ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

ஆழ்கடல் 🌊🌊


இவளின் வசிப்பே
கடலின் உள்ளத்தை
நேசித்ததேனோ...!!!!
உன் ஓசையை ரசித்த
என்னை
நனைய வைத்தாய் ...!!!
என்று உன் ஆழமனதில்
இடம் பிடிப்பேனோ....!!!
ஓசையின்றி என்
மனதை உன்னுடன்
இசைக்கும்
காதலி இவள்
உன்னிடத்தில் ஆழ்கடலே... !!!



சனி, 13 ஆகஸ்ட், 2022

சுதந்திர தினம்..🇮🇳🇮🇳🇮🇳

இந்திய வானில் விரிந்த சுதந்திரச் சிறகுகள் பல்லாயிரம் தியாக வீரர்களால் சாத்தியமாயிற்று! வேற்றுமை மலர்களால் ஆக்கப்பட்ட, ஒற்றுமை மாலையை சூட்டி மகிழ்ந்தோம்! பாரத அன்னைக்கு வண்ணம் மாறாமல் வாசம், பிறழாமல் வணங்கி காப்போம்! அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !



அ.ஹேமா  3ஆம் ஆண்டு வணிகவியல்  ksrcasw 

நட்பு 👭👫👭.......

அவளுக்கான கடமைக்காக அழைத்துசெல்ல
பதினாரில் பயணம் துடங்கியது
பயணத்தின் சுவாரசியதிற்கு அவளை
அவளின் உள்வெளி அழகை மெருகேற்றினான்
பெற்ற தந்தை வேடிக்கை பார்க்க
தந்தையாய் மாறிய தோழன் 
சேர வேண்டிய கைகளில்  
சேர்ப்பான்......



Varsha.P 2nd BA Economics ksrcasw 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

கவி

ஒளியில் ஒளியின்றி 

தவித்த 

இவளின் வழிக்கு 

ஒளியாய் 

வந்த கவியின் 

இருளே...!!

உன் விழி வழி கவியாய் 

ஒளிந்தாய்... !!!

வியாழன், 11 ஆகஸ்ட், 2022

கல்வி

நுணியின் கீறலில் 

செதுக்கிய வண்ணம்...!!

கல்வியின் வடிவில் 

சிலையானேன்.... !!

புதன், 10 ஆகஸ்ட், 2022

இசை🎶🎼🎶



இசையே தூங்கவை எங்களை
உன் மயிற்பீலி விரல்கொண்டு
மனசு தடவு இரத்தக் குழாய்களின்
துருக்கள் துலக்கு உள்ளிருக்கும்
விலங்குத்தோல் உரி
மென்குணங்கள் மேம்படுத்து
நாங்கள் இறுகி இறுகிக் 
கல்லாகும்போது இளகவிடு
குழைந்து குழைந்து கூழாகும்போது 
இறுகவிடு நீயில்லாத பூமி
மயானம் மன்னித்துவிடு
மயானத்திலும் இசை உண்டே.
M.Sanmati II-BSC Computer Science ksrcasw 

தனிமை

கண்ணின் கேள்வி 

காணும் கணமே நேரிடுமோ....!!!!

என்னவளே  (தனிமை)

உனைக் கண்ட கணமே

கேள்வியே விடையாய் 

மாறிய என் கண்கள்....!!!

சந்திரன் 🌒




நான் பூரண சந்திரன் எனக்கு வளர்பிறையுமில்லை...
தேய் பிறையுமில்லை
நான் என்றும் நானாகவே
முழுச் சந்திஷரனாகவே வாழ்கிறேன்...
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...
வாழ்ந்து கொண்டிருப்பேன்...


நான் பிறரை நோக்கும்  பார்வை....
என் மனம் சார்ந்ததாக இருக்கிறது...
இது சரியெனில்...அது சரியே...
இது தவறெனில்
...அது தவறே...

II BCA -S.JENIFER ksrcasw 

சனி, 6 ஆகஸ்ட், 2022

☀️ சூரியன் ☀️

 
மாலை நேரம் மேற்குதிசையில்

   தென்னைமரத்தின்  பின்னால்

ஒளிந்து  கொள்கிறது சூரியன்...

     கிழக்கு திசையில் இருந்து

  சென்றுவிட்டாயா?

      என எட்டிபார்க்கும் சந்திரன்...

          - Shastika.s III BCOM FMA

வெண்ணிலா

வட்ட மான வெண்ணிலா

வானில் காணும் வெண்ணிலா!

தட்டுப் போன்ற வெண்ணிலா

தாவிச் செல்லும் வெண்ணிலா!

பாதி மாதம் தேய்கிறாய்

பாதி மாதம் வளர்கிறாய்!

சோதி காட்ட வருகிறாய்!  

சொல்லி நாங்கள் மகிழுவோம்!

                             M.Sanmati II-BSC Computer science

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

அருவி

மாமலை மீதி ருந்தே,

மாமழை பெய்ய வீழும்!

வீழ்ந்திடும் அருவி நீரால்,

விளைந்திடும் தாவ ரங்கள்!

குறிஞ்சியின் குழந்தை யன்றோ,

குதித்திடும் அருவி தானும்!

ஆறுகள் அருவி யாலே,

ஆவதும் உண்மை யன்றோ!

                          -M.Sanmati II-BSC Computer Science.

புதன், 3 ஆகஸ்ட், 2022

தனிமை

 தனிமை என்னும் 

மண்ணில் விழுந்த 

சிறு துளியாய் 

இருந்த என்னை  

கட்டியணைத்தாய் நீ....!!!

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

என் ஒளியே

சிப்பிக்குள் உறங்கும் 

முத்துகளே.... !!

மாயவன்  சிப்பியை 

மாய்கும் கணமே 

உன் ஒளியின் வண்ணம் 

என்றும் 

என் ஒளியே.....!!!