வியாழன், 29 நவம்பர், 2018

பனை மரம்🌴🌴🌴🌴

        சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் பல லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது என்பதை கேள்விப்பட்டோம் ஆனால் நமது மாநில மரமான பனையின் நிலை என்ன ஆனது????
      நமது நாட்டின் மாநில மற்றும் நெய்தால் திணைக்கு உரிய மரம் தான் பனை மரம். இது வளர பல ஆண்டுகள் ஆகுமாம். இம்மரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாகவும் இதன்  தண்டு வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. அதனால் புயல் காற்றை எதிர் கொள்ளும் அளவிற்க்கு சக்தி கொண்டது. மேலும் புயல் காற்றின் வேகத்தை குறைக்கும் தன்மையும் இதில் உள்ளது. இந்த மரங்கள் முன் காலத்தில் கடல் கரையில் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்போது செங்கல் சூளையில் தான் அதிகம் காணப்படுகிறது காரணம் இதன் பயன் தெரியாதது தான். முன் காலத்தில் நுங்கு மரங்கள் அதிகம் இருந்ததால் தான் நுங்கம்பாக்கம் என்று பெயர் வந்தது என்று ஆய்வியல் அறிஞர் பலர் கூறுகின்றனர். மொத்தம் 30 வகையான பனை மரங்கள் உள்ளன ஆனால் நம் நாட்டில் 3 வகையான மரங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. பனை மரம் உள்ள இடத்தில் மண் வளமும் நீர் வளமும் சிறந்து விளங்கும்.  எனவே இந்த பனையின் பலன் அறிந்து இந்த மரத்தின் வளர்ச்சியை அதிக படுத்த வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக