புதன், 25 செப்டம்பர், 2019

சேதி

பாடியது பாதி

பாடுவது மீதி

நாடே நம் வீதி

நன்மை தரும் நீதி

நட்பே நம் ஜாதி

இதுவே என் சேதி

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

இல்லை

நீ ஒன்றும் அழகில்லை

அழகால் எதுவும் பயனில்லை

உன் அறிவிற்கோர் எல்லையில்லை

ஆனாலும்
அதை நீ வாடவிடுவதில்லை

நீ அன்பிற்கு அணையிட
அது ஒன்றும் ஆற்றோர அலையில்லை

உனக்கு ஆட்கடலினும்
சுமை கொள்ளை

ஆனாலும்
அதை நீ பொருட்படுத்தவில்லை

எனவே
நீ வெற்றியை  விட்டதில்லை
தோல்வியைத் தொட்டதில்லை

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

என் ஆசிரியை

என் செவிலித்தாயே

என்னை நீ
ஜொலிக்கச் செய்தாயே

நீ ஓர் பெண் மகளின் தாயே

எம்முள் ஓர் பொன்மகளும் நீயே

உன் ஆற்றல் உன் மேனி

அச்சமின்றிப் பணியாற்றலாம் வா நீ

உந்தன் சிரிப்பே உனக்குச் சிறப்பு

உந்தன் உன்னதமே -இங்கு
தோன்றுது எனக்கு

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

காலம்

வாழ்ந்த காலம்
கவிதையைப் போன்றது

வாழும் காலம்
கடிதமாய் ஆனது

வாழ்க்கையே ஓர்
கதைபோலத் தோன்றுது

அன்புள்ள ஆசிரியருக்கு

அன்புள்ள ஆசிரியருக்கு

அன்பளிப்பு அளிப்பதற்கு

ஆசான்வில் தொடுப்பதற்கு

அமுதமதில் தெளிப்பதற்கு

அர்த்தங்களை உரைப்பதற்கு

ஆசான்களே கூடி வருக

எமக்கு அறிவுப்பொருள் தந்து அருள்க

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

வீழ்ந்தேன்

என் கண்கள் என்ன பாவம் செய்தன

உன்னைக் காணாது தவிக்கின்றன

என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது

ஏன் பஞ்சம்
 உன்னை காணாமலா
நீ சொல் கொஞ்சம்

இதுவே முடிவா
நம் காதல் என்ன சிதறிய கடுகா

விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழ்ந்தேன் தலைவா

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல் 

சிறந்தது

குயிலின் அழகை விட
மயிலின் அழகு சிறந்தது

மயிலின் குரலை விட
குயிலின் குரல் சிறந்தது

குறையை நிறையால் வெல்வதே
வாழ்வில்  மிகவும் சிறந்தது

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

ஓடு

உயிர்வாழு உறவோடு

உன்னதம் உன் உயர்வோடு

உமக்காக விரைந்தோடு

வேர்த்தாலும் கரைந்தோடு

காற்றோடு கலந்தோடு

காயங்கள் கடந்தோடு

தலைக்கனம் தவிர்த்தோடு

சரிந்தாலும் மீண்டும் - நீ
எழுந்தோடு

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்
நவரத்தினம்;
மரகதம்
மாணிக்கம்
முத்து
வைரம்
வைடூரியம்
கோமேதகம்
நீலம்
பவளம்
புட்பராகம்

முயற்சி

இயற்கையான அழகைச்
செயற்கையாலே பெறலாம்

தேர்ச்சி என்னும் பலத்தைப்
பயிற்சியாலே பெறலாம்

முயற்சி என்ற கடலே
இமயமலை எனலாம்

பவித்ரா வெங்கடேசன்
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சிரி

சிரித்து கொண்டே இரு
சிலருக்கு புரியட்டும்
உன் மீது உனக்கு இருக்கும்
நம்பிக்கை....

ஆயிரம் உறவுகளால் தர முடியாத பலத்தை ஒரு அவமானம் தரும்...!

ஈரம் காய்ந்த இயந்திர உலகில் காதலா

நீ என்னைச் சந்தித்தாய்
காரும் பாரும் நிறைந்த பாரிலே
ரசாயனக் கலவை நீர் இட்ட முட்டைகள் பறக்க
பாதையின் பள்ளத்தில் இருந்த நீரோ
பணக்காரப் பாரியின் அன்பளிப்பாய்
பாமர மக்கள் படையின் மீது தெறிக்க
கொடைகாத்த வள்ளல் வாழ்ந்த
நம் பாரின் மீது பற்றுடைய நான்
பாலிதின் கவரிலான குடை கொண்டு
பாதையில் சென்ற பள்ளிக் குழந்தையைக் காக்க
நீ என்னைப் பார்க்க 
உன் பருவத்தின் உணர்ச்சி உனைச் சரிக்க
பக்கபலமாய்  உன் பார்வை
என் உருவத்தினைப் பதிவிறக்கியது
4-ஜி  பாஸ்ட் நெட் ஒர்க் போல
மறுபிறப்பு மானுடத்தின் சிறப்பன்றோ
நீ என்னை மீண்டும் சந்தித்தாய்
நான் உனைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற
ஒருநொடிக்காக ஒருத்தவம் நீயிருக்க
உன் பின்னால் நீ பார்க்கவில்லையே
இயந்திரமாய் வேலைசெய்த வாகன ஓட்டுனர்
ஒரு நொடி இமைக்கு இரக்கம் காட்ட
உன் இரத்தம் ஈரம் காய்ந்த
இயந்திர உலகிற்கு நீரூற்றியது
இப்போது
நான் திரும்பிப் பார்க்கிறேன் உன்னை அல்ல
முன்ஜென்மத்தில் வண்டியிழுத்த மாடு
மஞ்சள் நிற மாறு வேடமிட்டு
வாகனமாய் மறுபிறப்பெடுத்துத்
தன்னை மறந்தவர்களுக்குப் பாடம் புகட்ட
உன்னைப் பலியிட்டு
மரணத்தால் தன்னை நினைவூட்டியது
இன்றாவது திரும்பிப் பார் மானிடா
அழிந்து கொண்டிருப்பது
மாடுகளின் இனம் அல்ல
நன்றி மறந்த மானுடனின் மானம்
சிந்தித்துச் செயல்படுவோம் - நம்
சந்ததியருக்கு வழி கொடுப்போம்

பவித்ரா வெங்கடேசன்,
இளநிலை மூன்றாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்.