வியாழன், 8 ஜூன், 2017

ஹவ் கேட்ஸ் பிகம் பேட்ஸ்


பற்பல காலங்களுக்கு முன்பு பூனை காட்டில் தான் வசித்துக்கொண்டிருந்தது. அது எப்பொழுதுமே பலமான மிருகங்களுடனே நட்பு வைத்துக்கொள்ள விரும்பும்.ஒரு நாள் அனைத்து விலங்கினமும் சிங்கத்தினை பார்த்து பயந்ததை பார்த்து அதனுடன் நட்பு வைத்துக்கொண்டது.


            ஒரு நாள் சூரியகுளியலிடும்போது,யானை கடந்தது.சிங்கத்தையும் சேர்த்தி அனைத்து உயிரினங்களும் அதற்கு தண்ணீர் குடிக்க வழி விட்டன.ஆகையால், யானைதான் பலமான விலங்கு என்று எண்ணி அதனுடன் நட்பு வைத்துக்கொண்டது.ஒரு நாள் அவர்கள் நடக்கையில் யானை பிளிக்கொண்டு``அங்கு வேடர்கள் உள்ளார்கள்’’என்று அலரி ஓடியது. ஆகையால் மனிதனுடன் நட்பு கொண்டு,அவனுடன் நகரத்திற்கு சென்றது.வேடன் தனது வீட்டிக்கு அதனை அழைத்துச் சென்றான்.அவனது மனைவி ``உன்னால் ஒரு சிங்கத்தையோ,யானையையோ வேட்டையாட முடியவில்லை இப்பொழுது தேவையில்லாத இந்த பூனையை எதற்காக எடுத்து வந்தாய்?’’என்று கேட்டாள்.

            அப்பொழுது ஒரு எலி கத்திக்கொண்டு ஓடியது.அதனை பூனை விரட்டிபிடித்தது.தனக்கு வெகுநாட்களாக தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த எலியை பிடித்ததால் அந்த பூனையை அன்புடன் அனுமதித்தாள்.
தரவு
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரிஸ்

2 கருத்துகள்: