புதன், 14 டிசம்பர், 2016

செல்ப் ஹெல்ப்

                                                                           செல்ப் ஹெல்ப்
ஒரு முறை பெரிய வணிக வியாபாரி ஒருவர் நகரத்தை விட்டு ஒரு நாட்டிற்க்கு தனது வணிகத்திற்காக சென்றார்.அந்த நாட்டிற்க்கு கடல் வழியாக சென்றார்.கப்பலில் பல தங்க நாணயங்களையும் விலை உயர்ந்த பொருட்களையும் சுமந்து சென்றார்.

            ஒரு நாள் பெரிய சூராவளி வரத்தொடங்கியது.பெரிய பெரிய அலைகள் கடளில் எழும்பின.கப்பல் அங்கும் இங்கும் தல்லாடியது. மாலுமிகள் பயத்தில் கதரத்தொடங்கினர்.கப்பல் தலைவரும் மாலுமிகளும் கப்பளை மூல்கவிடாமல் தங்களால் இயன்றவரை தங்கள் கட்டுக்குள் வைக்க முயர்ச்சி செய்கின்றனர்.
            சில நேரத்திற்க்கு பிறகு சூறாவளி நின்றது.ஆனால், கப்பலில் ஒரு ஓட்டை ஏற்பட்டுவிட்டது.அதன்வழி தண்ணீர் உள்ளே வர தொடங்கியது. சிலர் தப்பிக்க தண்ணீருக்குள் குதித்தனர்.சிலர் மரக்கட்டைகளை பிடித்து தப்பிஓடினர்.அந்த வணிகர் தன்னை காப்பாற்ற கடவுளை வேண்டினார். ``கடவுளே என்னை எப்படியாவது காப்பாற்று நான் உனக்கு நிறைய பொற்காசுகளைக் கொடுக்கிறேன்’’ என்று வேண்டினார்.
            ஒரு மாலுமி ஓடி வந்து``கடவுளை வேண்டாதீர் நீருக்குள் குதித்து உங்கள் உயிரை காப்பாட்ரிக்கொள்ள குதியுங்கள் கடவுள் தன்னை தமே காப்பாற்றிக்கொள்பவரையே உயர்ந்தோர் எனக் கருதுவார்’’ என்றார். ஆனால், அவர் பேச்சை கேட்காமல் கப்பலில் தங்கி கடவுளை வனங்கிக்கொண்டே இருந்ததால் அவர் கப்பலில் உயிரிரந்தார்.
           
`                                                                 (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்

***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

காலத்தின் அருமை


Image result for காலம்
  • தேர்வில் தவறிவிட்ட மாணவனுக்கு தெரியும் ஓர் ஆண்டின் அருமை..!
  • குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பெற்றெடுத்த தாய்க்க தெரியும் ஒரு மாதத்தின் அருமை..!
  • வார இதழ் ஆசிரியருக்கு தெரியும் ஒரு வாரத்தின் அருமை..!
  • காதலிக்காக காத்திருக்கும் காதலனுக்கு தெரியும் ஒரு மணிநேரத்தின் அருமை..!
  • இரயிலைத் தவற விட்ட பயணிக்குத் தெரியும் ஒரு நிமிடத்தின் அருமை..!
  • விபத்தில் நூலிலையில் தப்பித்தவற்கு தெரியும் ஒரு வினடியின் அருமை..!
 காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. எனவே ஆண்டோ மாதமே வாரமே நொடியோ எல்லா நேரத்தையும் பொன் போல போற்றி வாழ்ந்தால் வாழ்கையில் வெற்றி நிச்சயம்..!

                                                                                                             ஐ.ரம்யா,
இரண்டாமாண்டு ஆங்கிலத்துறை.

பெண்ணின் சில நாட்கள்

எங்கள் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் கோ.தவமணி அவர்களால் எழுத்தப்பட்ட கவிதையை பகிர உள்ளேன்..

சனி, 10 டிசம்பர், 2016

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம்..!!


Image result for anna university

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 9 டிசம்பர், 2016

அப்துல்கலாம் நினைவு கவிதை

Image result for a.p.j


அன்று என் பிறந்த நாள் 
      இன்றோ அப்துல்கலாம் இறந்த நாள்
அன்று நான் யோசித்தது என்னமோ
      இன்றோ அவர் கூறும் கனவுகள்
கவிதையின் இனிமையில்
     சுவைத்தது அவர் கதைகள்
காற்றின் சுவாசத்தில்
     மிதந்தது அவர் வார்த்தைகள்
வாழ்வின் எல்லையில்
     அவர் எடுத்த முடிவுகள்

2020-ல் வாழ்க இந்தியா என்று கூற
    அவர் மறைந்தார் கல்லறையில்.....

சனி, 3 டிசம்பர், 2016

டாக்கடர்.கிராக்கி

                                                                டாக்கடர்.கிராக்கி
                         
 ஒரு நாள் தவளை ஒன்று தன் குலத்தை விட்டு அருகே காட்டுப்பகுதிக்கு உள்ளே உள்ள நதிக்கு இடம் மரியது.அந்த வனப்பகுதிக்குள் ஒரு வீட்டை அமைக்க சென்றது.அங்கு சென்ற பின் எந்த விலங்குகளையும் தவளை காணவில்லை.ஆனால், தவளைக்கு அனைவரையும் கண்டு அவர்களுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று ஆசை.ஆதலால், பெரிய கரடின்மேல் ஏரி ``நண்பர்களே அனைவரும் வெளியே வாருங்க்கள் நான் உங்களை சந்தித்து நண்பனாக வேண்டும்.நான் அருகாமையில் இருக்கும் கிராமத்திலிருந்து வந்திருக்கிறேன்’’.இந்த தவளையின் குரல் கேட்டு அனைத்து விலங்குகளும் வந்தது.மான்,ஆமை,வாத்து,பட்டாம்பூச்சி, மற்றும் நரி அனைத்தும் வந்தது. ``முதலில் நான் என்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்.என் பெயர் டாக்டர்.கிராக்கி நான் அனைத்து விதமான நோய்களையும் தீர்ப்பதற்கான மருந்துகளையும் வைத்திருக்கிறேன் என்னை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம்’’ என்றது.இதனைக் கேட்ட நரி ``உன்னால் அனைத்து நோய்களையும் தீர்க்க முடியும் என்றால், உன்னுடைய ஊனமுற்றது போன்ற கால்களை ஏன் சரி செய்ய இயலவில்லை? நீ எப்படி அமர்ந்திருக்கிறாய் பார்’’என்று கோலி செய்தது.அதனைக் கேட்ட அனைத்து விலங்குகளும் சிரித்துக்கொண்டே வீடு திரும்பினர்.

                                                                  (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி.


வெள்ளி, 2 டிசம்பர், 2016

டூ யு நோ ஸ்விம்மிங் ?

                                                            டூ யு நோ ஸ்விம்மிங் ?

ஒரு முறை கஞ்சதனமான ஞானி ஒருவர் எப்பொழுதும் மக்களை ``உனக்கு இந்த  வேலையைகூட செய்ய இயலவில்லை ? உங்களுக்கேல்லாம்  சமயத்தைபற்றியும் வாழ்க்கை தத்துவத்தை பற்றி ஏதுவும் தெரியவில்லை ஆகையால் உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது’’.என்று பழிப்பார்.ஒரு நாள் அவர் ஒரு வேலைக்காக ஆற்றை கடக்கவேண்டிய நிலை.அங்கு ஒரு சிறிய படகை கண்டார் அதனுள் ஏறி அமர்ந்தார்.அந்த படகின் உரிமையாளர் எனக்கு அதற்காக நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்றார்.`` ! நீ என்னிடம் பணம் கேட்கிறாயா? நான்,செல்லும் வழியில் உனக்கு நிறைய அறிவுச்செல்வத்தை தருகின்றேன்’’ என்றார்.
            ``உனக்கு துளசி தாஸ்ஸை தெரியும் இல்லை இராமாயண் பற்றி ஏதாவது தெரியுமா?.....என்றார்.அவர் அவனுக்கு பணம் தருவதை தவிர்க்க நிறைய செய்திகளை அவனிடம் ``உனக்கு தெரியுமா?’’ என்றே கேட்டுக்கொண்டு வந்தார்.இந்நிலையில் நடூ ஆற்றில் சுழல் ஒன்னு வந்தது. அந்த படகு உரிமையாளரால் படகை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ஆகையால் அந்த ஞானியிடம்``உங்களுக்கு நீச்சல் தெரியுமா?’’ என்று கேட்டார்.அதற்கு அவர் ``எனக்கு தெரியாது’’ என்றார். இத்தனை விஷயங்கள் தெரிந்த உங்களுக்கு இந்த சிறு உயிர் காக்கும் கலை தெரியவில்லையே இப்போது நான் குதித்துவிடுவேன் தாங்கள் என்ன செய்ய போகிறீர்கள்?என்று கூறி குதித்தான்.அந்த ஞானி சுழலில் சிக்கி இறந்தார்.
                                                     
                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


வியாழன், 1 டிசம்பர், 2016

உணவு பழமொழி..!!


குறள்;945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

விளக்கம்;

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால்,அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.