ஈ.கன்னிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈ.கன்னிகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஜனவரி, 2020

அன்பே

என்னை யாரென்று கேட்டாயே
நான் யாரென்று உனக்குத் தெரியாதா
உண்மை தெரிந்
தால் என்னிடம் திரும்பி வருவாயா
எப்பொழுது உன் அன்பை என்மீது காட்டுவாய்
அதுவரை உன் அன்பிற்காகக் காத்திருப்பேன்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

நட்பு

மழை வந்தால் மண் மணம் பெருகும்
தாய் என்றால் மனதில் பாசம் வரும்
தந்தை என்றால் புது நேசம் வரும்
மழை வந்தால் மயில்கள் தோகை விரியும்
உலகைப் புரிந்துகொள்ளக் காலம் வரும்
என் நட்பைப் புரிந்துகொள்ள அன்பு மட்டுமே வரும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

உலக வாழ்க்கை

நாட்கள் நகருகின்றன அதன் பாதை காலம்
காலத்தின் கைகளில்தான் நம் வாழ்க்கை
வாழ்க்கையின் முடிவு செல்லும் பாதை கடவுள்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

அன்பு

மரம் வளர வருடம் போதும்
நெல் வளர மாதம் போதும்
செடி வளர வாரம் போதும்
கொடி வளர நாட்கள் போதும்
என் அன்பை நீ புரிந்துகொள்ள
ஒரு நொடி போதும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மனம் மாறவில்லை

காலங்கள் மாறினாலும்
கனவுகள் மாறினாலும்
என் கடமைகள் மாறினாலும்
உன்னை நினைத்த
என் மனம் மட்டும் மாறவில்லை

முத்து

சிப்பியின் வயிற்றில் பிறந்த முத்தே
கடல் அலையைத் தழுவி விளையாடி
நிலவின் வடிவம் பெற்ற
மின்னிய ஒலியுடன் கரை சேர்ந்து
நூலுடன் நட்பினால் இணைந்து
பெண்ணின் கழுத்தில் அணிகலனாய்த் திகழ்கின்றாய்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மலர் முகம்

அல்லியைப்போல் முகம் மலர்ந்தது
சிவப்பு ரோஜாவைப்போல் இதழும்
சங்குப் பூவைப்போல் காதுகளும்
முருங்கைப் பூவைப்போல் மூக்கும்
மொட்டுகளைப்போல் இருவிழிகளும்
முத்து மல்லியைப்போல் பற்களும்
மலர் இதழ்களில் விழும் கோடுகளைப்போல் நெற்றியில் வாக்கும்
வண்ணமலர் எல்லாம் பெண்ணின் முகம் ஆகும்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மதிமுகம்

வெள்ளைத் தாமரை விரிந்த முகம்போல நிலவு வந்தது
மேகக்கூட்டம் வானில் படர்ந்து நின்றது
உதிர்ந்த முத்துகள் விண்மீனாய்ச் சிதறின
சுற்றிலும் கார் இருள் சூழ்ந்திருக்க
விண்மீன்கள் கோலம் இட்டிருக்க
இரவு வந்தது புவியை உறங்கவைக்க

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

சாலை

நாட்டில் என்ன மாறியது?
நாட்கள் மட்டும் ஓடியது
நாம் நடப்பதற்குச் சாலையா?
நம்மை அழிப்பதற்குச் சாலையா?

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

கதிர் அறுப்போம்

காத்திருந்து நாத்து நட்டு
ஏர்பிடித்து காட்டில் களையெடுத்து
நீர் பாய்ச்சி உரம் போட்டு
கண்ணைப்போல் நெல்மணியைப் பார்த்து
மூன்று திங்கள் காத்திருந்து
முதல்நாள் அன்று கதிர் அறுத்து
உயிரைப்போலப் பயிரைக் காத்து
ஊரோடு சேர்ந்து உண்ணலாம்

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

மழலைச் செல்வம்

தாயின் கருவறையில் உருவாகி
தங்கத் தாமரைபோல் முகம்மலர்ந்து
முத்துப் பற்களில் சிரித்து
முல்லை வண்ண வடிவம் கோர்த்து
கடல் அலையாக தவழ்ந்து
கொடியினைப் போலக் கைகளை நீட்டி
தேனில் நனைந்த பழத்தையும்
நிலவைப் பிழிந்துவைத்த பாலையும்
மேலே கிண்ணத்திலே உண்ண வா
என் அன்பு மழலைச் செல்வமே

ஈ.கன்னிகா
இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்

வெள்ளி, 10 ஜனவரி, 2020

கண்களில் தோன்றிய முகம்

பூமியில் சூரியன் உதிக்க மறந்தாலும்
பூக்கள் எல்லாம் மலர்வதற்கு மறந்தாலும்
பூமிக்கு மழை வராமல் இருந்தாலும்
கடல்அலை என்னைத் தீண்டாமல் போனாலும்
என் கண்களில் தோன்றிய உன் முகம்
என்றும் மறையாது

என்னுள் வந்த மாற்றமோ

நீ என்னைப் பார்த்தபோது
உன் விழி அம்பு எந்தன்
இதயத்தைத் துளைத்தது

கண்களில் கண்ணீராய் வழிந்தது

நான் பார்த்த இடம் எங்கும்
இருள் சூழ்ந்து இருந்தது
உன் பார்வை பட்டதும்
ஒளியாக அனைத்து இடங்களும் மின்னின

நாட்கள் குறைந்தாலும்
உன்னைப் பார்த்த பார்வை குறையவில்லை
இது எல்லாம் என்னுள் வந்த மாற்றமோ

திங்கள், 16 டிசம்பர், 2019

இனிமையான நினைவுகள்

வார்த்தை சொல்லமுடியாத நொடி
உன்னைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட வலி
கால்கள் கூறுகின்ற வார்த்தையைக்
கண்கள் கேட்க மறுத்தது
அத்தனைபேர் இருந்தும்
உனக்கும் எனக்கும் ஒரு தனிமை
நீ என்னைப் பார்க்கவில்லை
நான் அந்த இடத்தில்
உன்னை மட்டுமே பார்த்தேன்
பார்த்ததை வெறுக்க முடியவில்லை
நினைத்ததை வெறுக்க முடியவில்லை
இதிலிருந்து மீள்வதற்கும் வழி இல்லையே

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

தேடியது கிடைக்குமா

கண்கள் தேடியபொழுது
பார்வை கிடைக்கவில்லையே
கால்கள் நடக்கும்போது
பாதை தெரியவில்லையே
பேசத் துடித்தபோது
வார்த்தை தோன்றவில்லையே
எண்ணம் மாறிவிட்டது
மனம் மட்டும் மாறவில்லையே

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

கதிரவன்

மலர்கள் பூக்கத் தொடங்கின
சேவல் கூவத் தொடங்கியது
இருள் மறையத் தொடங்கியது
உலகம் விழிக்கத் தொடங்கியது
செங்கதிரவன் வருகிறான்

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.