சந்திராயன் 1 ஆளில்லா விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சமயம்.
600 விஞ்ஞானிகள் கொண்ட குழுவிற்கு நம் மண்ணின் மைந்தன் மயில்சாமி அண்ணாதுரை தலைமை ஏற்றார்.வழிநடத்தினார். திட்ட இயக்குனர் பொறுப்பிலும் இருந்தார்.
வெற்றி அடைந்த சந்திராயன் திட்டத்தை உலகமே கொண்டாடுகிறது.
அந்த நேரத்தில் அனைத்து உதடுகளின் உச்சரிப்பில் மயில்சாமி அண்ணாதுரை எனும் பெயர்.
அப்போது அவர் செய்த செயல் அவர் மீது மேலும் ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.அது என்னவென்றால் அவருடைய இயற்பியல் ஆசிரியரிடம் அவர் பேசும் வார்த்தைகள்.
"வணக்கம்.ஆசிரியர் குண்டுராவ் அவர்களா ?
நான் உங்கள் முன்னாள் மாணவன் பேசுகிறேன்.
என்னை உங்களுக்கு நேரில் பார்த்தால் கூட அடையாளம் தெரியாது.
ஒரு வாரமாக செய்தித்தாள்களில் மயில்சாமி அண்ணாதுரை எனும் பெயர் வருகிறதே....
அது நான் தான் என்றார் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்.
மறுமுனையில் பேராசிரியர் குண்டுராவ் அவர்கள்.
உலகமே பார்த்து வியந்து கொண்டிருக்கிற மயில்சாமி அண்ணாதுரை என் மாணவரா??? என்கிறார் பெரிய ஆச்சரியத்துடன்.
மயில்சாமி அவர்கள் நீங்களும் பெங்களூரில் தான் இருக்கிறீர்கள் என கேள்விப் பட்டேன். நானே உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறினார்.
அதற்கு ஆசிரியர்..
இல்லை சாதனை படைத்திட்ட உங்களை நானே நேரில் வந்து சந்திக்கிறேன் என்று கூறியதற்கு அண்ணாதுரை அவர்கள் "எவ்வளவு சாதனை செய்திருந்தாலும் ஆசிரியர் ஆசிரியர் தான் மாணவன் மாணவன் தான்" நான் வந்து பார்ப்பது தான் முறை என்று கூறி அவரை நேரில் சென்று சந்தித்து காலில் விழுந்து வாழ்த்து பெற்றார்.இந்த சம்பவத்தை பேராசிரியர் அவர்கள் பாராட்டு விழாவில் பேசும் போது சொல்லி நெகிழ்ந்திருக்கிறார்.
அத்தனை உயரத்திற்கு சென்ற போதும் ஏற்றிவிட்ட ஏணியை மறவாமல் எனக்கு இயற்பியல் என்றாலே பிடிக்காது.அதன் மீது தீீராக்காதல் வரும் அளவிற்கு எனக்கு பாடம் நடத்தியவர் இவர். இந்த திட்டத்திற்கு இயற்பியல் தான் அடிப்படை. இது வெற்றி பெற்றதற்கு இவரும் ஒரு காரணம் என்று சொல்லி பெருமைப் பட்டவர்.
தமிழ்மொழியை தாய்மொழியாய் கொண்டவர்கள் பாடமொழியாய் படித்தவர்கள் தோற்றுப் போக மாட்டார்கள் என்பதற்கு இவர் ஒரு வாழும் உதாரணம்.
ஆசிரியரை மதிக்கும் பண்பாளரை!
தாய்மொழித் தமிழால் உயர்ந்தவரை!
பல மேடைகளில் தமிழ்மொழியைத் தாங்கி பிடித்தவரை!
விஞ்ஞானத்தை வளர்க்கும் விருட்சத்தை!
செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலுமே கண்டுகளித்து தன்னம்பிக்கை தந்ந இவரை நேரில் பார்க்க முடியவில்லையே எனும் ஏக்கம் தீர்ந்து போகப் போகிறது.
இன்னும் நிறைய தாக்கம் பெறப் போகிறோம் இவர் பேச்சைக் கேட்டு.
ஆம்.இவர் எங்கள் கல்லூரிக்கு வருகை தரப் போகிறார் எனும் பெருமையோடு என் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.
👌👍
பதிலளிநீக்குநன்றி அக்கா.
நீக்குவாழ்த்துக்கள் காவியா, மிகவும் அருமையான கட்டுரை.
பதிலளிநீக்குநன்றி அண்ணா.
நீக்குதங்கள் பதிவு நனிநன்று. தங்கள் பேச்சுப் போலவே எழுத்துக்களுக்கும் உயிருள்ளது. தொடர்க..
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா.
நீக்குநன்றிகள் பல.
பதிலளிநீக்குநன்றி அண்ணா.
பதிலளிநீக்கு