சனி, 4 பிப்ரவரி, 2017

உழவனுக்கு உயிர்கொடுப்போம்!



சுழலப்பட்டபம்பரமாய் உலகம்!

 அதில்

சுழற்றி இழுக்கப்பட்டசாட்டையாய் மனிதவாழ்வும்!

ஓடுகிறோம்..... ஓடுகிறோம்... 

உலகம் இயங்கும் வேகத்தில் இன்று!

மறக்கிறோம்! மறக்கிறோம்! 

உணவுஉழவனின் காலடியில் என்று!

வியர்வை சிந்திஉழைக்கின்றான் உழவன்

 உலகிற்காக சேற்றில்!

அவன் படும் இன்னல்கள் மறந்து!

பசி ஆறுகிறோம்

 அவன் தரும் சோற்றில்..

ஒடுங்கிப்போனஅவன் உடலில் 

ஒருதுளியேனும் இரத்தமில்லை..

காரணம் 

விளைச்சலுக்கு அவன் சிந்தியது வியர்வைத் துளிகள் அல்ல 

அவனது இரத்தத்துளிகள்..

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

இவ்வரிகளுக்கு ஏற்றவன் உழவன் என்றே கூறலாம்

இனிப்பான கனிகளில் வேர்களின் வேதனைதெரிவதில்லை!

நாம் மகிழ்ந்துண்ணும் உணவில் உழவனின் சாதனைபுரிவதில்லை

காலங்கள் மாறினாலும் கலாச்சாரம் மாறமுயன்றாலும்

உலகம் என்னவோஉழவனின் பிடியில்

மனித உயிர்களுக்குஉணவிட்டும் உழவனின் 

வாழ்வென்னவோ மரணத்தின் பிடியில்

விளைச்சலுக்கும் உரம் போதவில்லையோ என்னவோ..??

தன் உடலையும் 

மண்ணிற்குள் புதைக்காமல் விதைக்கிறான் உழவன்!

முடியட்டும் உழவனின் தற்கொலை மரணம்

விடியட்டும் உழவர் தலைமுறையின் ஜனனம்..


மு.தமிழ்மணி
  
மூன்றாம் ஆண்டுவேதியியல் துறை.



1 கருத்து: