சனி, 4 மார்ச், 2017

அதிகரித்து வரும் QR கோடின் பயன்பாடு...

அதிகரித்து வரும் QR கோடின் பயன்பாடு
(Quick Response Code)




இந்திய அரசு டிஜிட்டல் முறை பரிவர்த்தணையை அதிகரிக்கும் நோக்கில் பாரத் QR கோடு (Quick Response Code) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக வேகமாக மின்னனு பரிவர்த்தனையை செய்யும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் செயல்பாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளது.

QR கோடு என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்!....

ஜப்பானிய நிறுவனமான டென்ஸோ கார்ப்பொரேஷன் உருவாக்கியதுதான் க்யூ.ஆர் கோடு அதாவது, உடனடியாக தகவல் வழிகாட்டுதலை அறிந்து முடிவுகளை எடுக்க உதவும் சங்கேத மொழி.

பெரிய சதுரம்.. சின்ன சதுரங்கள் :

இந்த க்யூ.ஆர் கோடு இரு பரிமாணங்கள் கொண்டது. ஒரு பெரிய சதுரத்தில் பல்வேறு சிறுசிறு உள் சதுரங்கள். அவை ஒவ்வொன்றும் வெள்ளையாக அல்லது கருப்பாக இருக்கலாம். நமக்கு வேண்டிய தகவல்களை இப்படிக் கருப்பு வெள்ளைச் சதுரங்களாக மாற்றிவிடுவதுதான் க்யூ.ஆர் கோடு. இந்த க்யூ.ஆர் கோடு ஸ்கேனரைக் கொண்டு ஸ்கேன் செய்தால், அந்த சதுரத்தில் என்ன தகவல் உள்ளது என்பதைக் காட்டிவிடும்.

ஸ்கேனர் தேவையில்லை. 'செல்" போதும் :

ஆட்டோமொபைல் துறைக்காக என்று உருவாக்கப்பட்டாலும் நாளடைவில் பல்வேறு துறைகளுக்கும் இந்த க்யூ.ஆர் கோடு நகரத் தொடங்கியது. கேமரா வைத்த செல்பேசிகள் வந்த பிறகு, க்யூ.ஆர் கோடு படிப்பதற்கு என்று பிரத்தியேக ஸ்கேனர்கள்கூட தேவையில்லாமல் போய்விட்டன. க்யூ.ஆர் கோடு நோக்கி உங்கள் செல்பேசி கேமராவைக் காட்டினால் போதும். உங்கள் செல்பேசியில் உள்ள குறுஞ்செயலி, அதில் உள்ள தகவலை உங்கள் திரையில் காட்டிவிடும்.

 க்யூ.ஆர் கோடில் எண்கள், எழுத்துகள், இணையதள முகவரிகள் ஆகியவற்றைச் சேர்க்கலாம். உங்கள் விசிட்டிங் கார்டில் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் எளிதாக ஒரு க்யூ.ஆர் கோடில் கொடுத்து விடலாம். க்யூ.ஆர் கோடு இன்று பல துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

போட்டோ எடுப்பதுபோல...

இணைய இணைப்பு கொண்ட கேமரா செல்பேசிகளுக்கான க்யூ.ஆர் ஸ்கேனர் என்ற அப்ளிகேஷனை எளிதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம். அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி க்யூ.ஆர் கோடு கருப்பு வெள்ளைச் சதுரங்களை உங்களது இணைய இணைப்பு செல்பேசியால் போட்டோ எடுப்பதுபோல ஒருமுறை ஸ்கேன் செய்தால் போதும், சரியான இணையப் பக்கத்துக்குப் போய்விடலாம். இணையதள முகவரிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியதில்லை. முகவரிகளை டைப் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

மத்திய அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பாரத் க்யூ.ஆர் ஆனது விசா, மாஸ்ட்ரோ, ரூபே போன்ற கார்டுகளில் செயல்படும் வகையில் வந்துள்ளது. இந்த கோடினை விற்பனையாளர்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பயன்படுத்தும் வகையில் உபயோகிக்கும் பொழுது இருமுறை சரிபார்ப்பு வழிகளிலே பணம் செலுத்தலாம். எனவே பாதுகாப்பான முறையில் பாயின்ட் ஆஃப் சேல் மேற்கொள்ள இயலும்.

கடைசி வரை QR கோடு :

ஜப்பானில் கல்லறைகள் மீதுகூட க்யூ.ஆர் கோடு பதிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் மூலம், கல்லறையில் துயில்பவரின் வாழ்க்கை விவரம் அடங்கிய இணையப் பக்கத்துக்கு நேரடியாகச் சென்றுவிட முடியும்.

கியூ.ஆர்.கோடில் கொஞ்சம் அழிந்துபோனாலும் அடிப்படைத் தகவல்கள் சிலவற்றையாவது மீட்க முடியும். வரும் காலத்தில் ஒவ்வொரு வர்த்தக நிறுவனமும், தொண்டு நிறுவனமும், ஏன் ஒவ்வொரு மனிதருமே தங்களைப் பற்றிய தகவல்கள் கொண்ட இணையதள முகவரி பொதிந்த க்யூ.ஆர் கோடு ஏந்தியபடி அலையப்போகிறார்கள்!




1 கருத்து:

  1. QR code நாம் நேரடியாக பார்க்கும் விதத்தில் இருப்பதால் .. தவறு செய்பவர்கள் இதை எளிதாக வடிவமைத்து குற்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு உள்ளதுதானே?...
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு