குழந்தையாக பிறந்தேன்
சிறுமியாக வளர்ந்தேன்
மாணவியாக பயனிக்கிறேன்
ஒரு சிறந்த செய்தியாளராக
உருவெடுத்து பெண் என
பெருமிதம் கொள்ள .....
இதுவே நான் !!!
வெள்ளி, 28 செப்டம்பர், 2018
நீ யார்
ULTIMATE THING
Behind a success there is
A sweat;
Behind a sweat there is
A hard work;
Behind a hard work there is
A pain;
Behind a pain there is
An offend;
So never care about anything,
Try till the last breath;
Then you will be an ultimate.
உனக்காக நான்
சூரியனாக நீ இருந்தால்
உன்னை சுற்றி வரும் பூமியாகநான் வருவேன்
நிலவாக நீ இருந்தால்
உன்னை ரசிக்கும்
இரவாக நான் வருவேன்
நிலமாக நீ இருந்தால்
உன்னை நனைக்கும் மழையாக நான் வருவேன்
கரையாக நீ இருந்தால்
உன்னை தொடும்
அலையாக நான் வருவேன் கவலையாக நீ இருந்தால் அனைக்கும் காற்றாக நான்வருவேன்
சோர்வுற்று நீ இருந்தால்
உன்னை தாங்கும் தோள் கொண்டு நான் வருவேன் இதயமாக நீ இருந்தால்
உன்னுள் இசையாக நான் வருவேன்
தனியாக நீ இருந்தால்
உனக்கு துணையாக நான் வருவேன்
கோ.சௌந்தர்யா
கணினி பயன்பாட்டியல்
உன்னை சுற்றி வரும் பூமியாகநான் வருவேன்
நிலவாக நீ இருந்தால்
உன்னை ரசிக்கும்
இரவாக நான் வருவேன்
நிலமாக நீ இருந்தால்
உன்னை நனைக்கும் மழையாக நான் வருவேன்
கரையாக நீ இருந்தால்
உன்னை தொடும்
அலையாக நான் வருவேன் கவலையாக நீ இருந்தால் அனைக்கும் காற்றாக நான்வருவேன்
சோர்வுற்று நீ இருந்தால்
உன்னை தாங்கும் தோள் கொண்டு நான் வருவேன் இதயமாக நீ இருந்தால்
உன்னுள் இசையாக நான் வருவேன்
தனியாக நீ இருந்தால்
உனக்கு துணையாக நான் வருவேன்
கோ.சௌந்தர்யா
கணினி பயன்பாட்டியல்
பொன்னியின் செல்வன்
ஆசிரியர் குறிப்பு:
கல்கி கிருஷ்ணமூர்த்தி,
ராமசாமி ஐயர் கிருஷ்ணமூர்த்தி என்பதே இவரது இயற்பெயராகும். கல்கி என்பது விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்தில் இருந்து தன் பெயரை மாற்றம் செய்து கொண்டார். இவரது காலம் 1899-1954. இவர் ஒரு பத்திரிகையாளர், கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். இவர் 120 சிறுகதைகளையும், ஐந்து புதினங்களையும், மூன்று வரலாற்று காதல் காவியங்களையும் இயற்றியுள்ளார். கல்கி அவர்கள் மூன்று முறை சிங்கள தீவுகளுக்கு சென்று இக்கதையின் அமைப்புகளை எழுதியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு மேல் இக்கதைகளை முடிக்க காலமாயிற்று. இக்கதை 1951-1954 கல்கி நாள் இதழில் வெளிவந்தது. பின் மக்களிடம் அதிக அளவில் வரவேற்பு பெற்றதால் இதன் ஆசிரியர் இக்கதையினை புதினமாக வெளியிட்டார். அன்று முதல் இன்றுவரை அனைவரையும் ஈர்த்து வருகிறது இக்கதை.கதையின் களம்:
"கடலைச் சுருக்கி கட்டுரையாக்க முடியாது, இருப்பினும் இது என் சிறிய முயற்சியே". பொன்னியின் செல்வன், பொன்னி இச்சொல் காவேரி நதியினை குறிக்கிறது. ஒவ்வொரு நாகரிகமும் ஒரு நதிக்கரையில் பிறக்கிறது."தஞ்சை மாநகரின் நாகரிகமும் சோழநாட்டின் பண்பாடும் பிறந்த நதிக்கரையை காவேரி". சோழநாட்டின் மக்கள் வழிபடும் கடவுளும் தாயும் அக்கறையை. பொன்னியின் செல்வன் இக்கதையில் பொன்னியின் செல்வனாக அதாவது காவேரி நதிக்கரையில் செல்வனாக இராஜராஜ சோழன் வளம் வருகிறான்.
இக்கதை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல் பக்கங்களை கொண்டது. அக்கால மன்னனின் பெருமைகளையும் ஆட்சித் திறன்களையும் மக்களின் வாழ்வியல் நெறிகளையும் கூறுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இராஜராஜ சோழனின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கியமான ஆறு மாத காலத்தில் கதையே இக்கதையின் கருவாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தஞ்சை மாநகர்
சுந்தர சோழன் மன்னனால் ஆட்சி செய்யப்பட்டது. தஞ்சை மாநகரின் அரசன் தீராத நோயினால் பாதிக்கப்பட்டான். அப்பொழுது பதவிக்காக ஒரு குழப்பம் ஏற்பட்டது. அரசனின் பங்காளி முறையில் தம்பியான
மதுராந்தகச் சோழன் பதவிக்காக ஆசைப்பட்டு அந்நாட்டு அமைச்சர்களின் உதவியுடன் மன்னனை அழிக்க திட்டமிடுகிறான். சோழனுக்கோ மூன்று குழந்தைகள். முதலாவது மகனின் பெயர்
ஆதித்திய கரிகாலன், இரண்டாம் மகளின் பெயர்
குந்தவை, மூன்றாவது மகனின் பெயர்
ராஜராஜ சோழன், இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன் . இருப்பினும் இவர் மக்களால் இராஜராஜ சோழன் என்று அழைக்கப்பட்டார். சுந்தர சோழ மகாராஜா தனது முதலாவது மகன் ஆதித்திய கரிகாலனை ஆட்சிக்கு வர சொல்லி அறிவுரை அழைத்தார். இருப்பினும் ஆதித்திய கரிகாலனுக்கு அதில் விருப்பம் இல்லை. சோழ நாடு பரந்து விரிந்தவை இன்றைய ஆந்திரம்,கர்நாடகம்,கேரளா தமிழ்நாடு,சிங்களம் இவையெல்லாம் சோழநாட்டு மன்னர்களால் தஞ்சையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்யப்பட்ட நகரங்களாகும். நாட்டின் வடபகுதி ஆதித்ய கரிகாலனால் ஆட்சி செய்யப்பட்டது. நாட்டின் மையப்பகுதி குந்தவை மற்றும் அவளின் தந்தையான சுந்தர சோழனால் ஆட்சி செய்யப்பட்டது. நாட்டின் தென்பகுதி அருள்மொழி வர்மனால் ஆட்சி செய்யப்பட்டது. ஆதித்திய கரிகாலன் மிகவும் கோபம் குணம் கொண்டவன். ஆனாலும் அவர் மனம் தூய்மையானது. இவர் சோழ நாட்டின் படைத்தளபதியாக பணியாற்றினார். குந்தவை தன் அறிவுத் திறனால் நாட்டின் மையப்பகுதியை வழிநடத்தினார். அருள்மொழி வர்மன் தென் சோழநாட்டை ஆட்சி புரிந்ததும் இல்லாமல் நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க சிங்கள தீவுகள் மீது போர் தொடுத்து சோழர்களின் வீரத்தினை உலகிற்கே எடுத்துக்காட்டினார். ஆதித்திய கரிகாலனுக்கு மதுரை மாநகரை சேர்ந்த வீரபாண்டியன் உடன் பகை. வீரபாண்டியனை துரத்திக்கொண்டு சென்றார் ஆதித்திய கரிகாலன். வீரபாண்டியனும் ஒரு இடத்தை சென்றடைந்தான் அங்கு ஒரு பெண் இருந்தாள்.
அவள் பெயரோ நந்தினி, இவள் பாண்டியனின் காதலி. ஆதித்திய கரிகாலன் வீரபாண்டியனை கொள்ள வந்துள்ளார் என்பதை உணர்ந்த நந்தினி ஆதித்திய கரிகாலனிடம் வீரபாண்டியனுக்காக உயிர்ப்பிச்சை வேண்டினாள். ஆதித்திய கரிகாலனுக்கு நந்தினி மீது ஒரு காதல் ஏற்பட்டது. இருப்பினும் பகையின் காரணமாக வீரபாண்டியனை கொலை செய்கிறார், ஆதித்திய கரிகாலன். அன்றே சபதம் எடுக்கிறாள் நந்தினி ஆதித்திய கரிகாலனை கொலை செய்ய வேண்டும் என்று. சோழநாட்டின் அரச குடும்பத்தில் ஒருத்தியாக மாற வேண்டும் என்று அரச பதவியில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்கிறாள் நந்தினி. இந்த அனைத்து உண்மைகளையும் அறிந்தார் ஆதித்திய கரிகாலனின் உயிர்த்தோழன்
வந்தியத்தேவன். தன் தோழனிடம் அவருக்கும், அவரின் தந்தைக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தினை தெரிவிக்கிறார். ஆதித்திய கரிகாலன் வந்தியத்தேவனிடம் இரு ஓலைச்சுவடிகளை கொடுத்து தன் தங்கையிடமும் தந்தையாரிடமும் அளிக்குமாறு கூறுகிறார். வந்தியத்தேவனும் ஆதித்திய கரிகாலனின் வேண்டுகோளுக்கு இணங்க தஞ்சை மாநகரை நோக்கி பயணம் செய்ய தொடங்கினார்.
வந்தியத்தேவன் செல்லும் வழியில் சோழநாட்டின் தாயான பொன்னி நதி கரை எப்படி எல்லாம் இருக்கிறது என்பதெல்லாம் கண்டு கழித்தும் ,மக்கள் வாழ்க்கையில் எப்படி நெறிகளோடு வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டும். சோழ சாம்ராஜ்யத்தின் பெருமைகளையும் அழகிய அமைப்புகளையும் கண்டு வியந்தும் சென்றடைகிறார் வந்தியத்தேவன். ஆதித்திய கரிகாலனை நந்தினி தனிமையில் சந்திக்க அழைப்பு விடுகிறாள். ஆதித்திய கரிகாலனும் நந்தினியின் அழைப்பை ஏற்று அவளை காண சென்றான். ஆதித்திய கரிகாலனுக்கு நந்தினியின் திட்டம் தெரிந்தும் அவர் சென்றார். அதற்கு காரணம் அவர் நந்தினியை காதலித்ததே ஆகும். அன்று முதல் இன்றுவரை ஆதித்திய கரிகாலனின் மரணம் ஒரு மர்மமே. அவர் யாரால் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. நந்தினியா அல்லது பாண்டிய மன்னர்களால் என்பது புதிரே. மறுபக்கம் வந்தியதேவன் சுந்தர சோழனிடமும் குந்தவை இடமும் ஆதித்திய கரிகாலன் அளித்த சுவடியை ஒப்படைத்தான்.
தவறு செய்யும் அனைவரையும் அருள்மொழிவர்மனும் குந்தவையும் கண்டுபிடித்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தனர். முடிசூடும் விழாவும் வந்தடைந்தது, நாட்டு மக்கள் அனைவரும் இராஜராஜ சோழனே தஞ்சையை ஆள வேண்டும் என்று விருப்பம் கொண்டனர். முடிசூடும் விழாவின் பொழுது தன்னைத் தேடி வந்த கிரீடத்தையும் அருள்மொழிவர்மன் ஆன இராஜராஜ சோழன், மதுராந்தக சோழனுக்கு அளித்தார். இதனால் இராஜராஜ சோழனுக்கு தியாகச் செம்மல் என்ற பட்டமும் மக்களிடம் இருந்து கிடைத்தது. மதுராந்தகச் சோழன் 14 ஆண்டுகள் தஞ்சையை ஆட்சி செய்தார். பின் அவர் காலமானார். மக்களின் விருப்பத்திற்கேற்ப ராஜராஜ சோழனும் அரசன் ஆனார். அதற்குப் பின்னரே சாணக்கிய மன்னனை போரில் வீழ்த்தி அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் தஞ்சை பெரிய கோயிலை கட்டத் தொடங்கினார். எந்தவித பதவி ஆசையும் இல்லாதவர் ராஜராஜசோழன். மக்கள் அனைவரும் இராஜராஜ சோழன் மீது பெரும் மரியாதையை கொண்டிருந்தன. மக்களோடு மக்களாய் வாழ்ந்து வரும் இவரை. இதுவே இப்புதினத்தின் கருவாகும். கடலை சுருக்கி கடுகு ஆக்க முடியாது. அன்றைய கால மக்கள் முதல் இன்றைய நவீன உலக மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, பொன்னியின் செல்வன். அவ்வாறு தமிழ் வார்த்தைகளை வர்ணனையோடு இயல்பான நடையில் கூறியுள்ளார், கல்கி. இன்றைய கால திரைப்பட இயக்குனர்கள் பொன்னியின் செல்வன் கதையை இயக்க முடியாது என்பது அசைக்க முடியாத உண்மை. இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் கதையும் சிறிது ஆசிரியரின் கற்பனையில் தோன்றியவை ஆகும். சிறிதளவு கற்பனை பல உண்மைகள் நம் நாட்டு பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு அனைத்தையும் கூறும் இன்னும் இன்று வரை சிறப்பினைக் கொண்டது.தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் என்றும் அழியாத ஒன்று ஆகும்.ஆயிரம் படை எடுப்பிற்கு பின்னும் நம்மால் நம் தாய் மொழியை மிக விரிவாய் தெரிந்து கொள்ள முடிகிறது காரணம் நம் தமிழ் மொழி ஆழமாக வேர் ஊன்றி நிற்பதே காரணம் ஆகும்.உலக மொழிகளில் தமிழ் மிகபழமையான மொழி ஆகும்.இன்னும் ஆயிரம் படை எடுப்பு வந்தாலும் நம் தாய் மொழி மிக உயர்ந்த இடத்தில் இருக்கும். இவை அனைத்திற்கும் எடுத்துக்காட்டு பொன்னியின் செல்வன் போன்ற நூல்களே ஆகும்."வாழ்க தமிழ்".
ஓவியங்கள் நன்றி-மணியன் செல்வன்
மேலும் தஞ்சை பெரிய கோயிலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள:http://aiswaryasaravanan.blogspot.com/2018/09/blog-post.html?m=1
வியாழன், 27 செப்டம்பர், 2018
அடைப்பட்ட பறவைகள்
சாதிக்க முயலும் பெண்களையும்
சபிக்கும் சமூகம்.......
ஆண்களின் அடிமையாக வாழ
விருப்பமின்றியும் வாழும் கைதிகள்
அடிகளையும் முயற்சி படிகளாய்
மாற்றும் ஓரினம்.... என் இனம்
துயரங்கள் பல இருப்பினும்
இன்முகம் சிரிப்புடன் வாழ்ந்து
வரும் இச்சமூக கைதிகள்.....
விடுதலை இல்லா பறவைகள்
சிறகுகள் இருந்தும் பறக்க
முயலா நிலை....என்றுதான் மாறும்?
சபிக்கும் சமூகம்.......
ஆண்களின் அடிமையாக வாழ
விருப்பமின்றியும் வாழும் கைதிகள்
அடிகளையும் முயற்சி படிகளாய்
மாற்றும் ஓரினம்.... என் இனம்
துயரங்கள் பல இருப்பினும்
இன்முகம் சிரிப்புடன் வாழ்ந்து
வரும் இச்சமூக கைதிகள்.....
விடுதலை இல்லா பறவைகள்
சிறகுகள் இருந்தும் பறக்க
முயலா நிலை....என்றுதான் மாறும்?
தோல்வி
தோற்றபின் துவண்டுவிடாதே...
தோற்றதன் காரனத்தைத் தேடு...
தேடிய காரணத்தின் பின் ஓடு..
பிறகு வெற்றி மாலையை சூடு...
புதன், 26 செப்டம்பர், 2018
எவன் சிறந்தவன்
எவன் சிறந்தவன் பணம் உள்ளவனா.....
இல்லவே இல்லை...
பெற்றோர் உடன் உள்ளவனே
சிறந்தவன்.....
ஊழல்
ஊழல் என்பது புற்றுநோய் போல் வளர்ந்து கொண்டிருக்கும் இந்நிலையில் உச்சநீதிமன்றதின் புதிய யோசனை.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளர்களும் தன் மேல் உள்ள வழக்கின் விவரம் பற்றியும் குற்றங்களை பற்றியும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓட்டு போட வேண்டும் என்ற அதிகாரம் உள்ள மக்களுக்கு யார் மெல் எவ்வளவு குற்றங்கள் உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு.
மேலும் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் வழக்கு ரீதியான செய்திகளை தன் கட்சி இணையத்தில் வெளியிட வேண்டும்.
மேலும் இவ்வாறு செய்வது மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான வழி இல்லை. நம் ஓட்டை யாருக்கு போட வேண்டும் என்பதை யார் அதிகமாக பணம் தந்துள்ளார் என்பதை சார்ந்து இருக்க கூடாது.
அரசால் மட்டும் ஊழலை ஒழிக்க முடியாது. மக்களாகிய நாமும் ஒரு படி சென்று ஊழலை அழிக்க முற்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவதும், இலவசத்தை எதிர்பார்ப்பதும் ஒரு வகையில் ஊழல் என்பதை மக்கள் உணர வேண்டும்.
செவ்வாய், 25 செப்டம்பர், 2018
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)