திங்கள், 4 ஜூலை, 2022

பனியினுள் புல்

சுடும் கதிர் வீச்சே 
உன்னை தனிக்க 
பனியாய் மண்ணில் 
வாழ வந்தேன்....!!! 
வசிக்க இடமோ
தேடிய  கண்கள்...!! 
புல்லின் நுணியில் 
பனியே தன்னை
மாய்த்து.... !!!
உன்னை அழகூற்ற
என்னை மாய்த்த 
சுகத்தில் 
சற்றே மறைந்தேன்...!!! 
சிறுபொழுதில்... !!!
Yamini. R  1st B. Sc., CDF. Ksrcasw

ஞாயிறு, 3 ஜூலை, 2022

மழை

நீர் துளி மண்ணை தொட 
மணிப்பற்கள் சிரிப்பில் குவிய
பனி ஊரை கட்டி அணைக்க
காற்று மரத்தை உரசிச்செல்ல 
பிள்ளை தாயின் மடியில் ஒடுங்க
ஓவியன் சாயப்பேனாவால் தீட்டினான்
1st B.A Economics Varsha.P ksrcasw

வியாழன், 30 ஜூன், 2022

இலையில் துளி

அலையின் ஒளியில் 
அழகிய கருமேகமோ
கசியும் வண்ணம்...!!! 
துளிக்கும் துளியே
இலையில் விழும் 
கணம் நேறிடுமோ...!!!
வடிவில்லா நீரே
இலையில் மாய்க்கும் 
ஓசையே என் 
செவியில் இசைத்தது... !!
வீசும் தென்றலினால் 
நிலையின்றி உன்னை
(இலை)
வருத்தி நீ (நீர்) விழுவது 
என்னவோ...!!! 
என்  கண்ணின் நீரும் 
இன்று இருளில் 
ஓசையை ரசித்து 
கசிந்தலாயிற்று....!!
Yamini. R  1st B. Sc., CDF ksrcasw

புதன், 29 ஜூன், 2022

*ஒலியின் மாயவர்ணம்..*

குழலின் ஒலிவழி 
கண்ட மாய புனையா ஓவியமே.... !!!
அசிரத்தில் கலந்த 
கணமே  வர்ண ஓவியமாய்
காட்சியளித்தது தான் ஏனோ...!!!
இக்கணமே ஒலியின்றி 
முற்றுகையிட்டே 
சிறையிலடைத்தாயோ ??
உன் வர்ண வடிவில் 
எம்மை...!!!
இவளின் குழலே 
ஒலியின்றி மாய்ந்தது 
உன் வர்ணத்தில்.. !!!
     Yamini. R  1st B.Sc.,CDF ksrcasw

ஞாயிறு, 26 ஜூன், 2022

வாழ்க்கை



அதாவது வாழ்க்கை என்பது காத்தாடி போல..
எண்ணம் என்பது காற்றை போல..
மனம் என்பது நூலை போல..
காற்று(எண்ணம்)நன்றாக வரும் போது தான்..
காத்தாடி (வாழ்க்கை)என்பது உயர தொடங்கும்.!
நூல்(மனம்)ஒரே மாதிரி இருக்க வேண்டும்..
நூல்(மனம்)பின்னால் ஆனால்|| காத்தாடியானது* எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட தாழ்வு அடையும்...*

 கலாதேவி. ச
I b.sc CS  ksrcasw