செவ்வாய், 8 நவம்பர், 2022

தவிப்பு

வின் கண்ட நிலவில் 

கணவில் ஒரு பயணம்...!!

நிலையற்ற கால்கள் 

நிலவைத் தேடி 

ஒரு தேடல்....!!! 

உறங்கச் சென்ற விழிகள்... !!

உனைக் காண விளித்தன... !! 

சிறு ஒளியில்

ஒரு விளிப்பு...!!!

நிஜத்தில் கனவாய் 

கறைந்ததேனோ...!!

வியாழன், 22 செப்டம்பர், 2022

இறைவா...🙏🙏🙏


அமைதியை தா, உலகிற்கு  அமைதியை தா!..

பரவட்டும் எட்டுத் திக்கும் அமைதியும், சமாதனமும்...

அன்பே எங்கள் தெய்வம்
அமைதியே எங்கள் ஆயுதம்...

உலகம் புனிதமாகட்டும்
அன்பு உரமாகட்டும்..

சந்தோசமும், 
சமாதானமும் பொங்கி வழியட்டும்...!!

KALADEVI.S
II-Bsc CS  Ksrcasw 

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?...


 
சிறு விதையாயினும்
விருட்சமாய் வளரும்
வித்தை தெரிந்தவள்
நான் விளக்கொடு
எரியும் வீட்டில் பூச்சி
போல வீழ்வேன் என்று
நினைத்தாயோ  சிறு
ஊற்றாயினும் நான் வெள்ளமெனப் பாயும்
வேகம் கொண்டவள் 
வடிந்து ஓடும் வாய்க்கால் போல
வீழ்வேன் என்று 
நினைத்தாயோ சிறு
பெண்ணாயினும் சிங்கமென சீறும்
சிந்தை கொண்டவள்
நான் சிறு கூட்டில்
வாழ்ந்து விட்டு
வானுலகை அடையும்
வண்ணத்துப்பூச்சி போல வீழ்வேன்
என்று நினனத்தாயோ
வாடித் துன்பமிக உழன்று பிறர் 
வாட செயல்கள் 
செய்யாமல் வீழ்ந்து
விடுவேன் என நினைத்தாயோ!....

ச.கலாதேவி
II-Bsc CS  ksrcasw 

ஞாயிறு, 11 செப்டம்பர், 2022

ஒரு வழி தடம்

பயணம் அற்ற

பாதையில்...!!

கதையின் 

சுருக்கமாக 

பயணிக்க பட்ட 

என் கவி

ஒரு வழி

தடமாக....!!

செவ்வாய், 6 செப்டம்பர், 2022

கவி இல்லா இமை

என் இருளின் ஒளியில்

இமையை உறங்க வைத்து...!!!

கவிக்கனவை

காணச் சென்றேன்

வழியில்லா

நொடியில்

கவியின்றி

இமை விழித்தேன்....!!!

குரு

இசையின் ராகம் என்னை

 வீழ்த்தியது... 

இசை வென்று 

நான் நிமிர்ந்தேன் 

ராகம்  கற்று 

அழகிய  இசையில் வென்று...!!! 

ராகம் என்ற கல்வியை

கற்பித்து 

இசையென்னும் 

என் வாழ்வில் 

வென்றேன் 

உன்னால் 

குருவே....!!!

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

குடும்பம்

இன்று என் 

தனிமை என்னும்  

நிரமற்ற வண்ணம்

மாயவலையில் சிக்கிய 

பிடியில் மாயமாய் 

மாய்ந்தது... !!!

பலவண்ணத்தின் ஒவ்வொரு 

வண்ணமும்  மழையின் 

இசை ஒலிரும் 

தருணத்தில் 

கண்பறிக்கும் வானவிலாய் 

வானம் என்னும் 

மூன்று குடும்பத்தில்

நிரமற்ற என் வண்ணம்

பலவர்ணமாக 

ஒளித்து... !!!

