வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

அம்மாவுக்காக...


       





பாஞ்சி வயசுல ஏ அப்பாவுக்கு வாக்கப்பட்டதுல இருந்து பதினாறு வயசுல புள்ளை பெத்ததுல இருந்து இன்னைக்கு வரைக்கும் குடும்பத்துக்காகவே வாழ்றியே அம்மா உன்னோட கனவுகளை மறந்திட்டையா? இல்ல மறைச்சிட்டையா?

வாழ்க்கையினா என்னென்னு தெரியாத வயசுல மாமியார்கிட்டையும், நாத்தனார்,நாத்திகள்கிட்டயும் என்னென்ன பாடுபட்டையோ?

அண்ணே சோத்துக்கு அழுவ நா பாலுக்கு அழுவ மாமியார்  துணிதுவைக்கனும்ன்னு அழுவ  நாத்தனார் சோறு போடுங்க அண்ணின்னு கத்த நாத்திகளெல்லாம் ஒருடம்ளர் காபி வச்சித்தாம்மான்னு கேட்க அத்தனை வேலையையும் அசால்டா செஞ்சிப்புட்டு இன்னைக்கு ஏ மவனுக்கு துணிதுவைக்கமுடியலேன்னு ஆதங்கப்படுறியே அம்மா....

குழந்தையில இருந்து ஆளானது வரைக்கும் ஒரு வேலை செய்யவிட்டிருப்பியா அம்மா வேலைக்குப்போய் மாடுமாதிரி உழைச்சு தீபாவளிக்கு போனஸ் கொடுத்தாங்கன்னா எங்களுக்காகவே தங்கத்துல கால் பவுன் தோடு எடுத்து தருவியே அம்மா நாம போட்டு இருக்க தோடுக்கு சின்னதா ஒரு மாட்டல் எடுத்துக்களான்னு ஒரு கணம்கூட யோசிக்கலையா  அம்மா.....

பாத்திரம் கழுவுடின்னு கத்துவ ஆனா பத்து நிமிஷத்துல நீயே கழுவிடுவ
வீட்டைக் கூட்டுடின்னு வெளக்கமாற எடுப்ப ஆனா எங்கையில கொடுக்காம நீயே கூட்டிடுவ  துணி துவைச்சி நாலுவாரம் ஆகுதுடின்னு என்ன தொவக்காம மொத்த துணியையும் நீயே தொவச்சிடுவ சுடசுட தட்டுல சோறு போட்டு கையில கொடுப்ப விக்கும்போது விவேகமா தண்ணி கொடுப்ப
ஒரு நாள்,
 நீ ஊருக்குப் போயிட்ட நீயில்லாத வீட்டுல ஒரு நிமிஷம் கூட இருக்க முடியல தெரியுமா அம்மா...

உனக்கு  தா ஆயிரம் கஷ்டம் புள்ளைய காலேஜ்ல சுத்தி விடனும் பைய வெளியில போக டிப்டாப்பா நாலு சட்டை வாங்கனும் அப்பாவுக்கு சர்க்கரை மாத்திரை வாங்கனும்
இதுக்கு நடுவுல,
    உன்னோட கழிஞ்ச சேலைய முந்தானையில இருக்கி முடிச்சி மறைச்சிட்டையா  அம்மா....

வாழ்க்கையில உன்னோட சந்தோஷம்னு எதாவது இருக்கா அம்மா நா முதல் மதிப்பெண் வாங்குனா சந்தோஷப்படுவ, பாப்பா பாஸ் ஆனா சந்தோஷப்படுவ, அண்ணே தலையில எண்ணெய் வச்சிகிட்டா சந்தோஷப்படுவ, அப்பா சிரிச்சா மொத்தமா சந்தோஷப்படுவ இதெல்லாம் நீ இல்லையே அம்மா  நாங்க எல்லாருமே சேர்ந்தா அது நீ தானா அம்மா
அம்மான்னா அது ஒருத்தவங்க இல்ல அது ஒரு குடும்பம்!!

உனக்குன்னு நகை நட்டு வாங்கனும் பட்டுசேலை வாங்கனும்னு  என்னைக்குமே புலம்புனதே இல்ல  புள்ளைய நல்லா படிக்க வைக்கனும் நல்ல இடத்துல பாத்து கல்யாணம் பண்ணி வைக்கனும் பையன ஊரே பாத்து பெருமைப்படனும் இப்படித்தான் புலம்பி இருக்க
          உன்னோட புலம்பலெல்லாம் 
             நிச்சயமா ஒருநாள் நனவாகும் 
                  உன்னோட புள்ளைகளாள.....



4 கருத்துகள்:

  1. அருமை டா ஐசு. நிச்சயமாக நம் அம்மாவின் கனவு நனவாகும் டா. தொடரு பின்தொடர்கிறேன் ஐஸ்வர்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னைப் பொறுத்தவரையில் அம்மாவும், அக்காவும் ஒன்று தான் உங்கள் முகத்தைப் பார்க்கும் போது.....

      நீக்கு
  2. நன்று. அம்மா... எனச் சொல்லும் போதே அம்மாவின் உயர்வு ம்னதுக்குள்....

    வாழ்த்துகள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக....

      நீக்கு