சனி, 21 மே, 2016

அலக்ஸ்ஸான்டர் போப்

                                        
                  
                                          அலக்ஸ்ஸான்டர் போப்
போப் லண்டனில் 1688ஆம் ஆன்டு பிறந்தார்.இவர் தந்தை ஒரு வணிகர்.போப் ஒரு ரோமன் கதேலிக்க மதத்தை சேர்ந்தவர் என்பதர்க்காக அவருக்கு பணி கிடைக்கவில்லை ஆதலால் எழுத்தாளராக இருக்கு இவரே பணி அமைத்துக்கொண்டார்.``ஹிரோயிக் கப்லேட்``என்ற நயத்திற்கு இவரே வடிவம் கொடுத்தார்.
போப்பின் பணி காலம்;
*     ஆரம்ப காலம்
*     மொழிபெயர்ப்பு காலம்
*     பிற்காலத்து உண்மை படைப்புகள்
ஆரம்ப காலம்;
            இக்காலத்தில் பல்வகையான பாடல்களை இயற்றியுள்ளார். ``ஃபோர் பஸ்ரோரல்ஸ்``என்ற படைப்பில் நான்கு பருவங்களான(இளவேனிற், வெய்யில்,இலையுதிற் மற்றும் மழைக்காலம்)பற்றி எழுதியுள்ளார்.``எஸ்ஸே ஆன் கிரிடிசிசம்``இவரது சிறந்த படைப்பு இதில் பழங்கால கொள்கைகளை மறுபடியும் கொண்டு சேர்த்துள்ளார்.மேலும்``ரேப் ஆப் தி லாக்``என்பது இவரது மிகச்சிறந்த படைப்பாக கருதப்படுகிறது.இதில் அரசி``அனியின்`` சமுதாயத்தை கேலி செய்திருப்பார்.
மொழிபெயர்ப்பு காலம்;
            போப்``இலியட்``மற்றும்``ஒடிசி``என்பதை முதலில் மொழி பெயர்த்தார்.இதனை ஹேமர் என்றவர்தான் எழுதினார்.இலியடை போப் முழுமையாக மொழிபெழர்த்தார் ஆனால் பாதியோடு மொழிபெயர்க்கப்படாத ``ஒடிசியை``இரண்டு கேம்பிரிஜ் பல்கலைக்கலக மாணவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது.


பிற்க்கால உண்மைப்படைப்புகள்;

            இக்காலத்தில்``தி எபிஸ்டில்ஸ் டு டாக்டர் அர்பத்நாட்``என்பது அர்பத்நாட் என்பவருக்கு போப் எழுதிய புகழ்பெற்ற கடிதமாகும்.``தி எஸ்ஸே ஆன் மேன்``என்ற பாடலில் அனைத்துலகின் அரசாங்கத்தை எடுத்துக்கொன்டு அதனுள் இருக்கும் சதிகளை குறிப்பிட்டிருப்பார்.

ஹென்றி ஃபீல்டிங்(19ஆம் நூற்றாண்டு)

             

                   ஹென்றி ஃபீல்டிங்(19ஆம் நூற்றாண்டு)
                  (ஆங்கில நாவல்களின் பந்தை)
ஹென்றி 19ஆம் நூற்றாண்டில் இரண்டாம் முக்கியத்துவம் வாய்ந்தவர். அடிப்படையில் இவர் ஒரு ஆசிரியர் மற்றும் தனித்துவம் வாய்ந்த மனிதர். இவர் ``பவ் ஸ்டிரீட்``என்ற இடத்தின் நீதிபதியானார்.இவர் பணிகாலம் முடிந்து சில மாதங்களில் இறந்து இவரை``லிஸ்பான்``என்ற இடத்தில் புதைத்தனர்.இவரது முதல் படைப்பு``ஜேசப் அன்ரூ``என்பதாகும்..பின்னர்,``அ ஜர்னி ஃப்ரம் திஸ் வ் வேர்ட்டு டு தி நேக்ஸ்ட்``,``ஜோனாத்தன் வயில்ட் தி கிரேட்.``இந்த ஜோனாத்தன் படைப்பானது``நியு கேட்``என்ற இடத்தில் ஒரு திருடன் மற்றும் திருடனின் தலைவரின் வாழ்கையை பற்றி கூறியிரிப்பார்.

``தி ஹிஸ்டிரி ஆப் டாம் ஜோன்ஸ்``என்பது இவரது பெருமைவாய்ந்த படைப்பாகும்.பின்னர்``எமிலியா``என்ற இவரது படைப்பு ரிச்சர்ட்சனின் ``பமிலிவுக்கு``பதில் செல்லுமாறு எழுதப்பட்டது.ரிச்சார்ட் ஆண் அலுமை,பெருமை பேன்று ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதியுள்ளார்.ஆனால், ஹென்றி தனது
``எமிலியா``வில் ஒரு பெண் தன் கனவன் தரும் தடைகளைத் தாண்டி துணிவுள்ள பெண்னை காட்டுயிருப்பார்.இவர் கதை எழுதுவதின் விதிகளில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்.ஒரு ஒற்றுமையும் சமனிலையையும் இவரது நாவல்களில் காணலாம்.தன் கழுத்துக்களால் ரிச்சார்ட்சனுடன் சண்டையிடுவார்.ஹென்றி ஒரு சிறந்த ஆசிரியர் மற்றும் மிகச் சிறந்த சமூக விமர்சகர் ஆவார்.இவரது
           


ஜான் கீட்ஸ்(19ஆம் நூற்றாண்டு)

                                   
                     
                                      ஜான் கீட்ஸ்(19ஆம் நூற்றாண்டு)
புனைய காலத்தின் புரட்சி குழுவில் கடைசி மற்றும் மிக இளமையான கவிஞர் ஜான் கீட்ஸ்.இவர் லண்டனில் பிறந்தார்.டீபி நோயால் கீட்ஸ் உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.இதுவே அவர் காதலிலு கசப்பை ஏற்படுத்தியது இவை அனைத்தும் அவர் ஒரு இளம் பெண்னுக்கு எழுதிய கடிதம் மூலமாக அவர் தெரியப்பட்டது.முட்டால்தனமாக இதனை அவர் இறப்புக்கு பின் வெளியிட்டனர்.23வயதில் இவர் பரம்பரை நோயான டிபியால் கீட்ஸ் இயற்க்கை எய்தினார்.
கீட்ஸ் நடை;
1.``அ திங் ஆப் பியூடு இஸ் ஜாய் ப்பார் எவர்``(அழகிய பொருள் என்றுப் ஆனந்தம் தரும்)என்பது இவர் முதல் புத்தகத்தின்(என்டிமியான்) முதல் வரி.
            2.இவரது பொருள் மற்ற கவிஞர்களுக்கு அப்பார்ப்பட்டது.
            3.இவரது பாடல்களுக்கு மூலமாக அலகின் அரசாங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது கவிதை காலம்;
            புனைய கலத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர் இவர்.பைரண் மற்றும் ஷெல்லியை காட்டிலும் கீட்ஸ் வித்தியாசமானவர்.இந்த நவீன உலகம் அவருக்கு கடினமாக இருந்து.ஆதலால் இவரை``எஸ்கேபிஸ்ன்``என்ளழைப்பர்.தனது பதிணெட்டாம் வயதில் ``இமிடேஷன் ஆப் ஸ்பென்சர்``என்ற படைப்பை வெளியிட்டார்.இவரது உடல் நலம் சரிந்து வந்தாலும்``இசபில்லா``,``தி ஈவ் ஆப் செயின்ட் அக்னஸ் ``போன்ற படைப்புகளில் ரசிகர்களை கற்பனை  திறன் மூலம் கவர்ந்து இழுத்தார்.முழுவதுமாக அலகின் வருணனை,கற்பனை மற்றும் வண்னமயமான படைப்புகளை தந்துள்ளார்.கீட்ஸ்``கவிதை என்பது இலகின் இவதாரமாக இருக்க வேண்டும்`` என்று கருதினார்.இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்,
                  1.லமியா
                  2.டு அ நைடின்கேல்
                  3.டு பிஸ்சி
                  4.ஆன் மெலன்கோலி என்பனவாகும்.
இதில்``லமினா``பார்னின்``தி அனாடமி ஆப் மெலன்கோலி`யிலிருந்து எடுக்கப்பட்டது.


பெர்சி பைஷி ஷெல்லி

                                             
      
                                                     பெர்சி பைஷி ஷெல்லி
ஷெல்லி ஒரு புரட்சி கொள்கையாளர்.மூன்று இவர் புனைய எழுத்தாளர்களுள் இவர் ஒருவர்.இவரை ``மட் ஷெல்லி``(mad Shelley)என்றழைப்பர்.ஷெல்லியின் கவிச்சொற்கள் குறிப்பிடத்தக்கன.இவரது நடை எலிமையாகவும், வலைந்துகொடுப்பதாக மற்றும் அதிக ஈடுபாடுடையதாகவும் இருக்கும்.
ஷெல்லியின் பாடல் பணிகாலம்;
            இவரது``குயின் மாப்``என்ற படைப்பு முதிற்ச்சியடையாத ஒன்றகும்.வால்டர் ஸ்காட் ஷெல்லியை``ஏதிஸ்ட் ஷெல்லி``என்றழைப்பார். ``அலஸ்டர் ஆர் தி ஸ்பிரிட் ஆப் சாலிடியூட்``என்பது பக்தி வழியில் அவர் எழுதிய சுயசரிதையாகும்.எப்பொழுதுமே சிறந்த அலகினை தேடிக்கொண்டிருப்பார்,அது அவரது கற்பனையை வெளிப்படுத்தும்.``லாஓன் அன்ட் சித்மா``மற்றும்``தி ரிவோல்ட் ஆப் இஸ்லாம்``என்பன தரம் வாய்ந்த பிடிப்புடைய தொடர்ச்சிகொண்டதாக இமைந்திருக்கும்.இத்தாலிக்கு சென்று ``ப்ரோமிதஸ் அன்ட்பவுன்``என்ற அற்புத  படைப்பை நாடகம் மற்றும் பாடலைக் கலந்து தந்துள்ளார்.இதுவே முதலில் எழுதப்பட்ட``பாடல் நாடகம்`` (lyrical dramaன்).ஆகும் மேலும் இது பழைய கிரேக்க புரானக்கதையிலிருந்து மறு-தழுவி எழுதப்பட்டதாகும்.
``தி சென்சி``என்பது இவரது மிகச்சிறந்த படைப்பாகும்.இந்த நாடகத்தில் ஷெல்லி சொற்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்திருப்பார். பின்னர் கீட்ஸ் இறந்ததற்க்கு``அடேனஸ்``என்ற இறங்கற்பாவை இவர் சமர்ப்பித்தார்.ஷெல்லியின் பாடல்களை இரண்டாக பிரிக்கலாம்
¨      தனிப்பட்ட பாடல்கள்
¨      சுட்டிக்குறிக்காத பாடல்கள்
இவரது கதைகள்;
            ஷெல்லியின்``தி டிபேன்ஸ் ஆப் போயட்ரி``அவரது புனைய கருத்துகளை வெளிப்படுத்துகின்றது.



ஜான் டிரைடன்

                                                   
           
                                                     ஜான் டிரைடன்
டிரைடன் ஆல்ட்விங்கில் ஆல் செயின்ட்ஸ் நார்த்தம்டன்ஷயர்ரில் பிறந்து கேம்ரிஜ்  பல்கலைக்கலகத்தில் பயின்றார்.இவரது முதல் பாடல்``தி ஹிரோஇக் ஸ்டான்சாஸ்``ஆன் தி டேத் ஆப் ஆலிவர் க்ரோம்வேல்``என்பதாகும்.1670ஆம் ஆண்டு இவரை அரசவைப் புலவரானார்.பின்னர் ஐந்து நாடகங்கள்,மற்றும்``ஃபேப்லஸ்(fables)``என்ற புத்தகத்தை(volume)1699ஆம் ஆண்டு வெளியிட்டார்.
டிரைடனின் பணிகாலம்;
                             i.     அரசில் கேலிகள்(political satires)
                             ii.     பக்தி பாடல்கள்
                            iii.     கதை படைப்புகள்(prose works)
அரசியல் கோலி நடை(சட்டைரிஸ்);
            டிரைடன் மூன்று கோலிநடை பாடல்களை இயற்றியுள்ளார். முதலில்``எல் ஆப் ஷாப்ட்ஸ்பேரியை``கேலிசெய்து``அப்சலம் ஆன்ட் அகிடோபில்``எழுதியுனார்.பின்னர் அதே``ஷாப்ட்ஸ்பேரியை கேலி செய்து``தி மெடல்``என்ற பாடலை இயற்றினார்.இறுதியாக``மேக்ஃபிலக்நோயி``என்ற படைப்பில்``லாம்பூண்``என்பவரை(சட்டையரைஸ்)கேலி செய்துள்ளார்.
பக்தி பாடல்கள்;
            பல்துறை அறிவு பெற்றவர் டிரைடன்.இவர் தனக்கென தனி அடையாளத்தை நாடகம் மற்றும் பாடல்கள் மூலம் அடைந்தார்.இவர் ``ஹிரோயிக் கப்லெட்``என்று சொல்லப்படும்.இரண்டு அடி இறுதியில் தனியாக வரும் பாடல்களை முதன் முதலாக ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்தியவர்.இவரது பக்தி பாடல்களில் குறிப்பிடதக்கது``ரிலிஜியோ லேய்சி``மற்றும்``தி ஹின்ட் அன்ட் தி பான்தர்``என்பதாகும்.


கதை படைப்புகள்;
            இவரது கதைகளில் குறிப்பிடத்தக்கன``தி எஸ்சே ஆப் டிரமாடிக் போய்சி``என்பதாகும்.கதை எழுதுவதில் இவரது ஒரே எதிராலி``ஜான் பன்யான்``.மூன்று வகையான இவரது நாடகங்கள்,
            கிலாசிகள் டிராமாஸ் ஆப் கிரீக்ஸ் அன்ட் ரோமன்ஸ்
            நியோ கிலாசிகள் டிராமாஸ் ஆப் ஃப்ரேஞ்ச்
            தி ரோமான்டிக் டிராமாஸ் ஆப் இங்கிஷ்
     



அப்துல் கலாமிற்கு சலாம்..!!!




பாரத தாயின் தவப்புதல்வன்;

ஏழையாய் பிறந்தவன்;

கலத்தில் சிறந்தவன்;

விண்கலத்தின் நாயகன்;

குடியரசை ஆண்டவன்;

எளிமையாய் வாழ்ந்தவன்;

தமிழுக்கு பெருமை சேர்த்தவன் - தமிழனாய்

தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவன்;

இளைஞர்களின் முன்னோடியாய்,

இதயத்தில் வாழ்ந்தவன்;

மாற்றம் தந்தவனுக்கு,

ஏனிந்த தாடுமாற்றமோ???

அக்னி சிறகுகளை தந்தவன்,

தன் சிறகுகளை அடக்கிகொண்டானே!

கனவு காண சொன்னவன்,

நிரந்தரமாக உறங்குகிறானே!

சூரியனை மறைக்க முடியுமா?

கடலலைகளை நிறுத்தமுடியுமா?

மண்ணின் மைந்தன் மறைந்தாலும்,

நிரந்தரமாக உறங்கினாலும்,

ஒளி வீசிக்கொண்டே இருப்பான் - எங்கள்

நினைவலையில் தவழ்ந்துகொண்டே இருப்பான்;

அயராது உழைத்தவனுக்கு,

ஓய்வை மறந்தவனுக்கு,

இந்த ஓய்வு தேவைதான்;

உறங்கட்டும் விட்டு விடுங்கள்;

காலம் கலாமை மறைத்தாலும்,

ஞாலம் கலாமை மறவாது!!!

(நீ அமைத்த பாதையில் நாங்கள் பயணிப்போம்;
வல்லரசு இந்தியாவை நோக்கி!!!)

திங்கள், 16 மே, 2016

டிஸ்னியும் மிக்கியும் ..!!!





வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்  இந்த உண்மை நம்மை உணர வைத்த ஒரு கேலிச்சித்திர நாயகன் தான் நமது சார்லி சாப்ளின் இவர் உயிரோடு நம்மை சிரிக்க வைத்தவர்.நம்மை கனவு உலகில் இன்றும் கண் மூடினால் சிரிக்க வைக்கும்  உயிரற்ற ஒரு கேலிச்சித்திரம் தான் மிக்கி மௌஸ் என்ற ஒரு எலி.இது உருவானதை பற்றி பகிரவுள்ளேன்.



சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பும் இன்றும் நம் சிரிப்புக்கெல்லாம் காரணமாக இருந்தவர் என்றால் அது நிச்சயம் சார்லி சாப்ளின் அவர்கள் தான்.பிறகு வால்ட் டிஸ்னி என்பவர் 05-12-1901 அன்று அமெரிக்காவில் பிறந்தார்.இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதிலும் ஓவியம் தீட்டுவதிலும் ஆர்வம் மிக்கவர்.தனக்கு 7-வயது இருக்கும் போதே ஓவியங்களை வரைந்து அண்மையில் இருப்பவர்களுக்கு விற்பனை செய்வாராம்.அவருடைய தந்தைக்கு டிஸ்னி ஓவியம் வரைவது பிடிக்காது.ஆனால் அவரின் தாயார் உனக்கு பிடித்ததில் கவனம் செலுத்து என்று ஆதரவு அளித்தாராம்.

இவர் பள்ளியில் சார்லி சாப்ளின் போல நடித்து காட்டுவாராம்.ஆசிரியர்கள் டிஸ்னியை நகைச்சுவை நாடகம் நடித்துக்காட்டுமாறு கேட்பார்களாம் அப்போது டிஸ்னி கரும்பலகையில் வரைந்துக் கொண்டே நடித்துக்காட்டுவாராம்.அவருடைய தந்தைக்கு தெரியாமல் நகைச்சுவை நாடகத்தில் நடித்த அனுபவமும் டிஸ்னிக்கு உண்டு.


1922-ஆம் ஆண்டு தனது சகோதரர் ராய் உடன் தனது  Laugh Oh Grand என்ற நிறுவனத்தை ஆரம்பித்து ஆலிஸ் இன் காட்ரூண்ஸ் என்ற  முதல் கேலிச்சித்திரத்தை துவங்கினார்.அது தோல்வியடைந்தது.பிறகு  1932 ஆண்டு டிஸ்னி இரயிலில் பயணம் செய்யும் போது தனது ஓவியக் கிறுக்கலில் உருவானதே மிக்கி மௌஸ் என்ற கேலிச்சித்திரம். Flower And Tree என்ற முழு நீளப்படமத்தில் மிக்கியின்  சேட்டையும் அடித்த லூட்டியும் அப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை பெற்று தந்தது.அதனை அடுத்த டிஸ்னி உருவாக்கிய மற்றொரு கேலிச்சித்திரம் தான் டொனல் டக் என்ற வாத்து.மிக்கியும் டொனல்டும் சேர்ந்து அடித்த லூட்டியை இன்றும் கண் மூடி நினைத்து சிரிப்பவர்களுமுண்டு.
1955-ஆம் ஆண்டு வால்ட் டிஸ்னி 17 மில்லியன் டாலர் செலவு செய்து டிஸ்னி லேண்ட் பார்க் என்ற பொழுது போக்கு பூங்காவை அமெரிக்காவில் ஒலொன்டா என்ற நகரில் மக்களின் பூலோகச் சொர்க்கமாக  ஏற்படுத்தினார்.அவருடைய வெற்றியின் தாரக மந்திரம் ஆர்வம்,தன்னம்பிக்கை,தைரியம் மற்றும் நிலைபாடு.இவற்றில் மிக முக்கியமானது தன்னம்பிக்கை எந்த ஒரு செயலையும் பல்வேறு கேள்விகளோடு தொடங்கக் கூடாது எதுவாக இருந்தாலுமே தன்னம்பிக்கையோடு செயலாற்றினால் வெற்றி நிச்சயம் என்று அவர் கூறிவாராம்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்.