வியாழன், 30 ஜூன், 2022

இலையில் துளி

அலையின் ஒளியில் 
அழகிய கருமேகமோ
கசியும் வண்ணம்...!!! 
துளிக்கும் துளியே
இலையில் விழும் 
கணம் நேறிடுமோ...!!!
வடிவில்லா நீரே
இலையில் மாய்க்கும் 
ஓசையே என் 
செவியில் இசைத்தது... !!
வீசும் தென்றலினால் 
நிலையின்றி உன்னை
(இலை)
வருத்தி நீ (நீர்) விழுவது 
என்னவோ...!!! 
என்  கண்ணின் நீரும் 
இன்று இருளில் 
ஓசையை ரசித்து 
கசிந்தலாயிற்று....!!
Yamini. R  1st B. Sc., CDF ksrcasw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக