வியாழன், 3 மார்ச், 2016

தினம் ஒரு தகவல்




பறக்கும் சைக்கிள்



       பெரிய நகரங்களில் வாகனங்களில் செல்வது சாகசம் நிறைந்த ஒன்றாக மாறி வருகிறது.சைக்கிளில் செல்வதுகூட முடியாத ஒன்றாக உள்ளது.போக்குவரத்தில் சிக்கித்தவிக்கும் அந்த நேர்த்தில், அப்படியே பறந்து போனால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும். அப்படியொரு எண்ணம்தான் லேரிநீல் என்பவருக்கும் தோன்றியது.அந்த விளைவாக பறக்கும் சைக்கிளை கண்டுபிடிக்க அவர் விரும்பினார். டெக்சாஸ் மாநிலத்தின் அரோரோ பகுதியை சேர்ந்த இவரது விடாமுயற்சியில் உருவானதுதான் பறக்கும் சைக்கிள்.
       இந்த சைக்கிளை தயாரிக்க லேரிநீலுக்கு பல வருடங்கள் தேவைப்பட்டன. ஏகப்பட்ட தடைகளை கடக்க வேண்டியிருந்தது இடையில் கண்டுபிடிப்பு நின்றுவிடுமோ என்று கூட பயந்தார்.ஆனாலும் எதற்கும் கலங்காமல், தளராத மனதுடன் போராடி இருதியில் கண்டுபிடித்துவிட்டார்.
       பறக்கும் சைக்கிளை தரையிறக்கிய பின் அதன் இறக்கைகளை மடக்கி சாலைகளில் சாதாரணமாக செல்வதற்கு ஏற்ப மாற்றுவதுதான் மிகவும் கடினமாக இருந்தது . இந்த பறக்கும் சைக்கிளுக்கு'சூப்பர் ஸ்கை சைக்கிள்' ஏன்று பெயர் வைத்தார்.இதன் பவர் 582சிசி. இது 68அங்குலம் நீளமுள்ள இருகைகளை கொண்டுள்ளது. மணிக்கு 56 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும். இதை இறக்குவதற்கு 20 அடி நீளம் கொண்ட சமதளம் இருந்தால் போதும். அதிக பட்ச வேகம் மணிக்கு 104 கிமீ. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 5 மணி நேரம் பறக்கலாம். இந்த விலை 46ஆயிரம் பவுண்ட் இந்திய மதிப்பில் ரூ.37 லட்சத்து 46 ஆயிரத்து 750. இந்த சூப்பர் சைக்கிளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. இதை ஓட்டுவதற்கு விமான பைலட் லைசென்சும் தரையில் ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்சும் வேண்டும். 'பட்டர்பிளை ஏர் கிராப்ட்' என்ற நிறுவனம் இதன் தயாரிப்பு உரிமையை பெற்றுள்ளது. இதை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்கான பேட்டன்ட் உரிமையை அமெரிக்கா வழங்கியுள்ளது.
        இந்த சூப்பர் ஸ்கை சைக்கிள் வேண்டும் என்று இப்போதே பல நாடுகளில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருகின்றன். எல்லைப் பாதுகாப்பு படைக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்பதால் டெக்சாஸ் மாகாண ராணுவம் இந்த சைக்கிளுக்கு நிறைய ஆர்டர் கொடுத்துள்ளது.

லூயிஸ் பிரெய்லி

மனித இனத்திற்கு மிகச் சிறந்த தொண்டாற்றியவர் லூயிஸ் பிரெய்லி ஆவார். குறிப்பாக கண்பார்வை அற்றோர் தம் கைகளால் தடவிப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்ததன் மூலம், கண்பார்வை அற்றோர்க்காக சிறந்த தொண்டாற்றினார்.
     லூயிஸ் பிறந்த போது இயல்பான கண்பார்வையைத் தான் பெற்றிருந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்தபோது அவர் தன் தந்தையாரின் குதிரைக்குச் சேணம் பூட்டும் தொழிற்சாலையில் இருந்தார். அப்போது அங்கே ஏற்பட்ட விபத்தினால் தன் கண்பார்வையை இழந்தார்.
     லூயிஸ் பிரெய்லி 1809 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள கோப்ரே என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
     திடீரென்று தன் கண் பார்வை பறிப்போனதை எண்ணி, குழந்தை லூயிஸ் பிரெய்லி கலங்கினார். அவர் உள்ளூரில் இருந்த பள்ளியில் இரண்டாண்டுகள் படித்தார். எதையும் அடையாளம் கண்டுகொண்டு அவரால் படிக்க முடியவில்லை. அவருக்குப் பத்து வயதானபோது உதவித்தொகை பெற்று, பாரிஸில் உள்ள கண்பார்வை அற்றவர்களுக்கான கல்வி நிலையத்தில் சேர்ந்து கற்றார். ஆனால் அது அவருக்கு கடினமானதாக இருந்தது.
     இங்கே அவர் பார்வையற்றோர்க்குக் கற்றுத் தரப்படும் தொழில்களான துணி நெய்தல், செருப்பு தயாரித்தல் ஆகியவற்றைக் கற்றார்.அந்த பள்ளியில் அழகான நூலகமும் அதில் எண்ணற்ற புத்தகங்களும் இருந்தன. லூயிஸ் பிரெய்லிக்குப் புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவரால் அந்த எழுத்துக்களை கண்டறிந்து படிக்க முடியவில்லை. இது அவருக்கு அதிக வருத்தத்தைத் தந்தது.
     இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு 1821 ஆம் ஆண்டு சார்லஸ் பார்பியர் என்ற இராணுவ வீரர் வந்தார். அவர் அந்தப் பள்ளியைச் சுற்றிப் பார்க்கவும், அங்கு தங்கியிருக்கும் கண்பார்வையற்ற மாணவர்களுக்காகத் தன்னுடைய கண்டுபிடிப்பான, இராணுவத்தில் பயன்படும் இரவு நேர எழுத்து முறை பற்றியும் விளக்குவதற்க்காக வந்திருந்தார். அந்த எழுத்து முறை 12 புள்ளிகளைக் கொண்டது. ஒரு வீரன் மற்றொரு வீரனுடன் பேசாமலேயே தொடர்புகொள்ளும் முறையாகும். ஆனால் இராணுவ வீரர்கள் இதனை கற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.
     ஆனால் 12 வயதுடைய லூயிஸ், அதிலிருந்து 6 எழுத்துக்களைப் பிரித்தெடுத்து எளிதில் படிப்பதற்கான எழுத்து முறையைக் கண்டுபிடித்தார்.1829 ஆம் ஆண்டு முதல் பிரெய்லி புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது அவருக்கு வயது 20.அவர் தொடர்ந்து அதில் பயிற்சி செய்து கணிதக் குறியீடுகளையும், இசையையும் சேர்த்தார். அவர் தனது பட்டபடிப்பை முடித்தவுடன் தான் பயின்ற அதே பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து அதனைக் கற்றுக்கொடுத்தார். அவருடைய கோடு மொழியை (code language) அங்குள்ள கண்பார்வையற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் பிரெய்லியின் இம்முறையைக் குழந்தைகளுக்கு கற்றுத்தரக் கூடாது என தடை விதித்தனர். ஆனால் குழந்தைகள் சற்று முயற்சி செய்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். இம்முறை படிப்பதற்கு மட்டும் அன்றி கண் பார்வை அற்றோர் தொட்டு, எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளவும் வசதியானதாகவும் இருந்தது.
     எனவே இம்முறையைக் கண்பார்வையற்றோர் பிறகு விரும்பி பயன்படுத்தினார். ஆனால் இம்முறையை அவர்கள் பிரெய்லி உயிரோடு வாழ்ந்த காலத்தில் பயன்படுத்தவில்லை. அவருடைய மறைவிற்குப் பின், மிகவும் மெதுவாகவே பரவியது.
     1868 ஆம் ஆண்டு இந்தப் பிரெய்லி முறை உலகம் முழுவதும் பரவியது. பிரிட்டிசார் இம்முறை உலகெங்கும் பரவக் காரணமாக இருந்தனர். இதற்க்கான அமைப்பு இப்பொழுது கண்பார்வையற்றோர்க்கான தேசிய நிருவனம் என்ற பெயர் பெற்று சிறப்புடன் இயங்கி வருகிறது. பிரெய்லி எழுத்து முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி 1862 ஆம் ஆண்டு எழும்புருக்கி நோயினால் மறைந்தார்.

நியு இயர்ஸ் ஈவ்

                                                        நியு இயர்ஸ் ஈவ்
                                            -சார்லஸ் லாம்ப்

      இந்த ஆர்வமூட்டும் சுயசரிதையில் சார்லஸ் லாம்ப் அவரது குழந்தை பருவம் முதல் அவரது தர்காலம் வரை கடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.அவரது நாற்பத்தி ஐந்தாம் வயதில் தம் வாழ்க்கையை முன் நோக்குகிறார் இன்னும் கடந்து செல்ல வேண்டிய தொலைவை இறுதிக் காலத்தை அல்ல.
      மக்கள் இரு தினங்களை முக்கியமாக கொண்டாடுகின்றன,

                        1.பிறந்த நாள்
                        2.புது வருடம்

 இரண்டும் அவர்கள் கடந்து சென்ற ஆண்டுகளுக்கான கொண்டாட்டம்.    அவர்கள் இதனை பெருமகிழ்சியுடனும்,ஆரவாரத்துடனும் கொண்டாடும்போழுது லாம்ப் அவரது கடந்த கால காயமான நினைவுகளை கூறுகிறார்.
      பின்பு அவர் ``அலிஸ்’’என்ற பெண்னுடன் தாம் கொண்ட காதலை பற்றி நினைவுகொள்கிறார்.தனது வாழ்நாளில் நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்டார் ஆனால்,தன்னையே அவர் நேசிக்கவில்லை.ஒரு வழக்கறிஞரிடம் அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இரண்டு தவுசன் பவுன்ட் பரிகொடுத்தனர்.பின்னர் இவர் ஐந்து வயது இருக்கும் பொழுது சின்னம்மையால் பாதிக்கப்பட்டார்,காதலிலும் தொல்வியயே சந்தித்தர்.தாம் பெற்ற காதல் தோல்வியினால் மட்டும் ஏழு வருடம் மனவுளைச்சள் கொன்டு வருந்தினார்.இவரது அனைத்து கடந்த காலமும் சற்று மனக்கசப்பையே இவருக்கு தந்தன. 
   குழந்தை பருவம் முதல் இன்று வரை எப்படி இவற்றை கடந்து வந்தோம் என்று யோசித்து பார்க்கிறார்.

இந்த கட்டுரை புது வருட சிறப்பு மற்றும் வாழ்வின் தொடர்ச்சியை கூறும் ஒரு கவிதையை படித்து பெற்ற அனுபவத்துடன் முடிக்கிறார்.லாம்ப் புது வருடத்தை ஒரு புதிய வாழ்கையின் தொடக்கமாக பார்க்கிறார்.

அந்த புது வருடத்தை அவர் ஒரு குவலை வைன்னுடன் வரவேற்றார்.

முயற்சியின் பின் வெற்றி

         
 முயற்சி

செடியில் இருந்து பூக்கள் உதிர்வது

மீண்டும் பூப்பதற்காக

சுட்டெரிக்கும் கதிரவன்

மாலையில் மறைவது

இரவில் நிலவு வருவதற்கு

அது போல நீ தோல்வியை

சந்தித்து சோர்ந்து விடாதே

வெற்றி என்னும் முயற்சியுடன் ஓடு.

முயற்சி என்னும் ரோஜா  பூவை

உதிர விடாதே வெற்றி நிச்சயம்.

தமிழ்-99 விசைமுகத்தில் புள்ளி..!!

தமிழ்-99 விசைமுக அமைப்பு, தமிழில் அதிகமாகத் தட்டெழுதும் (டைப் செய்யும்) பயனர்களுக்குப் பல வசதிகளைத் தருகின்றது. அவற்றில் புள்ளி சேர்க்கையும் (auto-pulli) ஒன்று.

இந்த விதியின் சுருக்கம்:

1. ஒரு அகரமேறிய உயிர்மெய் எழுத்து இருமுறை வந்தால், முதலில் வந்த எழுத்தில் தானாகப் புள்ளி சேரும். சில எடுத்துக்காட்டுகள்:
முதல் தட்டு2வது தட்டுவிழைவு
க்க
ய்ய
ர்ர
ங்ங
ஜ்ஜ
2. கீழ்க்காணும் எழுத்துகள் இணையாக வந்தால் முதல் எழுத்தில் தானாகப் புள்ளி சேரும்:
முதல் தட்டு2வது தட்டுவிழைவு
ண்ட
ஞ்ச
ங்க
ந்த
ம்ப
ன்ற
தமிழ்-99 அமைப்பு முறையில் விதிமுறைகள் உள்ளன. இந்த அமைப்பு முறையை நடைமுறைப் படுத்தும் செயலிகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளில் மேற்குறிப்பிட்ட இரண்டும் அடங்கும். செல்லினத்தில் உள்ள தமிழ்-99 விசைமுகமும் இவ்விரு விதிகளையும் முழுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.

புள்ளி தவிர்ப்பு

தானாகச் சேர்க்கப்படும் புள்ளி வசதி, தட்டெழுத்தை எளிமைப் படுத்தினாலும், சில சொற்களை எழுதும் போது சிக்கலை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வேற்று மொழி சொற்களைத் தமிழில் எழுதும் போது இந்தச் சிக்கல் தோன்றலாம்.
‘பூதத்தின்’, ‘சமமாக’, ‘சுந்தரராஜன்’, ‘மனனம்’, ‘கெமமான்’ (மலேசியாவில் உள்ள ஊர்), போன்ற சொற்களை எழுதும்போது, தேவை இல்லாத இடத்தில் புள்ளி சேந்து விடும். ‘பூதத்தின்’ என்று எழுதினால் ‘பூத்ததின்’ என்றும் ‘மனனம்’ என்று எழுதினால் ‘மன்னம்’ என்றும் வந்துவிடும். இதைத் தவிர்ப்பதற்கு புள்ளி தேவையற்ற இடத்தில் ‘‘ எழுத்தைத் தட்டலாம்.
எழுத்துக்காட்டுகள்:
சொல்தட்டு
பூதத்தின்ப ஊ த  த த இ ன புள்ளி
சமமாகச ம  ம ஆ க
சுந்தரராஜன்ச உ ந த ர  ர ஆ ஜ ன புள்ளி
மனனம்ம ன  ன ம புள்ளி
கெமமான்க எ ம  ம ஆ ன புள்ளி

சொல்லின் தொடக்கத்தில் ஏற்படும் சிக்கல்

‘சச்சின்’, ‘சச்சரவு’, ‘தத்துவம்’, ‘பப்பி’, ‘பப்புவா’ (நியூகினி) போன்ற சொற்கலில் ஒரே எழுத்தை தொடக்கத்தில் மும்முறை தட்டவேண்டும்.
எ.கா:  ச ச ச இ ன புள்ளி எனத் தட்டினால், ‘சச்சின்’ என்பதற்கு பதில் ‘ச்சசின்’ என்று தவறாகத் தோன்றும்.
‘ச’ அடுத்தடுத்து வருவதால், முதல் எழுத்தில் புள்ளி தானாகச் சேந்துவிடுகிறது. இதைத் தடுப்பதற்கும் ‘‘ எழுத்தைப் பயன் படுத்தலாம்.
சொல்தட்டு
சச்சின்ச  ச ச இ ன புள்ளி
சச்சரவுச  ச ச ர வ உ
தத்துவம்த  த த உ வ ம புள்ளி
பப்பிப  ப ப இ
பப்புவாப  ப ப உ வ ஆ
குறிப்பு: சொல்லின் தொடக்கத்தில் ஏற்படும் இச்சிக்கல் ஆண்டிராய்டு-செல்லினத்தின் 4.0.4ஆம் பதிகையில் தீர்க்கப்பட்டு எளிமையாகப்படும். எனினும் இவ்வழிமுறையை தொடர்ந்து பின்பற்றலாம்.
நான் இங்கு பகிர்ந்துள்ள பதிவு ஆரம்பத்தில் நானும் இந்த பிரச்சனையை  மேற்கொண்டேன்.அதன் காரணமாக தான் இன்று இதை பகிர்ந்துள்ளேன்.இனி புதியதாக தமிழ் தட்டச்சு செய்யும் அனைவருக்கும் உதவும் என்ற நோக்கில் பகிர்ந்துள்ளேன்.
நன்றி.

நீல்ஸ் ஹென்ரிச் ஏபல்

  







      நீல்ஸ் ஹென்ரிச் ஏபல் நார்வே நாட்டில் தோன்றிய மிகச்சிறந்த கணிதமேதை மட்டுமின்றி, புகழ்பெற்ற மனிதரும் ஆவாா்.  ஆஸ்லோ நகாில் அமைந்துள்ள அரண்மனைத் தோட்டத்தில் ஏபலின் சிலை நிறுவப்பட்டுள்ளதே இதற்குச் சான்றாகும்.  இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் அறிய காட்சிப் பொருளாக விளங்குகிறது.  ஸ்காண்டி நேவிய கணித மேதைகளுள் ஏபல் முதன்மையானவர்.


     “பெர்ன்ட் மிக்கேல் ஹாம்போ” என்னும் கணித ஆசிரியர் ஏபலின் கணித ஆசிரியராக விளங்கினார்.  இவர் ஏபலின் கணித அறிவைப் புரிந்துகொண்டு, கணிதத்தைக் கற்கும்படி அறிவுறுத்தினார்.  ஹாம்போவின் மேற்பார்வையில் ஏபல், மிகச்சிறந்த கணிதமேதைகளான லாக்ரேஞ்ஜ், லாப்லஸ், யூலர் போன்றோரின் கணிதங்களைக் கற்றுத் தேர்ந்தார்.  நீள்வளைய முழுமை (Elliptic Integrals) பற்றி ஏபல் கற்றறிந்தார்.  அது குறித்த கட்டுரை ஒன்றையும் எழுதினார்.
  
      1823ஆம் ஆண்டு கோபென்ஹேகன் நகருக்குச் சென்ற ஏபல், பல டேனிஷ் நாட்டு கணித மேதைகளைச் சந்தித்தார்.  பிறகு அங்கிருந்து கிறிஸ்டியானியா நகருக்குத் திரும்பி வந்தார்.  ஏபல், தான் ஏற்கனவே முயந்சி செய்த ஐந்தொகுதி சமன்பாடு (Quintic Equation) பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
  
      இக்காலகட்டத்தில் “அகங்ட் லியோபோல்டு க்ரெல்” என்பவா் இவரது முயற்சிகளை ஆதரித்து, புரவலராக (patron) ஆனாா்.  க்ரெல் ஒரு கட்டடப் பொறியாளராதலால் அவருக்கு கணிதத்தில் அதிக விருப்பம் ஏற்பட்டது.  அவர் தனிக்கணிதம் மற்றும் செயல்முறைக் கணிதம் பற்றிய பத்திரிக்கை ஒன்றை வெளியிட்டார்.   அதற்கு “க்ரெல் ஜர்னல்” எனப் பெயரிட்டார்.
  
      1826ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் நேரில் சந்தித்தனர்.  க்ரெல்லுடன் ஏபல் பல நாடுகளுக்குச் சென்றார்.  மேலை நாடுகளில் 2 ஆண்டுகள் படிப்பு முடிந்தபின் 1827-ல் கிறிஸ்டியான நகருக்குத் திரும்பினார்.
  
     கணிதத்தில் சிறந்த அறிவைப் பெற்றிருந்தும் ஏபலுக்கு சரியான வேலை எதுவும் கிட்டவில்லை.  இது தவிர அவருக்கு நிறையவே கடன் சுமையும் இருந்தது.
  
     அவர் பல மாணவர்களுக்கு கணிதம் கற்பிக்கத் தொடங்கினார்.  ஏபலின் கணிதக் கண்டுபிடிப்புகள் ஜெர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெரிய வரவேற்பைப் பெற்றன.
    
      ஸ்டாக்ஹோம் அகாடமி ஏபலின் கணித அறிசை அங்கீகரித்தது.  டிராந்தியம் நகரில் அமைந்திருந்த நார்வேஜியன் ராயல் சொசைட்டி அமைப்பில் ஏபல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  
     1826ஆம் ஆண்டுக்குப் பின்பு ஏபல், உயிர் வாழ்ந்தது வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே.  ஏபலுக்கு காசநோய் ஏற்பட்டு, உடல்நிலை மிகவும் பலவீனமானது.  அந்நிலையிலும் அவர் தொடர்ந்து கணித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார்.  கணித ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவற்றையும் எழுதினார். அவர் 1829ஆம் ஆண்டு, ஏப்ரல் 6ஆம் நாள் தனது 27ஆவது வயதில் இறந்தார்.
  
      ஏபலின் கணித அறிசைப் புரிந்து கொண்ட பெர்லின் பல்கலைகழகம் அவருக்கு பேராசிரியர் பணி தருவதாக செய்தி அனுப்பியது.  ஆனால், அச்செய்தி வருவதற்கு 2 நாட்கள் முன்பே, ஏபல் மறைந்தார்.

செல்லினம் பதிவிறக்க வழிமுறைகள்..!!

செல்லினத்தை உங்கள் ஆண்டிராய்டு கருவிகளில் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறை:
IMG_4575
1. Play Store செயலியைத் திறந்து Sellinam என்று தேடுக.
2. Install எனும் கட்டத்தைத் தொட்டவுடன் சில செயல்களுக்கான அனுமதிகளைக் கேட்கும்போது ‘Accept’ எனும் கட்டத்தைத் தொடுக.
3. செல்லினம் உங்கள் கருவியில் பதியப்பட்டவுடன், ‘Open’ எனும் கட்டம் தோன்றும், அதனைத் தொடுக.
4. செல்லினத்திற்கான அமைப்புச் செயல் தொடங்கும். Get Started எனும் கட்டத்தைத் தொட்டு, அதன்பின் தோன்றும் ‘Enable in Settings’ கட்டத்தைத் தொடுக.
5. உள்ளீட்டு முறைகள் வரிசையாகத் தோன்றும். அதில் செல்லினம் ‘ON’ செய்யப்பட்டிருக்க வேண்டும். இதனை உறுதி செய்தவுடன் முந்தைய திரைக்குச் செல்க.
6. இப்போது Switch Input Methods எனும் கட்டம் தோன்றும். அதனைத் தொட்டு செல்லினத்தை உங்கள் இயல்பான உள்ளீட்டு முறையாகத் தெரிவு செய்க.
7. இப்போது ‘Select Keyboards’ எனும் கட்டம் தோன்றும். இதனைத் தொட்டு, உங்களுக்கு விருப்பமான உள்ளீட்டு முறையைத் தெரிவு செய்க.
குறிப்பு: ஹுவாவே, ஆசுஸ் முதலிய கருவிகளை வைத்திருப்போருக்கு தமிழ் உள்ளீட்டு முறைகள் தோன்றா. ஆங்கிலமும் மலாய் மொழி உள்ளீட்டு முறைகள் மட்டுமே தோன்றும். உங்கள் கருவியில் அவ்வாறு இருந்தால், இந்தப் பதிவைக் காண்க: Issues with Sellinam on Huawei, Asus and other devices.
9. இனி உங்கள் ஆண்டிராய்டு கருவியில் உள்ள குறுஞ்செய்தி, வாட்சாப், மின்னஞ்சல், வைபர், முகநூல், டிவிட்டர் முதலிய செயலிகளில் ஆங்கிலத்தில் உள்ளிடுவதைப் போலவே தமிழிலும் உள்ளிடலாம்.
10. உங்கள் கருவியில் ஆங்கில உள்ளீட்டுக்காக சுவைப் போன்ற மற்ற முறைகளைப் பயன்படுத்தினால், அவற்றுக்குச் சென்று தமிழுக்காக மீண்டும் செல்லினத்துக்கு வந்துவிடலாம். லாலிபாப் (Lollipop) பதிப்பை வைத்திருப்போர், விசைமுகத்தின் கீழ் உள்ள விசைப்பலகைச் சின்னத்தைத் தொட்டு மற்ற உள்ளீட்டு முறைகளுக்குச் செல்லலாம். அதே சின்னத்தைக் கொண்டு செல்லினத்திற்கும் திரும்பி வரலாம்.  கிட்கெட், செலிபீன் பதிப்புகளை வைத்திருப்பவர்கள், செல்லினத்தில் உள்ள ‘மு’ சின்னத்தை சற்றுநேரம் அழுத்தி (long press), உள்ளீட்டுமுறைகளுக்கான பட்டியலைக் காணலாம்.
இதனை செய்து பார்த்து பயன் பெறவும் நண்பர்களே.இந்த பகிர்வு என் கல்லூரியில் இருக்கும் மாணவிகளுக்கு இருக்கும் பிரச்சனைக்கு உதவியாக இருக்கும் என்பதால் இணையத்தில் தேடி பகிர்ந்துள்ளேன்.அவர்களுக்கும் இதை இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நன்றி.