கவிதைத் தொகுப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைத் தொகுப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

அன்னை தெரசா

                                                     

  அன்பு சுரக்கும் உள்ளமே
  அருளும் கருணை இல்லமே!

   ஆதரவற்றவர்களை தழுவுமே
  அன்னை தெரசா கரங்களே!

  தாயை இழந்த மழலைக்கும்!
  நோயில் புரளும் மனிதர்க்கும்!

  சேவை செய்ய நீளுமே
  அன்னை தெரசா கரங்களே!

  உயிர்களிடத்தில் அன்பினை
  மீட்ட வந்த தேவதை!

  தியாக மெனும் சேவையை
  காக்க வந்த தாய்மையே!
  நீ மீண்டும் வந்து பிறக்கணம்
  ஆதரவற்றோர் அனைவரும்

  உன் அன்பு மழையில் நனையணும்!

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

நட்பின் துளிர்


    
     எனக்கு பிடித்த யாவும் உனக்கு பிடித்திருந்தால்

     நிச்சயம் உன்னை எனக்கு பிடித்திருக்காது!


   எனக்கு பிடிக்காத பலவும் உனக்கு பிடித்ததே

    நான் உன்னை நேசித்ததன் காரணம்!




சனி, 20 பிப்ரவரி, 2016

எழில் கொஞ்சும் இயற்கை..!!


Image result for எழில் கொஞ்சும் இயற்கை

காலையில் கண் விழித்தவுடன் புதிதாய் ஒரு பொழிவு!

ஏதோ ஒரு வெளிச்சம் என் கண்களை வருடிச் சென்றது;

கண்துடைத்து வியப்புடன் புதிதாய் மலர்ந்த சூரிய காந்தியோ?

என்று பறிக்க முயன்று ஏமாற்றத்துடன்  திரும்பினால்;

முன்னே உறைக்காற்று சீறிப்பாய பின்னே சிறகடித்து

பறவை கூட்டம் துறத்தி விளையாடி கொண்டிருந்தது;


Image result for இயற்கை பறவைகள்

உடன் நானும் விளையாட மனம் ஏங்கியது!

ஏக்கத்துடன் தலை குனிந்த போது

இளந்தென்றல் காற்று என் மனதிற்கு இனிமை அளித்து

என்னையும் உடன் அழைத்து சென்றது; அங்கே

ஆர்பறித்து வரும் நீர் ஏதோ முணுமுணுத்து

என்னை கடந்து சென்றது; எட்டிப் பார்த்தால்

கண்ணை கவரும் வெண்முத்து!

கையை விட்டு எடுத்தால் தண்ணீர் மட்டுமே வந்தது!



Image result for எழில் கொஞ்சும் இயற்கை

மேலே பார்த்து உண்மையை உணர்ந்தேன்;

கோபத்துடன், என் மனதில் ஒரு கேள்வி!

நீ தான் இயற்கையோ? ஆனால்

எனக்கு செயற்கையை தான் தெரியும் என்றேன்;

அப்போது, பொறுமையாய்,

இயற்கையின்றி செயற்கை உண்டோ?  என்று

நீ சொல்லாமல் சொன்னாய்! நான்

கேட்காமல் உணர்ந்தேன்; திடீரென்று

இனிய குயிலின் குரலோசை என்

செவியை தட்டி எழுப்பியது; அதனால்

நிஜத்தை விட்டு இயற்கையோடு மூழ்கியிருந்த

என் கனவிலிருந்து பிரியா விடைபெற்றேன்!


Image result for இயற்கை பறவைகள்


வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தோழி


நட்பை உணர வைத்த நண்பன் என்பேனா?

தோல்விகளில் தோள்கொடுத்த தோழி என்பேனா?

சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட சகோதரி என்பேனா?

கண்ணீரை துடைத்த காதலி என்பேனா?

என்னுடைய ஒவ்வொரு படியிலும் துணை

நின்ற துனைவி என்பேனா?

ஆலோசனை கூறிய அன்னை என்பேனா?

தளர்ச்சிகளில் தட்டிக் கொடுத்த தந்தை என்பேனா?

என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் முன் நின்றவளே!

என்னை எனக்கு உணர வைத்த என்னவளே!

உன்னை நான் என்னவென்று சொல்வேன்?

நீ என்னில் கலந்தவள்! என் உயிரானவளாவாய்!





வியாழன், 18 பிப்ரவரி, 2016

வெற்றி..!!!

                           



அழகு      தோற்றத்தில்     இல்லை,  கண்ணில்      இருக்கிறது!

வெண்மை   பாலில்     இல்லை,  மனதில்      இருக்கிறது!

இயக்கம்      செயலில்      இல்லை,  சிந்தனையில்      இருக்கிறது!

ஆக்கம்   உழைப்பில்  இல்லை,  நம்பிக்கையில்      இருக்கிறது!

ஒளி உலகத்தில் இல்லை,      உள்ளத்தில்      இருக்கிறது!


தோல்வி இழப்பதில்   இல்லை,  நினைப்பதில்      இருக்கிறது!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பகைமையை ஒழிப்போம்..!!!


சுட்டு எரிக்கும் சூரியனும் பகை பார்ப்பதில்லையடா..!!
கொட்டுகின்ற மழையும் மதம் பார்ப்பதில்லையடா..!!
வீசிகின்ற காற்றும் இனம் பார்ப்பதில்லையடா..!!
ஓடுகின்ற நதியும் ஜாதி பார்ப்பதில்லையடா..!!


வேறுபட்ட மனிதர்கள் மத்தியில்
வேறுபட்ட மலர்களும் சமமாகத்தான்
மலரின் வாசனையை வீசுகிறது-ஆனால்
நாம் மலருக்கும் ஜாதி பெயர் சூட்டுகிறோம்..!!




நதிகள் பல ,கடல் ஒன்று..!!
நகரங்கள் பல,மாநிலம் ஒன்று..!!
மாநிலங்கள் பல.நாடு ஒன்று..!!
நாடுகள் பல,உலகம் ஒன்று..!!

புரிந்து கொள்ளுடா மானிடா
பகைமையை விரட்டுடா..!!





படித்ததில் பிடித்தது,
ரா.தேவயானி,
முதலாமாண்டு வணிகவியல்.

திங்கள், 15 பிப்ரவரி, 2016

புத்துணர்ச்சி..!!




இந்த நாட்டில்,
     சாலையை மாற்ற வேண்டும்,
     கல்வி முறையை மாற்ற வேண்டும்,
     மருத்துவ முறையை மாற்ற வேண்டும்,
     உணவு முறையை மாற்ற வேண்டும்,
     அந்நிய கலாசாரத்தை மாற்ற வேண்டும்,
     நாவில் இருந்து உதிரும் மொழியை
     தாய் மொழியாக மாற்ற வேண்டும்,
     இவற்றை எல்லாம் கூட ஒரு நாள் மாற்றி விடலாம்
     உன் சோம்பலை மாற்றினால் .........
     ஒவ்வொரு நாளையும் சோம்பலை மறந்து

     புத்துணர்ச்சியோடு வரவேற்போம்!




வியாழன், 11 பிப்ரவரி, 2016

சாலை



கள்ளும் முள்ளுமாக நிறைந்திருந்தேன்;
மண் சாலையாக மாற்றினார்கள்!
மண் சாலையாக இருந்தேன்;
     தார் சாலையாக மாற்றினார்கள்!
தார் சாலையாக இருந்தேன்;
     காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!
இப்படி எல்லாம் மாறினாலும் என்
     மேனி மட்டும் குழிகளாலே நிறைந்துள்ளது!
இது நான் செய்த தவறா? இல்லை
என்னை செய்தவர்களின் தவறா?
                                         
                                                                        இப்படிக்கு,
                                                              கண்ணீருடன் சாலை.

புதன், 10 பிப்ரவரி, 2016

பாரதியார்

                                         

                     
சீறிவரும் சூறாவளியை
மரங்கள் அறிமுகப்படுத்துவது போல;
தமிழுக்கு உணர்ச்சியூடும் கவிதைகளை
அறிமுகப்படுத்தியவன் நீ!

எதையும் அச்சடித்தாற் போல்
காட்சிப்படுத்தும் திறமையை - உன்
வீட்டுச் சுவரில் தொங்கும்
கண்ணாடியிடமிருந்து தான் கற்றாயோ?

உன் வீர முழக்கத்தை, பிஞ்சு குழந்தைகள்
செவி வழி கேட்டாலும்,
அரும்பாத மீசையை தான்
தடவி போருக்கு சென்றிடுமே!

எத்தனை வருமை சுமையாய்
உன்னை வாட்டினாலும்,உன் கைகள்
சுமந்தது என்னவோ புத்தக சுமையைத் தான்!
அந்த யானையும் உன் கவிதையை
கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன்;
அந்த வியப்பில் தான் – உன்னை
தூக்கி மகிழ்ந்திருக்கும்; ஆனால்
அதற்கு தெரியுமா நடக்கும்
விபரீதம் என்ன? என்று

உள்ளத்தில் ஒளி உண்டானால்
வாக்கிலே ஒளி உண்டாகும் என்பர்- அதுபோல
நீ எங்கள் உள்ளத்தில் ஒளியாய் நின்று
எங்கள் வார்த்தையிலே ஒளிபொருந்திய
உணர்ச்சி கடலாய் வெளிப்படுகிறாய்!

தமிழே உன் உயிர் மூச்சு என்றாய்!
தமிழ் அன்னை எவ்வளவு காலம் தவமிருந்தாளோ?
உன்னை பெற்றெடுப்பதற்காக என்று தெரியவில்லை!

பாரதி பெண் சுதந்திரத்தின் போர் வாள் நீ!
தமிழுக்குச் செல்ல பிள்ளை நீ!
இந்த உலகை விட்டு உன் உடல் மறைந்தாலும்;
என்றும் எங்கள் மனதில் குடிகொண்டிருப்பவன் நீ!




ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

கேள் மனமே கேள்..!!


வைரமுத்து.





தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்

தங்கத்தைச் செங்கல்லாய்க் காண கேட்பேன்

விண்வெளியில்  உள்ளதெல்லாம்  அறியக் கேட்பேன்

விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்..!!



மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்

மனித இனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்

பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்

போர்க்களத்தில் பூஞ்செடி பூக்கக் கேட்பேன்..!!




மேடையில் தோற்காத வீரம் கேட்பேன்

மேதைகளைச் சந்திக்கும் மேன்மைக் கேட்பேன்

வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்

வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்..!!



வானளந்த தமிழ்த்தாயின் பாலை கேட்பேன்

வைகை நதிப் புலவர்களின் மூளை கேட்பேன்

தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்

தென்னாழி  தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்..!!



மானமகள் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்

மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்

ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்

ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்..!!


ஆர்.ராஜாலட்சுமி,
வணிகவியல் முதலாமாண்டு,
படித்ததில் பிடித்தது.

வியாழன், 28 ஜனவரி, 2016

வேற்றுமையில் ஒற்றுமை..!!




சிவன்,இயேசு,அல்லா  என்ற 
தெய்வங்களின்  பெயர்கள் மூன்றெழுத்து..!!


விபூதி,சிலுவை,தொப்பி  என்ற
மத சின்னங்கள் மூன்றெழுத்து..!!

கோவில்,சர்ச்,மசூதி  என்ற
வழிபாட்டுத் தலங்கள் மூன்றெழுத்து..!!


மனிதர்களான நம்மிடையே ஏன்
பகைமை,சண்டை,குண்டு  என்ற மூன்றெழுத்து..??

இவைகளை தவிர்த்து இனி நாம்
அன்பு,உதவி,நட்பு என்ற மூன்றெழுத்து நேசத்தோடு


சேர்ந்து வாழ்வோம்..!!
தேசத்தை காப்போம்,,!!




புதன், 20 ஜனவரி, 2016

எதிர் வீட்டு தேவதை .



பதினோராம் வகுப்பில்தான்

பார்த்தேன் அவளை

கல்லூரி நான் செல்கையில்

கையசைத்து சிரிப்பாள்….


புத்தக சந்தேகமென

பார்க்க வருவாள்

புரிய வைத்தபின்

புன்னகைத்து செல்வாள்


முத்தம் பெறுவதட்காக

முதல்முறை சொன்னேன்

மனமுடித்து கொள்வேனென்று

முத்தமும் கொடுத்தாள்..


பெண் பார்க்கும்

படலமும் தொடங்கிற்று

பாவமாய் சுற்றினாள்

பேதை பாவை


சாகாலத்தி சண்டையிட

சற்றும் நேரமில்லை

சட்டென்று எல் கே ஜி

சேரவேண்டும் என்பதினால்...!!!


வெள்ளி, 8 ஜனவரி, 2016

இயற்கை ..!!


இயற்கை..!!!

இறைவனின் படைப்பிலே

இயற்கையும்

ஓர் அற்புதப் படைப்புதான்..!!!

பூமியை அழகுபடுத்தும் ஓர்

அற்புத சாதனம் இயற்கை..!!

கோடையின் கொந்தளிப்பும்

குளிரின் நடுக்கமும்

கொண்டது இயற்கை..!!

மழைக்காலத்தில் செழுமையும்

கோடைக்காலத்தில் வறட்சியும்

மாறி மாறி கட்டித்தழுவும்

ஓர் அற்புத நிகழ்வு இயற்கை..!!

வானிற்கே வர்ணமிடும் வானவில்;

இரவிற்கு கோலமிடும் நட்சத்திரம்;

இருட்டிற்கு வெள்ளையடிக்கும் நிலா;



பசுமைக்கு உயிரிடும் மரங்கள்;எனப்

பல புதுமைகள் கொண்டது இயற்கை..!!

மனித வாழ்க்கையின் நம்பிக்கை இயற்கை..!!

இயற்கை வளம்காத்து

இறைவனடி சேர்வோம்..!!!

மனிதனே..!!!


மனிதனே..!!


மனிதனாய் இருக்கத் தெரிந்து கொள்

மரியாதை கிடைக்கும்..!!

தோழனாய் இருக்கத் தெரிந்து கொள்

நட்பு கிடைக்கும்..!!

ஒற்றுமையாய் இருக்கத் தெரிந்து கொள்

ஒருமைப்பாடு கிடைக்கும்..!!

பாசமாய் பழகத் தெரிந்து கொள்

பாராட்டுக் கிடைக்கும்..!!

பொறுமையாய் இருக்கத் தெரிந்துகொள்

பெருமை கிடைக்கும்..!!

பகைவனை மன்னிக்கத் தெரிந்துகொள்

புகழ் கிடைக்கும்..!!

இறைவனை வணங்கத் தெரிந்துகொள்

அருள் கிடைக்கும்..!!

நம்பிக்கையாய் உழைக்கத் தெரிந்துகொள்

நினைத்தது கிடைக்கும்..!!


முயற்சியின் இலக்கு..!!


முயற்சியின் இலக்கு..!!


உங்களால் பறக்க முடியவில்லையா..??ஓடுங்கள்..

உங்களால் ஓட முடியவில்லையா..??நடங்கள்..

உங்களால் நடக்க முடியவில்லையா..??தவழுங்கள்..

ஆனால் எதையும் செய்தாலும் உங்கள்

இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டே இருங்கள்..!!!

முயற்சி செய்  இலக்கை அடையலாம்..!!

முயற்சிக்கானப் பயிற்சியைச் செய்

வெற்றி நிச்சயம்..!!

அ.ப.ஜெ.அப்துல் கலாமுக்கு சமர்பணம்..!!


அ.ப.ஜெ.அப்துல் கலாமுக்கு சமர்பணம்..!!!


விண்வெளியில் விண்கலன்களை ஏவின கைகள்

இன்று விண்ணிற்கே சென்றது ஏனோ..!!

நாங்கள் இழந்தது விஞ்ஞானி அல்ல

இந்திய தேசத்தின் விஞ்ஞானம்..!!

இது அழுகை அல்ல

இன்று பிறந்த குழந்தைகளின் குமுறல்..!!

இந்தியாவை இமயத்திற்கு கொண்டு சென்ற நீ

இமயத்தைக் காட்டிலும் உயரமான இடத்திற்கு

சென்றது ஏனோ..!!

நீ இல்லாத தேசத்தில்

நாங்கள் எவ்வாறு வாழ்வோம்..??

உன்னுடைய காலத்தில் நாங்கள் வாழ்ந்தது

எங்கள் பாக்கியம்-உன்னை காணமுடியாமல்

போனதோ எங்கள் துர்பாக்கியம்..!!

உன் முடியோ அழகு-நீ எடுத்துவைக்கும்

ஒவ்வொரு அடியும் அற்புதம்..!!

அப்துல் கலாம் என்ற பெயர் சூட்டியதும்

நீதான்..!!!

கோவிலுக்கு சென்று இந்தியா என்ற

பெயரில் அர்ச்சனை செய்ததும் நீதான்..!!

இதுவே தேசத்தின் மீது நீ வைத்த நேசத்தை

பரைசாற்றுகிறது..!!!

பாரத தேசத்தில் ஒரு கலாம் -இனி

பார்க்கமுடியுமா..??மற்றொரு கலாம்..!!

உன்னத மாமனிதனே உனக்கு நிகர் நீயே..!!

கடல் அளவு கூட போதாது உன்னை போற்ற

எவர் இருக்கிறார் உன்னை தூற்ற..??

விண்வெளி கூட உன் காலடியில்

நாளைய இந்தியா யார்கையில்..??

இராமேஷ்வரம் புனிதத்துவம் அடைந்தது உன்னால்..!!

உலகம் இராமேஷ்வரத்தை அறிந்ததும் உன்னால்..!!

இந்தியாவுக்கு விடியல் எந்நாள்..??

உன் கனவுகள் நனவாக போவது எந்நாள்..??

உதித்தெழுவோம் உனக்காக நாளைய

நாளைய இந்தியா நமக்காக..!!

வாழ்க கலாம்..!!வளர்க இந்தியா..!!

2020-லோ வளர்ந்த இந்தியா..!!

கட்டாயம் நிறைவேறும்..!!




வியாழன், 7 ஜனவரி, 2016

தெருவோரம் உதிரும் உயிர்ப்பூக்கள்..!!!


தெருவோரம் உதிரும் உயிர்ப்பூக்கள்..!!!


மார்கழி மாத குளிரும்,

பங்குனி மாத வெய்யிலும்,

பழகிபோச்சு..!!

பருவத்தில் இருக்கும்

வித்தியாசம்

மறந்துபோச்சு..!!

கொட்டும் மழையையும்,

அடிக்கும் வெய்யிலையும்

தாங்கிக்கொள்ளும் பக்குவம் வந்துருச்சு-

குடிசை  போட காசு இல்லை என்பதனால்..!!

கால் தேய உழைச்சாலும்-இருக்க

ஒரு இடம் கிடைக்கவில்லை..!!

சிலரோ பரிதாபப் படுகிறார்கள்..!!

பலரோ ஏளனப்படுத்துகிறார்கள்..!!

என்னடா வாழ்க்கை என்றாலும்;

இருக்க கூடவா இடம் கிடைக்காது இந்த உலகில்

என்னும் நம்பிக்கையில் வந்த

சிறு  நிம்மதியோடு ஓடுகிறது

எங்கள் வாழ்க்கை..!!

பகலே அதிகம் என நினைத்தானோ என்னவோ

இரவை  படைத்தான்  அந்த  இறைவன்..!!

நித்திரையில் நிம்மதியை

தொலைத்தோம் நாங்கள்..!!

தெருவோரம் கிடைக்கும் எங்களை-இறைவனே

ஏரெடுத்து பார்க்கவில்லை..!!

அந்த வழியே வரும்-வாகனம்


ஓட்டுபவன் 

கண்களுக்கு

நாங்கள் 

குப்பைகளாகவே 

தெரிவோம் போல..!!

அவன் சில நேரங்களில் எருமை

வாகனம் ஓட்டி வருபவனாய் இருப்பதனால்

எமலோகமே கொண்டுபோய்   சேர்த்துவிடுகிறான்..!!

உயிரை வருபவன் கையில் கொடுத்து

கண் மூடுகிறோம்-அவன்

மனம் வைத்தால் கண்திறப்போம்..!!

இல்லையென்றால்,

அவனே பத்திரமாக கொண்டுபோய்

சேர்த்துவிடுவான்,

கைலாசத்துக்கோ..!!வைகுந்தத்துக்கோ..!!

- கீர்த்தனா

இரண்டாமாண்டு கணிதவியல்