வெள்ளி, 18 நவம்பர், 2016

வர்த்லெஸ் ஆப்பிகேஷன்

                                                            வர்த்லெஸ் ஆப்பிகேஷன்
                                          --டைனி டாட் ஸ்டோரிஸ்
         

நல்ல கொலு கொலு தேகத்தை உடைய சு நிலத்தில் இருந்த புட்களை ருசித்துக் கொண்டிருந்தது.தன் வயிறு நிறையும் வரை அந்த புட்களை மேய்ந்துக் கொண்டிருந்தது.பிறகு தனக்கு அருகில் உள்ள ஓடைக்கு சென்று நீர் அருந்தியது.வயிறு நிறைந்தவுடன் சோம்பலாக உணர்ந்தது அந்த பசு.பிறகு தூங்க முடிவு செய்து நல்ல நிழல் தரும் பெரிய மரத்தடியில் உறங்கியது.ஒரு காகம் பக்கத்து ஊரிலிருந்து பறந்து பசியுடனும் கலைப்பாகவும் வந்தது.அங்கு கிடந்த ரொட்டித்துண்டு ஒன்றை தின்று பசுவின் முதுகில் உரங்கத் தொடங்கியது.

            சில நேரத்திற்கு பிறகு பசு எழுந்தது.உடனே அந்த காக்கை பசுவின் முன்னே வந்து விழுந்தது.காகம் பசிவிடம்,``அம்மா!நான் உங்கள் முதுகில் இவ்வளவு நேரம் உரங்கிக்கொண்டிருந்தேன்.உங்களுக்கு எனது பணிவான ``நன்றி’’ என்றது.பசு அதற்கு எந்த அவசியமும் இல்லை. உன்னுடைய இடையை நான் என் முதுகில் உணரவே இல்லை.நீ எப்பொழுது வந்தாய்,சென்றாய் என்றுகூட எனக்கு தெரியாது.``சிறிய காரியங்களுக்கு நீ நன்றிக்கடன் பட வேண்டாம்!’’ என்றது பசு.

தி கன்னிங் வுல்ஃப்

                                                              தி கன்னிங் வுல்ஃப்
                                        --டைனி டாட் ஸ்ரோடீஸ்
               

ஒருமுறை கடும் பசியுடன் இருக்கும்``ஓநாய்’’ காடுமுழுக்க இறையை தேடி அழைந்தது.மிக விரைவில் காட்டின் எல்லையை அடைந்தது.அங்கு ஒரு ஓடை ஓடிக்கொண்டிருந்ததுஅதன்வழியில் நடக்கையில் ஒரு சத்தம் அதன் காதில் விழுந்தது.ஒரு சிறிய``ஆட்டின்’’சத்தம் அது.பிறகு ஓநாய் மனம் நெகிழ்ந்தது.ந்த ஆட்டை உண்டு அந்த சுவையான தண்ணீரை குடிக்கலாம் என்று எண்ணியது.விரைவில் அந்த ஆடு சிறிய மலை உச்சியில் இருப்பதை கண்டறிந்தது.ஆனால்,அந்த மலைக்கு தாவ முயற்சிக்கையில் அந்த நரி தடுக்கி கீழே விழுந்தது.

            பின்பு தன் வழிக்கு அந்த ஆட்டை கொண்டுவர,``அந்த சிறிய மலையில் என்ன செய்கிறாய்?’’, என்று கேட்டது ஓநாய்.``நீ கீழே விழுந்துவிடுவாய் ங்கு வந்து பசுமையான புட்களை உண்டு,அந்த சுவைமிகுந்த தண்ணீரையும் பருகலாம் என்றது ஓநாய் தந்திரமாக.அதற்கு திறமையான ஆடு,``இல்லை ஓநாய் ஐயா நான் இங்கு நன்றாக இருக்கிறேன். எனக்கு போதிய உணவு இங்கு கிடைக்கிறது என்றது.’’அப்பொழுது சூழ்ச்சியைவிட சாமார்த்தியம் வலிமையானது என்று எண்ணி அங்கிருந்து சென்றது.

மரியா தி ஃபூலிஷ் கேல்

                                                  மரியா தி ஃபூலிஷ் கேல்
                                    --டைனி டாட் ஸ்டோரிஸ்
           

மரியா ஒரு சிறுமி அவள் எப்பொழுதும் எல்லாவற்றையும் மறந்துகொண்டே இருப்பாள்.அவள் அலட்சியமானவலும் கூட.நிறைய பொம்மைகள், பெண்சிலைகள், புத்தகங்கள் மற்றும் வண்ணங்களை தொலைத்திருக்கிறாள். அவளது தாயார் எப்பொழுதும் ``மரியா,நீ அடக்கமும் அமைதியும் கொண்ட சிறுமி ஆனால்,நீ கவனமாக இருக்க கற்றுக்கொள்.உன்னுடைய உடமைகளின் மதிப்பை நீ அறிய வேண்டும்’’ என்றார்.ஒரு நாள் மரியாவின் தந்தை அவளுக்கு அழகான ஒரு பொம்மை வாங்கி வந்தார்.மரியாவுக்கு அந்த பொம்மை மிகவும் பிடித்திருந்தது.நாள்முழுக்க அதனுடன் விளையாடிவிட்டு அதனுடன் தூங்கவும் செய்வாள்.அவள் தனது தந்தைக்கு அதனை தொலைக்கமாட்டேன் என்றும் உடைக்கமாட்டேன் என்றும் உறுதியளித்திருந்தாள்.

            விளையாடிவிட்டு அதனை மரப்பேழைக்குள் வைத்துவிடுவாள். ஒருநாள் மரியாவை வெளியே அழைத்துச்செல்ல அவள் தந்தை முடிவு செய்திருந்தார்.மரியா அதனை அறிந்தவுடன் வீட்டிற்குள் ஓடி அந்த பொம்மையை தன் பைக்குபின் இனைத்து முதுகில் மாட்டிக்கொண்டாள்.அவள் தந்தை இதனைப்பற்றி விசாரிக்கையில்``என் பொம்மையை தனியே இங்கு விட்டாள் அது தொலைந்துவிடும்.அதனை என்னுடன் எடுத்துச் சென்றா, நான் போகிற இடத்திற்கு அதுவும் வரும்.நான் அதனை தொலைக்க மாட்டேன்’’. என்றாள்.அவளது அறியாமையைக்கண்டு புன்முறுவல் செய்தார் அவள் தந்தை.

டிட் ஃபார் டாட்

                                                            டிட் ஃபார் டாட்
                                    டைனி டாட் ஸ்டோரீஸ்
             

காட்டில் நதி ஒன்று அமைதியாக பாய்ந்துக்கொண்டிருந்த்து.அங்கு பசியுடன் ஒரு சிங்கம் தண்ணீர் அருந்த வந்தது.அங்கு தண்ணீர் குடித்துக்கொண்டிருக்கையில் கழுதை ஒன்று அங்கிருப்பதை கண்டது.சிங்கம்``கழுதையெல்லாம் முட்டாள்கள்,அவற்றை இன்று மதியம் எனக்கு உணவாக்க நான் ஏதாவது செய்ய வேண்டும்’’ என்று எண்ணியது.அதற்கு சிங்கம் ``தோழர் கழுதையே அங்கு ஏதாதவது குள்ள நரிகள் இருக்கின்றனவா?அவர்களின் இனிமையான பாடல் சத்தம் எனக்கு கேட்கிறது?’’ என்றது.

            அதற்கு கழுதை``இல்லை ஐயா குள்ள நரிகளால் இனிமையாக பாட இயலாது.தான் உங்களுக்காக இப்பொழுது பாடுகிறேன்,’’ என்று கூறிய அந்த முட்டாள் கழுதை வானத்தை நோக்கி கண்களை மூடி கனைக்க தொடங்கியது.அச்சமயத்தில் நதியைக் கடந்து சிங்கம் கழுதையின் கழுத்தை கவ்வியது.ஆனால் கழுதை தந்திரமாக,``அட நீங்கள் என்னை உனவாக்க வேண்டுமா?எனக்கு ஆட்சியபனை இல்லை ஆனால், நல்ல சிங்கங்கள் உணவு உட்கொள்வதற்கு முன் இறைவனிடம் பிராத்தனை செய்யும் என்று கேள்விப்பட்டேன்?.என்றது. ஆமாம்!,ஆமாம்! நான் பிராத்தனை செய்ய வேண்டும் என்று கூறி கண்ணை மூடியது.அக்கனத்தில் கழுதை சிங்கத்தை நன்கு உதைத்து அங்கிருந்து ஓடிவிட்டது.