மாணவிகளுக்குப் பயிற்றுவித்தோம்.கணினித் தமிழ் நூலகம் ஒன்றை உருவாக்கினோம். அதன் ஒரு பயிற்சிக்களமாக இந்த வலைப்பதிவில் மாணவிகள் குழுவாகப் பதிவிடத் தொடங்கினர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் ஆர்வமான 50 மாணவிகள் தொடர்ந்து அவர்களது சிந்தனைகளைப் பதிவு செய்தனர். இன்றுவரை இந்த வலைப்பதிவு, 184539 மொத்த பார்வைகளைப் பெற்றுள்ளது. தொடர்ந்து இந்த வலைப்பதிவில் மாணவிகளும் பெண் உதவிப் பேராசிரியர்களும் எழுதி வருகின்றனர். பெண்களின் சிந்தனைக் களமாக இந்த வலைப்பதிவு திகழ்கிறது.
 
இன்றைய பதிவு 1461 ஆக இடம்பெறுகிறது.  கவிதை, கட்டுரை,  பொது அறிவு, ஓவியம், வாழ்க்கை, பெண்ணியம், அனுபம், அறிவியல், கணிதம் எனப் பல துறைகள் சார்ந்த இம்மாணவிகளின் சிந்தனைகள் பெரிய பார்வையயும், பாராட்டையும் பெற்றதுடன் இவர்களுக்குள் இருந்த படைப்பாக்கத்திறனையும், நட்பு வட்டத்தையும் உருவாக்கியுள்ளது. யாவற்றுக்கும்  மேலாக, டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு ஊடகங்களையும் கடந்து இதுபோன்ற வலைப்பதிவுகளில் எழுதுவதால் இணையப்பரப்பில் இவர்களது பெயரும் சிந்தனைகளும் நீங்கா இடம்பெற்றுள்ளன. வலைப்பதிவுகளுக்கு விளம்பரம் வெளியிட்டு பணம் வழங்கும் ஆட்சென்ஸ் விதிகளின் படி இந்த வலைப்பதிவு தகுதி பெற்றதால் இன்று விளம்பரம் வெளியிடுதற்கான அறிவிப்பு கிடைத்துள்ளது. அங்கீகாரம் வழங்கிய கூகுள் ஆட்சென்ஸ் நிறுவனத்திற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
தங்களது சிந்தனைகளால் இந்த வலைப்பக்கத்தை நிறைத்த மாணவிகள் ஒவ்வொருவருக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கிய தாளாளர், துணைத் தாளாளர், செயல் இயக்குநர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்

மாணவிகளின் திறமைகளை இனம்கண்டு களம் அமைத்து தொடர்ந்து ஊக்குவித்து வரும் முதல்வர் முனைவா் மா. கார்த்திகேயன் அவர்களுக்கு எம் நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்கிக்கொள்கிறோம். 

மாணவிகள் வெளியிடும் பதிவுகளை வாசித்து கருத்துரை நல்கி வழிகாட்டிவரும் ஆசிரியர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்

 

13 கருத்துகள்:

 1. திறன் கொண்ட அனைத்து மாணவியர்களுக்கும் ஒரு சிறந்த வலைதடம்👏

  பதிலளிநீக்கு
 2. முனைவர் ப.லோகாம்பாள்6 ஜூன், 2020 அன்று முற்பகல் 8:48

  வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. குமார் வணிக மற்றும் பயன்பாட்டியல் துறை7 ஜூன், 2020 அன்று முற்பகல் 11:41

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

Reminiscences

 Utterly true but dramatic irony Though an epic gets derelict Not so it doesn't have weak description, It has intensively fervid, You g...