சனி, 25 ஆகஸ்ட், 2018

கல்லூரி வழி பயணம்




இளஞ்சூடான வெயிலில் பள்ளிக்கு செல்லும் சிறு பிள்ளைகள் மத்தியில் நானும் தயாரானேன் என் கல்லூரிக்கு செல்ல !!

பரபரபரப்பான நகரத்தை தாண்டி என் கல்லூரிக்கு செல்ல அழகான அமைதியான ஒரு காட்டு வழி பாதை !!

பனி போல் பொழியும் சாரல் மழையில் குளங்கள் சிரித்திட, 
அதில் உள்ள அல்லி மலர்கள் ஆனந்தத்தில் மூழ்கிட ! 

ஊரை காவல் காத்தப்படி உள்ள எல்லை சாமியை ரசித்தவாறு பயணம் தொடர்கிறது 
மழை பெய்தால் இரு புறமும் ஓடைகள் அதில் முளைக்கும் கோரைகள் ,
பச்சை போர்வை போர்த்தியது போல் உள்ள கடலை  சாகுபடி ,
பெண் மயிலை கவர தொகை விரிதாடும் ஆண் மயிலின் சிறகு ஓசையில் நான் சிலிர்த்தட!! 

ஏர் உழுத இடத்தில் தாயுடன் உணவு தேடும் மயில் குஞ்சுகள் 
அதை விரட்ட வந்த கிழவி வீட்டு தோட்டத்தில் உள்ள வாழை கன்றை கன்று குட்டி திங்க , 
அதன் மேல் ஒய்யாரமாய் காதல் பேசும் இரட்டை வால் குருவிகள், 
கரையோர பனைகள் அதில் பனங்காய்களை விட அதிகமான கல் பானைகள் அதன் சுவையில் மயங்கிய வண்டுகளின் கூட்டம் , 
மீனை எதிர்நோக்கும்  மீன்கொத்தி, பாறை மீது தண்டால் எடுக்கும் ஓணான், தார் ஊற்றிய சாலையில் ஒரு புறம் திதிப்பான கரும்பும், மறுபுறம் சூரியனும் ஈடு தரும் நிறத்தில் மாம்பழங்கள்.

தாயிடம் பால் குடிக்க ஓடும் இளங்கன்று அதனை மெய்தபடி மரத்தடி நிழலுக்கு ஓடும் பாசமிகு அண்ணன் தங்கையின் அளவில்லா ஆனந்தத்தை ரசித்தவாரு கல்லூரிக்குள் நுழைந்தேன் என் எதிர்காலத்தை நோக்கி?????


8 கருத்துகள்:

  1. வாவ்... அழகான வழி தான் உங்கள் கல்லூரி வழி....

    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. நந்திதா தங்கள பதிவு அளவில்லாத இயற்கை அழகை அள்ளி அள்ளி வீசுகிறது. அருமை. தங்கள் மொழி நடை தென்றல் தவழ்வது போல உள்ளது தொடர்க.

    பதிலளிநீக்கு
  3. அக்கா தங்களின் கவிதையைப் படித்த பிறகு தான் தெரிந்தது நான் செல்லும் இந்த வழியில் இத்தனை இயற்கை எழில் உள்ளது என்று... சாதாரண ஓநாயைக் கூட இந்த அளவுக்கு வர்ணித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் அக்கா மேலும் உங்களின் இயற்கை எழில் கொஞ்சும் கவிதைகளை வாசிக்க ஆவலுடன் உள்ளேன்

    பதிலளிநீக்கு
  4. அழகான கண்ணோட்டம்.
    அருமையான மொழிநடை.
    வாழ்த்துக்கள் அன்பு அக்கா..

    பதிலளிநீக்கு