தெரசா ஒரு நாள் ஒருவரிடம் இல்லாதவருக்காக உதவி கேட்க அவரோ உமிழ் நீரை உமிழ்ந்தார் ஆனால் அன்னையோ கோப படாமல் எனக்கு இதை தந்து விட்டீர்கள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்ட தெரசா வாழ்ந்த இந்த ஊரில் ஏழைகளுக்கு உதவ அனைவரின் உள்ளம் மறுக்கிறது. ஒரு நாள் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தேன் அப்போது ஒரு மெலிந்த உடலும், அழுக்கான துணியையும், தடுமாறிய நடையும் உடைய முதியவர், ஒருவரிடம் பிச்சை கேட்க அவரோ கண்டு கொள்ளாமல் திரும்பி கொண்டார் அந்த ஈமுதியவரோ பாவமாக மீண்டும் தடுமாறி சென்று விட்டார். நான் அவரை தேடி போய் என்னால் முடிந்த பணத்தை தந்து உதவினேன். இன்றைய சமுகத்தின் அவலமே இது தான். இல்லாதவர்க்கு உதவ நம்மில் பலருக்கு மனம் வருவதில்லை காரணம் கேட்டால் அவர்கள் கூறும் விடையோ கோபம் அளிக்கிறது. அவர்கள் இவர்களை ஏமாற்றிவிடுவாங்களாம். மாதம் முன்னூறு ரூபாய்க்கு போனுக்கு டேட்டா கார்டு போடுவோம், இருநூறு ரூபாய்க்கு பீட்ஸா வாங்கி மூன்று துண்டுகள் சாப்பிட்டு ஒரு துண்டை குப்பையில் எரியும் நாம் இல்லாதவருக்காக ஒரு பத்து ரூபாய் கொடுத்தால் ஏமார்ந்துவிடுவோமாம்.
உண்மையிலேயே இது ஒரு நல்ல பதிவு அக்கா. மனிதனாய் இருப்பதற்கு மனிதாபிமானமே சான்று.
பதிலளிநீக்கு😇😇😇
பதிலளிநீக்கு