வெள்ளி, 20 செப்டம்பர், 2019

தேவை

அதிகம் பேசாதே
அடக்கம் தேவை
விவாதம் செய்யாதே
விவேகம் தேவை
தயக்கம் காட்டாதே 
தைரியம் தேவை
எதையும் எண்ணாதே
எளிமை தேவை
அலட்சியம் கொள்ளாதே
ஆற்றல் தேவை
முயற்சியை விடாதே
பயிற்சி தேவை
இவை எதையும் மறந்துவிடாதே
ஏனெனில் 
வாழ இவையே தேவை....!!!!!!!!!

ப.லட்சுமிப்பிரியா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

ஆகலாம் அப்துல்கலாம்

இது உன் இளமைக் காலம்
இனிமைக் காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளைக் கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்விகள் பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரைவிட
உன் உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும்
உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி
நாடே இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் ஆகலாம்
நாளை அப்துல்கலாம்

பவித்ரா வெங்கடேசன்
மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

குறிப்பு: "தினத்தந்தி” நாளேட்டின் 16.09.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில்  “மாணவர் ஸ்பெஷல்” என்னும் பகுதியில் இக்கவிதை வெளியிடப்பட்டது.

கலாம்

உன் உயிர் விண்ணுக்கு
உன் உடல் மண்ணுக்கு
உன் உயிர் காற்றுக்கு
உன் பகை நெருப்புக்கு

சிறுபொழுதுகள் - 6

வைகறை(விடியல்) - 2 முதல் 6 வரை
காலை - 6 முதல் 10 வரை
நண்பகல் - 10 முதல் 2 வரை
ஏற்பாடு - 2 முதல் 6 வரை
மாலை - 6 முதல் 10 வரை
யாமம் - 10 முதல் 2 வரை

இளம்பெண் பேச்சாளர்கள் தேடல்..




#3teentalk #talkathon #ksrcasw  #2K19

இளம் பெண் பேச்சாளர்களை உருவாக்கும் மேடைகளில் ஒன்றாக எமது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது என்பதில் பேரின்பம் அடைகிறோம்..

ஒரு மேடை..
மூன்று பரிசுகள்...
மூன்று விருதுகள்..
ஒரு வெற்றியாளர்..

பெண்ணே நீ பேச தொடங்கினால் நாடும் வளர்கிறது என்று ஒரு மறைப்பொருள் உள்ளது.. அதை உணர்ந்து உங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்த வாரீர்...

அக்டோபர் 17..
#ksrcasw... #talkathan..
தலைப்பு - இணைய உலகில் பெண்களின் நிலை.

மேலும் விவரங்களுக்கு

முனைவர் பு.பிரபுராம்   - தமிழ்த்துறைத் தலைவர் 

82488-23125

வியாழன், 19 செப்டம்பர், 2019

இப்படிக்கு அனுபவம்

எப்போதும் துணையாக இரு,
ஒருபோதும் துரோகியாக இருக்காதே,
எப்போதும் நண்பனாக இரு,
ஒருபோதும் நயவஞ்சகனாக மாறிவிடாதே,
எப்போதும் அன்பாக இரு ,
ஒருபோதும் அடிமையாக இருக்காதே,
எப்போதும் விழிப்புடன் இரு,
ஒருபோதும் சலுப்போடு இருக்காதே,
எப்போதும் கேள்விக்கு பதிலாக இரு,
ஒருபோதும்  குழப்பத்தின் பதிலாக, இருக்காதே,
எப்போதும் தேடலில் இரு,
ஒருபோதும் தொலத்ததை தேடாதே,
இப்படி அறிவுரை ஆற்றியது
அனுபவம்!!

ஆகலாம் அப்துல்கலாம்

இது உன் இளமைக் காலம்
இனிமைக் காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளைக் கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்விகள் பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரைவிட
உன் உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும்
உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி
நாடே இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் ஆகலாம்
நாளை அப்துல்கலாம்

பவித்ரா வெங்கடேசன்
மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

குறிப்பு: "தினத்தந்தி” நாளேட்டின் 16.09.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில்  “மாணவர் ஸ்பெஷல்” என்னும் பகுதியில் இக்கவிதை வெளியிடப்பட்டது.

முருகநாயனார் சிவபெருமானுக்கு நால்வகைப் பூக்களைக் கொண்டு(கோட்டுப்பூ, கொடிப்பூ,  நீர்ப்பூ, நிலப்பூ) மாலை சூட்டி வழிபாடு  செய்தார்.

ஓராண்டின் ஆறு பருவங்களும் பெரும் பொழுதுகள் எனப் பகுக்கப்பெறும்.

கார்காலம் - ஆவணி,புரட்டாசி
கூதிர்காலம் - ஐப்பசி,கார்த்திகை 
முன்பனிக்காலம் - மார்கழி,தை
பின்பனிக்காலம் - மாசி,பங்குனி
இளவேனிற்காலம் - சித்திரை,வைகாசி
முதுவேனிற்காலம் - ஆனி,ஆடி

கார்காலம் என்பது மழைக்காலம்
வேனில் என்பது வெயில் காலம்
கூதிர் என்பது குளிர்காலம்
முன்பனி என்பது மாலையில் பின்பனி
பின்பனி என்பது  காலையில் முன்பனி

புதன், 18 செப்டம்பர், 2019

அழைக்காமல் வருகிறேன்!!

காலை முதல் மாலை வரை ...
கால்கள் இரண்டும் ஓடும் வரை...
கைகள் இரண்டும் மடங்கும் வரை...
பற்கள் எல்லாம் கொட்டும் வரை...
பார்க்கும் கண்கள் மங்கும் வரை...
தலையில் நரை பரவும் வரை....
உயிர் உடலை விட்டு விலகும் வரை....
வா என்று நீ அழைக்காமல்......
வந்துவிடுவேன் என்று ஏளனமாக
உரைக்கிறது துன்பம்!!!!

அப்பா

வெளுத்துப்போன சட்டையில்
வெள்ளை வெள்ளேற்னு தெரியரார் என் அப்பா

அம்மா!


யார் கூறியது?
தேவதையைக் கண்ணில்
கண்டது இல்லையென்று!
தினமும் காண்கிறேன் 
என் அன்னை வடிவில் !



நீ தேவை என்றிருக்கும் வரை உன் தவறுகள் மன்னிக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கும்
நீ தேவை இல்லை என்றால் சிறு தவறும் பெரிதாகத் தெரியும்.........!!!