அன்று 26 டிசம்பர் 2004, 8 மணி கிறிஸ்துமஸ் தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடிவிட்டு ஊரே கோலாகலமாக இருந்த தருணம் அது. பலரின் வாழ்க்கையை திசை திருப்பிய நாளும் அது தான். பலர் தன் சொந்தங்களை இழந்த நாளும் அது தான். இத்தனை நாள் கடலின் அழகை ரசித்த அனைவரும் அன்று கடலின் மறுபக்கத்தை பார்த்த நாளும் அது தான். ஏதோ நிகழ போகிறது என்று உணர்வதற்குள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆம் அது தான் சுனாமி. ஒரு மாபெரும் படை எவ்வாறு பொறிடுமோ அது போல் அனைத்தையும் வீழ்த்தி விட்டது அந்த சுனாமி.சுனாமி பேரழிவு ஏற்பட்டு பதினான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், அந்த அழிவு கொடுத்த வலியும் வேதனையும் இன்னும் மறையவில்லை. வேகமாக நம் வாழ்வு சுழன்று கொண்டு இருப்பதால் நம்மை தாங்கி சுழன்று கொண்டு இருக்கும் பூமி அன்னையை மறந்துவிட்டோம். அதனால் தான் என்னவோ நான் இருக்கிறேன் என்று நினைவூட்டும் விதமாக அடிக்கடி ஒரு பேரழிவை நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இதை படிக்கும் அனைவரும் ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்.
வியாழன், 27 டிசம்பர், 2018
இயற்கையின் கோரதண்டவம்🌊🌊
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக