திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தாண்டு

           

           
     
  பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் பரிமாறி, கேளிக்கை கொண்டாடத்தில் ஈடுபட்டு புத்தாண்டை கொண்டாடுவதை விட ஒரு நிமிடம் மனதார இறைவன் இடம் பிராத்தனை செய்து, தாய் தந்தை இடம் ஆசி பெற்று கொண்டாடும் புத்தாண்டு இன்னும் மகிழ்ச்சி ஆனது.
அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

ஞாயிறு, 30 டிசம்பர், 2018

Women are holy books

Women are holy books
They are sacred ones to be preserved...
They are God sent,
They should be cherished,
Not suppressed.
They are not wastepaper
To crush and throw away...
Set her free with peace and harmony.
When one depressed they feel
      Enthused on smelling her
This fragrance.
It may one's beloved or saviour
  Of one in their womb.
It makes me feel
      That I am born today.
It makes me feel delighted.
It gives me strength.
Only mother’s aroma can do this magic.
Yes,the best thing in the world is
  'Mother' and they are women...
I feel pride to be a women.

நட்சத்திர மாணவர்


‘10 திருக்குறள் எழுதினால் அபராதம் இல்லை’


பெரம்பலூர்: பெரம்பலூரில்  வாகன தணிக்கையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் ஹெல்மெட் அணியாத மாணவர்களுக்கு 10 திருக்குறளை எழுத கூறி வினோததண்டனை அளித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக  பரவி வருகிறது. பெரம்பலூர் போக்குவரத்து காவல்துறையில் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருபவர் நாவுக்கரசர். இவர் நேற்று பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் வாகன தணிக்கையில் இருந்தார். அப்போது, ஹெல்மெட் அணியாமல் வந்த  நான்கைந்து இளைஞர்களை மடக்கினார். அவர்களிடம், ‘‘ஏன் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டுகிறீர்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்’’ என கேட்டார். அவர்கள் நாங்கள் பள்ளியில் படிக்கிறோம், கல்லூரியில்  படிக்கிறோம் என்ற பதில்களைத் தெரிவித்துள்ளனர்.

உடனே அவர்களிடம், ‘‘நீங்கள் மாணவர்கள் என்றால் அபராதம் செலுத்தவேண்டாம். ஆளுக்குப் பத்து திருக்குறளை எழுதிகாட்டிவிட்டு செல்லுங்கள்’’ என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார். இதற்கு, தங்களுக்குத் தெரிந்த  திருக்குறளை எழுதிக்கொடுத்தனர். அதில் சிலர் மற்ற மாணவர்கள் எழுதியதைக் காப்பியடித்தும் எழுதினர். மாணவர்கள் எழுதிய திருக்குறகளை வாங்கிப்பார்த்த இன்ஸ்பெக்டர் காப்பியடித்தீர்களா எனக்கேட்டு சிரிக்கவும்,  மாணவர்கள் பதற்றம் தணிந்தனர்.பிறகு அவர்களிடம் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள், லைசென்ஸ் வாங்கிக்கொண்டு பைக்கில் செல்லுங்கள், பைக்கில் பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுச் செல்வது போல், ஹெல்மெட்  இருக்கிறதா, லைசென்ஸ் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு செல்லுங்கள், நீங்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை எனக்கூறி அனுப்பிவைத்தார்.இன்ஸ்பெக்டர் நாவுக்கரசரின் இந்த வித்தியாசமான அணுமுறையை சாலையோரம் செல்லும் மற்றவர்கள் செல்போன்களில் படமெடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்பெக்டர்  நாவுக்கரசருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது....

நன்றி தினகரன் நாளிதழ்

வியாழன், 27 டிசம்பர், 2018

My Brother

That one creature...

Who always irritates me...!
Who always teases me...!
Who always steals things from me...!

But he is the one,

Who always loves me...!
Who always care for me...!
Who always stands behind me...!

No matter,
He is elder or younger,
Tall or short,
Handsome or fluffy,
Intelligent or idiot,
Famous or one among hundreds.

He is still MY brother.

இயற்கையின் கோரதண்டவம்🌊🌊


           

        அன்று 26 டிசம்பர் 2004, 8 மணி கிறிஸ்துமஸ் தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடிவிட்டு ஊரே கோலாகலமாக இருந்த தருணம் அது. பலரின் வாழ்க்கையை திசை திருப்பிய நாளும் அது தான். பலர் தன் சொந்தங்களை இழந்த நாளும் அது தான். இத்தனை நாள் கடலின் அழகை ரசித்த அனைவரும் அன்று கடலின் மறுபக்கத்தை பார்த்த நாளும் அது தான். ஏதோ நிகழ போகிறது என்று உணர்வதற்குள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆம் அது தான் சுனாமி. ஒரு மாபெரும் படை எவ்வாறு பொறிடுமோ அது போல் அனைத்தையும் வீழ்த்தி விட்டது அந்த சுனாமி.சுனாமி பேரழிவு ஏற்பட்டு பதினான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், அந்த அழிவு கொடுத்த வலியும் வேதனையும் இன்னும் மறையவில்லை. வேகமாக நம் வாழ்வு  சுழன்று கொண்டு இருப்பதால் நம்மை தாங்கி சுழன்று கொண்டு இருக்கும் பூமி அன்னையை மறந்துவிட்டோம். அதனால் தான் என்னவோ நான் இருக்கிறேன் என்று நினைவூட்டும் விதமாக அடிக்கடி ஒரு பேரழிவை நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இதை படிக்கும் அனைவரும் ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்.

புதன், 26 டிசம்பர், 2018

நிலையில்லாத வாழ்க்கை 🌏🌏



     

இன்று இரவு நாம் தூங்கிய தூக்கதில் இருந்து காலை எழுந்தால் அது ஒரு புதிய நாளின் தொடக்கம் இல்லையெனில் மரணம் என்னும் புதிய வழியின் தொடக்கம். இந்த பதிவை எழுத தூண்டியது என் தோழி தந்தையின் மரணம். காலை சென்றவர் வீடு திரும்பவில்லை இரவு 11மணிக்கு அவர் இறந்து போனார் என்ற செய்தி தான் வந்தது. இப்படி நிலையில்லாத வாழ்கை தான் நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை. இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக, பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாமல் , பிறரின் மனதை புண் படுத்தாமல், குறை கூறாமல், பெற்றோரை மகிழ்வித்து வாழ வேண்டும். 

செவ்வாய், 25 டிசம்பர், 2018

மகளிர் முன்னேற்றம்

இதிகாசங்கள் புராணங்கள் என அனைத்தும் பெண்களை அடிமைப் படுத்தியிருக்கிறது.
அதற்கான சான்று.

சூதில் பணயமாக தன்னை வைத்த தருமனைப் பாஞ்சாலி மன்னித்தாள்.

நடுக்காட்டில் நள்ளிரவில் விட்டு விட்டு ஓடிய நளனைத் தமயந்தி மன்னித்தாள்.

நெருப்பு குளியல் நடத்த சொன்ன ராமனின் சிறுமையை சீதை மன்னித்தாள்.

மாதவியிடம் மையலுற்று கைப் பொருளை இழந்து வந்த கோவலனைக் கண்ணகி மன்னித்தாள்.

ஆனால்.

இந்திரனிடம் தன்னை இழந்த அகலிகையை மன்னிக்க மனமில்லாமல் கௌதம முனிவன் கல்லாக்கினான்.

ரேணுகையை மன்னிக்காத ஜமதக்னி மகன் பரசுராமனை அழைத்து தாயின் தலையைத் துண்டிக்க செய்தார்.

ஏங்கிய பெண்களின் கைகள் எல்லாம் இன்று ஓங்கி இருக்கிறது.

அறிவியல் முதல் ஆன்மீகம் வரை

பொறியல் முதல் பொறியியல் வரை அனைத்திலும் பெண்கள் சாதிக்கிறார்கள்...

பேச்சுரிமை எழுத்துரிமை என அனைத்தும் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது.

ஆனால் இன்று பெண்கள்

பாரதி கண்ட புதுமைப்பெண்களாகவும்.

பெரியார் கண்ட புரட்சிப் பெண்களாகவும் எல்லோரும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது எம்முடைய கல்லூரியின் 1000 வது வலைப்பதிவு.

பெண்களுக்கு இன்று எல்லா உரிமைகளும் கிடைத்து விட்டது.

அவர்கள் எங்கும் எல்லாவற்றிலும் சாதிக்கிறார்கள் என்பதற்கு நாங்களும் ஒரு சான்று தான்.

வானமும் எங்களுக்கு தொட்டு விடும் தூரம் தான்.
இனி அதையும் நாங்கள் எங்கள் உழைப்பைக் கொண்டு எட்டிப் பிடிப்போம்.

ஊழலின் தொடக்கம்

நாம் எல்லோரும் கோடி கோடியாய் பணம் பரிமாறுவதைத் தான் ஊழல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் உண்மையான ஊழல் என்பது எதிலிருந்து தொடங்குகிறது தெரியுமா.

மளிகை கடைக்காரரிடம் ஒரு ரூபாய் சில்லரைக்கு பதிலாய் மிட்டாயை வாங்குகிறோம் அல்லவா அங்கு தான் ஊழலுக்கு தொடக்கப் புள்ளி வைக்கப்படுகிறது.

இனிமேல் சில்லரைக்கு பதிலாய் மிட்டாய்களை வாங்காமல் அந்த சில்லரைகளை சேர்த்து வைத்து பேனா வாங்கி நாளைய பாரதத்தின் தலையெழுத்தை மாற்றுவோம்.

கண்ணியம்

கல்லூரிச் சுற்றுலாவிற்காக ஊட்டி சென்றிருந்தோம்.
எல்லா இடங்களையும் பார்வையிட்டு விட்டு இல்லூரியை நோக்கி புறப்பட்டோம்.
எனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் உனக்கு அக்கா யாரும் இருக்கிறார்களா மா என எங்களை வழிநடத்திச் சென்ற வழிகாட்டி கேட்டார்.
அதற்கு அவள் இல்லை என பதில் கூறினாள்.
அவர் அவருடைய அலைபேசியில் இருந்து ஒரு புகைப்படத்தை காட்டி இந்த பெண் போலவே அந்த பெண்ணும் இருந்ததால் தான் கேட்டேன் என்று புகைப்படத்தைக் காட்டினார்.
இந்த பெண்ணைப் போல இங்கு யாரையோ பார்த்தேன் அதனால் தான் கேட்டேன் என்று சொல்லி திரும்பி பார்த்தார்.

உடனே எங்கள் வகுப்புப் பொறுப்பாசிரியர் இவுங்க எல்லாரும் என் புள்ளைங்க. என் அணுமதி இல்லாமல் யாரையும் நீங்க திரும்பி  கூட பார்க்க கூடாது அவர்கள் அனைவரையும் அவர்கள் பெற்றோர்கள் என்னை நம்பி அணுப்பி வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் அனைவருக்கும் நான் தான் பொறுப்பு என்று சொல்லி அவரிடம் பேசினார்.

அவர் இவுங்க எல்லாரும் என் பிள்ளைங்க என்று சொல்லும் போதே எங்கள் மாணவிகளின் மனதில் மகிழ்ச்சி உச்சத்திற்கு சென்றது.

இது ஒரு சிறிய சம்பவமாக இருந்தாலும் அவர் மேல் இருந்த மரியாதை மேலும் ஒரு படி உயர்ந்தது.

உண்மையிலெ இது போன்ற ஆசிரியர்களை எல்லாம் பார்க்கும் போது மிகுந்த மனமகிழ்வாய் இருக்கிறது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் எங்கள் பொறுப்பாசிரியர் சங்கர் சார்.

பழைய பஞ்சாங்கம்

செவ்வாய் கோளுக்கும் சென்று வாழ முடியுமா என்பதை பார்த்து விட்டு வந்து விட்டோம்.
ஆனால் இன்னும் செவ்வாய் தோஷம் எனும் பெயரில் பழைய பஞ்சாங்கத்துக்கு அடிமையாயிருக்கிறோம்.

ஆறிலிருந்து அறுபது வரை




நாம் சின்ன பிள்ளைகளாய் குழந்தைகளாய் இருக்கும் போது நம்முடைய தாத்தா பாட்டி அம்மா அப்பா அத்தை மாமா என எல்லா உறவுகளும் நாம் நடப்பதை அவ்வளவு பொறுமையாய் வேடிக்கை பார்ப்பார்கள்.
நாம் மெல்ல மெல்ல நடப்போம்.
எத்தனை வேலை இருந்தாலும் அதை விட்டு விட்டு நம்மைஆனால் ஒரு இருபது வருடங்கள் கழித்து பாருங்களேன்.
நாம் வளர்ந்திருப்போம்.
அவர்களுக்கெல்லாம் வயதாகியிருக்கும்‌.
நாம் குழந்தைகளாய் இருக்கும் போது தத்தி தத்தி நடந்ததை பொறுமையாய் வேடிக்கை பார்த்த அவர்கள் வயதான பிறகு மெதுவாய் நடப்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை கவனிப்பார்கள்.

அவர்களை திட்டுகிறோம்.
இல்லையென்றால் அவர்களை விட்டு விட்டு வந்து விடுகிறொம்.
ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்களேன்.
நாம் சின்ன பிள்ளைகளாய் இருக்கும் போது அவர்கள் அப்படி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்.
யோசித்துப் பாருங்களேன்.
இனியாவது அவர்களை அன்பாய் பார்த்துக் கொள்வோம்.
ஆதரவாய் அவர்களோடு கைகோர்த்து நடப்போம்.

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

எது காதல்??💓💓

       
           

   இன்று மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் பொது ஏதோ ஒரு ஆசையில் பிறர் மீது விருப்பபடுவது சாதாரண ஒன்று. ஆனால் இந்த அன்பு காதல் என்ற புதிய அத்தியாயத்தை அடையும் போது தான் அது விபரீதம் ஆகிறது.  எது உண்மை எது பொய் என்று புரிந்து கொள்ளாமல் சிலரின் வாழக்கை தொடங்கும் முன்பே முடிந்து விடுகிறது. காரணம் வாழ்க்கை பற்றின சரியான புரிதல் இல்லாதது தான்.

       காதல் தவறில்லை 
       தோழிகளே காதல் தவறில்லை
       ஆனால் தவறான நேரத்தில்,
       தவறான புரிதலில், தவறான             நபரோடு ஏற்படும் போது  
       காதல் தவறாகி விடுகிறது.

புதன், 19 டிசம்பர், 2018

அன்பே மனிதம் 👼👼


           

மனிதனுக்கு  மனிதனே கருணை காட்ட மறுத்ததால் தான் இன்று நமக்கு இயற்கை கூட கருணை காட்ட மறுகிறது. சாலையில் விபத்து ஏற்பட்டால் அம்புலன்ஸை கூப்புடுவதை விட போட்டோ எடுத்து whatsupp ல் ஷேர் செய்து இதை பகிர்ந்தால் ஓர் உயிரை காப்பாற்றலாம் என்று வதந்தியை பரப்பும்  கும்பல் தான் அதிகம். நாம்  இந்த உலகில் மனிதனாய் வாழ்வதை விட மனிதாபிமானம் உள்ள ஒருவனாக வாழ்வது கடினம். எனவே சமூக வலைத்தளங்களில் வெறும் போட்டோக்களை பகிர்வதை விட ஒரு உயிருக்கு மற்றோரு உயிர் அன்பை பரிமாற்றம் செய்ய வேண்டியது தான் இன்று அவசியமான ஒன்று. நாம் எவ்வாறு வாழ்க்கையை அன்போடு வாழ்ந்தோம் என்பது நாம் இறந்தபின் நமக்காக உண்மையாக எத்துணை பேர் வருத்தப்பட்டனர் என்பதில் தான் உள்ளது. எனவே பணம், பொருள் என்று சுயநல வாழ்க்கையை விடுத்து அன்போடும் கருணையோடும் வாழுவோம். ஏனென்றால் அன்பே மனிதம்.

ஞாயிறு, 16 டிசம்பர், 2018

அன்னை தமிழ்

                            தமிழ்

 நான் சிகரமாய் எழுந்து நிற்க
 என் சிந்தனை சிறந்து விளங்க
 என் கற்பனையும் கடலெனப் பாய
 எழுத்தறிவில் நான் சிறக்க
 தன்னை கருவியாகத் தந்த  
 என் அன்னை தமிழுக்கு                                                   அடிபணிகிறேன் 

வெள்ளி, 14 டிசம்பர், 2018

மகளிரின் மாண்பு

            பெண்ணின் பல வேடம்

                            பெண்

 கற்பனைகளின் கடல்,              கனவுகளின் அரசி,            கவிதைகளின் உருவம்,  கஸ்டங்களின்  கவரி,                    அவள் தான் பெண் ! ! ! ! .

                             மகள்

 தாயின் அன்பை சுவாசித்து,          தந்தை   அன்பை நேசித்து,                      குடும்ப   நிலையை யோசித்து,  பிறருக்காக யாசிக்கிறாள்,              ஒரு நல்ல மகள் ! ! ! .

                             மனைவி

 தன் வீட்டினை மறந்து,                        புது வீட்டினை  அடைந்து,  அனைவரின் குணம்  அறிந்து,  துன்பங்களில் துவண்டு,  கஸ்டங்களில் கவிழ்ந்து,      கரைசேரும் படகாய்            வாழ்கிறாள் மனைவி ! ! ! .

                                தாய்

 தன் பிள்ளையை
            கருத்தில்  கொண்டு ,
 பிறர் உண்ட
            மிச்சத்தை உண்டு ,
மணம் குறையாத
            மல்லிகை செண்டு ,
போல தாயோ
            பூவுக்குள் சிக்கிய வண்டு ! ! ! . 

வியாழன், 13 டிசம்பர், 2018

தனி மனித ஒழுக்கம்







  குறைந்த ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் ஆறாவது இடத்தை பிடித்து உள்ளது. தனது இந்த இடத்தை தக்க வைத்து கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது சிங்கப்பூர். ஒரு நாடு ஊழல் அற்ற நிலையில் இருக்க வேண்டும் என்றால் அரசின் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்க வேண்டும் என்பதை தாண்டி  தனி மனித ஒழுக்கம் மிகவும் அவசியமானதாகும். இன்று நம் உலகில் படிக்காதவர்களை விட படித்தவர்களே அதிகம் தவறு செய்கிறார்கள் காரணம் எதை வேண்டுமானாலும் பணத்தால் வாங்கி விடலாம் என்ற எண்ணம் தான் காரணம். இதை போல் நம் நாடும் ஊழல் அற்ற நாடாக  முழுவதும் மாற வேண்டும் என்றால் தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம்.

புதன், 5 டிசம்பர், 2018

வெற்றிப்பாதை

சிந்தித்து வாழ்வோம் சிதைந்த
நம் வாழ்வை சீர்திருத்த
முயன்று வாழ்வோம் நம்
வாழ்வில் தலைநிமிர
தோல்விகளால் சோர்வடையாமல்
தன்னம்பிக்கையில் துணிந்து
பயணிப்போம் வெற்றியை நோக்கி

Politicians

People call them as
Members of Parliament
But
They're not so...
Only for name not for working
They care for their fame
Not for people.

They fight for movies
Not for poverty
This is real INDIA.

I'm


 Yes! I’m adamant
     But give off when I wish
I’m arrogant but
     I become tender when needed.
  I’m stout and rough, with
      Beauty in heart.
  I know what I’m doing
      And the result is mine.
  I don’t want to change...
      But surroundings try to change me
  I’m sure I won’t because,
     I’m the real me
The predominant women.

ஞாயிறு, 2 டிசம்பர், 2018

சாதிகள் வேண்டாம்

இந்த சமூதாயம்

சலவைத் தொழிலாளியின் உழைப்பை ஏற்றுக்கொள்கிறது.
ஆனால்
அந்த சலவைத் தொழிலாளியை ஏற்றுக் கொள்வதில்லை.

இந்த சமுதாயம்
முடிவெட்டுபவரினுடைய உழைப்பை ஏற்றுக் கொள்கிறது.
ஆனால்
முடிவெட்டுபவரை ஏற்றுக் கொள்வதில்லை.

இப்படித்தான்
ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்களின் உழைப்பை மட்டும் ஏற்றுக் கொண்டு விட்டு
மனிதர்களை ஒதுக்கி வைக்கிற கேடு கெட்ட சமுதாயம் இது.

சாதியின் பெயரால் எத்தனை காதல்கள் முளைக்கையிலே கிள்ளியெறியப் படுகிறது.

வேறு சாதியை சார்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் கொலை செய்து விட்டு அதற்கும் பெயர் வைக்கிறார்கள் ஆணவக்கொலை என்று.

இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் படைத்தவர் பிரம்மன் என்றால்
பிரம்மனின் சாதி தானே நாம் அனைவரும்.

இந்த உலகம் ஆதாம் ஏவாலின் வழி தோன்றியது என்றால் நாம் அனைவரும் ஆதாம் ஏவாலின் சாதி தானே.

எங்கிருந்து வந்தது இத்தனை சாதிகள்...

ராவணனின் ஆட்சியில் கூட மக்கள் ஓரளவு சமமாய் நடத்தப்பட்டனர்.

ராமனின் ஆட்சியே தொழில் அடிப்படையில் மக்களை பிரித்தனர்.
அன்று தொழில் சாதியாய் மாறியது.
இன்று சாதி தொழிலாய் மாறியிருக்கிறது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று கரும்பலகையில் எழுதி சொல்லிக் கொடுத்து விட்டு
சாதிச் சான்றிதழ் எங்கே என்று கேட்கின்ற சமூகத்தில் வாழ்கிறோம்.


சாதிகளை கடந்தும் இன்று மனிதர்கள் சாதித்து கொண்டிருக்கிறார்கள்.

இவர் தொட்டால் தீட்டு
பார்த்தால் தீட்டு
படித்தால் தீட்டு என்றார்கள்.

அப்படிப்பட்ட அம்பேத்கர் தான் அரசியலமைப்பு சாசனத்தையே தீட்டினார்.

யாருடைய கை படக்கூடாது என்று நினைத்தார்களோ அவருடைய கை பட்டதனால் தான் வைகையே சுத்தமானது.

சாதனைக்கு பின் சில நேரங்களில் சாதி மறைந்து விடுகிறது.

 இளைஞர்களுடைய நட்பு சில சமயங்களில் சாதியை எதிர்க்கிறது.
சில சமயங்களில் எரிக்கிறது.

வாக்கு செலுத்தும் போது பயன்படாத சாதி
வாழ்வதற்கு மட்டும் பயன்படுகிறது.

 ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நாம் சாதிக்காக பிறந்தவர்கள் அல்ல.
சாதிக்கப் பிறந்தவர்கள்.

 இந்த பதிவை நான் எழுதுவதற்க்குக் காரணம்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஒரு வசனம்.

நீங்க நீங்களா இருக்குற வரையும் நாங்க நாயா இருக்க வேண்டியது தான்.

இந்த வசனம் தான்.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.

வியாழன், 29 நவம்பர், 2018

பனை மரம்🌴🌴🌴🌴

     



   சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் பல லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது என்பதை கேள்விப்பட்டோம் ஆனால் நமது மாநில மரமான பனையின் நிலை என்ன ஆனது????
      நமது நாட்டின் மாநில மற்றும் நெய்தால் திணைக்கு உரிய மரம் தான் பனை மரம். இது வளர பல ஆண்டுகள் ஆகுமாம். இம்மரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாகவும் இதன்  தண்டு வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. அதனால் புயல் காற்றை எதிர் கொள்ளும் அளவிற்க்கு சக்தி கொண்டது. மேலும் புயல் காற்றின் வேகத்தை குறைக்கும் தன்மையும் இதில் உள்ளது. இந்த மரங்கள் முன் காலத்தில் கடல் கரையில் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்போது செங்கல் சூளையில் தான் அதிகம் காணப்படுகிறது காரணம் இதன் பயன் தெரியாதது தான். முன் காலத்தில் நுங்கு மரங்கள் அதிகம் இருந்ததால் தான் நுங்கம்பாக்கம் என்று பெயர் வந்தது என்று ஆய்வியல் அறிஞர் பலர் கூறுகின்றனர். மொத்தம் 30 வகையான பனை மரங்கள் உள்ளன ஆனால் நம் நாட்டில் 3 வகையான மரங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. பனை மரம் உள்ள இடத்தில் மண் வளமும் நீர் வளமும் சிறந்து விளங்கும்.  எனவே இந்த பனையின் பலன் அறிந்து இந்த மரத்தின் வளர்ச்சியை அதிக படுத்த வேண்டும்.

செவ்வாய், 20 நவம்பர், 2018

சாதிகள் இல்லையடி பாப்பா ☠️☠️


 

சாதி என்னும் கூட்டிற்குள் மறைந்து இருக்கும் மனிதனே விழித்திரு     
உன் பிறப்புக்கு உதவ ஒரு மருத்துவச்சியும்
உனது ஆடைகளை சுத்தம் செய்ய ஒரு சலவை காரனும்
உனக்கு உணவு வழங்க ஒரு விவசாயியும்
உன் அறிவை வளர்க்க ஒரு  ஆசானும்
உன் திருமனத்திற்கு ஒரு துணையும்
நீ இறந்தபின் உன்னை தூக்கி செல்ல எட்டு கால்கள் மட்டும் தான் தேவை

சாதி என்னும் முகமூடி அணிந்து திரியும் மானுடமே இதை புரிந்துகொள்
விழித்துக்கொள்

போலி செய்திகள் 🗞️🗞️

 
         

     இன்று whatsupp ல் பகிர படும் செய்திகளில் பாதி செய்தி போலியான செய்தி என்பது தற்போதய bbc யின் அறிக்கையில் தெரிவிக்க  பட்டு உள்ளது.                       தற்போது ஊடகங்களில் மஹாமேரு என்ற ஒரு பூ இமயமலையில் 400 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்று தவறான செய்தி பரப்ப படுகிறது. ஆனால் குறிஞ்சி மலர் மட்டும் தான் அதிகபட்சமாக 12 ஆண்டுகுளுக்கு ஒரு முறை பூக்கும் எனவும் அதற்கான காரணமே இன்னும் தெரியவில்லை என்கிறார்கள் தாவரவியல் நிபுனர்கள். எனவே ஒரு செய்தியை பகிரும் முன்பு அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு பகிரவும்.

சனி, 17 நவம்பர், 2018

குழவியின் ஏக்கம்

பண்டிகை நாட்களில் எல்லாம் குழந்தைகள் குற்றவாளிகளாக மாற ஆசை படுகிறார்கள்.
அப்போதாவது தனது தந்தை தன்னுடன் இருப்பார் எனும் நம்பிக்கையில்.
தந்தைகள் காவலர்களாய்  இருப்பதால்.

வெள்ளி, 16 நவம்பர், 2018

Corruption

Corruption in fund;
Corruption in food;
Corruption in education;
Corruption in entertainment;
At last corruption in man's life..
Is anything exist without corruptions?

வியாழன், 15 நவம்பர், 2018

தாமரை இலைத் தத்துவங்கள்

துன்பத்திலிருந்து வெளிவர,
துணையை நாடும், ஒவ்வொரு
நொடியும், தோல்வி அடைகிறோம்.
தன்னம்பிக்கையோடு வெளியே வா !
தடைகள்கூட தயங்கி நிற்கும்,
தனிமைகூட வரமாய் அமையும்.
நெருங்கிப் பழகினால் நசுக்கப்படுவாய், 
ஒதுங்கி வாழ்ந்தால் ஒடுக்கப்படுவாய்,
ஆகையால் தாமரை இலையாய் இரு.

புதன், 14 நவம்பர், 2018

Masters of the world


You are the one who loves all;
You are the one who admires all;
You are the one who motivates all;
You are the one who tolerate all;
And you are the one who,
Is our second parent?
This is none other than TEACHERS.

Music


You make me relax in
Moody time;
I listen to you when I am
Happy;
I admire you when I am
Sad;
You always deserve a place
In Heart;
Guess who is she?
It is you my dear, melody…

வியாழன், 8 நவம்பர், 2018

கண் தானம்👁️👁️👁️

   

           

 நாம் தாயின் கருவறையில் வெறும் பத்து மாதங்கள் கண்ட இருளை தினம் தினம் அனுபவிக்கும் சாமணியர்களுக்காக
எனது   வேண்டுகோள்.
        நாம் இறந்தபின் மண்ணுக்கு இறையாகும் கண்களை தானம் செய்திருந்தால் நம் நாட்டில் இத்துணை பேர் பார்வை இன்றி இருந்திருகமாட்டார்கள்.
         20 முதல் 30 நிமிடம் மட்டுமே ஆகுமாம் நம் கண்களை தானம் செய்ய, நமது ஒருவரின் தானம் இரு மனிதரின் வாழ்வில் ஒளியை கொடுக்கும்.
          எனவே நாமும் நம் சுற்றத்தாரும் இனைந்து கண்  தானம் செய்து பார்வையற்றோர் இல்லாத  நிலையை உருவாக்க உறுதி அளிப்போம்.


ஞாயிறு, 28 அக்டோபர், 2018

என் அம்புலி தோழி

வாழ்க்கையைப்  புரிய வைத்த
வானின் வதனம் நீ !
தனிமையில் வாடிய போது
தோள் கொடுத்தத் தோழி நீ !
ஒப்பனை செய்யாத
ஓவியம் நீ !
உன்னை நெருங்க முயலவில்லை,
உறவு முறியக்கூடாது என்பதால்.
தொலைவில் இருந்தே,
தொடர்வேன் உன்னை ஒரு தோழியாக !


சனி, 27 அக்டோபர், 2018

எது உயரம்

உடல் அளவில் உயர்ந்து பெற்றோரை நிமிர்ந்து உன் தலையை பார்க்க வைப்பதை விட...
உழைப்பால் உயர்ந்து உன் பெற்றோரை தலை நிமிர்ந்து நடக்க செய்....
அதுவே சிறந்த உயரம்.....

வியாழன், 25 அக்டோபர், 2018

தமிழ் இலக்கியம்

புரிந்த வரிகளை கட்டுரை என்றும்
புரிவது போல் இருக்கும் வரிகளை கவிதை என்றும் ...
புரியாதது போல் புரியும் வரிகளை ஹைக்கூ என்றும் தமிழ் இலக்கியத்தை பிரித்தறிய முடிகிறது......

A lesson

Everyone teaches a lesson,
  Lesson gives the knowledge,
Knowledge gives the experience,
  Experience gives a new life,
So remain patience and achieve
  the goal.

ஞாயிறு, 21 அக்டோபர், 2018

பாரதிக்கு ஓர் புகழாரம்

முண்டாசு கட்டாலும் ,
முருக்கு மீசையாலும் ,
என்னை மூழ்கடித்தாய்.

அடர்ந்த புருவத்தாலும் ,
அனல் பார்வையாலும் ,
என்னை ஆட்கொண்டாய்.

புரட்சி வார்த்தைகளாலும் ,
புதிய சிந்தனையாலும் ,
என்னை பூரிக்க வைத்தாய்.

ஓர் மகளாய் உன்மேல்
மாறாத காதல் கொண்டேன்.



திங்கள், 15 அக்டோபர், 2018

Dr. A.P.J.Abdul kalam

Man of humanity;
Man of love;
Man of divine;
Man of honor;
Man of mission;
Man of respect;
And the person of
Dedication that is
Dr A.P.J ABDUL KALAM”

கலாமுக்கு எனது கவிகளின் சலாம்..




என்னை செதுக்கிய சிற்பிக்கு பிறந்தநாள்..
என்னை வழிநடத்திய குருவிற்கு பிறந்தநாள்..
என்னை தளரவிடாமல் செய்த தன்னம்பிக்கைக்கு பிறந்தநாள்..
என்னை தலையில் குட்டும் சிந்தனையாளனுக்கு பிறந்தநாள்..
என்னை துன்பத்தில் இருந்து காக்கும் காவலனுக்கு பிறந்தநாள்..
என்னை முத்தமிடும் எண்ணங்களின் எழுத்தாணிக்கு பிறந்தநாள்..
என்னை ஆதரித்த அழகியத்தமிழ் மகனுக்கு பிறந்தநாள்..
என்னை தழுவி அனைத்து கொண்ட அன்னைக்கு பிறந்தநாள்..
என்னை வீழாமல் தோள் கொடுத்த தோழனுக்கு பிறந்தநாள்..
என்னை மனிதியாக வெளிவர உதவிய சிறகுக்கு பிறந்தநாள்..
என்னை மட்டுமல்ல பல இளைஞர்களை கனவு காண செய்த கனவு நாயகனுக்கு பிறந்தநாள்..
என்னை பெறாமல் நான் தத்தெடுத்த என் தந்தைக்கு பிறந்தநாள்..
உன்னை போற்றி பேசிட என்னிடம் வார்த்தைகள் இல்லை..
எனவே உனது கால்களை முத்தமிட்டு வணங்கி தொழுகிறேன்.. 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலாம் அப்பா..

ஞாயிறு, 14 அக்டோபர், 2018

வெற்றியை நோக்கி

                    சிந்திக்க முயலும் சில நொடியும்

                    சிறைபிடிக்கப்படுகிறது.

                    கவலையால் அல்ல,

                    வாழ்க்கைப் பற்றிய கற்பனையால்.

                    கற்பனை உண்மையாகும் வரை

                    காய்நகர்த்தப் போகிறேன்.

                    இடையில் துவண்டுபோவேன். 
                    
                    ஆனால் தோற்கமாட்டேன்.

வியாழன், 11 அக்டோபர், 2018

எனது மற்றொரு பாதி

எங்கு இருந்தோ வந்து
     ஒன்று கூடினோம்
இக்கல்லூரி தாயின் கருவறையில்
      சிரித்துப் பேசிய நாட்களும்
சிந்தித்து பேசிய நாட்களும்           
      சொல்லும் நம் கல்லூரி தாயின்
கருவறை இரகசியம் என்னவென்று
      வெகுதூரம் செல்லுமா என்று
தெரியாத உறவிது, ஆனால்
      தேன் சிந்தும் மாலையில் கண்ட காதலனை விட, கண்ணீர் சிந்தும்
      வேளையில் யான் கண்ட நட்பு
பெரிதென்று கூறுவேன் நம்
      நட்பின் பெருமையை!!!
       
   

வாழ்நாள் பயணம்

வாழ்நாள் என்னும் கடலில்
        வாழ்க்கை என்னும் கப்பலில்
          கல்லறை என்னும் கடற்கரையை அடைய எத்தனை எத்தனை போராட்டங்களையும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது...........




செவ்வாய், 9 அக்டோபர், 2018

என் தங்கத் தாரகைக்கு

                           சற்றும் எதிர்பாராத நேரத்தில் ,
                           
                           சாவின் வலியை  உணர்த்தும் , ஓர்
                           
                           உன்னத ஆயுதம் என் தாயின் கண்ணீர் .
                            
                          
                           அதே போல்
                       
                           சாகா வரம் தரும் , ஓர்
                       
                           சத்தியச் சாரல்

                           என் அன்னையின் புன்னகை .


திங்கள், 8 அக்டோபர், 2018

கசக்கும் சில உண்மைகள்

                                  ஆடை என்னும் அவசியத்தை
                        
                                    அறைகுறையாக அணியும் வரை,
                         
                             குமரி என்பது மதுவாகும் ,
                         
                                    குற்றம் புரிவது எளிதாகும் ,
                          
                             பதுமை என்பதை மறந்துவிட்டு ,
                          
                                    புதுமையை நாட விரும்பாதே .
                           
                            அடக்கம் என்னும் அரும்மருந்து ,
                          
                                   அவசியம் அறிந்து அதை அருந்து .         

Predominant

Most predominant gift is parents;
Most predominant jewel is education;
Most predominant thing is water;
Most predominant word is love;
Those predominant stuffs
Rules the world.

ஞாயிறு, 7 அக்டோபர், 2018

நேற்று இன்று நாளை

முடிந்து போனது என்பது நேற்று
நிகழ்வது என்பது இன்று
நிகழப்போவது என்பது நாளை
முடிந்ததை மறக்க வேண்டும்
நிகழ்வதை நினைவு கொள்ள வேண்டும்...


நிகழப்போவதை எண்ணி திட்டமிட வேண்டும்...
மொத்தத்தில் எதுவுமே நிரந்திரமில்லை...
வாழ்க்கை ஒரு தொடர் சுழற்சியாகவே உள்ளது ..சுழன்றும் நம் குறிக்கோளை அடைய வேண்டும்..






பாடம்

தேங்கிய தண்ணீரும் தேக்கி வைத்த தனித்திறமையும் எவருக்கும் பயன்படாத ஒன்று ....
அதனால் உங்கள் திறமையை வெளிகாட்டுவது நன்று...
அதற்கான முயற்சியை எடுத்திடுங்கள் இன்று......

பெண் குழந்தைகளின் நிலை (கோபத்தின் வெளிபாடு)

                        சுற்றித்  திரியும்  அசுரர்களால்
                                   சூறையாடப்படும்  பெண்சிசுக்கள்
                       கன்னித்  தன்மை  அழிந்து
                                   கதறுகிறது  தமிழகம்
                       அவலம்  போக்க  அகிம்சை  முறையில்
                                  அடங்கிக்  கிடக்கும்  அர்ப்பப்  பதர்கள். 

Real Beauty

Beauty rules the world;
Even
   Admires all;
Creates envy in heart;
   But,
Real beauty -mercy"

சனி, 6 அக்டோபர், 2018

அன்னைக்குச் சில ஆசை வரிகள்

தொட்டணைத்துத் தூக்கி
தொட்டிலில் போட்டு,
முத்தமெனும் முத்திரையால்
முகத்தினை நிரப்பி,
பாசம் என்னும் இசையினிலே
தாலாட்டுப் பாடி,
கல்வி என்னும் கலையறிய
கல்லூரி அனுப்பி,
அணிகலன்கள் பலபூட்டி
அழகு பார்க்கும்,
அன்பு சிறிதும் குறையாத,
அழகு பொழியும் அன்னையை,
நினைவது தவறும் வரை
நித்தமும் மதித்திருப்பேன்.

நீ

நீ நெல்லாக இரு நெல் உமியாக இருக்காதே...
நீ கைத்தட்டலை பெறுபவனாக இ்ரு கை தட்டுபவனாக இருக்காதே...
நீ பூச்செடியின் வேர்களாக இ்ரு பூவாக இருக்காதே...
நீ பல்கலைகழகமாக இரு அதன் கிளைகளாக இருக்காதே...
நீ எறும்பாக இரு எருமையாக இருக்காதே....
நீ கீரிப்பிள்ளையாக இரு கிளிப்பிள்ளையாக இருக்காதே...
நீ எப்படி இருந்தாலும் நீ நீயாக மட்டுமே இரு... நீ உனக்கென ஒரு எல்லைக்கோட்டை வரையாதே ஏனென்றால் உன் முயற்சிக்கு எல்லையே இல்லையே.....


வெள்ளி, 5 அக்டோபர், 2018

தமிழ் பண்பாட்டுச்சிறப்பு

பட்டில்  தெரியும்  பண்பாடும்,
பொட்டில்  தெரியும்  புன்னகையும்,
மஞ்சளில்  தெரியும்  மங்களமும்,
மலரில்  கமலும்  நறுமணமும்,
தலைகீழாக  நின்றாலும்,
தலைவிரி  கோலத்தில்  தெரிவதில்லை.

வியாழன், 4 அக்டோபர், 2018

புதன், 3 அக்டோபர், 2018

To My Friends

We are born with difference,
  But with same thoughts.
They do good deeds,
  Without any expectation.
Friends are the only treasure,
  Understanding us without any profit.

செவ்வாய், 2 அக்டோபர், 2018

என் தமிழாசிரியர்க்கு


ஆருயிர்த் தமிழின் பெருமையும் அருமையும் உணர்த்தியது நீங்கள் ஐயா...
தங்கிலீஷ் பேசிய எங்களை தமிழ் பேச வைத்தது நீங்கள் ஐயா..
நீங்கள் முத்தமிழில் முத்தெடுத்தவர்..
நாங்கள் மக்கா குப்பைகள் மறுசுழற்சி செய்தது நீங்கள் ஐயா..
பாறைகளாய் இருக்கின்ற எங்களை சிலைகளாக செதுக்கப்போகும் சிற்பி நீங்கள்..
தவிடாக இருந்த எங்களை தமிழச்சிகளாக்கியது நீங்கள் ஐயா..
இலக்கண சுவைகளை ருசிக்க செய்தது நீங்கள் ஐயா..
நீங்கள் ஒரு தேடுதளம் அதன் பயனாளர்கள் நாங்கள் ...உங்களை போற்ற வார்த்தைகள் என்னிடம் இல்லை ஐயா..
செந்தமிழ் செல்வனாகிய வீரத்தமிழனே எங்களை முத்தமிழின் தமிழச்சிகளாக்கிய உங்களுக்கு என்ன கைம்மாரு செய்யப்போகிறோம்??.?.............

- இந்திராணி - முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

மதிப்பு

தெய்வத்திற்கு இவ்வுலகில் உயிர் உண்டா?கற்களையும் ஒளியையும்  தெய்வம் என்று கருதுகிறோம்
ஆனால் உயிரோடு நடமாடும்
நம்மை காக்கும் பெற்றோரை இறைவனாக ஏன் வணங்குவதில்லை? அப்படி
வணங்கினால் ஏன் தோன்றுகிறது
முதியோர் இல்லம்? கற்களுக்கும்
ஒளிக்கும் இருக்கும் மரியாதை
ஏன் நம் பெற்றோருக்கு இல்லை?
எல்லாவற்றையும் இழந்த பின்
திரும்பிப் பார் உன்னை தாங்க
உன்னைப் பெற்ற பெற்றோரே ஆதரவாக இருப்பார்கள்.

திங்கள், 1 அக்டோபர், 2018

முயற்சி



எவ்வளவு பெரிய வன்கொடுமைகளினாலும்
பூக்களை மலர வைக்க முடியாது...
அதுபோலத்தான்,
நீ எவ்வளவு பெரிய சூழ்நிலை கைதியாய் இருந்தாலும்
உன் முயற்சியை கைவிடாதே...

.

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

புதுமைப் பெண்

மலர்களில் இதழ்களைப் போல
ஒவ்வொரு பருவ நிலையிலும்
 உதிர்ந்தது என் கனவு,
சோர்வடைந்த பெண்ணாய்          திகழவில்லை
வீழ்ச்சியும் எழுச்சியும் கொண்ட
பெண்மையின் நற்குணத்தின் நறுமணத்தோடு திகழும்
பாரதியின் புதுமைப் பெண்                                    

சனி, 29 செப்டம்பர், 2018

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

நீ யார்

குழந்தையாக பிறந்தேன்
சிறுமியாக  வளர்ந்தேன்
மாணவியாக பயனிக்கிறேன்
ஒரு சிறந்த செய்தியாளராக
உருவெடுத்து பெண் என
பெருமிதம் கொள்ள .....
இதுவே நான் !!!

சூழ்நிலைக் கைதிகள்


சூழ்நிலையில் சுயநினைவை          இழந்த மானிடப் பிறவியே கட்டாயத்தின் அடிப்படையில்  
உன்னை தாங்கிக் கொண்டிருக்கும்
பூமித்தாய் தன் அகங்காரத்தில்
உன்னை எரிக்க முயன்றால்
மண்ணில் வந்த நீ மண்ணாகி விடுவாய்.....உன்னால் அவளை போற்ற இயலவில்லை என்றாலும் அவளை அழிக்க முயலாதே
அதன் பின்விளைவு உன் மரணம்!
                     

வன்கொடுமை

விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்தது
பெண் விடுதலை அல்ல
விதைத்து மரமாய் வளர்ந்தது
பெண் வன்கொடுமை
நாகரிகத்தோடு வளர்ந்த சமூகம்
ஏன் நாகரிகம் இழந்து
பெண்ணை தீமை என்னும்
தீயால் துன்புறு செய்கிறது
கேள்விகளுக்கு விடை இன்றி
தவிக்கும் பெண்ணினம்
                     
               

ULTIMATE THING

Behind a success there is
     A sweat;
Behind a sweat there is
     A hard work;
Behind a hard work there is
     A pain;
Behind a pain there is
     An offend;
So never care about anything,
     Try till the last breath;
Then you will be an ultimate.

உனக்காக நான்

சூரியனாக நீ இருந்தால் 
உன்னை சுற்றி வரும் பூமியாகநான் வருவேன்
நிலவாக நீ இருந்தால் 
ன்னை ரசிக்கும்
இரவாக நான் வருவேன் 
நிலமாக நீ இருந்தால் 
உன்னை நனைக்கும் மழையாக நான் வருவேன் 
கரையாக நீ இருந்தால் 
ன்னை தொடும் 
அலையாக நான் வருவேன் கவலையாக நீ இருந்தால் அனைக்கும் காற்றாக நான்வருவேன்
சோர்வுற்று நீ இருந்தால் 
உன்னை தாங்கும் தோள் கொண்டு நான் வருவேன் இதயமாக நீ இருந்தால் 
உன்னுள் இசையாக நான் வருவேன் 
தனியாக நீ இருந்தால் 
உனக்கு துணையாக நான் வருவேன் 

கோ.சௌந்தர்யா 
கணினி பயன்பாட்டியல்

பொன்னியின் செல்வன்

ஆசிரியர் குறிப்பு:
கல்கி கிருஷ்ணமூர்த்தி,
 ராமசாமி ஐயர் கிருஷ்ணமூர்த்தி என்பதே இவரது இயற்பெயராகும். கல்கி என்பது விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் இருந்து தன் பெயரை மாற்றம் செய்து கொண்டார். இவரது காலம் 1899-1954. இவர் ஒரு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். இவர் 120 சிறுகதைகளையும், ஐந்து புதினங்களையும், மூன்று வரலாற்று காதல் காவியங்களையும் இயற்றியுள்ளார். கல்கி அவர்கள் மூன்று முறை சிங்கள தீவுகளுக்கு சென்று இக்கதையின் அமைப்புகளை எழுதியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் இக்கதைகளை முடிக்க காலமாயிற்று. இக்கதை 1951-1954 கல்கி நாள் இதழில் வெளிவந்தது. பின் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்றதால் இதன் ஆசிரியர் இக்கதையினை புதினமாக வெளியிட்டார். அன்று முதல் இன்றுவரை அனைவரையும் ஈர்த்து வருகிறது இக்கதை.
கதையின் களம்:

"கடலைச் சுருக்கி கட்டுரையாக்க முடியாது, இருப்பினும் இது என் சிறிய முயற்சியே". பொன்னியின் செல்வன், பொன்னி இச்சொல் காவேரி நதியினை குறிக்கிறது. ஒவ்வொரு நாகரிகமும் ஒரு நதிக்கரையில் பிறக்கிறது."தஞ்சை மாநகரின் நாகரிகமும் சோழநாட்டின் பண்பாடும் பிறந்த நதிக்கரையை காவேரி". சோழநாட்டின் மக்கள் வழிபடும் கடவுளும் தாயும் அக்கறையை. பொன்னியின் செல்வன் இக்கதையில் பொன்னியின் செல்வனாக அதாவது காவேரி நதிக்கரையில் செல்வனாக இராஜராஜ சோழன் வளம் வருகிறான்.
இக்கதை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல் பக்கங்களை கொண்டது. அக்கால மன்னனின் பெருமைகளையும் ஆட்சித் திறன்களையும் மக்களின் வாழ்வியல் நெறிகளையும் கூறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராஜராஜ சோழனின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான ஆறு மாத காலத்தில் கதையே இக்கதையின் கருவாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாநகர்

சுந்தர சோழன் மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. தஞ்சை மாநகரின் அரசன் தீராத நோயினால் பாதிக்கப்பட்டான். அப்பொழுது பதவிக்காக ஒரு குழப்பம் ஏற்பட்டது. அரசனின் பங்காளி முறையில் தம்பியான
மதுராந்தகச் சோழன் பதவிக்காக ஆசைப்பட்டு அந்நாட்டு அமைச்சர்களின் உதவியுடன் மன்னனை அழிக்க திட்டமிடுகிறான். சோழனுக்கோ மூன்று குழந்தைகள். முதலாவது மகனின் பெயர்
ஆதித்திய கரிகாலன், இரண்டாம் மகளின் பெயர்
குந்தவை, மூன்றாவது மகனின் பெயர்
ராஜராஜ சோழன், இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன் . இருப்பினும் இவர் மக்களால் இராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். சுந்தர சோழ மகாராஜா தனது முதலாவது மகன் ஆதித்திய கரிகாலனை ஆட்சிக்கு வர சொல்லி அறிவுரை அழைத்தார். இருப்பினும் ஆதித்திய கரிகாலனுக்கு அதில் விருப்பம் இல்லை. சோழ நாடு பரந்து விரிந்தவை இன்றைய ஆந்திரம்,கர்நாடகம்,கேரளா தமிழ்நாடு,சிங்களம் இவையெல்லாம் சோழநாட்டு மன்னர்களால் தஞ்சையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட நகரங்களாகும். நாட்டின் வடபகுதி ஆதித்ய கரிகாலனால் ஆட்சி செய்யப்பட்டது. நாட்டின் மையப்பகுதி குந்தவை மற்றும் அவளின் தந்தையான சுந்தர சோழனால் ஆட்சி செய்யப்பட்டது. நாட்டின் தென்பகுதி அருள்மொழி வர்மனால் ஆட்சி செய்யப்பட்டது. ஆதித்திய கரிகாலன் மிகவும் கோபம் குணம் கொண்டவன். ஆனாலும் அவர் மனம் தூய்மையானது. இவர் சோழ நாட்டின் படைத்தளபதியாக பணியாற்றினார். குந்தவை தன் அறிவுத் திறனால் நாட்டின் மையப்பகுதியை வழிநடத்தினார். அருள்மொழி வர்மன் தென் சோழநாட்டை ஆட்சி புரிந்ததும் இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க சிங்கள தீவுகள் மீது போர் தொடுத்து சோழர்களின் வீரத்தினை உலகிற்கே எடுத்துக்காட்டினார். ஆதித்திய கரிகாலனுக்கு மதுரை மாநகரை சேர்ந்த வீரபாண்டியன் உடன் பகை. வீரபாண்டியனை துரத்திக்கொண்டு சென்றார் ஆதித்திய கரிகாலன். வீரபாண்டியனும் ஒரு இடத்தை சென்றடைந்தான் அங்கு ஒரு பெண் இருந்தாள்.
அவள் பெயரோ நந்தினி, இவள் பாண்டியனின் காதலி. ஆதித்திய கரிகாலன் வீரபாண்டியனை கொள்ள வந்துள்ளார் என்பதை உணர்ந்த நந்தினி ஆதித்திய கரிகாலனிடம் வீரபாண்டியனுக்காக உயிர்ப்பிச்சை  வேண்டினாள். ஆதித்திய கரிகாலனுக்கு நந்தினி மீது ஒரு காதல் ஏற்பட்டது. இருப்பினும் பகையின் காரணமாக வீரபாண்டியனை கொலை செய்கிறார், ஆதித்திய கரிகாலன். அன்றே சபதம் எடுக்கிறாள் நந்தினி ஆதித்திய கரிகாலனை கொலை செய்ய வேண்டும் என்று. சோழநாட்டின் அரச குடும்பத்தில் ஒருத்தியாக மாற வேண்டும் என்று அரச பதவியில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்கிறாள் நந்தினி. இந்த அனைத்து உண்மைகளையும் அறிந்தார் ஆதித்திய கரிகாலனின் உயிர்த்தோழன்

