வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை



எங்க அம்மாவுக்கும் எனக்கும் உள்ள உறவு தொப்புள்கொடி உறவு
திருப்பூர் குமரனுக்கும் இந்த தேசத்துக்கும் உள்ள உறவு தேசியக்கொடி உறவு.
கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள உறவு தாலிக்கொடி உறவு.
இந்த மாதிரி எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் நண்பர்களிடையே மலர்ந்து மணம் வீசுகின்ற உறவு தான் நட்பு எனும் நேசக்கொடி உறவு.


இந்த வரிகளை என் வாழ்வில் எந்நாளும் மறக்க மாட்டேன் .
ஏனென்றால்
முதன்முதலாய்
தொலைக்காட்சி கேமாராவைப் பார்க்கிறேன்.
சந்தித்திராத கூட்டத்தை சந்திக்கிறேன்.
பெற்றோரை நீங்கள் பேசுவதைப் பார்க்க அழைத்து வாருங்கள் என்று சொல்லி கொடுக்கப்பட்ட சீட்டு இரண்டு கைப்பையிலே கண்ணுறங்குகிறது.


எட்டாம் வகுப்பு பாப்பா என்ன பேசப் போகுது என பார்க்கும் பெருங்கூட்டம்.
பேச்சாளர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் ஒருஙங்கிணைப்பாளர் வாசிக்க என் பெயரை மட்டும் காணவில்லை.
அழுகை கலந்த பயம்.

எல்லா பெயரும் சொல்லி முடித்த பிறகு மேடையில் இருக்கின்ற பேச்சாளர்களின் பெயரையெல்லாம் சொல்லிவிட்டேன்.
இந்த மேடையில் ஒரு  கத்தி அமர்ந்திக்கிறது என்று சொல்லி என்னை அறிமுகம் செய்தார்.

இப்படியெல்லாம் சொல்லுகிறாரே திக்காமல் ஒழுங்காக பேசி முடிப்போமா எனும் பயம் ஆழ்மனதில்...
பேசும் போது லியோனி ஐயாவிடம்
உங்களுக்கு எதாவது கஷ்டம் னா அதப்போய் உங்க அம்மா அப்பா கிட்ட சொல்லுவீங்களா.
இல்ல உங்க அண்ணன் தம்பி கிட்ட சொல்லுவீங்களா.
சொல்ல முடியாதுங்க ஐயா.
நமக்கு ஏற்படுற கஷ்டத்தையும் நஷ்டத்தையும் பகிர்ந்து கொள்ளக் குடிய உறவு ஒன்னு இந்த உலகத்துல இருக்குணா அது நட்பா மட்டுந்தாங்கயா இருக்க முடியும் என நான் இந்த வரியை முடிக்கும் போது அரங்கமை கையொலியால் நிரம்பிப் போனது.
இதற்குப் பின் லியோனி ஐயா என்னிடம் என்ன பத்தி எப்டிமா இவ்ளோ கரக்டா தெரிஞ்சு வைச்சுருக்க என கேட்ட போது ஒரு குழந்தையோட மனது தாய்க்கு தான் தெரியும்.
தாயோட மனது புள்ளைக்கு தான் தெரியும்.
அது போல ஒரு பேச்சுத் தலைவரோட மனசு இன்னொரு பேச்சாளருக்கு தானங்கய்யா தெரியும் என சொல்லினேன். மீண்டும் அரங்கம் கையொலியால் நிரம்பியது.
எப்படியொ வெற்றிகரமாக பேசி முடித்து விட்டேன் என்னும் மனமகிழ்வோடு
 சிறந்த பேச்சாளருக்கான விருதையும் அந்த அரங்கத்தில் வாங்கி விட்டேன்...

முதன்முதலாய் தொலைக்காட்சி காட்டிய கொடுத்த அணுபவம் தற்போது கூட இதை எழுதும் போது அந்த நினைவுகள் ஊசலாடிக் கொண்டே செல்கிறது.


நினைவுகள் மகதாதானவை தான்..

9 கருத்துகள்:

  1. அருமை காவியா..அழகான அனுபவ பகிர்வு...அச்சத்தை வெல்வதே முதல் வெற்றி.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள். மேடையில் பேசுவது சவாலான விடயம் தான். அதை சாமர்த்தியமாக கையாண்ட விதம் அழகு. உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...
    "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி | உளறல்களுக்கு பேச்சு வடிவம் கிடைத்த மேடை : சிகரம்
    தொடருங்கள். தொடர்வோம்.

    பதிலளிநீக்கு