வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

தாகம்

எனக்கு தாகம் தண்ணீருக்கு மட்டும் அல்ல..
தமிழுக்கும் தான்.....
தாயிடம் தாய்பால் குடித்தபோதே
தமிழ்பாலும் குடித்துவிட்டேன்.....
அவளை அம்மா என்று அழைத்தபோது....
அன்று எப்படி தண்ணீருக்கு பஞ்சம் இல்லையோ அதேப்போல்
தமிழுக்கும் பஞ்சம் இல்லை...
ஆனால் இன்றோ...
தரையில் தண்ணீரும் இல்லை
என் தமிழும் இல்லை...
இரண்டிலும் பஞ்சம் சூழ்ந்துவிட்டது...
காசு கொடுத்து தண்ணீரையும் வாங்கிவிட்டேன்....
காற்றில் என் தமிழயும் பறக்கவிட்டு‌.....
காசு கொடுத்து தமிழில்லா கல்வியையும் பயல்கிறேன்
ஆங்கிலேயர் நம் நாட்டைவிட்டு வெளியேறி பல ஆண்டுகள் ஆனாலும்
அவர்கள் மொழிக்கு அடிமைப்பட்டு....
அதுவே பெரிது என்று கருதி ....
என் தமிழை இழுந்து வருகிறேன் என்பது உறுதி.....
தாய் போன்று மொழியை போற்ற வேண்டும் என்பதற்காக தான் அதை தாய்மொழி என்கிறோம்...
ஆனால் அதை இழந்து வருகிறோம்.....
என் தமிழ் மொழி மட்டுமே அல்ல
அதுவே எங்கள் ஒலி...
அதுனால் தான் என் தாகமாக தமிழ் மாறிவிட்டது....

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

தனிமை தந்த பதில்

தினமும் நாள் தவறமால் என்னை மட்டும் சந்திக்க வருகிறாயே ஏன்?
தினமும் என்னிடம் மட்டும் சகித்துகொள்ளாமல் இருக்கிறாயே ஏன்?
நான் வேண்டாம் என்று எத்தனையோ
நபர்கள் சென்றுவிட்டன.....
ஆனாலும் என்னுடனே வருகிறாயே ஏன்?
நான் வேண்டியவரே வெறுத்து சென்றுவிட்டனர் நீ மட்டும் வருகிறாயே ஏன் ??
இப்படியெல்லாம் என் தனிமையிடம் கேட்டேன்!!!!
அதுவோ இப்படி பதில் அளித்துவிட்டது!!!!
உன்னிடம் உன்னை தேடி நான் வரவில்லை .....
என்னிடம் புறக்கணிக்கப்பட்டு நீ வந்துவிட்டாய்.......
உன்னை வழி அனுப்ப மனமில்லாமல்
உன் வழியே வருகிறேன் நான் இன்று......

M.Yamuna Devi,
II B.Com. CA, KSRCASW.

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

நிலவொளியில் உன்முகத்தைச்
செதுக்கி அதை
விண்வெளியில் பரப்பிவைத்தேன்
இருளொளியில் அது புாிந்த
புன்னகையால்
அந்தச் சூாியனும் வோ்த்ததடி!

உன்னைக் கண்டுமகிழ
எழுந்துவரும்
சூாியனைக் கண்டு
வெட்கி மறைந்தாயோ
என் வெண்ணிலவே?

நீ நட்சத்திரப் பூச்சூடும்
அந்தி மாலையில்
பகலும் மயங்கிக் கரும்
மலையிடையே வீழுமடி!

உன் கண் இமைகளும் பேசுமடி!
காதல் மொழிகளை அள்ளி வீசுமடி!

நின் செவ்விதழில்
நழுவும் தேன் துளியைத்
தென்றல் சிதறடிக்க
உயா் வண்டுகளாய்ப்
பருகினரே எம்புலவா்!
சந்தனத் தேன் அடையாய்ப்
பிறந்ததடி சங்கத் தமிழ்!

களவுக் காதலிலே
பைந்தமிழே நின்
பாா்வைக்கெனக்
காத்திருந்தோா் பலகோடி!

கடலுக்கும் என்னே காதலடி!
இருமுறையும் உனை அணைக்க
முயன்றமையில் தோல்வியம்மா!

ஆழியின்மேல் சினந்தானே வள்ளுவன்
குமாியிலே
கடலும் தாழ்ந்ததடி அவன் காலடியில்!

வாழ்விற்கு இலக்கணமாய் நின்றவளே
நீ வழக்கொழிவாய் என நினைத்தோா்
வாயடைத்துப் போயினரே!

யாா் கண் பட்டமையோ உன்மேல்?
நீ தேய்ந்து
தேகம் இழைத்ததென்ன விந்தையடி!

காதல் கொண்டோா் பிாிவு வாின்
சிறு மணித்துளியும் ஓா் யுகமாம்!
சற்றே பிாிவு வர
சங்குவளை உன் இடையின்
மோதிரமாய் ஆச்சுதோ?
என் செல்வச் சிறுமகவே!

வண்ணக் களஞ்சியமே
நீ வற்றாத ஜீவநதி!
பித்த மொழி பிதற்றும்
ஊராா் அறிவரோ நினதுயா்வை?

இருமணமும் இணைந்துவிடத்
திருமணம்தான் மீதமடி....

நம் கரணம் காணாமல்
என் கண் இமைகள் மூடிடுமோ?

நம் வாழ்வு துவங்கும் முன்
என் வாயில் அாிசி விழுந்திடுமோ?

உலகமெல்லாம் பரவிய உனக்குத்
தோழமையே இல்லையெனில்

பனங்கருக்குக் குதிரையிலே
நான் ஊா்ந்துவர, வரும் குருதி!

குருதிப் புனல் பாயக் கல்லும் கரையுமடி!
கல்லிலோ நீ பிறந்தாய்?
உன் கருவறையோ கனியமுதம்!

ஊா் அறியாத் திருமணமோ யாம் செய்வோம்?
கந்தருவம் வடபுலத்துப் பெரும் பழக்கம்

உலகோா் மலா் தூவ!
உள்ளம் இணையுமடி!
உயிாிலே நாம் கலப்போம்!

இன்பத்தை நீ அளிக்க
உறு பொருளினை யான் தேடி
அறத்திலே நாம் நின்றிடுவோம்!

- இது தமிழ்க் காதல்

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தனிமரம்

நான் தனிமரம்தான்
பல கிளைகளைப் படைப்பேன்
அதில் பாசத்தைக் கொடுப்பேன்
நேசத்தைச் சோலையாக்குவேன்
நந்தவனச் சொல்லை ஏற்று நாளும் 
அதை வளர்ப்பேன்
நல்லதோர் உலகம்
அதை நாளை நான் கொடுக்க உழைப்பேன்

பவித்ரா 
மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

குறிப்பு: “தினத்தந்தி” நாளேட்டின் 22.07.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில்  “மாணவர் ஸ்பெஷல்” என்னும் பகுதியில் இக்கவிதை இடம்பெற்றது. 

இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களின் அரிய படைப்பு


மாணவர்களும் அவர்களுக்கு ஆலோசகர்களாக விளங்கும் பேராசிரியர்களும்:

அம்மா

என்னைச் சுவாசிக்க
வைத்தவளுக்கு...
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா...

அதில் அவள் பெற்ற
ஆனந்தத்தை என்றும்
நான் கொடுக்க  வேண்டும்
என்று நினைக்கிறேன் 

ம.ஆர்த்தி
முதலாமாண்டு கணிதம்

குறிப்பு: “தினத்தந்தி” நாளேட்டின் 29.07.2019-ஆம் தேதியிட்ட பதிப்பில் “மாணவர் ஸ்பெஷல்” என்ற பகுதியில் இக்கவிதை இடம்பெற்றது.




திங்கள், 12 ஆகஸ்ட், 2019

☺☺☺.....வேளைக்கு போய் ஆயுளை கொறச்சிக்காதீங்க.....!!!!☺☺☺☺

முயல்
ஓடுகிறது, தாவுகிறது, குதிக்கிறது, சுறுசுறுப்பாக இருக்கிறது.....
ஆனால் 15வருடங்கள்
தான் வாழ்கிறது.....
ஆமை
ஓடுவதில்லை, குதிப்பதில்லை, ஏன்...!!!! எதுவும் செய்வதில்லை.
ஆனால் 150 வருடங்கள் வாழ்கின்றன.
இதனால் அறியப்படும் நீதி..
வெட்டியா இருந்தால்
உன்னுடைய லைப் கெட்டியாக இருக்கும்... அதனால் யாரும்
வேளைக்கு போய் ஆயுளை கொறச்சிக்காதீங்க.....☺☺☺☺☺☺☺😊😊😊😊☺☺☺☺

சனி, 10 ஆகஸ்ட், 2019

வாழ்க்கை என்பது....!!!


நாம்பா  விரும்புற பாட்டை
போட்டுக் கேட்க ....
வாழ்க்கை ஒன்னும்
Mp3 player இல்ல....
அது FM Radio மாதிரி...
அது போடுற பாட்டை
நாம்ப ரசிக்க தான் கத்துக்கனும்...!!!

வியாழன், 1 ஆகஸ்ட், 2019

படித்ததில் பிடித்தது......(சிந்தித்து பாருங்கள்)

மண்ணை வச்சி பொண்ணு செஞ்ச
காலம் மாறி போயாச்சி....
பொண்ணு வித்து மண்ணு வாங்கும்
காலத்துக்கு வந்தாச்சி.....
விளை நிலமா இருந்த மண்ணை
வெறு நிலமா போட்டாச்சி.....
விதை நெல்லு போட்ட மண்ணில்
விஷம் எடுக்க துணிந்தாச்சி......
பாட்டி சொன்ன வைத்தியம் எல்லாம்
முக நூலில் போட்டாச்சி.....
வைத்தியம் சொன்ன பாட்டியோட முகம் கூட .....
மறந்து போயாச்சி.....
விவசாயம் வேணுமுன்னு குறும் படமும் பாத்தாச்சி.....
விவசாயி ஆக மட்டும் .....
யார் மனமும் மறுத்தாச்சி......

என்னுடைய வாழ்க்கையை மாற்றிய கவிதை......!!!

தோற்றால் புலம்பாதே
             "போராடு"
கிண்டலடித்தால் கலங்காதே
        "மன்னித்துவிடு"
தள்ளினால் தளராதே
           "துள்ளியெழு"
நஷ்டப்பட்டால் நடுங்காதே
       "நிதானமாய் யோசி"
ஏமாந்து விட்டால் ஏங்காதே
           "எதிர்த்து நில்"
    """""வெற்றி நிச்சயம்""""

தமிழை ...தாய்யோடு ...ஒப்பிடல்

ஐம்பெரும் காப்பியங்களை போல்  எனக்காகவே வாழும் தாயே.....   நான்கு வேதங்களில் சொல்ல  தவறிய
நற் செயல்களை கூட.......
என் நல்வாழ்விற்காக கற்றுக்
கொடுத்த தாயே....
முக்கனியை போல் நானும் சிறப்பாக
வாழ வேண்டும்........
என்று .....
தான் எனக்கு கனி என்று
பெயர் வைத்தாயோ........
உன் இரு பாதம் தொட்டு வணங்கி
சொல்கிறேன்.....
தாயே என் ஓர் உயிர் நீ தான்
என்று........!!!!!!!