சனி, 2 மார்ச், 2019

அன்றாட வாழ்வில் கணிதம் 1

கணிதம் என்றாலே கடினம் தான் என்று நினைக்கும் பலருக்கு தெரியாது கணிதத்தில் உள்ள ஆச்சரியங்கள். ஆம்  உதாரணமாக கடைக்கு செல்கிறோம் அங்கு பல விதமான பொருள்கள் உள்ளது ஆனால் அதில் ஒன்றை தான் நாம் தேர்ந்து எடுக்கிறோம். அதை தான் கணிதத்தில் ப்ரொபைபிலிட்டி என்று கூறுவோம்.
இன்டெகரஷன்:
பல துறைகளில் கணிதம் பயன்படுகிறது. கொலை குற்றத்தை கூட கணிதம் மூலம் கண்டு பிடிக்கலாம் எடுத்துக்காட்டக ஒருவர் இறந்து விடுகிறார். அவரை யார் கொலை செய்தார் என்பதை cctv கேமராவில் தேடும் போது அந்த தெரு வழியாக பலர் நடந்து செல்கின்றனர். கொலை செய்ய பட்ட நேரம் தெரிந்தால் தான் குற்றவாளியை கண்டு பிடிக்க முடியும். அதற்கு முதலில் இறந்தவரின் உடல்வெப்பநிலை கடைசியாக எவ்வளவு இருந்தது என்பதை தெரிந்து கொள்ள வெண்டும், பின்பு அறையின் வெப்பநிலையை அறிய  வேண்டும் ஏனென்றால் உடலின் வெப்பநிலைகும் அறையின் வெப்பநிலைகும் அதிக இடைவெளி இருந்தால் அது மிக வேகமாக குறையும். இடைவெளி குறையும் போதுஉடலின் வெப்பநிலை மெதுவாக குறையும். பின்பு சிறிது நேர்ம் களித்து அந்த உடலின் வெப்ப நிலையை கண்டறிந்து அதனை joules cooling effect என்ற சூத்திரத்தில் பயன்படுத்தி பின்பு இன்டெகரஷன் செய்தால் கொலை செய்ய பட்ட நேரத்தை கண்டு பிடித்து விடலாம்.


வெள்ளி, 1 மார்ச், 2019

வீரவணக்கம் இராணுவா

திலகம் சூட்டிய தாய்
திரும்பாமல் திகைத்து நின்ற தந்தை.....
உன்னையே உலகம் என்ற மனைவி
விவரம் தெரியாத மகள்
உன்னை வழி அனுப்பி வைத்தனர்
போய்வா இராசா என்று....
நீ மீண்டும் வருவாய் என்ற நம்பிக்கையுடன்.....
ஆனால் நீயும் மீண்டும் வந்தாய் பொட்டியில்..

குயிலி🗡️🗡️ ⚔️

                
உங்களுக்கு தெறிந்த வீர்மங்கை பெயர்கள் என்று கேட்டதற்கு பலர் கூறிய பதில் ஜான்சி ராணி, சிலர் வேலுநாச்சியார் என்றனர். ஆனால் குயிலி என்ற ஒரு பெண் போராளி இருந்தார் என்பது பலருக்கு தெரியாத உண்மை.  ஜான்சி ராணிக்கு முன்பே போர் புரிந்தவர் வேலுநாச்சியார். 1750ஆம் ஆண்டுகளில் மிக அதிகமான போர் வீரர்களை வைத்திருந்தார். அவரது படையான வளரி படை மற்றும் பெண்கள் படை தான் அவரது பலமே. வளரி படையை மருது சகோதரர்களின் கையில் கொடுத்து விட்டு, பெண்கள் படையை ஏற்று நடந்தும் பொறுப்பு குயிலிக்கு வழங்கப்பட்டது.சிறு வயது முதலே வேலுநாச்சியாரை பார்த்து பார்த்து தன் வீரத்தை வளர்த்தி கொண்டார் குயிலி. ஆங்கிலேயருக்கு எதிராக போர் புரிந்து கொண்டு இருந்த போது ஆங்கிலேயரின் ஆயுதங்கள் மிகவும் பலம் கொண்டவையாக  இருந்தது அதனை அழித்தால் தான் அவர்களை அழிக்க முடியும் என்ற நிலை உருவாக அதனால் அடுத்த நாள் அரண்மனையில் நடந்த அம்மன் பூஜையில் கலந்து கொள்வது போல் கோட்டைக்குள் நுழைந்தனர். ஆங்கிலேயர் எதிர்பாராத விதமாக நாச்சியரும் அவரது படையும் தாக்க ஆரம்பித்தது. தீடீரென்று உடம்பு முழுவதும் நெய் ஊற்றிய உருவம் ஒன்று ஆயுத கிடங்கில் நுழைந்து நெருப்பு வைத்துக்கொள்ள கிடங்கோடு சேர்ந்து ஆங்கிலேயரும் அழிந்தனர். அந்த  தற்கொலை போராளி வேறு யாரும் அல்ல வேலுநாச்சியாரின் தளபதியான குயிலி தான்.உலகில் முதல் தற்கொலை படை போராளியும் நம் தமிழ் வீரமங்கை குயிலி தான்.

18+👆👆👆


         

இன்றுசமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஒரு கேள்வி, 18+ உங்கள் ஓட்டு யாருக்கு என்பது தான். என்னை போன்ற பல கல்லூரி மாணவர்கள் ஓட்டு போடும் முதல் தேர்தல் இது. அடுத்த 5 ஆண்டு நம் நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் அந்த 5 நொடிகள் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
  நம்மை பாத்து நாம் கேட்டு கொள்ளும் முதல் கேள்வி
1.  இதற்கு முன் இருந்த அரசால் என்ன ஆதாயம் உண்டு. மக்களுக்காக என்ன செய்தனர். சாதாரண மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் கிடைத்ததா அல்லது பெரிய தலைகளின் குறுக்கீட்டால் நிராகரிக்கப்பட்டதா ?
 2. இதற்கு முன் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா?
3. தன் கட்சியை பிரபல படுத்தும் விதமாக செய்யப்படும் அனாவசிய செலவுகளுக்கு கூட்டத்திற்கும்  ஆறுதல் அளிக்க கூடாது. ஏனென்றால், உண்மையில் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய விரும்புவார்கள் ஒரு செயலை செய்து விட்டு  இதை நான் தான் செய்து உள்ளேன் என்று மேடையில் ஏறி கூவ தேவை இல்லை அது உண்மையில் செய்ய பட்டு இருந்தால் அது தானாகவே மக்களை சென்று அடையும் ஏனென்றால் பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை.
4. மேலும் இறுதியாக உறுதியாக அழிவின் விழும்பில் இருக்கும் பெண்கள் இனத்தை பாதுகாக்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு தான் எங்கள் ஓட்டு. 
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை. எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல.


வியாழன், 28 பிப்ரவரி, 2019