ஞாயிறு, 26 ஜூன், 2022

ஒருவேளை அலையும் கரையும் பேசியிருந்தால்



ஒருவேளை நான் கரை என இருந்திருந்தால் ,

ஒருவேளை நீ அலையென இருந்திருந்தால் ,

ஒருவேளை கார்மேகம் என்னும் தூது புறாவை நான் அனுப்பியிருந்தால்  ,

ஒருவேளை அத்தூதோ என் அன்பெனும் மழையை உன் மீது பொழிந்திருந்தால்  , 

ஒருவேளை என் அன்பு மழையால் உன் மனதின் அலை அதிகரித்திருந்தால் ,

ஒருவேளை அந்த அவையில் ஒன்று என்னை தழுவியிருந்தால் , 

ஒருவேளை அத்தழுவலின் ஈரமோ என் வாழ்வை மாற்றியிருந்தால் , 

ஒருவேளை அலைகள் பெருகி ஓயாமல் நான் நனைந்திருந்தால் , 

ஒருவேளை நீயின்றி நான் இல்லை என்ற நிலை உருவானால் , 

ஒருவேளை அந்த அழகிய வாழ்வை என்னி நிகழ்காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் , 

நிலை என்னவோ!?..

ஒருவேளை நான் அலையென இருந்திருந்தால் , 

ஒருவேளை நீ கரை என இருந்திருந்தால் , 

ஒருவேளை பகலவனின் ஒளிக்கதிர்கள் உன்னை வாட்டியிருந்தால் , 

ஒருவேளை அத்துன்பத்தை  நீக்கவே என் குளிர் காதலை இரவோனிடம் நான் தூதனுப்பியிருந்தால் , 

ஒருவேளை அத்தூதோ உன்னை இன்பமுறச் செய்திருந்தால் , 

ஒருவேளை அந்த இன்பமே உன்னுள் இருந்த காதலை தூண்டியிருந்தால் , 

ஒருவேளை அக் காதலோ என் வாழ்வை மாற்றியிருந்தால் , 

ஒருவேளை அக் காதலின் தூண்டுதலில் அலையென நான் உன்னை வந்தடைந்தால் , 

ஒருவேளை நீயின்றி நான் இல்லை என்ற நிலை உருவானால் , 

ஒருவேளை அந்த அழகிய வாழ்வை என்னி நிகழ்காலத்தில் நான் வாழ்ந்திருந்தால் , 

நிலை என்னவோ!?...

ஒருவேளை அலையும் கரையும் பேசியிருந்தால் , 

ஒருவேளை அலையும் கரையும் தங்களது முடிவை மேற்கொண்டிருந்தால் , 

ஒருவேளை அம்முடிவே இன்று இப்புவிதன்னில் கடல் கரை என மாறியிருந்தால் , 

ஒருவேளை அந்த அழகிய கடற்கரையில் நின்று இன்று என் எழுதுகோல் இக் கவியை எழுதியிருந்தால் , 

இயற்கையின் மீது காதல் கொள்ள இக் காரனம் போதாதோ!?..❤️

இப்படிக்கு 
இயற்கையின் ரசிகை ரசித்தவை ❤️
கோபிகா ஸ்ரீ குணசீலன்..❣️
 II b.com FMA ksrcasw

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக