புதன், 14 செப்டம்பர், 2016

நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்கள்...!!!

இன்று நான் பகிரவுள்ள தகவல் எனது நண்பர் மூலம் எனக்கு அறிய கிடைத்தவை..இதனை தங்கள் பார்வைக்கும் கொணர்வதன் நோக்கமே இப்பதிவு..


நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்களை இந்திய ரிசர்வ் வங்கி சில குறிப்புக்களையும், நுணுக்கங்களையும் வெளியிட்டுள்ளது.

இதோ தங்களது கவனத்திற்காக....!


(1) பாதுகாப்பு இழை;

நமது ரூபாய் நோட்டுக்களான 10ரூபாய் முதல் 20ருபாய்,50ரூபாய் ஆகிய நோட்டுக்கள் பார்க்கத்தக்க ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளன.100ரூபாய் மற்றும் 500ரூபாய் நோட்டுக்களிலும் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளன.ஆனால் இவற்றில் பதிக்கப்பட்ட இழை பாதி வெளியில் தெரிவதாகவும்,பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் உள்ளது.வெளிச்சத்தில் பிடித்துப்பார்க்கும்போது இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத்தெரியும்.1000ரூபாய் தாட்களைத்தவிர மற்ற ரூபாய் நோட்டுக்களில் இந்த இழையில் தேவநாகரி  எழுத்து வடிவத்திலுள்ள 'பாரத்' என்ற வார்த்தையும் "RBI" என்ற ஆங்கில வார்த்தையும் மாறி மாறித் தோற்றமளிக்கும்.ஆயிரம் ரூபாய் தாளில் மட்டும் 'பாரத்' என்ற தேவநாகரி வார்த்தையுடன் '1000' மற்றும் 'RBI' ஆகிய வார்த்தைகளும் இருக்கும்.பழைய நோட்டுக்களில் எழுத்துக்கள் எதுவும் இல்லாமல் பார்க்க இயலாத முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.

(2) மறைந்திருக்கும் மதிப்பெண்;

மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப்பட்டைக்கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்ற எண்கள் அதாவது ரூபாய் மதிப்புக்கேற்ற எண்கள் 20 , 50, 100,500,1000 என அந்தந்த எண்கள் மறைந்திருக்கும்.உள்ளங்கையில் பிடித்து அதன்மேல் 45 டிகிரி கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும்.இல்லாவிட்டால் இந்தத்தோற்றம் வெறும் செங்குத்துக்கோடாகவே தெரியும்.

(3)நுண்ணிய எழுத்துக்கள்;

மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும் செங்குத்துப்பட்டைக்கோட்டுக்கும் இடையில் இந்த நுண்ணிய அம்சம் உள்ளது.10ருபாய் 20ரூபாய் தாள்களில் இந்த இலக்க மதிப்புகளும் RBI என்ற எழுத்துக்களும் உள்ளன.உருப்பெருக்கக்கண்ணாடியின் வழியாகப் பார்த்தால் இதனை தெளிவாகக்காணலாம்.

(4)அடையாளக்குறியீடு;

பத்து ரூபாய் தாளைத்தவிர மற்ற ரூபாய்களில் நீர்க்குறியீட்டுச்சாளரத்திற்கு இடது புறத்தில் ஒரு செதுக்கு உருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்தத்தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத்தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளன.ரூ20 இல் செங்குத்து நீள் சதுரம்,ரூ 50 இல் சதுரம், ரூ100 இல் முக்கோணம், ரூ500 இல் வட்டம், ரு1000 இல் சாய் சதுரம் என மதிப்புக்கேற்ப பல்வேறு தோற்றங்களில் இருக்கும்.இதனால் பார்வை இல்லாதவர்கள் அத்தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.

(5)செதுக்கு உருவம்;

மகாத்மா காந்தி உருவப்படம்,ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம்,இடது பக்கத்தில் அசோகா தூண் சின்னம்,ரிசர்வ் வங்கி கவர்னர் கையொப்பம் ஆகியன செதுக்கு உருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன.அதாவது தூக்கலான அச்சுக்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

(6) ஒளிரும் தன்மை;

தாள்களின் எண் பதிக்கப்பட்டுள்ள இடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது.தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன.புற ஊதாக்கதிர் விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இந்த இரண்டையும் காணலாம்.

(7) பார்வைக்கோணத்தில் மாறுபடும் மை;

ரூ 500 மற்றும் ரூ 1000 பணத்தாள்களில் ரூ500 மற்றும் ரூ1000 இவற்றின் மேல் வண்ணம் மாறித்தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன.அதாவது லேசான மஞ்சள்,லேசான ஊதா,பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத்திட்டங்களில் அச்சிடப்பட்டுள்ளன.இந்தத்தாள்களை கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால் இந்த எண்களின் வண்ணங்கள் பச்சையாகவும் ஒரு கோணத்தில் பிடித்துப்பார்த்தால் நீல நிறமாகவும் காணப்படும்.

உதாரணமாக 

ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து படத்தில் உள்ளவாறு அறிய முடிகிறதா என பார்க்கலாம்.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அவை கள்ள நோட்டுத்தான்.

6 கருத்துகள்:

  1. //ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து படத்தில் உள்ளவாறு அறிய முடிகிறதா என பார்க்கலாம்.இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிட்டாலும் அவை கள்ள நோட்டுத்தான்.///

    மிகவும் நல்ல தகவல். ஆனால் என்னிடம் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் இல்லை முடிந்தால் ஆயிரம் ரூபாய் நோட்டுகட்டு ஒன்றை எனக்கு அனுப்பி வைக்கவும் அதை சரிபார்த்து வைத்து கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. வருக ஐயா.தங்களின் முகவரியை அனுப்பி வையுங்கள் அனுப்புகிறேன் ஐ\ஆ.தங்களின் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தகவல் தொகுப்புக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஐயா.தங்களின் கருத்துப் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

      நீக்கு