செவ்வாய், 21 ஜனவரி, 2020

மழலைச் செல்வம்

தாயின் கருவறையில் உருவாகி
தங்கத் தாமரைபோல் முகம்மலர்ந்து
முத்துப் பற்களில் சிரித்து
முல்லை வண்ண வடிவம் கோர்த்து
கடல் அலையாக தவழ்ந்து
கொடியினைப் போலக் கைகளை நீட்டி
தேனில் நனைந்த பழத்தையும்
நிலவைப் பிழிந்துவைத்த பாலையும்
மேலே கிண்ணத்திலே உண்ண வா
என் அன்பு மழலைச் செல்வமே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

திங்கள், 20 ஜனவரி, 2020

தமிழ் மீது பற்று

பிறக்கையிலே நான் பிடி கொண்டேன்
தாய் தழுவையிலே நான் விழி கொண்டேன்
தந்தை அழைக்கையிலே நான் செவி கொண்டேன்
தாமரை மலர்கையிலே நான் மதி கண்டேன்
தமிழே உன்னைப் படிக்கையிலே
உன் மீது நான் பதி கொண்டேன் 

திங்கள், 13 ஜனவரி, 2020

இறப்பில் தான் பிறப்பு

இன்பமான வீட்டில்,
         இனிக்கும் சொந்தங்கள்,
இனிமையான நாட்டில்,
         இருக்கும் பந்தங்கள்,
இறப்பின் முடிவு,
         இனியொரு பிறவியின் தொடக்கம்,
இருளின் தேடல்தான்
           வெளிச்சம் என்ற வெற்றி !
இவ்வையம்  மூழ்கட்டும்,
            மகிழ்ச்சியில் நிறையட்டும்,
நெகிழிச்சியினம் தொடரட்டும் .........

வெள்ளி, 10 ஜனவரி, 2020

கண்களில் தோன்றிய முகம்

பூமியில் சூரியன் உதிக்க மறந்தாலும்
பூக்கள் எல்லாம் மலர்வதற்கு மறந்தாலும்
பூமிக்கு மழை வராமல் இருந்தாலும்
கடல்அலை என்னைத் தீண்டாமல் போனாலும்
என் கண்களில் தோன்றிய உன் முகம்
என்றும் மறையாது

என்னுள் வந்த மாற்றமோ

நீ என்னைப் பார்த்தபோது
உன் விழி அம்பு எந்தன்
இதயத்தைத் துளைத்தது

கண்களில் கண்ணீராய் வழிந்தது

நான் பார்த்த இடம் எங்கும்
இருள் சூழ்ந்து இருந்தது
உன் பார்வை பட்டதும்
ஒளியாக அனைத்து இடங்களும் மின்னின

நாட்கள் குறைந்தாலும்
உன்னைப் பார்த்த பார்வை குறையவில்லை
இது எல்லாம் என்னுள் வந்த மாற்றமோ

வெள்ளி, 3 ஜனவரி, 2020

கற்பின் வகைகள்

1.தலைக்கற்பு
2. இடைக்கற்பு
3.கடைக்கற்பு

நற்றிணை குறிக்கும் மன்னர்கள்

அத்தியமானஞ்சி
அழிசி 
ஆய் அண்டிரன் 
உதியன் 
ஓரி  
காரி  
குட்டுவன் 
சேந்தன் 
நன்னன் 
பாண்டியன்நெடுன்செழியன்  

நட்பு

நாளைய வெற்றியை நோக்கி
செயல்படும் நீ
இன்றைய பிரிவை நினைத்து
கலங்காதே என் தோழி

செவ்வாய், 24 டிசம்பர், 2019

பயணங்கள்

பயணம் என்றாலே பிடிக்காதவர்கள் உண்டா? 
பேருந்தின் ஜன்னல் ஓர பயணம்..
தொடர்வண்டியின் வளைவுகளுடன் பயணம்..
இருசக்கர வண்டியின் இரவு நேர பயணம்..
நான்கு சக்கர வண்டியின் நெடுந்தூரப் பயணம்..
இருகால் துணையோடு இருகரங்களை இணைந்தபடி  மெல்லிய பயணம்..
குழந்தையின் தத்திதவழும் பயணம்..
ஆகாயத்தில் மேகத்தினுள் நுழைந்தபடி இன்ப பயணம்..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
ஏனென்றால் பயணம் என்பது பிறப்பில் தொடங்கி மரணம் வரை விடைத் தெரியாமல் போகும் ஒரு வழியாகும்..
எனவே போகும்வரை இரசித்து கொண்டே செல்வோம் நமது பயணங்களை ..
பயணங்களை அனுபவத்துடனும் பயனுடவும் சென்றிடுவோம்..வாழ்ந்திடுவோம்..

வெள்ளி, 20 டிசம்பர், 2019

சிறுபஞ்சமூலம்

சிறுவழுதுணை
நெருஞ்சி
சிறுமல்லி
பெருமல்லி
கண்டங்கத்திரி

திருக்குறள் காட்டும் காதல்

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர் எங்காத லவர் 

இயற்கை

மலைக்குப் போர்வை போர்த்தி விட்டது  மேகம்
தாலாட்டுகின்றது  மழை 

வியாழன், 19 டிசம்பர், 2019

காலம்

ஒரு சில நேரங்களில்
ஒரு சில தருணங்களில்
எதிரி நண்பனாகவும்
நண்பண் எதிரியாகவும்
மாற்றிவிடும்