வந்தியத்தேவன். தன் தோழனிடம் அவருக்கும், அவரின் தந்தைக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தினை தெரிவிக்கிறார். ஆதித்திய கரிகாலன் வந்தியத்தேவனிடம் இரு ஓலைச்சுவடிகளை கொடுத்து தன் தங்கையிடமும் தந்தையாரிடமும் அளிக்குமாறு கூறுகிறார். வந்தியத்தேவனும் ஆதித்திய கரிகாலனின் வேண்டுகோளுக்கு இணங்க தஞ்சை மாநகரை நோக்கி பயணம் செய்ய தொடங்கினார்.
வந்தியத்தேவன் செல்லும் வழியில் சோழநாட்டின் தாயான பொன்னி நதி கரை எப்படி எல்லாம் இருக்கிறது என்பதெல்லாம் கண்டு கழித்தும் ,மக்கள் வாழ்க்கையில் எப்படி நெறிகளோடு வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டும். சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகளையும் அழகிய அமைப்புகளையும் கண்டு வியந்தும் சென்றடைகிறார் வந்தியத்தேவன். ஆதித்திய கரிகாலனை நந்தினி தனிமையில் சந்திக்க அழைப்பு விடுகிறாள். ஆதித்திய கரிகாலனும் நந்தினியின் அழைப்பை ஏற்று அவளை காண சென்றான். ஆதித்திய கரிகாலனுக்கு நந்தினியின் திட்டம் தெரிந்தும் அவர் சென்றார். அதற்கு காரணம் அவர் நந்தினியை காதலித்ததே ஆகும். அன்று முதல் இன்றுவரை ஆதித்திய கரிகாலனின் மரணம் ஒரு மர்மமே. அவர் யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. நந்தினியா அல்லது பாண்டிய மன்னர்களால் என்பது புதிரே. மறுபக்கம் வந்தியதேவன் சுந்தர சோழனிடமும் குந்தவை இடமும் ஆதித்திய கரிகாலன் அளித்த சுவடியை ஒப்படைத்தான்.

குந்தவை மீது காதல் கொள்கிறான் வந்தியத்தேவன். குந்தவைக்கும் வந்தியதேவன் மீது விருப்பம் ஏற்பட்டது. ஆனால் அவ்விருவரும் சோழநாட்டை பகைவர்களிடமிருந்து பாதுகாக்க எண்ணினர். குந்தவை வந்தியத்தேவனிடம் தன் தம்பியான அருள்மொழிவர்மன் சிங்க தீவுகளில் இருப்பதை கூறி அவரிடம் நாட்டின் நிலைமையும் தந்தைக்கு ஏற்பட இருக்கும் அபாயங்களையும் கூறுமாறு அவரை சிங்கள தீவுகளை நோக்கி பயணிக்க சொன்னாள், குந்தவை. அருள்மொழிவர்மனும் எவருக்கும் தீங்கு செய்ய எண்ணாதவர், அனைவருடனும் நட்புடன் பழகும் ஆற்றல் கொண்டவர். போர்த்திறன், கலைத்திறன் ஆகியவற்றை மிகவும் திறனை கொண்டவர். வந்தியத்தேவன் கொண்டு சென்ற செய்தி அருள்மொழிவர்மனை வடக்கு நோக்கி பயணம் செய்ய தூண்டியது. கோபம், பொறாமை இவையெல்லாம் சிறிதும் அருள் மொழி வர்மன் இடம் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர சோழன் தஞ்சையின் அரசன் காலமானார். இதனால் நாட்டில் பல குழப்பம் ஏற்படுகிறது. இவை அனைத்துக்கும் அருள்மொழிவர்மன் எவ்வாறு தீர்வு காண்கிறார் என்பதும் சோழ சாம்ராஜ்யத்தை எவ்வாறு வழிநடத்துகிறார் என்பதும் இக்கதையின் முக்கியமான பகுதியாகும். குந்தவை தன் தம்பிக்கு உதவி நாட்டின் பெருமையை நிலைநாட்டினாள்.
தவறு செய்யும் அனைவரையும் அருள்மொழிவர்மனும் குந்தவையும் கண்டுபிடித்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தனர். முடிசூடும் விழாவும் வந்தடைந்தது, நாட்டு மக்கள் அனைவரும் இராஜராஜ சோழனே தஞ்சையை ஆள வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். முடிசூடும் விழாவின் பொழுது தன்னைத் தேடி வந்த கிரீடத்தையும் அருள்மொழிவர்மன் ஆன இராஜராஜ சோழன், மதுராந்தக சோழனுக்கு அளித்தார். இதனால் இராஜராஜ சோழனுக்கு தியாகச் செம்மல் என்ற பட்டமும் மக்களிடம் இருந்து கிடைத்தது. மதுராந்தகச் சோழன் 14 ஆண்டுகள் தஞ்சையை ஆட்சி செய்தார். பின் அவர் காலமானார். மக்களின் விருப்பத்திற்கேற்ப ராஜராஜ சோழனும் அரசன் ஆனார். அதற்குப் பின்னரே சாணக்கிய மன்னனை போரில் வீழ்த்தி அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் தஞ்சை பெரிய கோயிலை கட்டத் தொடங்கினார். எந்தவித பதவி ஆசையும் இல்லாதவர் ராஜராஜசோழன். மக்கள் அனைவரும் இராஜராஜ சோழன் மீது பெரும் மரியாதையை கொண்டிருந்தன. மக்களோடு மக்களாய் வாழ்ந்து வரும் இவரை. இதுவே இப்புதினத்தின் கருவாகும். கடலை சுருக்கி கடுகு ஆக்க முடியாது. அன்றைய கால மக்கள் முதல் இன்றைய நவீன உலக மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, பொன்னியின் செல்வன். அவ்வாறு தமிழ் வார்த்தைகளை வர்ணனையோடு இயல்பான நடையில் கூறியுள்ளார், கல்கி. இன்றைய கால திரைப்பட இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் கதையை இயக்க முடியாது என்பது அசைக்க முடியாத உண்மை. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையும் சிறிது ஆசிரியரின் கற்பனையில் தோன்றியவை ஆகும். சிறிதளவு கற்பனை பல உண்மைகள் நம் நாட்டு பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் கூறும் இன்னும் இன்று வரை சிறப்பினைக் கொண்டது.தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் என்றும் அழியாத ஒன்று ஆகும்.ஆயிரம் படை எடுப்பிற்கு பின்னும் நம்மால் நம் தாய் மொழியை மிக விரிவாய் தெரிந்து கொள்ள முடிகிறது காரணம் நம் தமிழ் மொழி ஆழமாக வேர் ஊன்றி நிற்பதே காரணம் ஆகும்.உலக மொழிகளில் தமிழ் மிகபழமையான மொழி ஆகும்.இன்னும் ஆயிரம் படை எடுப்பு வந்தாலும் நம் தாய் மொழி மிக உயர்ந்த இடத்தில் இருக்கும். இவை அனைத்திற்கும் எடுத்துக்காட்டு பொன்னியின் செல்வன் போன்ற நூல்களே ஆகும்."வாழ்க தமிழ்".


ஓவியங்கள் நன்றி-மணியன் செல்வன்
மேலும் தஞ்சை பெரிய கோயிலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள:http://aiswaryasaravanan.blogspot.com/2018/09/blog-post.html?m=1

வியாழன், 27 செப்டம்பர், 2018

அடைப்பட்ட பறவைகள்

சாதிக்க முயலும் பெண்களையும்
சபிக்கும் சமூகம்.......
ஆண்களின் அடிமையாக வாழ
விருப்பமின்றியும் வாழும் கைதிகள்
அடிகளையும் முயற்சி படிகளாய்
மாற்றும் ஓரினம்.... என் இனம்
துயரங்கள் பல இருப்பினும்
இன்முகம் சிரிப்புடன் வாழ்ந்து
வரும் இச்சமூக கைதிகள்.....
விடுதலை இல்லா பறவைகள்
சிறகுகள் இருந்தும் பறக்க
முயலா நிலை....என்றுதான் மாறும்?

தோல்வி

தோற்றபின் துவண்டுவிடாதே...
தோற்றதன் காரனத்தைத் தேடு...
தேடிய காரணத்தின் பின் ஓடு..
பிறகு வெற்றி மாலையை சூடு...