புதன், 26 செப்டம்பர், 2018

ஊழல்

    

      ஊழல் என்பது புற்றுநோய் போல் வளர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் உச்சநீதிமன்றதின் புதிய யோசனை.
 
  தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தன் மேல் உள்ள வழக்கின் விவரம் பற்றியும் குற்றங்களை பற்றியும்  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.   

     ஓட்டு போட வேண்டும் என்ற அதிகாரம் உள்ள மக்களுக்கு யார் மெல் எவ்வளவு குற்றங்கள் உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.

    மேலும் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு ரீதியான செய்திகளை தன் கட்சி இணையத்தில் வெளியிட வேண்டும்.

       மேலும் இவ்வாறு செய்வது மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வழி இல்லை. நம் ஓட்டை யாருக்கு போட வேண்டும் என்பதை யார் அதிகமாக பணம் தந்துள்ளார் என்பதை சார்ந்து இருக்க கூடாது.

   அரசால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களாகிய நாமும் ஒரு படி சென்று ஊழலை அழிக்க முற்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசத்தை எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஊழல் என்பதை மக்கள் உணர வேண்டும்.

4 கருத்துகள்:

  1. ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசத்தை எதிர்பார்ப்பதும் கூட ஒரு வகையில் ஊழல் - உண்மை. மக்களுக்குப் புரிவதில்லை என்பது சோகம்.

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையா தகவல் நந்திதா வாழ்த்துக்கள். தங்கள் சேவை இந்த சமூகத்திற்க்கு தேவை.

    பதிலளிநீக்கு