மழையின் இசை 

இருதியில்  பலவர்ணமே இவளின்

நிரந்திரமற்ற  

தனிமை வண்ணமாக 

மாறிய நிலையில் -

மறு கணம் 

இவ்வழகிய மழையின் 

இசைக்கு

காத்திருக்கின்றது...!!!

சனி, 3 செப்டம்பர், 2022

அண்ணா

என்றும் நிஜத்தின் 

ஒளியில் 

உன்  பாசத்தின் 

அளவை அதிகரிக்க 

என் சிரிப்பை 

மலரச்செய்தாய்...!!!

தண்ணீரின்றி - என் 

பு(பூ)ண்ணகைச் செடியை

வளரும் நிலையில்..!!!

காலத்தின் கட்டாயம் 

இன்று - ஏனோ

ஒளி இருளாய் 

மாறிய நொடில் 

உன்  ஒளியின்றி 

சிதறினேன்...!!! 

இருப்பினும்-  உன் ஒளி 

இருளில் ஒளிக்கும் 

நிலவின் வடிவில் 

என் - அழகிய கனவில் 

இந்நொடியும்

செடியின் 

பு(பூ)ண்ணகையில் 

ஆழகாய் மலர்கிறது என்  சிரிப்பு...!!!

என்றென்றும் ஒளியின் 

வடிவில் 

என் அண்ணன் 

ஒளிரும் தருணத்தில்...!!!

வியாழன், 1 செப்டம்பர், 2022

மூஷிக வாகனனே...



பார்வதியின் பையனுக்கு பிறந்தநாளாம் !

பச்சைமண்ணை பிடித்து வைத்து,

அருகம்புல்லை அருகில் நட்டு,

எருக்கு மாலையை தொடுத்து,

மோதகங்கள் படையல் வைத்து,

மூஷிக வாகனனை கொண்டாடுகிறோம் !

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..,..
அ.ஹேமா
    3 b.com ksrcasw 

அரசமரத்து அரசனே 🙏🙏🙏



அரசமரத்து அரசனே 
ஆனை முகத்தழகனே
இறையின் முதல்வனே
ஈசனின் புதல்வனே
உலகமே அம்மை அப்பனென உணர்த்தியவனே
ஊழ் வினைகள் தகர்ப்பவனே
என்றும்
நிலையாய் இருப்பவனே

ஏற்றம் என்னுள்
விதைப்பவனே
ஐந்து முகத்தோனே
ஐஸ்வர்யம் தருபவனே

ஒளியின் ஒளியே
ஓங்கார திருவே
ஔடதமானவனே
அஃதே கொள்கினறேன் 
எனையாட்கொண்டாள்வாயே....


ச.கலாதேவி
II-Bsc.CS  ksrcasw 

புதன், 31 ஆகஸ்ட், 2022

ஆனை முகனே

உன் தாயயை

காத்து - உயிர்விட்ட 

பாச மகனே

மறு வாழ்வு பெற்ற 

ஆனை முகனே

நீ - தெய்வத்தின் 

ஆசியின் வழி 

முதற்கடவுளாக

காட்சியளிக்கும்

கொழுக்கட்டை பிரியனே...!!!

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

தானமும் தர்மமும்....



தானம் கொடுப்பது
அன்னமே யாயினும்

அங்கத்தை நிறைத்து
இன்பம் பயக்கும்.

தானம் கொடுப்பது
உடையே யாயினும்

மானத்தை காத்து
மனதினில் நிற்கும்.

