கவிதைத் தொகுப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைத் தொகுப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 செப்டம்பர், 2016

வானம் தொட்டுவிடும் தூரம்தான்


எங்கள் கல்லூரியின் வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் வா.சுரேசு அவர்களால் எழுதப்பட்ட கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்.

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

நா.முத்துகுமார்-க்கு சமர்பணம்...!!!


எங்கள் கல்லூரியில் வாரந்தோறும் நடைபெறும் சிந்தனை மன்றத்தில் இந்த வாரம் கவிஞர் நா.முத்துகுமாரின் கவிதைகள் கலந்துரையாடல் என்ற தலைப்பில் நடைபெற்றது.இதில் பல மாணவிகள் அவரின் கவிதைகளை பாடியும்,கலந்துரையாடியும் அவரை நினைவு கூர்ந்தனர்.அதில் ஒரு சிலர் அவரை குறித்த  தனது சொந்த படைப்பில் கவிதை ஒன்றை எழுதி வாசித்தனர்.அதில் ஒன்றே இக்கவிதைத் தொகுப்பு.மூன்றாம் ஆண்டு கணிதத் துறையில் பயின்று வரும் வ.கீர்த்தனா அவர்களால் எழுதப்பட்டது.

சனி, 10 செப்டம்பர், 2016

அம்மா என்று அழைப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை…!!!


Image result for அம்மா

இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறையில் பயின்று வரும் கோ.ஐஸ்வர்யா அவர்களின்  சொந்த படைப்பில் உருவான கவிதையினை  பகிரவுள்ளேன்…!!!

கல்லாய் இருந்த என்னை
சிலையாய் செதுக்கினாய்..!!

கரியாய் இருந்த என்னை
வைரமாய் உருவாக்கினாய்..!!

வற்றிய கால்வாயாக இருந்த என்னை
வற்றாத நதியாக மாற்றினாய்..!!

துன்பத்தை எல்லாம் நீ எடுத்துக் கொண்டு
இன்பத்தை மட்டும் எனக்களித்தாய்..!!

இதற்கு ஈடாய் எதை தருவேன்..????
’அம்மா’ என்று அழைப்பதைத்

தவிர வேறு ஒன்று இல்லை…!!!

வியாழன், 8 செப்டம்பர், 2016

சாதி ஏனோ..???

வணிகவியல் துறையின் உதவிப் பேரராசிரியர் வா.சுரேசு அவர்கள் சாதி ஏனோ என்ற தலைப்பில் எழுதிய கவிதையினை இங்கு பகிரவுள்ளேன்... 

Image result for சாதி ஏனோ

ஓரறிவாம் (உணர்வற்ற) தாவரங்களில்
சாதியில்லை...!!!
ஈரறிவாம்(உயிருள்ள) ஈ, கொசுவில்
சாதியில்லை..!!!
மூவறிவாம் நண்டு வண்டில் 
சாதியில்லை..!!!
நான்கறிவாம் எழில்மிகு குயில் மயிலில்
சாதியில்லை..!!!
ஐந்தறிவாம் நாய் சிங்கம்தனில்
சாதியில்லை..!!!
ஆறறிவாம் அறிவுள்ள மனிதனிலே
சாதி ஏனோ...???

திங்கள், 5 செப்டம்பர், 2016

மழலை மொழி


Image result for மழலை மொழி புகைப்படங்கள்

கனவில் தோன்றும் கவிதையோ!!

காற்றில் மிதக்கும் பறவையோ!!!

என் கண்ணே!!
உன் திருவாய் அசைத்துப் பேசும் முதல் மொழியோ??

அதுவே உந்தன் மழலை மொழியோ!!!!!

புதன், 24 ஆகஸ்ட், 2016

தமிழ்

            
Image result for தமிழ்

                தமிழ்

தமிழ் எங்கள்    மூச்சாக   வேண்டும்!

தமிழ் எங்கள்    பேச்சாக வேண்டும்!

தமிழ் கொண்டு உறவாட வேண்டும்!

தமிழ் கொண்டு உரையாட வேண்டும்!

தமிழ் வாழ நாம் வாழ்த்த வேண்டும்!

தமிழ் மானம்  நாம் காக்க வேண்டும்!

தமிழ் என்றும்   உயிர் வாழ வேண்டும்!

தமிழ் என்றும் உயர்வாக வேண்டும்!

தமிழ் எங்கள் தவமாக வேண்டும்!

தமிழ் எங்கள் வரமாக வேண்டும்!             

தமிழ் பெயர்கள் நாம் சூட்ட 
வேண்டும்!          

தமிழ் பாடி தாலாட்ட வேண்டும்!                

தமிழ் நூல்கள் நாம் கற்க வேண்டும்!              

தமிழ் கலைகள் நாம் பேண வேண்டும்!    

தமிழ் கவிதை நாம் படைக்க வேண்டும்!



திங்கள், 11 ஜூலை, 2016

திறமை!!!

                                        
Image result for guitar with feet



கிட்ஹார் வாசிப்பதற்கு திறமை 

                             இருந்தால் போதும்...!
கைகளே தேவை இல்லை..!

சனி, 9 ஜூலை, 2016

கனவு

                                                             Image result for dream     

கற்பனையை முதலெழுத்தாய் கொண்டிருப்பாய் !
உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் இயக்குனரை
தூக்கத்தில் வெளிக்கொணர்வாய் !
எண்ணுவன எல்லாம் நிறைவேறுவது உன்னில் மட்டுமே !
கடவுளின் கற்பனை இந்த உலகமென்றால் – அந்த
கடவுளும் கனவு கண்டிருப்பாரோ !
சில நேரங்களில் நித்திரையில் வருகிறாய் ;
சில நேரங்களில் நித்தம் நித்தம் வருகிறாய் !
அந்த ஆதி மனிதனும் சக்கரத்தை
முதலில் உன்னில் தான் கண்டானோ !
மனிதனின் நினைவளைகள் நீ என்றால்
உன்னுடைய நினைவளைகள் தான் மனிதனா ?
கனவு என்னும் மூன்றழுத்தும் ,
கற்பனை என்னும் நான்கெழுத்தும் சேர்ந்துதான்

கண்டுபிடிப்பு என்னும் ஏழெழுத்தை உருவாக்கியதோ ?

ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறுமை!!

   

மனிதனுக்கு  தேவை மொழி                                        
மொழிக்கு      தேவை பேச்சு

பேச்சுக்கு       தேவை படிப்பு

படிப்புக்கு       தேவை கல்வி

கல்விக்கு       தேவை ஆசிரியர்

ஆசிரியருக்கு  தேவை வேலை


வேலைக்கு    தேவை பொறுமை!!!

சனி, 2 ஜூலை, 2016

கவிதையின் சிறப்பு



 
ஒரு நிமிடம் யோசிக்க வைத்த கவிதை

பல நிமிடங்களில் வாக்கியமானது,                                                         
வாக்கியமான இக்கவிதை பிரபலமானது,

பிரபலமான இக்கவிதை இன்று உலகம்
               
         சுற்றும்  வாலிபனாக திகழ்கிறது!!!                     
   




புதன், 1 ஜூன், 2016

பள்ளியின் முதல் நாள்...

                                      
Image result for பள்ளியின் முதல் நாள்

என்னமோ பட்டப்படிப்பு படிப்பது போல
தேவையானதை எல்லாம் தயார் செய்ததும்!
அ, ஆ போட்டு போட்டு பழகியதும்!
போகும் வழியில் அனைவரிடமும் பள்ளிக்குச்
செல்வதை தெரியமாய் கையசைத்து கூறியதும்! ஆனால்
பள்ளியில் நுழைந்ததும் பயம் தொற்றிக்கொண்ட நிமிடங்களும்!
காதிற்கு கை எட்டவில்லை என்றாலும் எட்டி எட்டி
     காதை தொட்டு ஏமாற்றியதும்!
அம்மாவின் கையை பற்றி இருக்கும் வரை
     இருந்த அந்த நம்பிக்கை ஆசிரியர் என்
கையை பிடித்து கூப்பிடும் போது கண்ணீராய் கரைந்ததுமாக
     இப்படி, கண்களில் கண்ணீர் வடித்த அந்த
பள்ளி முதல் நாள் இன்று நினைத்தால்
     இதழ்களில் புன்னகை தவழ்கிறது!

    



சனி, 21 மே, 2016

அப்துல் கலாமிற்கு சலாம்..!!!




பாரத தாயின் தவப்புதல்வன்;

ஏழையாய் பிறந்தவன்;

கலத்தில் சிறந்தவன்;

விண்கலத்தின் நாயகன்;

குடியரசை ஆண்டவன்;

எளிமையாய் வாழ்ந்தவன்;

தமிழுக்கு பெருமை சேர்த்தவன் - தமிழனாய்

தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்;

இளைஞர்களின் முன்னோடியாய்,

இதயத்தில் வாழ்ந்தவன்;

மாற்றம் தந்தவனுக்கு,

ஏனிந்த தாடுமாற்றமோ???

அக்னி சிறகுகளை தந்தவன்,

தன் சிறகுகளை அடக்கிகொண்டானே!

கனவு காண சொன்னவன்,

நிரந்தரமாக உறங்குகிறானே!

சூரியனை மறைக்க முடியுமா?

கடலலைகளை நிறுத்தமுடியுமா?

மண்ணின் மைந்தன் மறைந்தாலும்,

நிரந்தரமாக உறங்கினாலும்,

ஒளி வீசிக்கொண்டே இருப்பான் - எங்கள்

நினைவலையில் தவழ்ந்துகொண்டே இருப்பான்;

அயராது உழைத்தவனுக்கு,

ஓய்வை மறந்தவனுக்கு,

இந்த ஓய்வு தேவைதான்;

உறங்கட்டும் விட்டு விடுங்கள்;

காலம் கலாமை மறைத்தாலும்,

ஞாலம் கலாமை மறவாது!!!

(நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம்;
வல்லரசு இந்தியாவை நோக்கி!!!)

சனி, 26 மார்ச், 2016

கல்லூரி காலம்

Image result for கல்லூரி காலம்

புன்னகை செய்து வரவேற்ற
முகம் தெரியாத தோழிகள்!
பின் உறவென பழகிய நிமிடங்கள்!
     போதிமரமாய் திகழ்ந்த வகுப்பறை!
பேசியே கடத்திய பாடவேளைகள்!
     புரியாத மொழியில் தாலாட்டு பாடும் ஆசிரியர்கள்!
வகுப்பறையில் என்னை கேட்காமல்
     வரும் குட்டித் தூக்கம்!
உள்ளங்கை கோர்த்து திரிந்த நாட்கள்!
     மனதின் நினைவிலிருந்து கரையாத நிமிடங்கள்!
கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து விட்ட
     இந்த கல்லூரிக் காலம் – இனி
கண் மூடினால் கனவில் மட்டுமே!


செவ்வாய், 8 மார்ச், 2016

வாய்ப்புக்களை உருவாக்குவோம் சாதனை படைப்போம்

விண்வெளியில் கால் பதித்த கல்பனா சாவ்லாவோ;
தன் முதுகில் குழந்தையை சுமந்து; கையில்
வாளை ஏந்தி போர் புரிந்த ஜான்சி ராணியோ;
பாரதத்தின் முதல் பெண் மருத்துவரான
     முத்துலட்சுமி ரட்டியோ;
பாரதத்தின் முதல் பெண் நீதிபதியான
     பத்மினி ஜேசுதுரையோ;
பாரதத்தின் முதல் பெண் காவல் துறை அதிகாரியான
     கிரண் பேடியோ;
வாய்ப்புக்காக காத்திருக்கவில்லை!
தன் இலட்சியத்தின் வழி வாய்ப்புக்களை
உருவாக்கிக் கொண்டதால் தான் சாதனை
என்னும் சிகரத்தை எட்டிப்பிடித்தார்கள் ஆனால்
நாம் மட்டும் ஏன் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்?
இந்த மகளிர் தினத்தில் இருந்தாவது வாய்ப்புக்காக
காத்திருக்காமல் வாய்ப்புக்களை உருவாக்கி

சாதனை படைக்க முயற்சிப்போம்!

திங்கள், 7 மார்ச், 2016

அன்புள்ள அம்மா

அன்பின் வடிவமான கனிவுள்ளம் கொண்டவள் அவள்!
     தன் குழந்தையின் சிரிப்பில் தன்னையே மறந்திடுவாள்!
முளைத்து விடுவோம் என்னும் எதிர்ப்பார்ப்பில் தான்
     மண்ணுக்குள் புதைகிறது அந்த விதை! ஆனால்
இவளோ தன் குழந்தைக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி
     தன் வாழ்க்கையையே செலவிடுவாள்!
பிள்ளையின் எச்சில் சோற்றையும் அமிர்தம் என உண்டிடுவாள்!
நிலவை காட்டி நிலாச்சோறு ஊட்டிடுவாள்!
அவளுக்கு தெரியுமா? அந்த நிலவும் ஏக்கம் கொள்ளும்;
     இந்த அன்னையின் அன்பை பெற என்று!
ஒவ்வொன்றிலும் தியாகம் செய்கிறாள்;
     அதிலும் மகிழ்ச்சித் தான் அவளுக்கு!
சிலர் வாழ்க்கையில் தான் தியாகம் செய்வார்கள் ஆனால்
     இவளோ தன் குழந்தைக்காக தன்
வாழ்க்கையையே தியாகம் செய்கிறாள்!
     மனிதரில் மட்டுமா இந்த அன்பு!
ஒவ்வொரு உயிரிலும் அன்னையின் அன்பு
     அதிகமாகிக் கொண்டே தான் இருக்கும்!
நானும் முயற்சிக்கிறேன் அவள் அன்பை வெல்ல!
     ஆனால் முயன்று முயன்று தோற்கிறேன் அந்த
தோல்வியிலும் சுகம் தான் அவள் மடியில்
     குழந்தையாய் தவழும் போது!


