இதயத்தை பாதுகாக்க 10 கட்டளைகள்,,,
நம்முடைய வாழ்வு சிறக்க நம் இதயத்தை காக்க நாம் கடைபிடிக்க 10 கட்டளைகள் உள்ளன அவை..

• 0 தொலைக்காட்சியின் முன் அமர்வது

• 1 மணிநேரம் உடற்பயிற்சி

• 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது

• 3 கப் சூடான கிரீன் டீ அருந்துவது

• 4 முறை நம் வேலைகளின் நடுநடுவே சிறிதளவு மூளைக்கும், இதயத்திற்கும் ஓய்வு தருவது

• 5 முறை சிறிய சிறிய அளவில் உணவு உண்பது

• 6 மணிக்கு காலையில் எழுவது

• 7 நிமிடங்களாவது வாய்விட்டு மனம் விட்டு சிரிப்பது

• 8 மணிநேரம் தூக்கம்

• 9 மணிக்கு வேலைகளை முடித்து கொண்டு உறங்க செல்வது

• 10 நிமிடமாவது மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிப்பது

- இந்த 10 கட்டளைகளையும் கடைபிடித்தால் இருதய நோய் வராது.

இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும். அவை ...

1. SALT(உப்பு)
2. SUGAR (இனிப்பு)
3. SMOKE(புகைப்பிடித்தல்)
4. SPIRIT(மதுபானம்)
5. STRESS(மனஅழுத்தம்)
6. SEDENTARY LIFE (சோம்பித்திரிதல்)

இந்த ஆறு "S" களையும் விட்டுவிட்டால் உங்கள் இருதயம் "S" அதாவது SAFE ஆக பாதுகாப்பாக இருக்கும். உணவில் பொதுவாகவே வெள்ளை நிறத்திலுள்ளவற்றை தவிர்ப்பது நல்லது. அதாவது சர்க்கரை, வெண்ணை, பால், தயிர், பாலாடை கட்டி, வெள்ளை அரிசி போன்றவற்றை தவிர்த்தால் இருதயநோய் வராது.

மாறாக வண்ண நிறங்கள் கொண்ட பழங்கள்,காய்கறிகள், கைகுத்தல் அரிசி போன்றவற்றை உண்பதால் இருதயத்தை காப்பாற்றலாம். முறையான வாழ்க்கை, முறையான உணவு, பழக்கவழக்கம், முறையான அணுகுமுறை இவை இருந்தாலே இருதய நோய் வராது. நாமும் நம் இதயத்தை காப்போம்.

எனக்கு இந்த தகவலை வழங்கிய நண்பருக்கு நன்றி..!!

Comments

 1. தகவல் நன்றுதான் நாட்டுல நிறையப்பேரு இதயம் இல்லாமல்தானே வாழுறான்... இருந்தால்தானே பாதுகாக்க....

  ReplyDelete
  Replies
  1. வருக ஐயா.உண்மை தான் இருக்கும் இதயத்தை பாதுகாப்பாக வைக்கலாமே..??

   Delete
 2. தங்களது கருத்துக்கள் பயனுள்ளதாக அமைந்துள்ளது நன்றி அக்கா

  ReplyDelete

Post a Comment