செவ்வாய், 22 நவம்பர், 2016

தி மேர்ச்சன்ட்ஸ் விட்னஸ்

                                                        

ஒரு நாள் வணிக வியாபாரி ஒருவர் கிரமாம் ஒன்றிர்க்கு வியாபாரத்திற்காக வந்தார்.வழியில் வந்த விவசாயி ஒருவரை நிறுத்தி விடுதி எங்கே இந்த ஊரில் இருக்கிறது என்று விசாரித்தார்.அந்த விவசாயியும் விடுதிக்கு வழி காட்டினார்.தனது குதிரையை ஒரு வலிமையான  தூனில் கட்டி உறங்கச் சென்றார்.

           

காலையில் எழுந்து அந்த தூனிடம் சென்று பார்த்தார்.ஆனால், அந்த விடுதியின் உரிமையாளர்,``எனது தூன் ஒரு குதிரைக்கு பிறப்பு கொடுத்திருக்கிறது,இது என்னுடையது’’ என்று கூறினார்.அப்படி ஒரு பொய்யைக் கேட்டது அந்த வணிகர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.இருவரும் விவாதிக்க ஆரம்பித்தனர்.இருவரும்,நீதிமன்றத்திற்கு நீதியைநாடி சென்றனர்.அந்த வணிகரின் சாட்சியாளராக அந்த வழி கேட்ட விவசாயியை அழைத்தார் ஆனால்,அவர் வர மறுத்துவிட்டார்.எனினும்,சில காலங்கலுக்கு பிறகு விவசாயி அங்கு வந்து,``ஐயா, தாமதத்திற்கு என்னை மன்னித்துவிடுங்கள், நான் வேகவைத்த கோதுமையை என் நிலத்தில் பயிராகத் தூவிக்கொண்டிருந்தேன்என்றார்.அதற்கு நீதிபதி சிரித்துக்கொண்டே ``எப்படி வேகவைத்த கோதுமையை கொண்டு நீ பயிர் விழைவிக்க இயலும்?’’ என்றார்.அதற்கு ``ஏன் முடியாது ஒரு தூன் குதிரையை கொடுக்கும்போது வேகவைத்த கோதுமை ஏன் பயிரை விலைவிக்காது?’’ என்று கேட்ட போது நீதிபதி உண்மையை உணர்ந்து விடுதி உரிமையாளரை தண்டித்தார்.
                                             (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

தி ஆர்ட் ஆப் டெல்லிங் ட்ரூத்

                                            

ஒரு பெரிய வணிக வியாபாரி இருதயம் பாதிக்கப்பட்டவர்.அவரது மருத்துவர் அவருக்கு அதிர்ச்சி தரும் செய்திகள் எதுவும் அவரிடம் கூற வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

            ஒரு முறை வியாபாரத்திற்காக நகரத்திற்கு சென்றிறுந்தார் வணிகர்.பின்னர் அவரது வேலையால் ஒருவர் அவரிடம்,``முதலாளி என்னை மன்னித்துவிடுங்கள்,நமது நாய்கள் இறந்துவிட்டன’’ என்றான்.``எப்படி அவை இறத்தன’’என்று கேட்கையில் ``அவை நிறைய குதிரை கரிகளை தின்றுவிட்டன’’ என்று கூறினான்.என்ன எனது குதிரைகள் இறந்துவிட்டனவா? என்று கேட்டபோது ``ஐயா அவைகலெல்லாம் உணவில்லாமல் இறந்துபோயின’’என்றான்.``ஏன் பணியாட்கள் அதற்கு உணவிடவில்லையா..? ``எப்படி ஐயா பணியாட்களுக்கே உணவில்லை’’, ``ஏன் என் மனைவி அவர்களுக்கு சம்பளம் தரவில்லை அவர்களுக்கு’’என்று வருத்தத்துடன் கேட்டார்.``அவளுக்கு உணவிடக்கூட நான் சமையல்காரனை நியமித்திருந்தேனே மீண்டும் என் மனைவியும் இறந்து விட்டாள் என்று கூறாதே’’என்றார்.

`ஐயா! அடுப்பு வெடித்து வீட்டிலுள்ள அனைவரும் இறந்து பேயினர்’’. என்று அவர் முதலாளியிடம் இந்த கசப்பான உண்மையை அவரை துன்புறுத்தாமல் கூறினான்.                                        (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

தி ப்ராமின்’ஸ் ஸ்சர்வன்ட்

                                                      
 

ஒரு சோம்பேரி ஐயருக்கு நிறைய விலைநிலங்கள் இருந்தது.ஆனால்,அதில் எதையும் நிலத்தில் தூவாமல் அதனை சாகுபடிக்கு உதவாதபடி வைத்திருந்தான்.ஒரு நாள் அவர் வீட்டிற்கு துறவி ஒருவர் வந்தார்.அந்த துறவியை நன்கு கவனித்துக்கொண்டார் ஐயர்.அந்த துறவி ஐயருக்கு ஒரு மந்திரத்தை கூறி சென்றார்.அவர் சென்ற பின் அந்த மந்திரத்தை உச்சரித்தார். உடனே ஒரு பெரிய உருவம் அவர் முன் தோன்றியது.``எனக்கு வேலை கொடுங்கள் முதலாளி எனக்கு பசியாக இருக்கிறது,நான் என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் தின்றுவிடுவேன்’’.என்று கூறினான்.பயந்து போன ஐயர் உடனே அதற்கு வேலை கொடுத்தார்.


அதனை செய்த பின் விரைவாக அவர் கொடுத்த அனைத்து வேலைகளையும் செய்து முடித்தது.இப்பொழுது அந்த உருவத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லை.ஆனால்,எங்கே அந்த உருவம் தன்னை கொன்றுவிடும் என்ற பயத்தில்``அந்த நாயின் வாலை நிமிர்த்து’’.என்று கூறினார்.அதுவும் வெகுநேரம் முயற்சி செய்த பின் அந்த வேலை செய்ய இயலாது ஓடிவிட்டது.இதன்மூலம் உழைப்பால் ஈட்டும் பொருளே நிலையானது என்று கற்றுக்கொண்டார்.
                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

ப்லேம்

ஒரு நாள் ஒருவர் கடற்கரையோரம் நடந்துகொண்டிருந்தார்.அவர் நடந்துசெல்கையில் கடலில் ஒரு படகு முழுக்க பயணிகள் அனைவரும் படகு தடுமாரி தத்தளித்துக்கொண்டிருந்தனர்.அந்த படகு தண்ணீரில் மூழ்கியது,அனைத்து பயணிகளும் தண்ணீரில் விழுந்தன.அவர்களுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால்,ஒருவர் பின் ஒருவர் மூழ்க தொடங்கினர்.அதனை இவர் கரையிலிருந்து எதுவும் செய்ய இயல முடியாத நிலையில் நின்று பார்த்தார்.
      அன்று மாலை இந்த சோக செய்தியை தனது நண்பர்களுடன் பகிர்ந்தார்.அனைவரும் அந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தனர்.அதனைப் பார்த்த மனிதர்``கடவுள் ஒரு பாவியை தண்டிக்க அத்தனை அப்பாவிகளையும் ஏன் தண்டிக்கிறார்?’’,என்று கேட்டார்.இதனை செல்லிக்கொண்டிருக்கையில், அவர் காலில் ஒரு எறும்பு கடித்து அப்பொழுது ஆத்திரத்தில் அங்கிருந்த அனைத்து எறும்புகளையும் மிதித்து தள்ளினார்.அப்பொழுது கடவுள் அவர் முன் தோன்றி``பாரு நீ உன்னை கடித்த ஒரு எரும்பை மட்டுமல்லாமல் ஏனைய எறும்பை மிதித்து தண்டிக்கிறாய்? என்னை குறைசொல்லும் முன் உன் நடவடிக்கையைப் பார்’’ என்று கூறினார்.பின் அவன் தனது தவறை உணர்ந்தான்.
                                                                                                                (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி