புதன், 7 டிசம்பர், 2016

உயிருள்ள பெயர்கள்..!!

நான் சமீப்பத்தில் வாசித்த நூல் ‘உயிருள்ள பெயர்கள்’  இந்நூல் குறித்த விமர்சமாக இப்பதிவு அமைய உள்ளது.

தலைப்பை பார்த்ததும் என்னடா உயிருள்ள பெயர்களா..?? என்று வியந்து படிக்க ஆரம்பித்தேன்.இந்நூலில் 27 தமிழ்ப் புலவர்கள் குறித்து எழுதப்பட்டு இருந்தது.முதலில் எனக்கு அவர்களின் பெயர்கள் வாயில் நுழையவில்லை.பிறகு ஒவ்வொரு கட்டுரையாக படிக்க ஆரம்பித்தேன்.

பெயர் என்பது ஒவ்வொரு உடலுக்கும் நாம் சூட்டிக் கொள்வது.ஆனால் அவை நமது ஆத்மாவுக்கு சூட்டப்படும் பெயர்கள் அல்ல.ஒவ்வொரு பெயருக்கும் ஒரு உயிர் உண்டு என்பதை ஒரு சிலரே உணர்த்துக் கொள்கிறார்கள்.

பிறந்தோம்,வாழ்ந்தோம்,இறந்தோம் என்று இல்லாமல் நமது பெயருக்கான வாழ்வை வாழ்ந்துவிட்டு சென்றோமா..?? என்பது தான் ஒவ்வொருவரும் வாழ்ந்தார்கள் என்ற அர்த்தத்தை உண்டாக்கக்கூடும்.இப்படி இறந்த பின்பே ஒருவருடைய பெயர்கள் மக்கள் மத்தியில்  நிலைத்திருக்கிறது என்றால் அந்த பெயர்களே உயிருள்ள பெயர்கள் என்றாகிவிடுகிறது.



நாம் ஒவ்வொருவரும் தனக்கு பிடித்தமான பெயர்களை சூட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.ஆனால் அன்றைய சங்க இலக்கியத்திலே  பாடப்பட்ட செய்யுளின் ஆசிரியர்களின் பெயர்கள் அறியப்படாததால் அவர்களால் பாடப்பட்ட பாடலில் இருந்தே அவர்களுக்கு பெயர்ச் சூட்டப்பட்டு இன்று வரை மகிழ்ந்து வருகிறோம்.

இந்நூலில் நான் அறிந்துக் கொண்ட ஒவ்வொரு புலவர்களையும் கண்டு வியந்தேன்.உதாரணமாக ஓரிற் பிச்சையார்,ஓரேருழவர்,அணிலொடு முன்றிலார்,பதடி வைகலார்,நெடுவெண்ணிலவினார்,கூவன் மைந்தன்,தனிமகனார்,வில்லக விரலினார்  போன்ற பலரை பற்றி இன்றைய சூழலுக்கேற்ற தமிழில் இன்றைய தலைமுறையினருக்கு புரியும் வகையில் இந்நூலின் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் அவர்கள்  எழுதியுள்ளார்.

இந்நூல் என்னை போன்ற இலக்கியத்தை விரும்பாத சிலருக்கும் இதை படித்தவுடன்  சங்க காலத்தில் ஒவ்வொரு புலவர்களும் இயற்கையோடும் தமிழோடும் எவ்வாறு பின்னிப் பிணைந்து இருந்தார்கள் என்று அறிய முடியும்.மேலும் இதுப் போன்ற இலக்கிய நூல்களை தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அமையும்.

இன்று முதல் நானும் இலக்கியத்தை நேசிக்க ஆரம்பித்துள்ளேன்.இப்பதிவில்  ஒரு சுயநலமும் உண்டு இந்நூலின் ஆசிரியர் என்னுடைய தமிழ் ஆசிரியரும் எனது நெறியாளரும்  என்ற கர்வம் எனக்கு உண்டு.

நன்றி.









5 கருத்துகள்: