நந்திதா கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நந்திதா கண்ணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 ஜனவரி, 2019

Happiness😊😊

         
 


                    Festival,function are not only  for celebration it is a reunion of our family happiness and joy. The real happiness won't bring by money, it brings by the people of true heart filled with love.

வெள்ளி, 4 ஜனவரி, 2019

தன்னம்பிக்கை💪💪💪





   
       இன்று கோவிலுக்குள் நுழையும் போது முதலில் பார்ப்பது பிச்சை காரர்கள் தான். சில குழந்தைகள் பெற்றோர் கைவிட்டதால் , சில பிள்ளைகள் பெற்றோரை கைவிட்டதால் இந்த முடிவுக்கு வருகின்றனர். ஆனால் இதில் மன்னிக்க முடியாத ஒரு வர்க்கம் இருக்கிறது. கால் கை நன்றாக இருந்தும் அதை பயன்படுத்தாமல் சோம்பேரி தனமாக தன் வாழ்க்கையை பிச்சை எடுத்து களிக்கின்றனர்.  இப்படி இருக்கையில் சில  மாற்றுத்திறனாளிகள் உழைத்து உண்கின்றனர் .அப்படி பட்ட ஒரு மனிதனை தான் நான் தினமும் காலையில் பார்கிறேன். ஒரு மரத்தடியில் ஒரு பலகையின் மீது தன்னால் முடிந்த அளவு காய்கறிகளை வாங்கி விற்பனை செய்கிறார். நமக்கு எளிதாக ஒரு பொருள் கிடைத்தால் அதன் அருமை தெரியாது. அது போல தான் இந்த உலகத்தில் பலர் அனைத்து உறுப்புகள் உள்ள நிலையிலும் யாருக்கும் உதவாமல், சுயநலமாக வாழ்கின்றனர். நாம் எத்தனையோ பொருள்களை சூப்பர் மார்க்கெட்டில் வாங்குகிறோம் , ஆனால் இது போல் உள்ளவர்களுக்கு உதவ விரும்பினால் அவர்களிடம் ஒரு பொருளாவது வாங்கி உதவி புரிவோம். அவர்கள் தன்னம்பிக்கையை வளர்ப்போம்.

திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தாண்டு

           

           
     
  பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் பரிமாறி, கேளிக்கை கொண்டாடத்தில் ஈடுபட்டு புத்தாண்டை கொண்டாடுவதை விட ஒரு நிமிடம் மனதார இறைவன் இடம் பிராத்தனை செய்து, தாய் தந்தை இடம் ஆசி பெற்று கொண்டாடும் புத்தாண்டு இன்னும் மகிழ்ச்சி ஆனது.
அனைவர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வியாழன், 27 டிசம்பர், 2018

இயற்கையின் கோரதண்டவம்🌊🌊


           

        அன்று 26 டிசம்பர் 2004, 8 மணி கிறிஸ்துமஸ் தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாடிவிட்டு ஊரே கோலாகலமாக இருந்த தருணம் அது. பலரின் வாழ்க்கையை திசை திருப்பிய நாளும் அது தான். பலர் தன் சொந்தங்களை இழந்த நாளும் அது தான். இத்தனை நாள் கடலின் அழகை ரசித்த அனைவரும் அன்று கடலின் மறுபக்கத்தை பார்த்த நாளும் அது தான். ஏதோ நிகழ போகிறது என்று உணர்வதற்குள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆம் அது தான் சுனாமி. ஒரு மாபெரும் படை எவ்வாறு பொறிடுமோ அது போல் அனைத்தையும் வீழ்த்தி விட்டது அந்த சுனாமி.சுனாமி பேரழிவு ஏற்பட்டு பதினான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில், அந்த அழிவு கொடுத்த வலியும் வேதனையும் இன்னும் மறையவில்லை. வேகமாக நம் வாழ்வு  சுழன்று கொண்டு இருப்பதால் நம்மை தாங்கி சுழன்று கொண்டு இருக்கும் பூமி அன்னையை மறந்துவிட்டோம். அதனால் தான் என்னவோ நான் இருக்கிறேன் என்று நினைவூட்டும் விதமாக அடிக்கடி ஒரு பேரழிவை நிகழ்த்தி கொண்டிருக்கிறது. இதை படிக்கும் அனைவரும் ஒரு நிமிடம் அவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்த வேண்டுகிறேன்.

புதன், 26 டிசம்பர், 2018

நிலையில்லாத வாழ்க்கை 🌏🌏



     

இன்று இரவு நாம் தூங்கிய தூக்கதில் இருந்து காலை எழுந்தால் அது ஒரு புதிய நாளின் தொடக்கம் இல்லையெனில் மரணம் என்னும் புதிய வழியின் தொடக்கம். இந்த பதிவை எழுத தூண்டியது என் தோழி தந்தையின் மரணம். காலை சென்றவர் வீடு திரும்பவில்லை இரவு 11மணிக்கு அவர் இறந்து போனார் என்ற செய்தி தான் வந்தது. இப்படி நிலையில்லாத வாழ்கை தான் நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை. இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையை மிகவும் சந்தோசமாக, பிறர் பொருள் மீது ஆசை கொள்ளாமல் , பிறரின் மனதை புண் படுத்தாமல், குறை கூறாமல், பெற்றோரை மகிழ்வித்து வாழ வேண்டும். 

ஞாயிறு, 23 டிசம்பர், 2018

எது காதல்??💓💓

       
           

   இன்று மாணவர்கள் தங்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் பொது ஏதோ ஒரு ஆசையில் பிறர் மீது விருப்பபடுவது சாதாரண ஒன்று. ஆனால் இந்த அன்பு காதல் என்ற புதிய அத்தியாயத்தை அடையும் போது தான் அது விபரீதம் ஆகிறது.  எது உண்மை எது பொய் என்று புரிந்து கொள்ளாமல் சிலரின் வாழக்கை தொடங்கும் முன்பே முடிந்து விடுகிறது. காரணம் வாழ்க்கை பற்றின சரியான புரிதல் இல்லாதது தான்.

       காதல் தவறில்லை 
       தோழிகளே காதல் தவறில்லை
       ஆனால் தவறான நேரத்தில்,
       தவறான புரிதலில், தவறான             நபரோடு ஏற்படும் போது  
       காதல் தவறாகி விடுகிறது.

புதன், 19 டிசம்பர், 2018

அன்பே மனிதம் 👼👼


           

மனிதனுக்கு  மனிதனே கருணை காட்ட மறுத்ததால் தான் இன்று நமக்கு இயற்கை கூட கருணை காட்ட மறுகிறது. சாலையில் விபத்து ஏற்பட்டால் அம்புலன்ஸை கூப்புடுவதை விட போட்டோ எடுத்து whatsupp ல் ஷேர் செய்து இதை பகிர்ந்தால் ஓர் உயிரை காப்பாற்றலாம் என்று வதந்தியை பரப்பும்  கும்பல் தான் அதிகம். நாம்  இந்த உலகில் மனிதனாய் வாழ்வதை விட மனிதாபிமானம் உள்ள ஒருவனாக வாழ்வது கடினம். எனவே சமூக வலைத்தளங்களில் வெறும் போட்டோக்களை பகிர்வதை விட ஒரு உயிருக்கு மற்றோரு உயிர் அன்பை பரிமாற்றம் செய்ய வேண்டியது தான் இன்று அவசியமான ஒன்று. நாம் எவ்வாறு வாழ்க்கையை அன்போடு வாழ்ந்தோம் என்பது நாம் இறந்தபின் நமக்காக உண்மையாக எத்துணை பேர் வருத்தப்பட்டனர் என்பதில் தான் உள்ளது. எனவே பணம், பொருள் என்று சுயநல வாழ்க்கையை விடுத்து அன்போடும் கருணையோடும் வாழுவோம். ஏனென்றால் அன்பே மனிதம்.

வியாழன், 13 டிசம்பர், 2018

தனி மனித ஒழுக்கம்







  குறைந்த ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் ஆறாவது இடத்தை பிடித்து உள்ளது. தனது இந்த இடத்தை தக்க வைத்து கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது சிங்கப்பூர். ஒரு நாடு ஊழல் அற்ற நிலையில் இருக்க வேண்டும் என்றால் அரசின் சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக்க வேண்டும் என்பதை தாண்டி  தனி மனித ஒழுக்கம் மிகவும் அவசியமானதாகும். இன்று நம் உலகில் படிக்காதவர்களை விட படித்தவர்களே அதிகம் தவறு செய்கிறார்கள் காரணம் எதை வேண்டுமானாலும் பணத்தால் வாங்கி விடலாம் என்ற எண்ணம் தான் காரணம். இதை போல் நம் நாடும் ஊழல் அற்ற நாடாக  முழுவதும் மாற வேண்டும் என்றால் தனி மனித ஒழுக்கம் மிகவும் முக்கியம்.

வியாழன், 29 நவம்பர், 2018

பனை மரம்🌴🌴🌴🌴

     



   சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயலின் பாதிப்பால் பல லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டது என்பதை கேள்விப்பட்டோம் ஆனால் நமது மாநில மரமான பனையின் நிலை என்ன ஆனது????
      நமது நாட்டின் மாநில மற்றும் நெய்தால் திணைக்கு உரிய மரம் தான் பனை மரம். இது வளர பல ஆண்டுகள் ஆகுமாம். இம்மரத்தின் வேர்கள் மிகவும் ஆழமாகவும் இதன்  தண்டு வளைந்து கொடுக்கும் தன்மை உடையது. அதனால் புயல் காற்றை எதிர் கொள்ளும் அளவிற்க்கு சக்தி கொண்டது. மேலும் புயல் காற்றின் வேகத்தை குறைக்கும் தன்மையும் இதில் உள்ளது. இந்த மரங்கள் முன் காலத்தில் கடல் கரையில் அதிகம் இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இப்போது செங்கல் சூளையில் தான் அதிகம் காணப்படுகிறது காரணம் இதன் பயன் தெரியாதது தான். முன் காலத்தில் நுங்கு மரங்கள் அதிகம் இருந்ததால் தான் நுங்கம்பாக்கம் என்று பெயர் வந்தது என்று ஆய்வியல் அறிஞர் பலர் கூறுகின்றனர். மொத்தம் 30 வகையான பனை மரங்கள் உள்ளன ஆனால் நம் நாட்டில் 3 வகையான மரங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. பனை மரம் உள்ள இடத்தில் மண் வளமும் நீர் வளமும் சிறந்து விளங்கும்.  எனவே இந்த பனையின் பலன் அறிந்து இந்த மரத்தின் வளர்ச்சியை அதிக படுத்த வேண்டும்.

செவ்வாய், 20 நவம்பர், 2018

சாதிகள் இல்லையடி பாப்பா ☠️☠️


 

சாதி என்னும் கூட்டிற்குள் மறைந்து இருக்கும் மனிதனே விழித்திரு     
உன் பிறப்புக்கு உதவ ஒரு மருத்துவச்சியும்
உனது ஆடைகளை சுத்தம் செய்ய ஒரு சலவை காரனும்
உனக்கு உணவு வழங்க ஒரு விவசாயியும்
உன் அறிவை வளர்க்க ஒரு  ஆசானும்
உன் திருமனத்திற்கு ஒரு துணையும்
நீ இறந்தபின் உன்னை தூக்கி செல்ல எட்டு கால்கள் மட்டும் தான் தேவை

சாதி என்னும் முகமூடி அணிந்து திரியும் மானுடமே இதை புரிந்துகொள்
விழித்துக்கொள்

போலி செய்திகள் 🗞️🗞️

 
         

     இன்று whatsupp ல் பகிர படும் செய்திகளில் பாதி செய்தி போலியான செய்தி என்பது தற்போதய bbc யின் அறிக்கையில் தெரிவிக்க  பட்டு உள்ளது.                       தற்போது ஊடகங்களில் மஹாமேரு என்ற ஒரு பூ இமயமலையில் 400 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் என்று தவறான செய்தி பரப்ப படுகிறது. ஆனால் குறிஞ்சி மலர் மட்டும் தான் அதிகபட்சமாக 12 ஆண்டுகுளுக்கு ஒரு முறை பூக்கும் எனவும் அதற்கான காரணமே இன்னும் தெரியவில்லை என்கிறார்கள் தாவரவியல் நிபுனர்கள். எனவே ஒரு செய்தியை பகிரும் முன்பு அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகு பகிரவும்.

வியாழன், 8 நவம்பர், 2018

கண் தானம்👁️👁️👁️

   

           

 நாம் தாயின் கருவறையில் வெறும் பத்து மாதங்கள் கண்ட இருளை தினம் தினம் அனுபவிக்கும் சாமணியர்களுக்காக
எனது   வேண்டுகோள்.
        நாம் இறந்தபின் மண்ணுக்கு இறையாகும் கண்களை தானம் செய்திருந்தால் நம் நாட்டில் இத்துணை பேர் பார்வை இன்றி இருந்திருகமாட்டார்கள்.
         20 முதல் 30 நிமிடம் மட்டுமே ஆகுமாம் நம் கண்களை தானம் செய்ய, நமது ஒருவரின் தானம் இரு மனிதரின் வாழ்வில் ஒளியை கொடுக்கும்.
          எனவே நாமும் நம் சுற்றத்தாரும் இனைந்து கண்  தானம் செய்து பார்வையற்றோர் இல்லாத  நிலையை உருவாக்க உறுதி அளிப்போம்.


புதன், 26 செப்டம்பர், 2018

ஊழல்

    

      ஊழல் என்பது புற்றுநோய் போல் வளர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் உச்சநீதிமன்றதின் புதிய யோசனை.
 
  தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தன் மேல் உள்ள வழக்கின் விவரம் பற்றியும் குற்றங்களை பற்றியும்  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.   

     ஓட்டு போட வேண்டும் என்ற அதிகாரம் உள்ள மக்களுக்கு யார் மெல் எவ்வளவு குற்றங்கள் உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.

    மேலும் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு ரீதியான செய்திகளை தன் கட்சி இணையத்தில் வெளியிட வேண்டும்.

       மேலும் இவ்வாறு செய்வது மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வழி இல்லை. நம் ஓட்டை யாருக்கு போட வேண்டும் என்பதை யார் அதிகமாக பணம் தந்துள்ளார் என்பதை சார்ந்து இருக்க கூடாது.

   அரசால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களாகிய நாமும் ஒரு படி சென்று ஊழலை அழிக்க முற்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசத்தை எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஊழல் என்பதை மக்கள் உணர வேண்டும்.

திங்கள், 24 செப்டம்பர், 2018

ஏழை என்றால் எவர்க்கும் எளிது

           
                                       காய்கறிகளை தெருக்களிலும் காலணிகளை பெரிய மால்களிலும் விற்கும் நிலைக்கு ஆலகிய இவுலகில் ஏழைகளுக்கு உதவ நம் மனம் மறுக்கிறது. பெரிய கடைகளில் விலை அதிகமாக விற்கும் பொருள்களை பேரம் பேசாமல் வாங்கி கொண்டு செல்லும் நாம் வயதான ஏழை விற்கும் கடைகளில் தான் நம் சதுரியத்தை காட்டி பேரம் பேசி ஒரு பொருளை வாங்கி விட்டு அதுவும் போதாமல் இலவசமாக கொத்தமல்லி கருவேப்பிள்ளை கேட்கும் நம் மக்கள் அந்த ஏழை  வியாபாரியின் வலியையும் துன்பத்தையும் புரிந்து கொள்வதில்லை. இந்நிலை மாற வேண்டும். இனியாவது ஏழைகளின் வழியை புரிந்து கொண்டு நம் எண்ணத்தை உயர்த்துவோம்....

சனி, 22 செப்டம்பர், 2018

பெண் சுதந்திரம்

                                                                                       
                                                               ஒரு பெண் நகை போட்டுகொண்டு இரவில் தனியாக சாலையில் நடப்பது மட்டும் சுதந்திரம் கிடையாது. தன் சுய சிந்தனையை வளர்க்க உதவும் மனிதர்களால் சூழப்பட்டு இருப்பதையே உண்மையில் சுதந்திரம் என்று சொல்ல முடியும். எண்ணென்றால் ஒரு சிறிய செயலை செய்ய கூட அவள் அனைவரிடமும் ஒப்புதல் வாங்க வேண்டும். அதை மீறி முடிவு செய்தால் அவளுக்கு இந்த உலகமும் சமூகமும்  கொடுக்கும் பெயர் திமிரு பிடித்தவள். இந்த பரந்த உலகத்தில் என்று ஒரு பெண் தன் முடிவை யார் உதவியின்றி எடுத்து செயல்படுத்தி வெற்றி காண்பதையே உண்மையில் சுதந்திரம் என்று கூற முடியும். இந்த எண்ணம் அனைவரின் எண்ணத்தில் தோன்றும் வரை பெண்ணுக்கு உண்மையான சுதந்திரம் கிடையாது 

புதன், 12 செப்டம்பர், 2018

சுதந்திரத்தை போற்றுவோம்





Image result for independence



        நம்மில் பலர் போராடி பெற்ற சுதந்திரத்தை பொறுப்பின்மை காரணமாக உதாசீனப்படுத்திகின்றனர் . இந்த சுதந்திரம் பெற எத்துணை பெறோர்கள் தன் பிள்ளைகளையும் , எத்துணை  மனைவிகள் தன்  கணவன்மார்களையும், எத்துணை குழந்தைகள் தன் பெற்றோர்களை இழந்தனர்.
     ஆனால் நம்மில் பலர் சுதந்திரம் என்றால் என்ன என்பது அறியாமல்  பல படித்த  பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ மாணவிகள் வாழ்க்கையை கேளிக்கை  விருந்துகளிலும், தவறான செயல்களிலும் ஈடுபட்டு தன் அரிதினும் அரிதான வாழ்க்கையை அளித்து கொண்டு இருக்கின்றனர் . இந்த நிலை மாற வேண்டும் . இதை மற்ற நம்மால் மட்டும் தான்  முடியும். தன்  சொந்த நலத்தை தாண்டி தான்  பிறந்த நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம்  தோன்ற வேண்டும்.
      அப்துல் காலம் ஐயா  கூறியது 2020 இல் இந்தியா வல்லரசு ஆகா வேண்டும் என்றால் நம்மால் இயன்ற சிறு சிறு தொண்டை நாட்டிற்காக செய்ய வேண்டும்.  சிறு துளி பெருவெள்ளம் என்பதுக்கேற்ப   சிறு சிறு மாற்றமே நம் நாட்டின் முன்நேற்றத்திற்கு   காரணமாக இருக்கும்.  ஆனால் சிலரோ சிறு தவறு தானே என்று செய்யும் ஒவ்வொரு  செயலும் பெரிய தவறு செய்ய ஒரு சிறு பொறியாக மாறி  விடும்.    

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

வாய்ப்பு

                 
                                                                 ஒரு மனிதனை சிறந்தவனாகவும், உயர்ந்தவனாகவும் மாறுவதற்கு காரணம் அவனுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மட்டும் தான்.                   வரம் கொடுக்கும் தேவதைகள் வசந்தபோது தூங்கினேன்.               வந்தபோது தூக்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்கினேன். காரம்மோடுக்கும் வாய்ப்புகளை கைகழுவி  வீசினேன் கைகழுவி வீசிவிட்டு காலமெல்லாம் பேசினேன்.                                  என்றார் மு. மேத்தா எனவே நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் வாழ்வில் உயர்வோம்.

வியாழன், 6 செப்டம்பர், 2018

யார் ஆசிரியர்?

     
                                                                 ஆசிரியர் என்பவர் நம் தவறை சுட்டி காட்டி அதை திருத்துபவர், மேலும் அந்த தவறை செய்ய விடாமல் நம்மை நல்வழிப்படுத்துபவர், நம் திறமைகளை ஆராய்ந்து அதை வெளிக்கொண்டுவருபவர், நமக்கான குறிக்கோளை வகுத்து தருபவர். நமக்கு தெரியாத ஒரு செயலை செய்ய சொல்லி தரும் ஒரு சிறு பிள்ளை கூட நமக்கு ஆசிரியர் தான்.எனவே நான் பிறந்தது முதல் இப்போது வரை என்னை அறவழியில் செல்ல உதவிய என் தாய் தந்தைக்கு, நண்பர்களுக்கும், என் ஆசிரியர் அனைவருக்கும் என் அன்பும் மரியாதையும் கலந்த ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள்.

உதவி

               
                                                            பணம் இருந்தால் தூரத்து சொந்தம் கூட நெருங்கிய சொந்தம் ஆகும். பணம் இல்லையென்றால் நெருங்கிய சொந்தம் கூட தூரம் ஆகிவிடும். சொந்ததிர்கே உதவ மறுக்கும் இந்த சூழ்நிலையில் யாரென்று தெரியாத கேரளத்து மக்களுக்கு உதவிய சிறு பிள்ளை நிச்சயம் பாராட்ட படவேண்டியவர் தான். தான் சிறுக சிறுக சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை கேரளத்து மக்களுக்கு தர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது அரிது.  அந்த மாணவி செய்த உதவிக்காக பிரபல சைக்கிள் நிறுவனம் அவளின் எண்ணத்தை பாராட்டி சைக்கிள் ஒன்றை பரிசாக தந்தனர். அவளின் தொண்டு  மேலும் சிறக்கட்டும்.

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

அன்பு

             ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையைஅழைத்து கொண்டு கடை  தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.                                         ஒரு கடையின் வாசலில் இருந்த    பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து 'எந்த பொம்மை வேண்டும்?' என்றான்.                                                                 அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரனையுடன் கடையின் முதலாளியை பார்த்து "அந்த பொம்மை என்ன விலை?" என்று கேட்டான்.                                               அதற்கு சிரித்துக்கொன்டே அந்த முதலாளி, 'உன்னிடம் எவ்வளவு உள்ளது?"என்று கேட்டார்.  அதற்கு அந்த சிறுவன் தன விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான். இது போதுமா என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொன்டே எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றார். சிறுவன் மகிழ்யோடு தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.                                    இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம். அய்யா ஒன்றுக்கு உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்கள் என்றான்.                 அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள் தன் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால்வவன் எண்ணத்தில் பணம் தன உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும் அதை தடுத்து விட்டேன்.                என்றோ ஒரு நாள் அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்கலால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.                                                         ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவார். உலகம் அன்பினால் கட்டமைக்கப்பட வேண்டும் என்றார்.                                         அன்பு என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரங்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.