வியாழன், 16 ஆகஸ்ட், 2018

அன்புள்ள அப்பா....

சமீபத்தில் என் அப்பாவிடம் ஏன் அப்பா இவ்ளோ கஷ்டப்பட்டும் என்ன படிக்க வைக்குறீங்க என்று கேட்டேன்.
அதற்கு அவர் நான் தான் வானத்த அன்னாந்து பாத்து பாத்்து விவசாயம் செஞ்சு செஞ்சு ஏமாந்து போய்டேன்.
ஆனா நான் பெத்த புள்ளையும் பையனும் மத்தவங்க அன்னாந்து பாக்குற அளவுக்கு உயரனும்.
அதா சாமி படிக்க வைக்குறேன் என்று சொன்னார்.
இது பசுமரத்தாணி போல் நெஞ்சில் பதிந்தது.
அப்துல் கலாம் ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்தில் இந்த கருத்தை பதிவு செய்தேன்.
இதை இன்று என் அப்பாவிடம் சொன்னேன்.
அவரை அறியாமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் கரைபுரண்டோடியது.
நான் அவர் அருகில் இல்லை இருப்பினும் அதை உணர்ந்தேன்.
நிச்சயம் பிறர் பார்த்து வியக்கும் உயரத்திற்கு சென்று என் தந்தையை பெருமைப் பட வைப்பேன் எனும் உறுதியோடு நிறைவு செய்கிறேன்.

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

13 கருத்துகள்:

 1. கனவுகள் மெய்ப்படும்...
  காலம் வயப்படும்...
  காத்திரு...
  கண்கள் பூத்திரு...

  வாழ்த்துகள் காவ்யா...

  பதிலளிநீக்கு
 2. வளர வாழ்த்துகள் தங்கையே

  பதிலளிநீக்கு
 3. நிச்சயமாக உன்னுடைய அப்பாவின் கனவுகளை நிறைவேற்றுவாய். வாழ்த்துக்கள் காவ்யா.

  பதிலளிநீக்கு
 4. சோலை மலரே சுவர்ணத்தின் வார்ப்படமே! காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!

  வண்மை உயர்வு மனிதர்

  நலம் எல்லாம் பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!

  நாய்என்று பெண்ணை நவில்வார்க்கும் இப்புவிக்கும் தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே!

  என பாவேந்தர் சொல்லெடுத்து வாழ்த்துகிறேன் காவியா

  பதிலளிநீக்கு