புதன், 19 பிப்ரவரி, 2020

அக்காள்

என் தாயிற்கு நிகரானவளே
நீ கண்களாக இருந்தால் நான் கருவிழியாவேன்
பகலாக இருந்தால் நான் கதிரவனாவேன்
இரவாக இருந்தால் நான் நிலவாவேன்
முட்களாக இருந்தாலும் உன்னை நான்
தாங்கிக்கொள்வேன்
என் இதயத்தில் வைத்து...

9.9.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

அம்மா

என்னை சுவாசிக்க
வைத்தவளுக்கு
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா....
அதில் அவள் பெற்ற
ஆனந்தத்தை என்றும்
நான் கொடுக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.

29.7.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

இன்றைய சிறப்பு

எத்தனை பேருக்குத் தெரியும்....
காமராஜர் முதன் முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியது பாரதி பயின்ற எட்டையபுரம் இராஜா மேல்நிலைப்பள்ளி என்று....

துடித்தெழு தமிழா 

                                          உயிரினமே நீ உயிர் இழந்து இருப்பதனை இன்னுமா அறியவில்லை. உலகில் உயிர்கலெல்லாம் உணர்ச்சியற்று கிடக்கின்றன.உறவுகள் கோடி இருப்பினும் உன்னதம் அறியா பிழைக்கின்றன .
               உடல் மண்ணுக்கில்லையாம் ! உயிர் உற்றோருக்கில்லையாம் !                                                உடன் பிறந்தோராயினும் வெவ்வேறு உருவமாம்.  உயிர் பிழைத்தால் போதும் உணர்வுகள் இல்லையாம் . உயிர்கள்கொள்ளையாம்,உள்ளமே இல்லையாம்
உணர்வுகள் தொல்லையாம்! உம்மின் உணர்ச்சிகளுக்கே எல்லையாம்।                              உருகிய பனிமலையே ஓடாத ஓடையானால் ! எரியும் எரிமலையே எரிந்து சம்பலானால், உச்சியில் ஊற்றுகளே  உக்கிரத்தில் வேர்த்து போனால். இந்த உணர்ச்சியிலா உயிரினம் ஈடேறுமா, இல்லை கடேறுமா . கவலைகள் இல்லையாம் நம் நாடு கலையிழந்தாலும் ! இங்கு அடிமைகள் கொள்ளையாம் நம் மண்ணில் விதை விளைந்தாலும் !
                       ஐவகை நிலங்களுக்கு தொப்புள் கொடி அறுத்து நம் தாய் நாடாம்!ஆனால், இன்று தொட்டிலில் அழும் குழந்தைக்கு தினைமாவு தீவனமாம்.தீர்த்தார் பசிபோகும் தீர்ந்தால் ருசிபோகும் .
                        தாய் பால்(வெள்ளை) மனம் மறந்ததென்ன.நம் பாண்டியர் குலநாட்டிலே ! ஆவின் துயர்த்தித்தான்(பசுவின் துன்பத்தினை போக்கினான் ) ,புறாவுக்கு ஈடறுத்தான் (புராவிற்கு நஷ்டஈடாக  தன் தசையை  கொடுத்தான் ) என்றல்லவா போற்றியது சங்க நூல்கள் .
                       தமிழர் , புலவர்களின்  ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட்டு , அந்நியர் அண்டை நாட்டவர்கள் அதனை பெற்று , ஐம்புலன்களை  அனைத்தையும் கற்று , அடிமைகளாய் நம்மை ஏற்று , அதிர்வில்லா அடைக்கலம் இட்டு .
                      நம் ஐம்பொறிகளை தீயில் சுட்டு, நடைபிணமாய் ஆக்கினரே அன்றாவது அறியவேண்டாமா ? அவர் சுட்ட புண் எரிச்சலை தாங்கிக்கொண்டோம் . நம் உணர்ச்சிகள் பொங்கி வழிவதனை நாம் எங்கே கண்டோம் .
                      சேரன்,சோழன் ,பாண்டியன் என்னும் மூவரை வைத்து முக்காலம் வென்று ! முற்றையும் அறிந்து நாம் என்னத்தை கையாண்டோம்.  நமது , எண்ணத்தையே நாம் கைதீண்டோம்.  இஸ்லாமியன் ஆயினும் என் தமையன்! கிருத்துவன் ஆயினும் என் மைத்துனன் என்றெல்லாம் ஊரறிய உமிழ் இறைத்தோம் !
                     இன்றோ , ஒரு படி நெல்லுக்காக உற்றானும் ஊரான் என்கிறோம் . பஞ்சம் பாடுகிறது நாம் அதில் தான் ஆடுகிறோம் . என்ன தான் நாம் நம் தாய் திருநாட்டில் வாழ்ந்தாலும் , தமிழ் மொழி  ஆயிந்தாலும், அறிகிறோமா நாம் ஆயிரத்தில் ஒன்றென ! மொழிகிறோமா என் தாய் திருநாடென! அன்று அவனாய் வாழ்ந்தான் ! இன்று இவனாய் வாழ்க்கிறான் ! நாளை எவனோ வாழ்வான் ! என்று தானே நாம் இன்னும்  ஏய்கிறோம்.
                   முக்காலத்தையும் வென்ற முந்தைய தமிழர்களே கேளுங்கள் ! முயற்சிகள் இன்றி முன்னேற்றம் கண்டதுண்டோ ? இகழ்ச்சிகள் இன்றி நாம் இன்னிமைகள் வென்றதுண்டோ ? இன்னா சொல்லையும்  இன்சொல்லாக ஏற்று ஈடுகொடுங்கள் ! இடைவிடாது ஈரம் விடுங்கள் ! " ஆற்றில் கடப்பதனால் பாறை கரைவதில்லை , ஆழம் இருப்பதனால் கடலும் வற்றவில்லை " கரையில் மிதக்கும் காகித கப்பலா ?
 கடலில் கிடக்கும் முத்தின் சிப்பிகளா ? முடிவெடுங்கள் ! - முடிவாய் எண்ண முயன்றால் கூட முட்டாள் என்ற சொற்பதம் அடைவாய் ,சரியாய் பாதையை தொடுத்தல் சொர்க பதம்  அடைவாய் .

திங்கள், 17 பிப்ரவரி, 2020

தலை புரண்ட தமிழகமே ! தத்தளிக்கும் தாயகமே !

தமிழா தரணியிலா ? தண்ணீரிலா ? நீ கல்லாகக் கரைந்தது?
மண்ணிலா ? மலையினிலா ? உன் மனம் கல்லாக உரைந்தது ?

உயிர்வாழ உணவிட்டான் தமிழன். பின்பு உறவிற்கே உணவிட்டான் அமிழ்தன். பின்பு உரையிட உணவிட்டான் எனில் விற்றான். பாசம் என்பது பணத்திற்கு அடிமையானது!. பந்தம் என்பது கடமைக்கென்றது!. நேசம் என்னும் சொல்லே நாசமாய்ப் போனது!. புது வாழ்வு என்ற பெயரில் பொதுவாழ்வையே மறந்தனர் தமிழர்.

சுயவாழ்வு என்ற பெயரில் நன்றாகச் சூரனையும் வென்றனர். சொர்க்கபதம் வேண்டில் சொற்பதம் வேண்டும் ஐயா நம் நாவில். இவை அனைத்தும் அற்புதம் தான் இன்று நம் வாழ்வில் .

அன்னையே, அய்யனே என்பவைகூட அந்நிய சொல்லால் பிணமே, சவமே என்றாயின. எனினும் அதில்தானே நாம் பெருமிதம் அடைகிறோம்.

பத்து மாதம் சுமந்தெடுத்த பச்சை முத்து அம்மா என்றழைத்தால், அதனைக் கேட்க ஆறளவு காதுகள் போதுமா!. அதனைக் காண ஆயிரம் கண்தான் ஆகிடுமா!.

அய்யன் என்பது ஆயிரமாயிரம் அடியெடுத்த இமயத்தின் இருதயமாய் விளங்கும் சிவனடியானை அல்லவா குறிக்கும்.

அம்மையப்பனின் முகமே  ஆட்கடவுள் எனத்தானே தன்னை ஈன்ற பெருமானை ஈசனுக்கு ஒப்பாக அழைத்தான் அன்றைய தமிழன்! அறிய வேண்டாமா? அறிந்துதான் திருந்த வேண்டாமா?
                    
தொட்டிலில் அழும் குழந்தைக்குத் தன் உறவு, சொந்தம், பந்தம், மாமன், மைத்துனன் பெயர் சொல்லி, இன்னார் உனக்கு இவ்வழி உறவினரப்பா! இவருக்கு நீ இதை செய்யம்மா! எனத் தன்னையறியா வயது முதலே தன் கடமையை அறியச்செய்து தாலேலோ பாடிய அன்றைய அன்னையை அன்னப்பறவைக்கு  உவமயக்கவா? அவளையே உரிமை கேட்கவா? இன்றைக்குத் தாலேலோ தாயகமே இங்கு தலைபுரண்டு கிடக்கிறதே!. வீட்டில் மூத்தவரோ, குடும்பத்தில் ஒருவரோ இறந்துவிட்டால்! அவரை, நினைவுகூறவும், அவரது சந்ததிகளை நிலை நிறுத்தவும்। இன்னது செய்து என்னை ஆளாக்கினீர்! இன்னதைச்செய்ய என்னை வேராக்கினீர் என்று பாடினர்.
                          
இன்றோ உயிர் வாழ்ந்தும் நடை பிணமாக இருக்கின்றனர். இல்லம் என்பது மட்டுமே இவர்களின் அடையாளமாய் இருக்கின்றது. இன்றையநிலை வயதானதா, தசை சோர்ந்ததா! எனக்கு மணமுடிந்ததா உடன் பணம் சேர்ந்ததா! இனி அன்னையில்லை, தந்தையில்லை அநாதை எனினும் அதில்தான் ஆனந்தம் இருப்பதாக நாம் அலைகிறோம்.
                          
அறியாத தவறினால் ஏற்படும் புரியாத வலிக்கு! மருந்தும் மனதிற்கு விருந்தும் அவர்களால் மட்டுமே தரஇயலும் என்பதனை இன்னோடியும் நாம் உணரவில்லை .
                          
அவர்கள் சொல்லிற்கு என்றும் செவிசாய்ந்ததுமில்லை! அந்நியர் சொல்லுக்கு என்றும் செவி ஓய்வதுமில்லை! அந்நியனாயினும் அவனுக்குத்தான் நான் அடிமை. என்னதான் நாம் ஒரு சுதந்திர மனிதராக இங்கு இருந்தாலும் .
                             
இப்பொழுதும், இன்னோடியும் அடிமைத்தனம் ஒன்றே நமது அங்கீகாரச் சின்னமாக இருக்கிறது. மாற்றம் தேவை! ஈன்றாலே தாய் அவளைத்தான் மறைப்பாயா? உன் ஈட்டியான தந்தையையே நீ சிதைப்பையா! தன்னை வளர்த்த தாய், தந்தைக்கே  கடமைப்பட்டேன் என்பனவே மாமனிதன்.

இச்சொல்லை ஏற்பவனே மனித குலத்தவன். சிந்தித்து செயல்பட்டால் சீர்திருத்தப் பள்ளி வேண்டுமா!. சிந்தையை உன்னித்தால் சிறை காட்டும் நிலை கூடுமா!. சொல்லால்பிறர் சொல்வதால்  விளங்காமையும் இவ்வாறான ஆயுத எழுத்தால் ஆணிபோல் ஆழ்மனதில் அச்சிடும் என்னும் நோக்கோடு செயல்பட்டேன்!  சிந்தித்தால் மந்தையில் உமக்கு எல்லை ஏது?

சிந்திப்பீர் செயல்படுவீர்! சிந்தைக்கே சலாமிடுவீர்!