சனி, 6 அக்டோபர், 2018

அன்னைக்குச் சில ஆசை வரிகள்

தொட்டணைத்துத் தூக்கி
தொட்டிலில் போட்டு,
முத்தமெனும் முத்திரையால்
முகத்தினை நிரப்பி,
பாசம் என்னும் இசையினிலே
தாலாட்டுப் பாடி,
கல்வி என்னும் கலையறிய
கல்லூரி அனுப்பி,
அணிகலன்கள் பலபூட்டி
அழகு பார்க்கும்,
அன்பு சிறிதும் குறையாத,
அழகு பொழியும் அன்னையை,
நினைவது தவறும் வரை
நித்தமும் மதித்திருப்பேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக