வியாழன், 12 மார்ச், 2020

இன்றைய தினம்

இன்றைய  தினம் 
       ஏர்ல் நைட்டிங்கேல் பிறந்த தினம்
       உலக சிறுநீரக தினம்
திறனாய்வு வகைகள்
1.விதிமுறைத் திறனாய்வு
2.முடிபுமுறைத் திறனாய்வு
3.ஒப்பீட்டு முறைத் திறனாய்வு
4.வரலாற்று முறைத் திறனாய்வு
5.விளக்கமுறைத் திறனாய்வு
6.முருகியல் முறைத் திறனாய்வு
7.மதிப்பீட்டு முறைத் திறனாய்வு
8.வாழ்க்கை வரலாற்று வழித் திறனாய்வு
9.உளவியல் முறைத் திறனாய்வு
10.நலம் பாராட்டும் திறனாய்வு
ஸ்டாலின் 
       ஆற்றல்களில் மிஞ்சிய ஆற்றல் மனிதனின் மன ஆற்றல் தான்.
வில்லியம் பென்
        வேதனையின்றி வெகுமதியில்லை, முள் இன்றி அரியனை இல்லை.
இன்றைய வெளிச்சம் 
        அடிமையைப் போல் உழைப்பவன் அரசனைப் போல உண்பான்.
        உற்சாகமான உழைப்பு இல்லாமல் உயர் வெற்றி எதையும் சாதிக்க முடியாது.

வெள்ளி, 6 மார்ச், 2020

தன்னாட்சியை இழந்த நமக்கு
தமிழர்  என்ற பெயர் எதற்கு ?

                   தமிழர் தமது குல தொழில்களை பரம்பரை ,பரம்பரையாக செய்து கொண்டு அவரவர் பழக்க ,வழக்கங்களை பின்வரும் சந்ததியருக்கு கற்பித்து வாழ்ந்து வந்தனர் .
                   எவரும் ஒருவருக்கொருவர் சாலைப்பிள்ளை என்று தன்னாட்சியாக நின்று உழைத்தனர் .அவரவர் கடமைகளை கருத்தோடு செய்வதுமட்டுமின்றி, திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டனர்.  அனால்,          இன்றோ விவசாயின் மகன்! பர்கர்,பீசாவை கேட்கிறான்!
                   சோற்றையும், சேற்றையும் வெறுக்கிறான்.பட்டினம் தேடி பட்டினி கிடக்கின்ற இந்நிலைக்கு நாம் தலைப்படவில்லை நாமே துள்ளிக் குதித்துவிட்டோம்.
                   தமிழர் வலிமையிலும்,திறமையிலும் பிறரை பார்த்து போட்ட காலம் போய் வாகனங்களையும்,வசதிகளையும் பார்த்தும் பேராசைக் கொள்கின்றனர்.
                  நெல்லின் இடுப்பொடியாமல் நுட்பமாக சேற்றில் ஊன்றிய காலம் போய் இன்று தொழிலநுட்பம் என்ற பெயரில் நம் இடுப்பெலும்பு ஊனற்று போக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
                  இயற்கையினை பாதுகாக்க ஊரோடு இணைந்து செய்யப்பட்ட நாம், இன்றளவில் இல்லறத்தையே விட்டு விலகி இல்லம் சேரா அனாதைகளாய் வாழ்கிறோம்.
                  ஏழைகளின் முகத்தில் இறைவனை காண சொன்ன காலங்கள் மாறி இப்போதெல்லாம் ,இறைவனே ஏழைகளை தன்னை தரிசிக்க கட்டணமின்றி அனுமதிப்பதில்லை.
                 ஐந்து முதல் எட்டு நபர்கள் வரை பயணிக்கும் மாட்டுவண்டி ஏற்படுத்தாத காற்று மாசுபாட்டை இன்று தனி ஒருவரின் இருசக்கர வாகனம் ஏற்படுத்துகிறது.
                 தானாய் விளைந்த புல்லிற்கு பதிலாய் பால்,தயிர்,நெய் மற்றும் உரமாக சாணம் என எண்ணற்ற இயற்கை பொருட்களை தந்த மாடுகளை விட்டுவிட்டு.
                காற்றை மாசுபடுத்தும் இயந்திர வாகனத்திற்கு செலவு செய்து வருகிறோம் .
அழிந்து வருவது மாடுகளின் இனம் அல்ல! 
மனுடனின் மானம்!
                எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவிய கரங்கள், இன்று யாசிக்கின்ற நிலைமைதான் ஏனோ?
சுய தொழில் செய்வதை விட்டு! 
சுக வாழ்வு கேட்ட தமிழன் !
                 இன்றைக்கு தன சுயமரியாதையை விட்டு சுயநலத்திற்காக வாழ்ந்து வருகின்றார்.
                  சுக துக்கங்களை விட்டு சுற்றத்தோடு இன்பமாய் வாழ்ந்த தமிழன். இன்று சுதந்திரம் இழந்து தனது குடும்பத்துடனும் எவ்வித இணைப்பும் இன்றி பிறரின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து தன்னை தானே தாழ்த்தி வருகிறான்.
                 ஒற்றை பிடி சோற்றில் பங்கு போட்ட தமிழர்,ஒன்றாக கூடிய காட்சியை தான் நம் இன்று காணாமல் விடுகிறோம்.
                 தமிழன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதிலும் கூட தன்னாட்சியாக வாழ்ந்தான்। தன் வீட்டிற்கு தானே ராஜாவாக இருந்தான்.தன் தொழிலுக்கும் முதல்வனாய்,தனக்கு வேண்டிய பொருளை தானே தேடி, தன்னம்பிக்கையை கைவிடாதும் இருந்தான்.
                  முயற்சிகளுக்கு இடைவிடாது செயல்பட்டான் முயன்றதில் கிடைத்ததை மூலதனமாய் கொண்டான். முயற்சி பல மேலும் செய்து முதன்மை நிலையை தானாய் வென்று இருந்தான்.
தன்னாட்சியாய்! தனித்துவமாய் !
தனிமனிதனாய்! தமிழனாய்!
இன்றோ தன்னாட்சியை இழந்து தமது பெயரில் மட்டும் தமிழர் என்பதனை வைத்து வருகின்றனர்। நம் கொள்கையை பின்பற்றா நமக்கு தமிழன் என்ற பெயர் எதற்கு ?

இமயமலை

இயற்கையான அழகை
செயற்கையாலே பெறலாம்..
தேர்ச்சி என்னும் பலத்தை
பயிற்சியாலோ பெறலாம்
முயற்சி என்ற கடலே
இமயமலை எனலாம்.

3.1.2020 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

புதன், 4 மார்ச், 2020

சங்க தமிழரே ! சரிக்கின்ற தமிழரே !

                     சங்க கால தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்து சரித்திரம் படைத்தனர். இன்றோ ஆங்காங்கே இருக்கும் பள்ளிக் கூடங்களில் கற்பிக்கப்படும்.  நமது தாய் மொழியான தமிழ் வழி கல்வியை நாமே ஏற்க மறுக்கின்றோம்.
                     வெளிநாட்டவர் இங்கு வந்து தமிழ் கற்று அதனை தங்கள் நாடுகளில்,அவரவர் மொழிகளில் மொழி பெயர்த்து கொண்டனர்.ஆனால், தமிழ் மண்ணில் பிறந்து வாழ்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களாகிய நாமே தமிழ் வழிக்கல்வியை வெறுக்கின்றனர்.
             வரலாற்றை புரட்டி பார்த்தால் சாதனைகள் எத்துணை சரித்திரங்கள் எத்துணை இருகின்றது நம் தமிழ் மண்ணில் விமானத்தை கண்டெடுக்கும் முன்னரே புராணக்கதைகளில்  பறவைகளை வாகனமாக கொண்டு விண்தொட்ட காட்சிகள் தான் மறக்குமா நமக்கு !
சங்கம் வைத்த தமிழனின் ,சரித்திரத்தை உடைக்கும் நிகழ் மனிதர்களே !
            சாதனைகள் பல புரிந்து தனிமொழியாய் விளங்கி , மொழிகளில் சிறந்தது நம் தமிழ் மொழி . சோதனைகள் பல கடந்து சரித்திரத்தை படைத்தது நம் தமிழ் குலம்.
                  தமிழரின் சிந்தைக்கு நிகரென ஏதேனும் உண்டா 
                       ஒழுக்க நெறிக்கு குருகுலம் ,ஓங்கி உயர்ந்த மலைகளின் இயற்கை வளம் , பண்பாடு போற்றும் தனிக்குலமே நமது தமிழரின் குலம்
பெரியோர் சொல்லுக்கு எதிர்ப்பில்லா இருந்த நமது சமூகம் இன்று பெற்றவர்களையே மறுத்து ,மறந்தும் வருகிறது.
                    வீரம் கோபமாய் மாறியது ,விவேகம் மூடமாய் மாறியது , எண்ணங்கள் எண்ணிக்கைகளில் அடங்கியது. இந்நிலை நீடித்தால் சரித்திரம் பேசிய தமிழர்களின் வாழ்வு ।நமது தலைமுறையோடு  முடிந்துவிடுமா।
எல்லோரும் வெளியூரில் வேலை செய்து அடிமைகளாய் வாழ்வதை காட்டிலும் .உன் ஊரில் நீ உனக்கு வேண்டியதை செய்து மகிழ்வோடு வாழ்வதே மேல்.
இதனை , அறியா இன்றைய தமிழ் சமூகம் சீர்குழைந்த நிலையை எய்தியுள்ளது.இந்நிலையை போக்க வேண்டும்.
தமிழன் வாழ்வதற்காக பிறந்தவனல்ல ஆள்வதற்காக பிறந்தவன் என்பதனை அனைவருமே உணர வேண்டும் !
இன்றளவில் ,பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை சரியான வழியில் நடத்துவதாக எண்ணி எந்தவிதமான சமுதாய இன்னல்களிலும் ஈடுபடாமல்। தமது சுய வாழ்வை வாழ்ந்துவருகின்றனர் .
முறைகேடுகளை தடுக்கும் முயற்சிகளை விட்டுவிட்டு ஒருவருடன் ஒருவர் எந்தவித தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர் .
சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று கேட்டு திரியும் தமிழர்களாகிய நாம் சட்டங்கள் நிறுவப்படாத காலத்தில் நமது சங்க தமிழர்கள் படைத்த சாதனைகளையும் ,போதனைகளையும் செவியேறா கதைகளாய் கொண்டுள்ளனர்.
இன்று உங்கள் செவிகளில் ஏற துடிக்கும் இதுபோன்ற சரித்திரம் சரியவில்லை .நாளை நீங்கள் படைக்க காத்திருக்கும், வரலாரே சரிந்து கொண்டு தான் இருக்கிறது .
நமது சரித்திரத்தை பாதுகாக்க வேண்டியது நம் கடமை ।நமது கடமையை நாம் செய்ய எந்த தயக்கமும் கொள்ளக் கூடாது.
துணிவுடன் செயல்பட்டு ,துன்பங்களை அகற்றி பிறருக்கு தூணாக நிற்பதே நமது வழக்கம் .அதனையே, நாமும் பின்பற்றுவோம் .
சரிவிலிருந்து மீண்டும் எழுவோம் ,தாய் மொழியையும் ,தாய் நாட்டையும் வரலாற்று பெட்டகங்களில் நிகழ்வாக பதிவிடாது ।நிலையான  சரித்திரமாக மாற்றுவோம் .
சங்க தமிழனுக்கே தலை வணங்குவோம் !

               தமிழ் நூல்களும், தமிழர் வாழ்வும்

                   உலகில் எங்கு  சென்று பெற்ற இயலாத வாழ்க்கை தத்துவ நெறிகளை தொகுத்து வழங்கிய சிறப்பு மிக்க செம்மொழி நம் தாய்மொழி.
                   ஐய்யன் வகுத்த திருக்குறளில் இல்லா நெறி அவரது ஈரடி குறளில் இல்லா வழி வாழ்க்கை இதில் மீதும் ஏதேனும் உண்டோ. இன்று நமது  சமூகத்தில் ஏற்படும் அத்துணை இல்லற பிரச்சனைகளுக்கும் நாம் இவ்வாறான நூல்களை தவிர்ப்பதேயாகும்.
                      பகவத்கீதையில் இருக்கும் வாழ்வியல் செயல்திட்ட தத்துவங்கள் ஜென்மங்கள் கடந்து செய்ய  வேண்டிய அறநெறிகளை வலியுறுத்துகிறது.
                      அன்றைய தமிழர்கள் அனைவருமே அதனை கற்று, அதன் நுட்பத்தினை ஏற்று வாழ்க்கையை இன்புற்று வாழ்ந்தனர்.
                      ஆனால், இன்றோ திரைப்படத்தின் மோகத்திற்கு ஆளாகி தமது வாழ்க்கையில் தோற்று அனைத்து விதமான தீமைகளிலும் எளிதில் ஈடுபட்டு வருந்துகின்றனர்.
                       குழந்தைகளை வளர்க்கும் வேளைகளில் தொலைநோக்கு சிந்தனைகள் இன்றி செயல்பட்டு அவர்களையும் வழிநடத்த தவறிவிட்டனர்.அந்தந்த சமயங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாட்டுடன் அனைத்து மக்களும் செயல்பட்டு மகிழ்வோடு வாழ எழுதிய நூல்களை படித்து பயன்பெறாது.
                        சாதி,சமயமாய் மாற்றி ஒரு சில சுயநலவாதிகளால் பொதுமக்களின் வாழ்வியல் நெறிகளை  சிதைத்துவிட்டனர்.  இந்நிலையினை போக்க வேண்டும்.
                        நம் முன்னோர்கள் எவ்வித வேறுபாடும் கருதாமல் சகோதரத்துவத்தினை வளர்த்துவிட்டனர்  இன்றோ உடன்பிறந்த சகோதர்களே வேற்றுமையுணர்வுடன் செயல்பட்டு வருகின்றனர்.
                         நாம்,நமது முன்னோர்கள் வாழ்ந்த வரலாற்றை அறியவும், வாழ்வியல் நெறிகளை கற்கவும் நமது சங்க நூல்களே சிறந்த வழியாகும்.
                        அண்டை நாடுகளில்  இருந்து வந்த பிற பொழுதுபோக்கு செயல்களை செய்து நேரத்தினை  செலவழிக்காமல் நல்ல நூல்களை கற்று பின் மற்றவர்களுக்கு கற்பித்து வாழ்வதே இன்பத்தினை தரும்.
                          இத்துணை தலைமுறைகள் ஈடேறாமல் பூண் கட்டுக்கதைகளை பேசி காதுகளை களைப்படைய செய்யாதீர்கள்.
                          வரலாறாய் மாறி வருங்காலம் போற்ற உரமாகுங்கள்!  
                     உயிர் பிரிந்தாலும் உயர்ந்து நிற்பாய்!
                     இவ்வுலகில் தமிழுடன், தமிழனாய் !