புதன், 29 ஆகஸ்ட், 2018

எழுத்தாணி பிடித்து இலக்கியத்தை நிமிர்த்திய பெண்கள்

சென்ற ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் மாநில அளவில் முதல் பரிசு பெற்றதற்காக கல்லூரியின் தாளாளரிடம் வாழ்த்துப் பெற சென்றிருந்தேன்.
அந்த சமயத்தில் எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் குணசீலன் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
அப்போது ஐயா என்ன தலைப்பு குடுத்தாங்க எந்த கருத்த மூலமா வைச்சு பேசுனீங்க என்று கேட்டார்.
நான் ‌"ஔவைப் பாட்டியின பாட்டே பண்பாடு" எனும் தலைப்பில் அவரின் பாடல் வரிகளை சொல்லி நிகழ்கால உதாரணத்தை சொல்லி பேசினேன் ஐயா என்று சொன்னேன்.
ஐயா : எந்த ஔவையாரைப் பற்றி பேசினீர்கள்?
நான் : எந்த ஔவையாரா! எனக்கு தெரிந்தது ஒரே ஒரு ஔவையார் தான் ஐயா.
ஐயா : இல்லை பா. இலக்கியத்தையும் வரலாற்றையும் நன்றாக படித்து பாருங்கள். நான்கு ஔவையார் இருக்கிறார்கள்...

நீண்ட நாட்கள் கழித்து நினைவுகளை அசை போடும் போது தான் ஒரு கருத்து தோன்றியது.

ஆரம்ப பள்ளியில் ஆரம்ப பாடமாக ஆத்திச்சூடி தந்திருக்கிறார்கள்.அதை எழுதியவர் குறித்த முழுமையான பார்வையும் புரிதலுமே நமக்கு இல்லையே. இன்னும் எத்தனையோ தகவல்கள் நம்மை சுற்றியும் இருக்கின்றன.
அதைத் தேடி கண்டுபிடிக்க வேண்டியது நம் கடமை என தேடித் தெரிந்து கொண்டேன்.
அதனை இன்று எழுத்தின் மூலம் பதிவு செய்ய வேண்டும் என விரும்பியதன் விளைவு இந்த பதிவு.

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அடிமைகளாகவே இருந்தார்கள் என தவறான புரிதல் நம் எண்ணத்தில் திட்டமிட்டு ஏற்றப்பட்டிருக்கிறது..

இன்று ஓர் ஆச்சர்யம்.
சங்க காலத்தில் 41  பெண் புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அவர்களின் பெயர்கள்.

1. அஞ்சியத்தை மகள் நாகையார்
2. அஞ்சில் அஞ்சியார்
3. அள்ளூர் நன்முல்லையார்
4. ஆதிமந்தியார்
5. ஊன்பித்தை
6. ஒக்கூர் மாசாத்தியார்
7. ஔவையார்
8. கச்சிப்பேட்டு நன்னாகையார்
9. கழார்க்கீரன் எயிற்றியார்
10. காக்கைப்பாடினியார் நச்செள்ளையார்
11. காமக்காணிப் பசலையார்
12. காவற்பெண்டு
13. குமுழிஞாழலார் நப்பசலையார்
14. குறமகள் குறியெயினி.
15. குறமகள் இளவெயினி
16. குன்றியனார்
17. தாயங்கண்ணியார்
18. நக்கண்ணையார்
19. நல்வெள்ளியார்
20. நன்னாகையார்
21. நெடும்பல்லியத்தை
22. பாரி மகளிர்
23. பூங்கண் உத்திரையார்
24. பூதப்பாண்டியன் தேவியார்
25. பெருங்கோழிநாய்கண் மகள் நக்கண்ணையார்
26. பேய்மகள் இளவெயினி
27. பொதும்பில் புல்லாளங் கண்ணியார்
28. பொன்மணியார்
29. பொன்முடியார்
30. போந்தைப் பசலையார்
31. மதுரை மேலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
32. மாரிப் பித்தியார்
33. மாறோக்கத்து நப்பசலையார்
34. முள்ளியூர்ப் பூதியார்
35. வருமுலையாரித்தி.
36. வெண்ணிக் குயத்தியார்
37. வெண்பூதியார்
38. வெண்மணிப் பூதியார்
 39. வெள்ளிவீதியார்
40. வெள்ளெமாளர்
41. வெறிபாடிய காமக்காணியார்.

புணர்ச்சியில் ஈடுபட மட்டுமே பெண் என்ற நிலையை மாற்றி
 *எழுத்து*  எனும் புரட்சியில் ஈடுபடவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை சங்க காலங்களிலேயே மெய்பித்தவர்கள் இவர்கள்.
வாய்ப்பிருந்தால் இவர்களைப் பற்றிய செய்திகளையும் இவர்கள் இயற்றிய பாடல்களையும் படித்து பார்ப்போம்.
பயன் பெறுவோம்.
நன்றி : இது குறித்த பார்வை என் மனதில் எழக் காரணமாக இருந்த எங்கள் ஐயா முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு.

3 கருத்துகள்:


 1. சங்க காலம் கி.பி3 ம் நூற்றாண்டிலேயே முடிந்துவிட்டதாகவே பெரும்பாலான வரலாறு சொல்கிறது...இந்த இடைப்பட்ட காலத்தில் பெண்களின் சுதந்திரத்தையும் அவர்களுக்கான வெளியையும் மதம் என்ற பெயரைச்சொல்லியும் மனுநீதி என்ற சமஸ்கிருத வேத இலக்கியங்கள் என்று சொல்லப்படும் நூல்களைச் சொல்லியும் ஒரு கூட்டம் முடக்கியது...
  உடன் கட்டை ஏறுவதை பெருமை என பெண்களின் எண்ணத்தில் ஏற்படுத்தியது...
  சீதைகளை மட்டுமே பரிசோதிக்கும் அந்த ராமன்களின் கூட்டம்...
  இந்த அடிமைத்தளையை உடைத்து கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் பலர் சாதனை படைத்து வருகின்றனர்...இதற்காக போராடியோர் பலர்..
  சுதந்திரம் வழங்கப்படுவதல்ல எடுத்துக்கொள்ளுங்கள்👍

  பதிலளிநீக்கு
 2. அருமை காவியா... தமிழ் மொழியைப்பற்றிய தங்களின் தேடல் என்னைப் போன்ற மாணவர்களுக்கும் சிறந்த ஊக்குவிப்பாக அமைகிறது. நிச்சயம் அந்த பெண் புலவர்களைப் பற்றி படித்து அறிந்து கொள்வேன்.

  பதிலளிநீக்கு
 3. மிகச் சிறப்பு ஐஸ்வர்யா.
  நன்றி உங்களின் வாழ்த்துதலுக்கு.

  பதிலளிநீக்கு