இன்றைய இளைய சமுதாயத்தை அதிகம் கவர்ந்த பாட்டு இது.
பாக்காத நேரத்தில் பாக்குறதும்.
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும் எனத் தொடங்கும் பாடல்.என் நட்பு வட்டத்தில் அதிகம் நிலைப்பாட்டில் வைக்கப்பட்ட பாட்டு இது.
சரி முழுமையாகத்தான் கேட்டுப் பார்ப்போமே என கேட்டேன்.இடையில் இருந்த நான்கு வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன.அவை
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயர் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
இவை தான் என்னை கவர்ந்த அந்த வரிகள்.
சமீபத்தில் நூலகத்தில் நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பனின் அம்பறாத்தூணி எனும் நூலை எடுத்தேன்.
திடீரென ஒரு பக்கத்தில் மேற்கண்ட பாடல் வரிகள் இடம் பெற்றிருந்தன.
எனக்கோ அது ஆச்சர்யத்தின் உச்சம்.
அதை படிக்கும் போது தான் தெரிந்தது அது ஒரு குறுந்தொகை பாடல் என்று.
இது நம் சங்க இலக்கியத்தில் இருக்கும் பாடல் என்று தெரிந்ததும் மனதிற்குள் ஒரு பூரிப்பு.
தவறாது இனிமேல் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் படிப்போம்.
நம் தமிழில் இல்லாத கருத்துக்கள் இல்லை என்பதை ஏற்போம்.
நன்றி: இந்த பாடலை இயற்றியவருக்கு.
👍
பதிலளிநீக்குநன்றி அண்ணா.
நீக்குஇலக்கிய வாசிப்பு என்பது பண்பட்ட மனிதர்களின் அடித்தளம்! பேச்சுத்துறையில் சாதித்துவரும் தங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் சங்க இலக்கியம் வாசிப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.. காதலையும் வீரத்தையும் இருகண்களாகப் போற்றும் சங்கப் பாடல்களை வாசித்துப் பாருங்கள்... பிறவிப் பயனை உணர்வீர்கள்..
பதிலளிநீக்குநன்றிகள் பல ஐயா.
பதிலளிநீக்குநிச்சயமாய் இனி தொடர்ந்து வாசிக்கிறேன் ஐயா.