ஞாயிறு, 27 நவம்பர், 2016

தி ஹன்டர்’ஸ் டாக்

                                                            தி ஹன்டர்ஸ் டாக்

ஒரு முறை காட்டில் சில முயல்களை வேட்டையாட வேடன் ஒருவன் தன்,நாயுடன் சென்றான்.இருவரும் இப்படி நிறைய முறை வேட்டையாடி இருக்கின்றனர்.ஒருமுறை வேட்டையாடையில் செடியை விளக்கி முயலை தேடும்போது பாம்பும் கீரியும் சண்டையிடுவதைக் கண்டனர்.சில சமயம் அந்த விசப்பாம்பு சீரி கீரியைக்கொத்தியது. சில சமயம் அந்த கீரி பாம்பைக் கொத்தியது.அவைகளின் இந்த சண்டையை தீர்க்க முடிவு செய்து, வேடன் தன் துப்பாக்கியால் கீரியின் தலையில் சுட்டார்.பின் அதனை கவ்வி எடுத்து வரும்படி தன் நாய்க்கு ஆணையிட்டார்.
           

            நாயும் தன் உரிமையாளருக்கு விசுவாசமாக அந்த இடத்திற்கு சென்றது.இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த கீரியின் தலையை கவ்வும்போது, பாம்பு நாயை கொத்தி கொன்றது.அப்போது வேடன், ``நான் தவரு இழைத்துவிட்டேன் உண்மையான எதிரி பாம்புதான்.கீரியை சுட்டு என் விசுவாசமான நாயை இழந்துவிட்டேன்’’ என்று வருந்தினான்.

                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


1 கருத்து: