படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

'கூச்ச சுபாவமே எனது கேடயம்!"





 'கூச்ச சுபாவமே எனது கேடயம்!" என்றார் மகாத்மா காந்தி. அன்று அவருக்குக் கேடயமாக இருந்த விஷயம், இன்று இளைஞர்களுக்குத் தடையாக இருக்கிறது. கை குலுக்குவதில் இருந்து மைக் பிடிப்பது வரை, இன்று பல இளம் பருவத்தினரை கூச்சம்தான் ஆட்டிப் படைக்கிறது. கூச்ச சுபாவத்தினால் இளைஞர்கள் இழக்கும் வாய்ப்புகள், சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? இதில் இருந்து மீண்டு வருவது எப்படி?



 பொதுவாக, கூச்சம் என்பது அறிமுகம் இல்லாதவரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையும் நீடிப்பதாகச் சொல்கின்றன மனநல ஆய்வுகள். அந்த நிமிடங்களைத் தைரியமாகத் தாண்டிவிட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்த நேரத்தைச் சாதகமாக மாற்றத் தெரியாவிட்டால் அதுவே உங்களுக்குப் பாரமாகி விடும். உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும்தான் முழுமுதற் காரணம். ஏனெனில், பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை.



 'கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சௌகர்யத்துக்காக அவர்களே வளர்த்துக் கொள்ளும் ஒரு குணம்" என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். 'மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும், கருணையாகப் பார்க்க வேண்டும்" என்று உள்ளுக்குள் வேண்டி விரும்பியே பலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். பின்னாளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது. ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறிவிடும். நீங்கள் பயந்து ஒதுங்கும்போது, உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்புறம் எப்படி ஜெயிப்பீர்கள்?



 சின்ன தயக்கம் கூட, நமக்குள் இருக்கும் திறமையை நாம் உணராதபடி செய்துவிடுகிறது. திறமைகள் இருந்தும் சிலர் தோற்றுப் போவதற்குக் கூச்சமே முதல் காரணம். 'சிரமம் இன்றி எதுவும் இல்லை, சிரமம் என்பது எதுவும் இல்லை" என்பதை உணர்ந்து, தங்களுக்குள் ஏற்பட்ட தயக்கத்தைத் தாண்டி தங்களுக்குள் தங்களைக் கண்டுபிடித்தவர்களே சாதனையாளர்களாகின்றனர்.



 பெற்றோரின் அதிகப்படியான பாதுகாப்பும், அக்கறையும் ஒருவனுக்கு கூச்ச உணர்வை ஏற்படுத்திவிடும். பெற்றோர்கள் ஒருவனை எதற்கெடுத்தாலும் 'தப்பு", 'இது குற்றம்" என்று அடக்கி வைக்கும் போது, அவனுக்கு மன தைரியம் இல்லாமல் போய்விடுகிறது. மகனையோ, மகளையோ எந்தக் காரியத்தையும் செய்யவிடாமல் தடுத்து, பெற்றோர்களே செய்து முடிப்பது ஆபத்தான வளர்ப்பு முறையாகும். இதனால், எந்தக் காரியத்தையும் துணிச்சலாகச் செய்யும் தைரியம் அவர்களுக்குள் வளராமலேயே போய்விடும்.



 கூச்சம் 'ஒரு வியாதி" என்பதைக் கண்டுபிடித்து அதை அடியோடு அழித்து விடவேண்டும்.



 உலகத்தில் மொத்த மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் கூச்சம், பயம், தயக்கத்தில் சிக்கித் தவிக்கிறார்கள். உங்களுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும், கூச்சம் உங்களை இரண்டுபடி கீழே இறக்கி விட்டுவிடும். உடல், சூழல் என இரண்டு காரணங்களால் அதீத கூச்ச உணர்வு ஏற்படுகிறது.



