ஊசி மழையாய் நீ தூறிய போது உன்னை எண்ணிக்கொண்டே ரசித்தேன்......
உன்னோடு சேர்ந்து விளையாடினேன்
பள்ளியை விட்டு வரும்போது கொட்டும் மழையாய்என் தலையில் கொட்டியபோது நானும் உன்னை கொட்ட நினைத்தேன்...
உன்னோடு சேர்ந்தே வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் திட்டு வாங்கினேன்...
கனமழையாய் என் தெருவில் நுழைந்த போது வெளியே வரமுடியாமல் குடிசையின் ஓட்டையில் நீ விழுந்ததை நான் வேடிக்கைப்பார்த்தேன்...
ஒருநாள்,
நீ வெள்ளமாய்வந்தாய் என் வீடே தண்ணீரில் தத்தளித்தது. என் உடைமைகளெல்லாம் தண்ணீரில் மிதந்தது. மகாலட்சுமி வீட்டிற்கு வந்தால் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமாம்.. நீ என் வீட்டிற்குள் வந்திருக்கிறாய் என் வீடு முற்றிலும் அழிந்து விட்டது...
இனிமேலாவது,
என் குடிசை வீடு
ஓட்டு வீடாகுமா? என்ற கனவுகளோடு மிதக்கிறேன் என் குடிசை வீட்டில்......
மழை வந்தாலும் பிரச்சினை வராவிட்டாலும் பிரச்சினை. நல்ல பதிவு.
பதிலளிநீக்குதங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி அக்கா
நீக்குமழை - அழகு தான் ஆபத்தும் கூட சமயங்களில்.
பதிலளிநீக்குதொடரட்டும் பதிவுகள்.
தங்களுடைய கருத்துகளுக்கு நன்றி ஐயா. நிச்சயமாக பதிவுகள் தொடரும்.
நீக்கு