செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

வாழ்க்கையில் முயற்சிகள் தவறலாம். ஆனால் முயற்சிக்க தவறலாமா?
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும் (குறள்).
முயற்சி திருவினை ஆக்கும் (ஆன்றோர் வாக்கு)

தமிழ் இதழ்கள்

பிரபலங்கள் பலர் நடத்திய தமிழ் இதழ்களை அறிவோம்
     தேசபக்தன், நவசக்தி          -     திரு.வி.கல்யாணசுந்தரனார்
     குயில்                                       -      பாரதிதாசன்
     சுதேசமித்ரன்                         -      ஜி.சுப்பிரமணிய ஐயர்
     பாலபாரதி                               -      வ.வே.சு. ஐயர்
     ஞானபோதினி                      -      சுப்பிரமணிய சிவா
     இந்தியா, வி்ஜயா                 -      சுப்பிரமணிய பாரதி
     எழுத்து                                     -      சி.சு.செல்லப்பா
     குடியரசு, விடுதலை           -      பெரியார்
     திராவிட நாடு                        -      அண்ணா
    தென்றல்                                  -       கண்ணதாசன்
    சாவி                                           -       சா.விஸ்வநாதன்
    கல்கி                                          -       ரா.கிருஷ்ணமூர்த்தி

திங்கள், 10 பிப்ரவரி, 2020

மடல்

     சங்ககாலத்தில் காதலில் ஏமாற்றம் உற்ற ஒருவன் தன்னைத்தானே வருத்திக்கொண்டு உயிர்விடத் துணிவதாகப் பாடும் துறை “மடல்” எனப்படும். பனை மடல்களால் குதிரை வடிவம் செய்து அதன்மேல் இருந்து தன் காதலியின் உருவத்தைத் தீட்டிய படத்தை ஏந்தி, ஊரார் நடுவே நின்று உண்ணா நோன்பு கிடந்து அழியத் துணிவதாகப் பாடும் கற்பனைத் துறை இது. தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழக்கம் ஆண்களுக்கு மட்டுமே உண்டு பெண்களுக்குப் பொருந்தாது என்ற மரபு உண்டு. ஆனால் அதற்கு மாறாகத் திருமங்கையாழ்வார் தம்மை நாயகியாகவும் திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில் அங்கே பெண்ணே காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சி பெண்ணுக்கு உரியது என்று சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய இரண்டு மடல் பாட்டுகளிலும் நாயகி மடல் ஏறும் முயற்சியே உள்ளது என்று திருமங்கையாழ்வார் கூறியுள்ளார்.

பவித்திரம்

1) எனது உனது
தன்னந்தனி வலிகள் எனது
எனக்குத் தன்னிகரில்லா உறவு உனது
மங்கைக் கனி மனது எனது
என்னை மாயம் செய்யும் மாமம் உனது
மண்வாச மாளிகை எனது 
இந்தப்  பொன்வாசப் பெண்மை உனது
கனாக்காணும் கண்கள் எனது
என்னைக் கைது செய்யும் படைகள் உனது
உன்னை எண்ணிய எண்ணம் எனது
உரைக்கின்ற உரிமை உனது
தவிக்கின்ற தனிமை எனது
அதைத் தவிர்க்கின்ற வலிமை உனது

2) எவன்
ஆளக் கற்றவன் மன்னன்
அடக்கக் கற்றவன் தலைவன்
ஆளாக்கியவன் தகப்பன்
அடைகாத்தவன்
அருளியவன் சிவன்இன்று என்னை
அழைக்கின்றவன் எமன்.

3) உன் வாழ்க்கை
உனது வாழ்க்கை உனது கொள்கை
உனது உரிமை உனது உலகம்
உய்வது நீ உயர்வதும் நீ
அழைப்பதும் நீ உணர்வாய் நீ
நின்னலம் உன் வளம்
உன்பலம் உனது மூலதனம்

4) உறவு
உறவுகள் கோடி சிறகுகள் வீசிப் பறக்கிறது
உனது இறகா அதனை மறக்கிறது
வறுத்தம் கண்டு வலிமை நின்று
வாழ்ந்தும் மாண்டு கிடக்கிறது

5) வலிகள்
நெஞ்சமெல்லாம் பஞ்சத்தில் ஆழ்ந்தது
உன் அன்பின் ஆதரவின்றி
கொஞ்சம் கொஞ்சம் பாசம் அறிந்தது
உன் பார்வை கனலில்
கெஞ்சக்கெஞ்ச நேசம் அறிந்து
உன் வியர்வைத் துளியில்
மிஞ்சமிஞ்ச வலிந்து நிறைந்தது
உன்னால் தான் வலிகளும் நேர்ந்தது
நேற்றைய நாளை காலம் மறந்தது
நேர்ந்ததை எண்ணி நெஞ்சம் கலைந்தது
இன்றைய நாளை ஏற்காது நின்றது
இறுதியில் தான் கண்கள் சிவந்தது
செம்மண்ணில் பனித்துளி வழிந்தது

6) வேண்டும்
இதழசைக்காமல் பேச வேண்டும்
இமைக்காத கண்கள் வேண்டும்
இசையின்றிப் பாடல் வேண்டும்
பகலிலும் நிலவு வேண்டும்
இரவினிலே வெப்பம் வேண்டும்
கண்ணீரில்லா அழுகை வேண்டும்
பரிமாறப் புன்னகை வேண்டும்
பசிக்கண்ட பாசம் வேண்டும்
ருசி கொண்ட நேசம் வேண்டும்
தாகமில்லாமல் தண்ணீர் வேண்டும்
தேகமெல்லாமல் செந்நீர் வேண்டும்
வேகமில்லா விவேகம் வேண்டும்
சோகமில்லா மனமும் வேண்டும்
சொர்க்கம் இப்புவியிலே வேண்டும்

ஒரு உலக சரித்திரம்

தமிழ் என்பது உணர்வல்ல
         ஒரு மண்ணின் உரிமம்
தமிழ் என்பது பேச்சல்ல
         ஒரு இலக்கிய வாழ்விடம்
தமிழ் என்பது எழுத்தல்ல
         ஒரு இலக்கணப் பிறப்பிடம்
தமிழ் என்பது கலையல்ல
         ஒரு கருவின் உறுப்பிடம்
தமிழ் என்பது பெருமையல்ல
        ஒரு வாழ்வின் அடையாளம்

கடமை

கடமையைச் செய்பவனுக்கு கவலை
விலகிப் போய் விடும் - அரவிந்தர்

பொன்மொழி

இன்றைய தினத்தைப்
புரிந்துகொள்ள
வேண்டும் என்றால்
நேற்றைய தினத்தை
நீங்கள் ஆராயவேண்டும்

தவறான முடிவுகள்

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது
– பில் கேட்ஸ்

சனி, 8 பிப்ரவரி, 2020

அறிஞா்

பல அறிஞா்களுடன் உரையாடினால் நீயும் அறிஞனாவாய்.

பழமொழி

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
     1.நோயின்மை
     2.கல்வி
     3.செல்வம்
     4.தானியம்
     5.அழகு
     6.புகழ்
     7.பெருமை
     8.இளமை
     9.நுண்ணறிவு
     10.குழந்தை செல்வம்
     11.நல்ல வலிமை
     12.மனதில் துணிவு
     13.நீண்ட ஆயுள்
     14.நல்ல ஊழ்
     15.எடுத்த காரியத்தில் வெற்றி
     16.இன்ப நுகர்ச்சி

உதடு ஒட்டாமல் உச்சரிக்கப்படும் குறள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன் - (341)

ரோஜா

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும்
ரோஜாதான் கண்ணில் படும்;
முட்கள் இல்லை.
- கவிஞர் டிக்கன்ஸன்.

உண்மை

பொய் சொல்லிப் பரிசு பெறுவதை விட
உண்மையைச் சொல்லித் துன்பப்படுவதே மேல்.
ராக்ஃபெல்லர்.