செவ்வாய், 2 அக்டோபர், 2018

என் தமிழாசிரியர்க்கு


ஆருயிர்த் தமிழின் பெருமையும் அருமையும் உணர்த்தியது நீங்கள் ஐயா...
தங்கிலீஷ் பேசிய எங்களை தமிழ் பேச வைத்தது நீங்கள் ஐயா..
நீங்கள் முத்தமிழில் முத்தெடுத்தவர்..
நாங்கள் மக்கா குப்பைகள் மறுசுழற்சி செய்தது நீங்கள் ஐயா..
பாறைகளாய் இருக்கின்ற எங்களை சிலைகளாக செதுக்கப்போகும் சிற்பி நீங்கள்..
தவிடாக இருந்த எங்களை தமிழச்சிகளாக்கியது நீங்கள் ஐயா..
இலக்கண சுவைகளை ருசிக்க செய்தது நீங்கள் ஐயா..
நீங்கள் ஒரு தேடுதளம் அதன் பயனாளர்கள் நாங்கள் ...உங்களை போற்ற வார்த்தைகள் என்னிடம் இல்லை ஐயா..
செந்தமிழ் செல்வனாகிய வீரத்தமிழனே எங்களை முத்தமிழின் தமிழச்சிகளாக்கிய உங்களுக்கு என்ன கைம்மாரு செய்யப்போகிறோம்??.?.............

- இந்திராணி - முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

3 கருத்துகள்:

  1. அருமை இந்திராணி.தங்களை வலையுலகிற்கு அன்புடன் வரவேற்கிறோம்..

    கவிதையை இரசித்தேன். இவரை பற்றி பேசிட என்னிடம் வார்த்தைகள் இல்லை.. உங்கள் தமிழ் ஆசிரியர் குணசீலன் அவர்களுக்கு எனது வணக்கங்கள்..

    தொடருங்கள் தொடர்கிறேன்.வாழ்த்துகள் டா.

    பதிலளிநீக்கு