 மூளையில் செரட்டோனின் (serotonin) என்ற ரசாயனம் குறையும்போது தானாகவே பயம், பதற்றம், குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, தயக்கம் போன்ற உணர்ச்சிகள் உருவாகும். இதை மாற்றுவதற்கான சூழ்நிலை இல்லையென்றால், கூச்சம் நம் குணமாகவே மாறிவிடும். இதைத்தான் கூச்ச சுபாவம், பயந்த சுபாவம் என்று சொல்கிறோம்.



 ஒன்றே ஒன்றுதான்... கூச்சப்படுபவர்களால் தங்களின் அறிவுக்கும், திறமைக்கும் ஏற்ற வாழ்க்கையை அடைய முடியாது. கூச்சம், தயக்கம் எதுவும் இல்லாதவன்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்துக்குச் செல்ல முடியும்!

புதன், 22 பிப்ரவரி, 2017

தூக்கம் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்...



மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் தூக்கம். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் மனதைக் கட்டுப்படுத்த, கெட்ட எண்ணங்களை சீர்படுத்த, கோபத்தை குறைக்க இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு செயல் தூக்கம். தூக்கத்துக்கு அந்த அளவுக்கு மிகப்பெரிய சக்தி உண்டு.

நமது உடலில் இரண்டு வகையான தசைகள் இருக்கின்றன. நமது கட்டுப்பாட்டில் உள்ள தசைகள், கை கால்கள், தோள்பட்டை, மார்பு, முதுகு முதலியவற்றிலுள்ள கடினமான தசைகள். இந்த தசைகளெல்லாம் நாம் நடப்பதற்கும், நகர்வதற்கும், உருண்டு புரள்வதற்கும் உபயோகப்படும் தசைகளாகும்.

நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் இரைப்பை, இருதயம், உணவுக்குழாய், காற்றுக்குழாய், வயிற்றின் உள்ளே உள்ள உறுப்புகள், சிறுநீர்ப்பை, ரத்தக்குழாய்கள் மற்றும் உடலின் உறுப்புகளுக்கு உள்ளே உள்ள மெல்லிய தசைகள். இவை எல்லாமே நமது கட்டுப்பாட்டில் இல்லாத தசைகளாகும்.

தூங்கும் போது கட்டுப்பாட்டிலுள்ள தசைகள் மட்டுமே செயலிழக்கப்படுகிறது. கட்டுப்பாட்டில் இல்லாத தசைகள் நாம் தூங்கினாலும், தூங்காவிட்டாலும் நம்மை கண்டு கொள்ளாது.

தூக்கம் பற்றிய சில சுவாரஸ்சியமான தகவல்கள் :

தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே பாலூட்டி  மனித இனம் மட்டுமே.

தூக்கத்துக்கு இடையில் சராசரியாக 6 முறை விழிக்கிறோம்.

ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுள் குறையும்.

ஒரு வாரத்துக்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை பசியைத் தூண்டும்.

பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூங்குகிறார்கள். அதாவது 25 ஆண்டுகள்.

ஜப்பானில் வேலை நேரத்தில் தூங்குவது, கடுமையான உழைப்புக்கு ஓய்வு எடுப்பது என்று கருதப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும். தூங்கும் போது தும்ம முடியாது.

விளையாடிவிட்டுத் தூங்கச் சென்றவர்கள் அது பற்றி கனவு கண்டு தூங்கி எழுந்து, அடுத்த நாள் விளையாடியபோது சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்.

கனவில் ஏற்கெனவே பார்த்த முகங்களே வரும்.

நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றியே பெரும்பாலும் கனவு காண்கிறோம். மனிதர்களைப் பற்றியும், குழந்தைகள், விலங்குகளைப் பற்றியும் அதிக கனவுகளைக் காண்கிறார்கள்.

11 நாளுக்கு மேல் தூங்காமல் இருந்தால் உயிர் வாழ முடியாது. சாதாரணமாக 2 நாட்களுக்கு ஒருவரால் தூங்காமல் இருக்க முடியும்.

விலங்கினங்கள் :

சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை தூங்கும்.

பூனைகள் தங்கள் வாழ்க்கையில் 70 சதவீத நேரம் தூங்குகின்றன.

கடல் நீர் நாய்கள் தூங்கும்போது ஒன்றின் கைகளை மற்றொன்று பிணைத்துக் கொண்டு தூங்கும். அதன் மூலம் அலையில் அடித்துச் செல்லப்படாமல் இருக்கின்றன.

சில உயிரினங்கள் தூங்கும் போது பாதி மூளையை மட்டுமே ஓய்வுக்கு அனுப்புகின்றன. திமிங்கலம் இப்படிச் செய்வதால் தண்ணீரின் மேற்பரப்பில் இருந்து காற்றை சுவாசிக்கவும், எதிரிகள் வருவதை உணரவும் பயன்படுகிறது.

வாத்துகள் ஒரு கண்ணை மூடிக்கொண்டு, பாதி மூளையை ஓய்வுக்கு அனுப்புகின்றன.

ஒரு சில பறவைக் குழுக்களில் சில பறவைகள் பாதுகாப்புக்காக விழித்திருக்கும் போது, மற்ற பறவைகள் தூங்கும்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

தாலி கட்டுவது ஏன்..?


தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சு நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதையும், இரண்டாவது முடிச்சு குலப்பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதையும், மூன்றாவது முடிச்சு குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

புதன், 14 டிசம்பர், 2016

காலத்தின் அருமை


Image result for காலம்
  • தேர்வில் தவறிவிட்ட மாணவனுக்கு தெரியும் ஓர் ஆண்டின் அருமை..!
  • குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பெற்றெடுத்த தாய்க்க தெரியும் ஒரு மாதத்தின் அருமை..!
  • வார இதழ் ஆசிரியருக்கு தெரியும் ஒரு வாரத்தின் அருமை..!
  • காதலிக்காக காத்திருக்கும் காதலனுக்கு தெரியும் ஒரு மணிநேரத்தின் அருமை..!
  • இரயிலைத் தவற விட்ட பயணிக்குத் தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை..!
  • விபத்தில் நூலிலையில் தப்பித்தவற்கு தெரியும் ஒரு வினடியின் அருமை..!
 காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனவே ஆண்டோ மாதமே வாரமே நொடியோ எல்லா நேரத்தையும் பொன் போல போற்றி வாழ்ந்தால் வாழ்கையில் வெற்றி நிச்சயம்..!

                                                                                                             ஐ.ரம்யா,
இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை.

புதன், 7 டிசம்பர், 2016

வியாழன், 1 டிசம்பர், 2016

உணவு பழமொழி..!!


குறள்;945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

விளக்கம்;

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால்,அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.


சனி, 1 அக்டோபர், 2016

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

படித்ததில் பிடித்தது

கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர் 

எஸ்.பி. செந்தில்குமார் அவர்களது பதிவில் 



என்ற பதிவு  இன்று நான் வாசித்த பதிவுகளில் குறிப்பிடத்தக்கது 

சாலைப்பாதுகாப்பு விதிகள் பயிலும் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளது.


நன்றி நண்பர் சிபி.செந்தில்குமார்

திங்கள், 26 செப்டம்பர், 2016

படித்ததில் பிடித்தது

கூட்டாஞ்சோறு என்ற வலைப்பதிவில் எழுதிவரும் நண்பர்

எஸ்.பி. .செந்தில்குமார் அவா்கள் இன்று தம் பக்கத்தில்


 ஆண்களின் மோசமான குணம்..!

என்ற தலைப்பில் சாலைப்பாதுகாப்பு குறித்த நல்லதொரு பதிவை

எழுதியுள்ளார். அவருக்கு நம் பாராட்டுக்களையும்,

வாழ்த்துக்களையும் உரித்தாக்கிக்கொள்கிறோம்.

ஞாயிறு, 19 ஜூன், 2016

வலியை மறக்க குழந்தையிடம் கற்று கொள்ளுங்கள்..!!



ஒரு திருநங்கை சகோதரியுடன் பேசி கொண்டிருந்தேன்.கடவுள் செய்த தவறுதானே உங்கள் இந்த வலிக்கு காரணம் என்றேன்,
சகோதரி சொன்னால் இது வலி அல்ல வரம் என்று

ஒரு பெண்ணின் உணர்வுகளை உன்னால் உணரமுடியுமா என்று கேட்டாள் ?

நான் என்னால் முடியாது என்றேன் ஆனால் அவள் சொன்னாள் எங்களால்
முடியும் என்று

ஒரே நேரத்தில் ஆண் பெண் இருவர் உணர்வுகளை எங்களால் உணரமுடியும் இது எங்களுக்கு வலியல்ல வரம் என்றாள்

இந்த சமுகத்தால் புறக்கணிக்கப்பட்டு மக்களால் ஒதுக்கப்பட்டவர்கள்
கடவுள் செய்த தவறையும் வரம் என நினைத்து வாழ கற்று கொள்கிறார்கள்
நாமோ சின்ன சின்ன வலிகளையும் பேரிய வலியாய் நினைத்து வருந்தி வாழ்நாளை கண்ணீரில் கழிக்குறோம்

உலகில் கவலையில்லாத மனிதர்கள் கல்லறையில் தான்இருக்கிறார்கள்
கருவறையில்கூட மனிதனுக்கு வலி இருக்கிறது

மனிதனை தாய் வலியில்தான் பிறசவிக்கிறாள்
அந்த வலியைவிடவா
நம் கவலையின் வலி பெறியது
அந்த வலிக்கு தாய் பயந்திருந்தால் இங்கு மனிதர்களே இருந்திருக்க போவதில்லை

எனக்கு தெறிந்த தம்பதிகள் ஒருவர் இருந்தார்கள் அவர்களுக்கு வேறு ஒரு உறவே இல்லை
இருவருக்கும் ஒருவருக்கொருவர்தான் உறவு

ஓர்நாள் அதிகாலையில் அந்த கணவன் மரித்துப்போனான் நான் அங்கு போனபோது அந்த சகோதரி தனிமையில் அழுது கொண்டிருந்தாள்.
இப்போது நான் யாருக்கு அழுவது

இறந்த அந்தபோன அந்த கணவனுக்கா?
இல்லை இருந்த அந்த ஒரே உறவையும் இழந்து வாடும் அந்த சகோதரிக்கா? மனமெல்லாம் பாரமாய் அங்கிருந்து வந்து விட்டேன்
சமிபத்தில் அந்த சகோதரியை பார்த்தேன் புன்னகையோடு! சொன்னாள் அண்ணா நீங்கள் எல்லாம் இருக்கும் நம்பிக்கையிதான் வாழ்கிறேன் என்று
நம்பிக்கைகள்தான் வலியை மறக்க மருந்தாகிறது

வலியை மறக்க குழந்தையிடம் கற்று கொள்ளுங்கள்

முடிந்த போன நொடி போழுதை அப்போதே குழந்தைகள் மறந்து விடுகிறது
பிறக்க போகும் அடுத்த நிமிடங்களை எண்ணிக்கொண்டிருப்பதில்லை கிடைத்த நிமிட பொழுதை வலிகளை மறந்து அனுபவிக்கிறது
அதனால் தான் குழந்தைகள் எப்போதும் புன்னகையோடு இருக்கிறது
அந்த புன்னகைதான் எல்லோருக்கும் பிடிக்கிறது
கோவமாய் அடித்துவிட்டு
அழுது கொண்டிருக்கும் குழந்தையை
புண்ணகையோடு கரம்விரித்து
அழைத்து பாருங்கள்
கண்ணீர் கோடுகள் அழியாமலே புண்ணகையோடும் வந்துவிடும் அக்குழந்தைகள்

அதுதான் குழந்தையின் சந்தோசத்திற்குக்  காரணம்
கவலைகள் மறப்பது

வலிகளை மறப்பதற்கு இழந்து போன இழப்புகளை மறந்து விடுங்கள் எல்லாவற்றையும் ரசிக்க கற்று கொள்ளுங்கள்
பிறருக்கு விட்டு கொடுங்கள்
அடுத்தவர்கள் தவறுகளை முடிந்தவறை மன்னித்து மறந்துவிடுங்கள்

சின்ன சின்ன விட்டு கொடுத்தல்கள்தான் பெரிய வலிகளுக்கு மருந்தாய் இருக்கிறது.

நிறம் மாறும் சிலந்திகள்

         
Image result for சிலந்திகள்


பச்சோந்திகள் நிறம் மாறுவதைப்போல சில வகை சிலந்திகளும் சூழலுக்கு ஏற்ப நிறம் மாறக்கூடியது.மிசுமினா எனும் சிலந்தி இனம் வெள்ளை,மஞ்சள்,ரோஜா நிற மலர்கள் மீது வசிக்கும்போது அந்தந்த மலரின் நிறத்தில் தோன்றுகிறது.இலைகளுக்கு இடம் மாறினால் பச்சை நிறமாக மாறிக் கொள்கிறது.
இதை பரிசோதித்துப் பார்க்க வெள்ளை நிற சிலந்தியை மஞ்சள் காகிதத்தில் போட்டுப் பார்த்தனர். அது ஒன்றிரண்டு நாட்களில் மஞ்சள் நிறமுடையதாக மாறியது.இதேபோல வேறு வண்ண சிலந்திகளும்,தான் வசிக்கும் இடத்தின் சூழலின் நிறத்திற்கு ஓரிரு நாட்களில் மாறி விடுக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டது..



பெருமைக்குரிய பெண்மை!

பெருமைக்குரிய  பெண்மை!

1)  சகிப்புத் தன்மையில் வலிமை மிகுந்தவள் பெண்தான்.        –மகாத்மா காந்தி.

2)  இறைவனின் படைப்புகள் எல்லாவற்றையும் விட அழகிலும், மேன்மையிலும்  சிறந்தவள் பெண்தான்.        –மில்டன்.

3)  பெண்ணே   மனிதனின்   உயர்ந்த     ஊக்கங்கள்    ஏல்லாவற்றிலும்      விளக்கு.         –ஜேம்ஸ் எல்லீஸ்.

4)  அவதூறு  என்பது  நல்ல  பெண்ணின்  வீட்டு வாசலில் மாய்ந்து பலமிழந்து விடுகிறது.        –ஹீஸ்.

5)  பெண்ணின்   மடியில்   இறையன்பு  வளர்கிறது.        –இக்பால்.

6)  பெண்  இல்லாத   வீடு  மதிப்பில்லாதது.   –யாரோ.

7)  காற்றை விட கடும் வேகம் கொண்டது பெண்ணின் எண்ணம்.     –ஷேக்ஸ்பியர்.

8)  எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப் படுகிறார்களோ, அந்த வீட்டில் தேவதைகள் குடியேறும்.        –மாகாபாரதம்.

9)  பெண்ணுரிமை   இல்லாத  நாடு  காற்றில்லாத வீடு.    –லெனின்.

10)         ஒரு    பெண்ணை    படிக்க    வைப்பது,   ஒரு   குடும்பத்தையே   படிக்க   வைப்பதற்கு சமம்.    –சார்லஸ் டிக்கன்ஸ்.

11)         பொய்மை,  கோழைத்தனம்,  கீழ்க்குணம்   ஆகிய  மூன்றுமே  பெண்கள்  பெரிதும்  வெறுப்பவை.      –ஷேக்ஸ்பியர்.

12)         நல்ல  சந்தர்ப்பம்  வாய்க்கும்  போது, தன்னையே  தியாகமாக்கிக்  கொள்ள விழைவதுதான் பெண்மை ! அது அவர்களுடன் பிறந்த இயல்பு.    –வில்லியம் சாமர்சப்.


செவ்வாய், 31 மே, 2016

தவறாகப் பொருள் கொள்ளப்படும் பழமொழிகளும் அதன் சரியான அர்த்தங்களும் ..!




1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப்
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்தப் பண்ணு...
இதாங்க சரி...

2.படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டைக் கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....

3.ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......

4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....

5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....

நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
மாறுவோம்... பிறரை மாற்றுவோம்...

திங்கள், 30 மே, 2016

மனித கணிணி......!



சாகுந்தலாதேவி;

      கணிதத்தில் பிறவி மேதை என்று கூறப்படுபவர். உலக அளவில் பாராட்டப்படுபவர். கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை பதிவாகி உள்ளது.
      கணிணி வேகமா? அல்லது இவரது மனம் வேகமா? என்று தீர்மானிப்பது கடினம். இவரை ”மனித கணிணி” என்று கூறுவதும் உண்டு. ஆனால் இவர் அதை விரும்புவது இல்லை.
     மனித மூளை கணிணியை விட நுட்பமானது என்னும் கருத்தை உடையவர். 1980ம் ஆண்டு ஜுன் மாதம் 18 ஆம் தேதி அன்று லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கணிணி தேர்ந்தெடுத்து கொடுத்த 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என்கிற இரண்டு 13 இலக்க எண்களை மனதினாலேயே பெருக்கி சரியான விடையை 28 நொடிக்குள் கூறிவிட்டார்.
     1939 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிறந்தவர். சாகுந்தலா தேவியின் தந்தை சர்க்கஸில் பணிபுரிந்து வந்தவர். சாகுந்தலா தேவி மனதினாலேயே பெருக்கும் திறமை அவரது மூன்றாம் வயதிலேயே வெளிப்பட்டது.
     அவருக்கு ஆறு வயதான போது மைசூர் பல்கலைகழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவருடைய திறமை நிரூபிக்கப்பட்டது. அதன் பிறகு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திறமை மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அப்போது அவருக்கு வயது 8.
     1980 ஆம் ஆண்டில் மீண்டும் இரண்டு 13 இலக்க எண்களை பெருக்கி 28 நிமிடங்களுக்குள் கூறினார். எல்லாம் மனதாலேயே அவர் செய்தார். சரியான விடையை மனதால் கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட நேரத்தை விட, அந்த விடையை எண்களாக கூற எடுத்துக்கொண்ட நேரமே அதிகம் என்று பின்னர் தெரிவித்தார்.
     தான் சிறந்த கணித மேதையாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னைப் போன்ற கணித மேதைகள் உருவாக எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்க பல புத்தகங்கள் எழுதி உள்ளார்.
                                   


செவ்வாய், 26 ஏப்ரல், 2016

ஏக்கம்

               Image result for நிலா

வற்றிப்போன குளங்கள்….
முகம் பார்க்க முடியாத ஏக்கத்தில்
நிலா!

ஞாயிறு, 20 மார்ச், 2016

ஒரு இந்தியனின் கடமை..!!

  •   படைபாளர் பலர் உருவாக வேண்டும் .பாரதம் பாரினில் உயர்ந்தாக வேண்டும் .ஒவ்வொரு மனிதனும் படித்தாக வேண்டும் ஊருக்கும் நாட்டுக்கும் உழைத்தாக வேண்டும்.
Image result for ஒற்றுமை


  •  எறும்பிடம் நாம் பாடம் கற்றாக வேண்டும். என்றென்றும் ஓய்வின்றி பொருள் தேடவேண்டும். காகங்கள் போல நாமும் ஒற்றுமையுடன் உறவாட வேண்டும்.



  •  ஒவ்வொரு குடிமகனும் ஒரே வீட்டில் உள்ளோர் போல் இந்தியாவை உருவாக்க வேண்டும். ஒருமைபாட்டால் நாம் ஒன்றாக வாழ வேண்டும்!

Image result for ஒற்றுமை