சனி, 5 மார்ச், 2016

அன்பிற்காக ஏங்கும் இரு மனம்

இங்கோ,
     Image result for sad love of mother and child in india


   அந்த பிஞ்சு விரலை கொஞ்சி விளையாடவும்,
    கண்ணத்தில் அன்பு முத்தமிடவும்,
    நிலாச் சோறு ஊட்டி மகிழ்ந்திடவும்,
     குறும்புத் தனத்தை கண்டு ரசித்திடவும்,
     அம்மா என்ற வார்த்தையை செவி வழி கேட்டிடவும்
     ஏங்குது அவளின் உள்ளம்!

அங்கோ,
     
Image result for sad love of mother and child in india

   கீழே விழுந்தால் தூக்கி விடவும்,
     அன்போடு கொஞ்சி விளையாடவும்,
     பாசத்தோடு கண்டிக்கவும்,
     யாருமில்லாத தனிமை!
     தன்னந்தனிமையில் அன்பைத் தேடி
     தவிக்குது பிஞ்சு நெஞ்சம்!

அவளின் ஏக்கம் இந்த குழந்தைக்கு தெரியவில்லையா?
இல்லை அந்த குழந்தையின் தவிப்பு இவளுக்கு புரியவில்லையா?
ஏன் இந்த இடைவெளி? இவர்களை தடுப்பது எது?

     

வெள்ளி, 4 மார்ச், 2016

தாயன்பு

                              தாயன்பு


     





தாய் குழந்தையிடத்தில் வைக்கும் அன்பு மேலானது. தாய் பதில் பலனை எதிர்பாராது குழந்தையிடத்தே அன்பு வைக்கின்றார். அது மகிழ்வதைப் பார்த்து அவளும் மகிழ்கின்றாள்.அது வருந்துவதை கண்டு தானும் வருந்து கின்றாள்.பதில் பலனை எதிர்பாராது செலுத்தும் அன்பு கடவுள் தன்மை உடையது. தன்னலம் கருதாது இவ்வுலகில் சிலவற்றைச் செய்கின்றவர்களைப் புனிதமுடையவர்களாக வைத்து உலகம் போற்றுகின்றது. “தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்” என்னும் உயர்ந்த பண்பு காரணமாக புத்தர் உலக மக்களால் போற்றப்பட்டார்.ஒவ்வொரு தாயும் தன் குழந்தைகளுக்குத் தெய்வம் ஆவள். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்பதும் இக்கருத்து பற்றியதேயாகும். கடவுள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பதற்கு பதில், தாயை அங்கு அனுப்பியுள்ளார்.

புதன், 2 மார்ச், 2016

சிக்கனமும் சேமிப்பும்

Image result for சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல
     
      சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!

சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!
     
      ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!

ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!
     
      உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை

தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்
     
      சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்

நீ வாழ்க்கை என்னும் படியை

வெற்றியுடன் தாண்ட முடியும்!

சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ
     
     விரும்பிய படி கொண்டு செல்லலாம்!


சிக்கனமாய் இரு! சேமித்து பழகு!

எடுத்துக்காட்டாக அமைய நினைக்காதே!


   Image result for கேள்வி குறி

ஒவ்வொருவர் வாழ்க்கையின்

தேவைகளும் தேடல்களும்

வேறுவேறாக இருக்கும்பொழுது

எவ்வாறு மற்றவர் நமக்கு

எடுத்துக்காட்டாக,

பாடமாக அமைய முடியும்?

சனி, 27 பிப்ரவரி, 2016

முயற்சி

Image result for முயற்சி


வெற்றி என்று சொன்னவுடன் என்
     
       நினைவிற்கு வருவது நீ மட்டும் தான்!

உன் பாதையில் நான் வந்ததால் தான்
     
       என்னால் வெற்றி என்னும்

கனியை சுவைக்க முடிந்தது!
     
       உண்மையின் அடையாளம் நீ!

நீ ஒவ்வொருவரிடத்தும் இருந்தால்
          
       அனைவரும் இலட்சிய பாதையிலே

வீர நடைபோட்டு செல்லலாம்!
        
       தனக்குரிய பெருமையுடன் வெற்றியின்

புன்சிரிப்பை அனுபவித்து சிரிக்கலாம் – என்று
     
       உன்னையே உனக்கு அடையாளம் காட்டும்  உனது முயற்சி!




Image result for முயற்சி