மறுகை அறியா 
மகிழ்ந்து கொடுப்பது

மனித   தர்மமே 
நம்மை வாழவைக்குமே

பிறர்க்கு உதவுவதை 
புகழ் தேட நினைப்பது 

புண்ணியமாகாது அது
சுய   இன்பமே

தானமும் தர்மமும்
தலைத்தோங்க வேண்டும்

தரணியில் ஈகையாளர்
செழித்தோங்க வேண்டும்

        கலாதேவி.ச
II-Bsc Computer Science ... Ksrcasw 

சனி, 27 ஆகஸ்ட், 2022

மழை....🌧️🌧️🌧️


வான்முகில் வழங்கும் நீரை
வான்சிறப் பென்று சொன்னார்!
வானமும் பொய்த்து விட்டால்,
வாழ்வது கடின மாகும்!
மாமழை போற்றி னாரே,
மாக்கவி இளங்கோ தாமும்!
நீரது குன்றிப் போனால்,
நிலவுல கென்ன வாகும்?
M.Sanmati 
II-BSC Computer Science. Ksrcasw 

அன்னை தெரேசா ‌‌......



அனாதையாய் இருக்கும் குழந்தைகளின்...

ஆதாரமாக வந்த அன்னையே...

உன் முதுமைப் பருவத்திலும்....
 
உனது விழிகள் உரங்க வில்லையே...
 
பாசத்தின் பள்ளி கூடமே...

உன் எல்லை இல்லாத பாசம்....
 
மழலைகள் மனதில் பல ஆண்டுகள் தாண்டியும்...
 
நல் உள்ளம் கொண்டு விழுமே....


ச.கலாதேவி 
II-Bsc.Computer science   Ksrcasw 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

தனிமை

ஒரு வழி தடத்தில் என் பயணம்

தொடங்கிய நிலையில்

இருளின் சிகரத்தில்

ஓர் ஒளி ...!!!

ஓசையின்றி தொடரும்

பயணம் – இக்கணமே

தனிமையின்

இசையில்

வசிக்கின்றது....!!!

திங்கள், 22 ஆகஸ்ட், 2022

ரணம்

குளிர்ந்த காற்றில்

பற்றி எறியும்

தீயின் மேல்

தளிர்ந்த இலையின்

பசுமை

இன்று அனலில் சிவந்தது என் ??

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தனிமையின் கதை

கண்ணெதிரே  கலைகள் 

அலையில் சிக்கிய 

பிடியில்...!!!

என் தடத்தில்

ஓர் கலை 

தனிமையின் 

கதை... !!!

சனி, 20 ஆகஸ்ட், 2022

தமிழ்

பழ மொழியை 

அறியும் கணமும் 

ஒரு நொடியும் 

மறவா எம்முயிர் 

தமிழே...!!!!

என் கவியும் 

உன் வழி

மெய்யான நிலையில் 

படைப்பானது தான் 

இந்நொடியில்...!!!!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

கவியின் நதி

மெல்லிசையாய் நகரும் 

நதியின் இசையே...!!!

அலை அலையாய் - என்

கவியின் இசை 

நகரும் வேளையில் 

நதியின் முற்றே

கடலின் படைப்பாய் 

மாறிய என் 

கவிகள்.... !!!

வாழ்க்கை...


கானலாகும் கனவுகளும்..
நிறந்தரமில்லா நிஜங்களும்..
நிறைந்த வாழ்கை இது.......!!!
இழந்தைவைக-ளை கடந்து போவதும்.. நினைத்து மகிழ்வதும் ஏதார்த்தம்..!!!
ஏமாற்றங்களை ஏற்று..
ஏற்றங்களை        எளிதாகக் கடந்து...
வாழ்க்கையை வாழ்ந்திடுவோம்...!!!

S. Priya  2nd Bsc.MB  ksrcasw 

புதன், 17 ஆகஸ்ட், 2022

கற்பனை வண்ணம்

கதையின் விடியல் 

என் இருளில் 

கற்பனை 

வண்ணமாய் ஒளியும் 

நொடியும் 

இதழின் ஒரு ஓரம் 

சிறு புன்னகை...!!!

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2022

ரோஜா

அழகின்  வடிவமே - நீ 

அசைவுடன் வசிப்பில் 

இருக்கும் வண்ணம்... !!

முள்ளுடன் கதைப்பது 

தான் ஏன்.... ??

திங்கள், 15 ஆகஸ்ட், 2022

காத்திருப்பு

உன் பாதையில் 

தவழ்கின்றேன்.... !!

