சனி, 3 டிசம்பர், 2016

டாக்கடர்.கிராக்கி

                                                                டாக்கடர்.கிராக்கி
                         
 ஒரு நாள் தவளை ஒன்று தன் குலத்தை விட்டு அருகே காட்டுப்பகுதிக்கு உள்ளே உள்ள நதிக்கு இடம் மரியது.அந்த வனப்பகுதிக்குள் ஒரு வீட்டை அமைக்க சென்றது.அங்கு சென்ற பின் எந்த விலங்குகளையும் தவளை காணவில்லை.ஆனால், தவளைக்கு அனைவரையும் கண்டு அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று ஆசை.ஆதலால், பெரிய கரடின்மேல் ஏரி ``நண்பர்களே அனைவரும் வெளியே வாருங்க்கள் நான் உங்களை சந்தித்து நண்பனாக வேண்டும்.நான் அருகாமையில் இருக்கும் கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்’’.இந்த தவளையின் குரல் கேட்டு அனைத்து விலங்குகளும் வந்தது.மான்,ஆமை,வாத்து,பட்டாம்பூச்சி, மற்றும் நரி அனைத்தும் வந்தது. ``முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.என் பெயர் டாக்டர்.கிராக்கி நான் அனைத்து விதமான நோய்களையும் தீர்ப்பதற்கான மருந்துகளையும் வைத்திருக்கிறேன் என்னை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்’’ என்றது.இதனைக் கேட்ட நரி ``உன்னால் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்றால், உன்னுடைய ஊனமுற்றது போன்ற கால்களை ஏன் சரி செய்ய இயலவில்லை? நீ எப்படி அமர்ந்திருக்கிறாய் பார்’’என்று கோலி செய்தது.அதனைக் கேட்ட அனைத்து விலங்குகளும் சிரித்துக்கொண்டே வீடு திரும்பினர்.

                                                                  (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக