செ.வைசாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செ.வைசாலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

தாலி கட்டுவது ஏன்..?


தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சு நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதையும், இரண்டாவது முடிச்சு குலப்பெருமையை நீ பாதுகாப்பாய் என்பதையும், மூன்றாவது முடிச்சு குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

திறமைக்கான வரவேற்பு அழைப்பிதழ்..!!


கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 24.02.2017 அன்று வணிகவியல் மற்றும் வணிகக் கணினிப்பயன்பாட்டியல் துறை இணைந்து நடத்த இருக்கும் சாணக்கியா என்ற தலைப்பில் வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.வணிகவியல் துறையைச் சார்ந்த இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியின் இறுதியில் பரிசுத் தொகையும், சான்றிதழும்  வழங்கப்படும்.

போட்டிகளுக்கான குறிப்பு; மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.தேநீர் வழங்கப்படும்.

முன்பதிவிற்கான கடைசி தேதி ; 21.02.2017


அனுமதி இலவசம்..   

                                         

செவ்வாய், 17 ஜனவரி, 2017

பாரதம் யார் பிடியில். .??




நேற்றைய பாரதம்
ஆங்கிலேயர் பிடியில். ..!!

இன்றைய  பாரதம்
அரசியலின் பிடியில். ..!!

நாளைய பாரதம்
யார் பிடியில். ..???

இனியொரு விதி செய்வோம். ..!!!



செவ்வாய், 10 ஜனவரி, 2017

யார் இந்த விவசாயி..???








1031 - சுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது. எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது.
1032 - உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
தெழுவாரை எல்லாம் பொறுத்து.
பல்வேறு தொழில் புரிகின்ற மக்களின் பசி போக்கிடும் தொழிலாக உழவுத் தொழில் இருப்பதால் அதுவே உலகத்தாரைத் தாங்கி நிற்கும் அச்சாணி எனப்படும்.
1033 - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
உழுதுண்டு வாழ்பவர்களே உயர்ந்த வாழ்வினர்; ஏனென்றால், மற்றவர்கள் அவர்களைத் தொழுதுண்டு வாழ வேண்டியிருக்கிறது.
1034 - பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள்.
1035 - இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.
1036 - உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கும் நிலை.
எல்லாப் பற்றையும் விட்டுவிட்டதாகக் கூறும் துறவிகள்கூட உழவரின் கையை எதிர்பார்த்துதான் வாழ வேண்டும்.
1037 - தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
1038 - ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
உழுவதைக் காட்டிலும் உரம் இடுதல் நல்லது; களை எடுப்பதும், நீர் பாய்ச்சுவதும் மிகவும் நல்லது; அதைவிட நல்லது அந்தப் பயிரைப் பாதுகாப்பது.
1039 - செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்
தில்லாளின் ஊடி விடும்.
உழவன், தனது நிலத்தை நாள்தோறும் சென்று கவனிக்காமல் இருந்தால், அவனால் வெறுப்புற்று விலகியிருக்கும் மனைவிபோல அது விளைச்சலின்றிப் போய்விடும்.
1040 - இலமென் றசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
வாழ வழியில்லை என்று கூறிக்கொண்டு சோம்பலாய் இருப்பவரைப் பார்த்துப் பூமித்தாய் கேலி புரிவாள்.

இத்தகைய உழவனையும் உழவுத் தொழிலையையும் எண்ண மறக்கலாமா..?? 

வியாழன், 29 டிசம்பர், 2016

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம்..!!



Image result for முதலீடு

கணக்கில் காட்டாத பணத்தை நாளைக்குள் முதலீடு செய்யலாம் வருமான வரித்துறை அறிவிப்பு | 'கணக்கில் காட்டப்படாத ரொக்கம் வைத்திருப்பவர்கள் பிரதம மந்திரி ஏழைகள் நலத் திட்டம் 2016-ன் கீழ்வரும் 30-ம் தேதிக்குள் அத்தொகையை வங்கிகளிலோ, தலைமை அஞ்சல், துணை அஞ்சல் நிலையங்களில் முதலீடு செய்யலாம்' என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 

இது குறித்து, மேலும் அறிந்துக் கொள்ள; http://alleducationnewsonline.blogspot.in/2016/12/blog-post_47.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed:+Kalvisolai-No1EducationalWebsiteInTamilNadu+(Kalvisolai+Education+News+Online)

சனி, 17 டிசம்பர், 2016

பெண்களுக்கு மிகச் சிறந்த ஆரோக்கியம்..!!

பனைப்பொருளான கருப்பட்டி, பெண்களுக்கு மிகச் சிறந்த ஆரோக்கிய தரும் பொருளாகும்.

பருவம் அடைந்த பெண்களுக்குக் கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுத்தங்களி செய்து கொடுத்தால், இடுப்பு வலிமை அடைவதுடன், கர்பப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.

சீரகத்தை வறுத்து சுக்கு, கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

ஓமத்தைக் (ஓமம்) கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் கீழ்வயிற்று வலி, வாயுத் தொல்லை நீங்கும்.

குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித்தொல்லை நீங்கும்.

காபிக்கு சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால், உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால், சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.



புதன், 14 டிசம்பர், 2016

பெண்ணின் சில நாட்கள்

எங்கள் கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப்பேராசிரியர் கோ.தவமணி அவர்களால் எழுத்தப்பட்ட கவிதையை பகிர உள்ளேன்..

சனி, 10 டிசம்பர், 2016

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம்..!!


Image result for anna university

தள்ளிவைக்கப்பட்ட பொறியியல் தேர்வுகளின் புதிய தேதி விவரம் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு | அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கனமழை, முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவு மற்றும் பொது விடுமுறை காரணமாக, தள்ளிவைக்கப்பட்ட இளங்கலை, முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான தேர்வுகள் பின்வரும் தேதிகளில் நடத்தப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகள் மற்றும் புதிய தேதிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வியாழன், 1 டிசம்பர், 2016

உணவு பழமொழி..!!


குறள்;945

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

விளக்கம்;

ஒருவன் உடம்பிற்கு ஒவ்வாத உணவுகளை விலக்கி உண்டால்,அவன் உயிர்க்கு நோயால் வரும் துன்பம் இல்லை.