தடமின்றி  தொலைந்த 

என்னை... !!

உனை காணும் 

நொடியிற்காக 

என்றும் என்

காத்திருப்பு....!!!

எனை உன்னில் 

தொலைக்க... !!


ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஆழ்கடல் 🌊🌊


இவளின் வசிப்பே
கடலின் உள்ளத்தை
நேசித்ததேனோ...!!!!
உன் ஓசையை ரசித்த
என்னை
நனைய வைத்தாய் ...!!!
என்று உன் ஆழமனதில்
இடம் பிடிப்பேனோ....!!!
ஓசையின்றி என்
மனதை உன்னுடன்
இசைக்கும்
காதலி இவள்
உன்னிடத்தில் ஆழ்கடலே... !!!



சனி, 13 ஆகஸ்ட், 2022

சுதந்திர தினம்..🇮🇳🇮🇳🇮🇳

இந்திய வானில் விரிந்த சுதந்திரச் சிறகுகள் பல்லாயிரம் தியாக வீரர்களால் சாத்தியமாயிற்று! வேற்றுமை மலர்களால் ஆக்கப்பட்ட, ஒற்றுமை மாலையை சூட்டி மகிழ்ந்தோம்! பாரத அன்னைக்கு வண்ணம் மாறாமல் வாசம், பிறழாமல் வணங்கி காப்போம்! அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !



அ.ஹேமா  3ஆம் ஆண்டு வணிகவியல்  ksrcasw 

நட்பு 👭👫👭.......

அவளுக்கான கடமைக்காக அழைத்துசெல்ல
பதினாரில் பயணம் துடங்கியது
பயணத்தின் சுவாரசியதிற்கு அவளை
அவளின் உள்வெளி அழகை மெருகேற்றினான்
பெற்ற தந்தை வேடிக்கை பார்க்க
தந்தையாய் மாறிய தோழன் 
சேர வேண்டிய கைகளில்  
சேர்ப்பான்......



Varsha.P 2nd BA Economics ksrcasw 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

கவி

ஒளியில் ஒளியின்றி 

தவித்த 

இவளின் வழிக்கு 

ஒளியாய் 

வந்த கவியின் 

இருளே...!!

உன் விழி வழி கவியாய் 

ஒளிந்தாய்... !!!

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

கல்வி

நுணியின் கீறலில் 

செதுக்கிய வண்ணம்...!!

கல்வியின் வடிவில் 

சிலையானேன்.... !!

புதன், 10 ஆகஸ்ட், 2022

இசை🎶🎼🎶



இசையே தூங்கவை எங்களை
உன் மயிற்பீலி விரல்கொண்டு
மனசு தடவு இரத்தக் குழாய்களின்
துருக்கள் துலக்கு உள்ளிருக்கும்
விலங்குத்தோல் உரி
மென்குணங்கள் மேம்படுத்து
நாங்கள் இறுகி இறுகிக் 
கல்லாகும்போது இளகவிடு
குழைந்து குழைந்து கூழாகும்போது 
இறுகவிடு நீயில்லாத பூமி
மயானம் மன்னித்துவிடு
மயானத்திலும் இசை உண்டே.
M.Sanmati II-BSC Computer Science ksrcasw 

தனிமை

கண்ணின் கேள்வி 

காணும் கணமே நேரிடுமோ....!!!!

என்னவளே  (தனிமை)

உனைக் கண்ட கணமே

கேள்வியே விடையாய் 

மாறிய என் கண்கள்....!!!

சந்திரன் 🌒




நான் பூரண சந்திரன் எனக்கு வளர்பிறையுமில்லை...
தேய் பிறையுமில்லை
நான் என்றும் நானாகவே
முழுச் சந்திஷரனாகவே வாழ்கிறேன்...
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
வாழ்ந்து கொண்டிருப்பேன்...


நான் பிறரை நோக்கும்  பார்வை....
என் மனம் சார்ந்ததாக இருக்கிறது...
இது சரியெனில்...அது சரியே...
இது தவறெனில்
...அது தவறே...

II BCA -S.JENIFER ksrcasw 

சனி, 6 ஆகஸ்ட், 2022

☀️ சூரியன் ☀️

 
மாலை நேரம் மேற்குதிசையில்

   தென்னைமரத்தின்  பின்னால்

ஒளிந்து  கொள்கிறது சூரியன்...

     கிழக்கு திசையில் இருந்து

  சென்றுவிட்டாயா?

      என எட்டிபார்க்கும் சந்திரன்...

          - Shastika.s III BCOM FMA

வெண்ணிலா

வட்ட மான வெண்ணிலா

வானில் காணும் வெண்ணிலா!

தட்டுப் போன்ற வெண்ணிலா

தாவிச் செல்லும் வெண்ணிலா!

பாதி மாதம் தேய்கிறாய்

பாதி மாதம் வளர்கிறாய்!

சோதி காட்ட வருகிறாய்!  

சொல்லி நாங்கள் மகிழுவோம்!

                             M.Sanmati II-BSC Computer science

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

அருவி

மாமலை மீதி ருந்தே,

மாமழை பெய்ய வீழும்!

வீழ்ந்திடும் அருவி நீரால்,

விளைந்திடும் தாவ ரங்கள்!

குறிஞ்சியின் குழந்தை யன்றோ,

குதித்திடும் அருவி தானும்!

ஆறுகள் அருவி யாலே,

ஆவதும் உண்மை யன்றோ!

                          -M.Sanmati II-BSC Computer Science.

புதன், 3 ஆகஸ்ட், 2022

தனிமை

 தனிமை என்னும் 

மண்ணில் விழுந்த 

சிறு துளியாய் 

இருந்த என்னை  

கட்டியணைத்தாய் நீ....!!!

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

என் ஒளியே

சிப்பிக்குள் உறங்கும் 

முத்துகளே.... !!

மாயவன்  சிப்பியை 

மாய்கும் கணமே 

உன் ஒளியின் வண்ணம் 

என்றும் 

என் ஒளியே.....!!!

ஞாயிறு, 31 ஜூலை, 2022

முத்தின் உறவு

கவிதையின் கண்களைக் 

கண்ணீரில் கண்ட நாட்கள்!

இன்று விழியின் விழிம்பில் நதி

வற்றிக் கிடப்பது ஏனோ... 

தாயின் உறவு கொப்புக்கோடியில்

தந்தையின் உறவு கைப்பிடியில்

 அன்னனின் உறவு அறவணைப்பில்

உறவுகள் சிற்பிக்குள் உள்ளதைப்

போல் ஒன்றாக இருந்த

நாட்கள் ஏனோ!!

சிதறிய முத்துக்கள் 

நாளடைவில் பிறந்தன 

முத்துகளை தேடியே தொலைந்தேன்!!


 விழியில் வழிந்த கண்ணீர் 

வற்றிப் போய் கலைத்தன

முத்துகளைத் தேடி நான்

தொலைந்தேன்

என் கண்ணிள் கவிதையை

காணவில்லை..

என்னோடு சேர்ந்து .

என் கவிலையும் தொலைந்தது.. !!!

சனி, 30 ஜூலை, 2022

கவியின் விழி

இருளில் இருந்த

என்னை

கவியால் விழி 

திறந்த ஒளியே... !

விரைவில் கவிவழி 

விழி திறக்க வை..!

வியாழன், 28 ஜூலை, 2022

அப்பா

ஆசைப்பட்ட 
அத்தனையும் 
தந்தவரே!!
ஆசையாக
 இருக்கிறது
இறுதிவரை
உன் ஆசைமகளாகவே
இருக்க அப்பா!!!

செவ்வாய், 26 ஜூலை, 2022

தங்க மயில்

தோகை இல்லாமல் 
பறக்கிறேன் !!
நகை இல்லாமல்
ஜொலிக்கிறேன்!!
ஒவ்வொரு முறையும்
நீ குறுஞ்செய்தியில்
தங்க மயில் என்கிறபோது!! 

வாடிய மலரே நீ

வாடிய மலரைக் காண சென்றேன்...!

அழகாய் மலர்ந்த மலர்கள் 

ஏனோ 

வினவியது....

உன் கண்களை கவர்வது போல

பல வண்ணங்களாய் பூத்துள்ளேன் !

என் மணம் உன்னை 

ஈர்க்க  வில்லையா? 

என் வண்ணங்கள்

உன் கண்களை

ஈர்க்க வில்லையா ? 

ஏன் என்னை விலக்கி

வாடிய மலரை வர்ணிக்கின்றாய்?

என் கண்கள் 

உன்னைக் காண நினைப்பது 

ஏனோ 

நான் மறைத்த உண்மை மலரே..! 

ஆனால்..

வாடிய மலர் தனிமையில் 

இன்னும் வாடுகின்றன 

வர்ணிக்க யாருமில்லாமல்

அதனை உணர்ந்த என் மனம் .

உன்னைக் காண நான் வருகின்றேன்..

வர்ணிக்க வருகின்றேன்  

வருந்ததே மலரே.... !

நான் கூறியதைக் கேட்ட

வண்ண மலர்கள் புரிந்து கொண்டு

அழைத்துச் செல் என்னையும் 

காண வருகிறேன் அழகிய

வாடிய மலரை...!

அழகின் ரகசியமே 

வாடிய மலரே நீ.... !!

திங்கள், 25 ஜூலை, 2022

மீனின் மகிழ்ச்சி

நீருக்கு பஞ்சமில்லை..... !!!

மான்போல் துள்ளி ஓடும் நதியில்....!!

ஜொளிக்கும் நட்சத்திரமாய் வாழும்

மீன்கள் ஏனோ 

துள்ளி குதித்து தாவும் 

மீனை வர்ணிக்க வந்தேன்....!!!

நீல நதியில் வசிக்கும்

வண்ண மீன்களே.....!!

என்னிடம் உரையாட வா!!! 

உன்னிடம் விளையாட வருகிறேன்..!!!

என் மனதில் ஏக்கம் 

ஏனோ 

முத்துகளைப் போல்

குவிந்து கிடக்கின்றது...!!

பல வண்ணங்களைக் கொண்ட

உன் மேனியை நேசித்தேன்.....!!!

வசிப்பாயா என்னுடன் ? 

வினவ வந்தேன்

சட்டென்று தடுமாற்றம் படைதேன்....!!!

உன்னை அழைத்துச் செல்ல

மறுக்கிறது என் மனம்...!!

நீ வசிக்கும் உம் இடமே

உன் மகிழ்ச்சிக்கு காரணம்.....!!

நீல நதியில் - நீ !!

துள்ளி விளையாடும்

மகிழ்ச்சியை உன்னிடம் இருந்து

பறிக்கமாட்டேன்......!!!

உன் மகிழ்ச்சியை உன்னிடம் தந்து

உன் மகிழ்ச்சியை கண்டு

நான் மகிழ்ச்சி அடைகிறேன்

கண்ணே !!!

சனி, 23 ஜூலை, 2022

நிலவின் நிழல்

நிலவில்லை ...!!!

என்னுடன் வசிக்கும் 

நிழலில்லை ...!!!

நிழலில்லா   உயிரே 

நிலவைத் தேடிய 

நிலையில்  துடிக்கும் 

என்னவளின் உயிர்

நிலவின் நிழலிற்காக... !!!

வியாழன், 21 ஜூலை, 2022

தொலைந்த அகம்

யாக்கையின்றி 

நான் இல்லை !!!

இன்று 

புறத்தே அலைகிறேன்  

அகம் ஒன்றை 

தொலைத்துவிட்டு!!!

புதன், 20 ஜூலை, 2022

இன்றைய கல்வி

               தனி மனிதனுடைய வாழ்வையும் நாட்டின் வாழ்வையும் உயா்த்துவது கல்வியாம். சங்க இலக்கிய காலங்களில் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கினா். தமிழ்நூல்கள் பலவற்றில் கல்வியின் சிறப்புகளையும், சிந்தனைகளையும் வளா்த்து வந்துள்ளனா். தனிமனிதன் ஒழுக்கமுடன் வாழ்வதற்கு கல்வி இன்றியமையாதது என மக்கள் நம்பினா். மேலும் தனிமனிதனின்  ஒழுக்கமே சமுதாய ஒழுக்கத்திற்கு வழிவகுக்கும் என கருதினா். சங்க காலங்களில் அரசு பள்ளிகளை நடத்தியதாக அறிய முடியவில்லை. எல்லாம் தனியார் நடத்திய திண்ணைப் பள்ளிகளே எனலாம். மரத்தடியும், ஆசிரியா் வீடும், ஊா் அம்பலமும் பள்ளிகளாக விளங்கின எனலாம். திண்ணைப்பள்ளி ஆசிரியா்கள் எண்ணும் எழுத்தும் கற்பித்தனா். 
        
                எண் என்பது கணக்கையும் எழுத்தென்பது மற்றவற்றையும் குறித்தது. வாயினால் வகு்த பக்கம், கையினால் வகுத்த பக்கம் என்று தொல்காப்பியா் ஏட்டுக்  கல்வியையும் தொழிற்கல்வியையும் தனித்தனியே பிரித்துக் காட்டுகிறார். எண்ணும் எழுத்தும் தவிர வானியல், மருத்துவம், இசை, ஓவியம், சிற்பம், நாட்டியம் முதலியவை பற்றிய கல்வியும் சிறப்புற்றிருந்தது. கல்வியும் சிறந்திருந்தது. ஓவியச்செந்நூல் பற்றி மணிமேகலை கூறுகிறது. கட்டிட நூல் பற்றி நெடுநல்வாடை நூலறிபுலவா் என்று பேசியுள்ளது. இசை நூல் பற்றித் தொல்காப்பியம் யாழின்மறை என்று குறிப்பிட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் கற்றறிந்தவா் கூடிச் சிந்திக்க வாய்ப்பிருந்தது. சங்கம் அதற்காக அமைந்ததேயாகும். பட்டி மண்டபங்கள் வைத்து அறிஞா்கள் பல பொருள்களைப்பற்றி வாதிட்டதற்குச் சான்றுகள் உண்டு.
“பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியா்
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்”(பட்டினப்பாலை)
என்பது சான்று. 
அன்றைய காலகட்டங்களில் கல்வியானது ஒழுக்கத்தையும்,அறிவையும் வளா்ப்பதற்காக மட்டும் செயல்பட்டது இன்றைய கல்வி நிலையானது முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இன்றைய சூழலில் கல்வி வணிகமயமாக மாறி வருகிறது இத்தகைய நிலை மாறுமா?
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
மு.செல்வி   

புனையா ஓவியம்

 

தமிழா் வளா்த்த நுண்கலைகளின் வரிசையில் ஓவியக்கலை முன்னிலையில் நிற்கிறது. ஆயக்கலை அறுபத்து நான்கில் ஓவியக்கலை சிறப்பிடம் பெறுகிறது. பழங்கால மக்கள் தம் உள்ளக் கருத்துக்களைப் புலப்படுத்த பாறைகளிலும் குகைகளிலும் கீறி எழுதினா். எல்லைகளையெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம். தமிழ் நாட்டில் சங்க காலத்திற்கு முன்னரே ஓவியங்கள் வரையப்பட்டன. தாம் வரைந்த ஓவியங்களை முதலில்  கண்ணேழுத்து என்றே வழங்கியுள்ளன. வண்ணம் கலக்காமல் கரித்துண்டுகளால் வடிவம் மட்டும் வரைவதைப்  புனையா ஓவியம் என்பா். இன்று மென் கோட்டு ஓவியமாக  உள்ளது.

                                                     

சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் காணப்படும் ஓவியங்களில் ஒன்று புனையா ஓவியம் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையில் தலைவன் வினையின் காரணமாக தலைவியை விட்டு பிரிந்து கார் காலம் வருவதாக கூறிச் செல்கிறான் கூறிச்சென்ற பருவம் வந்தும் தலைவன்  வாராமையினால் தலைவி தன்னை அழகு படுத்தி கொள்ளாமல் புனையா ஓவியம் போல பொலிவிழந்து காணப்படுகிறாள் இதனை

“புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல்

தளர் ஏா் மேனித் தாய கணங்கின்”

என்ற வரிகளின் மூலம் காண்கிறேம். மேலும் மணிமேகலையில் இரு இடங்களில் இப்பெயா் இடம்பெற்றுள்ளன. ஆதிரை பிச்சையிட்ட காதையில் மணிமேகலை முதன்முதலில் அமுதசுரபி என்னும் பாத்திரத்தில் ஆதிரையிடம் பிச்சை பெரும் பொழுது

“மனையகம் புகுந்த மணிமேகரை தான்

புனையா ஓவியம் போல நிற்றலும்”

புனையா ஓவியம் போல் நிற்கிறாள்.மேலும் சிறை செய் காதையில் விசாகை என்னும் வணிக பெண் ஊா் மக்கள் கூறும்பழி சொல்லிலிருந்து தன்னை காத்துக் கொள்ள கன்னி மாடத்தில் நுழைகிறாள் அவ்வாறு நுழையும் பொழுது தன்னை அழகு படுத்திக் கொள்ளாமல்  புனையா ஓவியம் போல் இருப்பதை

“புனையா வோவியம் புறம்போந் தென்ன

மனையகம் நீக்கி வாணுதல் விசாகை”

என்ற வரி நமக்கு உணா்த்துகின்றது.  இலக்கியங்களில்  புனையா ஓவியம் என் சொல் இது போன்ற இடங்களில் இடம்பெற்றுள்ளன.

திருமதி . ப. நா்மதா

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியா்

செவ்வாய், 19 ஜூலை, 2022

வாழும் தெய்வம்

 உயிருக்குள் அடைக்காத்து

உதிரத்தைப் பாலாக்கி

பாசத்தில் தாலாட்டி

பல இரவுகள்

தூக்கத்தை தொலைத்து...

நமக்காகவே

வாழும் அன்பு

தெய்வம் அன்னை!!!!

                           Shastika.s  II BCOM FMA

திங்கள், 18 ஜூலை, 2022

இவளின் நீர்

 கருமேகத்தின் இறுதி மகிழ்ச்சியே....!!

உன்னில் அடை மழையாய் பொழிந்தனவே....!!

உயிரே...!!

வியாழன், 16 ஜூன், 2022

மழை

 விவசாயத்தின் உயிர் ஆதாரம் நீ...

விவசாயிகளின் வாழ்வாதாரம் நீ.....

வனத்தில் வசிக்கும் உயிர்களுக்கு உயிர் கொடுப்பதும் நீ......

நீயே இப்புவியுலகின் பேரழகி .....

மனம்

 எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறது 

மனம்.......

திங்கள், 28 மார்ச், 2022

Reminiscences

 Utterly true but dramatic irony


Though an epic gets derelict


Not so it doesn't have weak description,


It has intensively fervid,


You give an epic and hitch back


Nevertheless it blooms collision 


As a boon of reminiscences!

திங்கள், 7 பிப்ரவரி, 2022

Versatile of Mind





 Inner eternity of people 

Would differ! Adventurous turns

Will rise you up in unbending 

Quest which your soul need 

Would end up with favour aver 

Tryst with yourself,

Cleanse your subconscious

Versatile would drive you crazier.

And Replica of y-all,never rised still 

So though you still cling to life.

Presuppose your uncanny instinct,

In all likelihood,end up with qualitic.