47.இறப்பில் தான் பிறப்பு
இன்பமான வீட்டில்
இனிக்கும் சொந்தங்கள்
இனிமையான நாட்டில்
இருக்கும் பந்தங்கள்
இறப்பின் முடிவு
இனியொரு பிறவின் தொடக்கம்
இருளின் தேடல் தான்
வெளிச்சம் என்ற வெற்றி
இவ்வையம் மூழ்கட்டும்
மகிழ்ச்சியில் நிறையட்டும்
நெகிழ்ச்சியின்னம் தொடரட்டும்..
48.நினைப்பதெல்லாம் செய்திடுவோன்
நீ சொல்ல நினைப்பதெல்லாம்;
என்னிடம் சொல்வதில்லை;
நான் கேட்க தவிப்பதெல்லாம்;
உனக்கு தெரிவதில்லை,
நீ சொல்லிவிட்டால்,
நான் கேட்டிடுவேன்
உன்னை சொல்ல வைத்து, நான் பார்த்திடுவேன்.
49.இறுதிவரை உடனிருப்பேன்
உன்னை காண காலையெழுந்து
கதிரவனை காலை தொழுது
கரம் ஈட்டிய காரம் உண்டு
கதை பேசிய கவியை மறந்து
காற்றோடு தான் உன்னை தொடர்ந்து
கரையோடு, தான் காத்திருந்தேன்.
கண் இமைக்கும் நொடியினிலே
காலை என்னும் விடியலிலே
கண் இமைக்குள் வந்து நின்றாய்,
கள்ளகபடமில்லா காதல் தந்தாய்,
காலமெல்லாம் கை பிடித்து,
கடைசிவரை உடனிருப்பேன்………
50.துயரம்
காலம்
என்பது
வரையறையானது
கனவுலகில் எல்லாம் வன்முறையானது
கடலில்
நிலவும்
கலங்கியே
போனது
கடைசியில் வானும் வரட்சியில் வாழ்ந்தது